என் மலர்
நீங்கள் தேடியது "அதிமுக பொதுக்குழு"
- அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் சுயமாக சிந்தித்து செயல்படும் கட்சிகள்.
- அ.தி.மு.க. ஆட்சி அமைப்பதை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது.
அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* அ.தி.மு.க. தலைமையில் நல்ல கூட்டணி அமையும், கவலைப்பட வேண்டாம்.
* அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் சுயமாக சிந்தித்து செயல்படும் கட்சிகள்.
* சொந்த பலத்தைக் கொண்ட கட்சி அ.தி.மு.க., தி.மு.க. மக்கள் செல்வாக்கை இழந்த கட்சி.
* அ.தி.மு.க. தான் கூட்டணிக்கு தலைமை, அ.தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.
* அ.தி.மு.க. ஆட்சி அமைப்பதை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது.
* தனது தேர்தல் சுற்றுப்பயணத்தின்போது மக்கள் சிறப்பாக வரவேற்பு அளித்தனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கள்ளச்சாராய வழக்கில் சி.பி.ஐ. விசாரணையைக் கண்டு தி.மு.க.வுக்கு ஏன் பயம்?
- அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிலும் அச்சம் ஏன்?
வானகரம்:
சென்னை வானகரத்தில் நடைபெற்று வரும் அ.தி.மு.க. செயற்குழு- பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
* விலை நிலவரத்திற்கு பதிலாக கொலை நிலவரம் கேட்டுகும் நிலையில் தி.மு.க ஆட்சி இருக்கிறது.
* போக்குவரத்து துறை, மின்சாரத்துறை, டாஸ்மாக் என அனைத்திலும் ஊழல்.
* தி.மு.க.வில் உள்ள எத்தனை அமைச்சர்கள் மீது வழக்குகள் உள்ளன என்பதை நினைத்து பார்க்க வேண்டும்.
* தி.மு.க.வில் ஊழல் வழக்கு உள்ள அனைத்து அமைச்சர்களும் பத்திரமான இடத்தில் இருப்பார்கள்.
* கள்ளச்சாராய வழக்கில் சி.பி.ஐ. விசாரணையைக் கண்டு தி.மு.க.வுக்கு ஏன் பயம்?
* அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிலும் அச்சம் ஏன்?
* யாரையோ காப்பாற்றுவதற்காக இந்த அரசு துடித்துக்கொண்டிருக்கிறது.
* கள்ள ஓட்டுக்களால் தி.மு.க. வெற்றி பெற்றதால் SIR என்றாலே அலறுகிறார்கள்.
* வாக்காளர் தீவிர திருத்தத்தை எதிர்ப்பதற்கு என்ன அவசியம் இருக்கிறது.
* இறந்தவர்களின் பெயர், இரட்டைப் பதிவு கொண்டோர் தான் நீக்கப்படுகின்றனர்.
* தி.மு.க. கூட்டணி வைத்தால் பா.ஜ.க. நல்ல கட்சி, நாங்கள் கூட்டணி வைத்தால் மதவாத கட்சியா?
* பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்ததால் முதலமைச்சரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
* பா.ஜ.க. குறித்து சிறுபான்மையினரிடம் சந்தேகம் உள்ளது, அதை முறியடிக்குமாறு கலைஞர் கூறினார்.
* அறிவாலயத்தில் சிபிஐ ரெய்டு நடந்த போது கீழ் தளத்தில் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றது.
* தி.மு.க. என்பது ஜனநாயக முறைப்படி இயங்கும் கட்சி அல்ல, அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி.
* அமைச்சர் துரைமுருகனும் எமர்ஜென்சி காலத்தில் பாதிக்கப்பட்டவர் தான்.
* அமைச்சர் துரைமுருகனுக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுக்கப்படாதது ஏன்?
* அ.தி.மு.க.வில் சாதாரண தொண்டன் கூட முதலமைச்சர் பதவியில் அமர முடியும்.
* இந்த கூட்டத்தில் உள்ள பல பேருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு உள்ளது.
* அ.தி.மு.க.வுக்கு விழக் கூடிய வாக்குகள் சிந்தாமல், சிதறாமல் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
* தைத்திருநாளில் ரேசன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
- நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளைக் கூறி ஆட்சியை தி.மு.க. பிடித்துள்ளது.
- கேஸ் சிலிண்டர் மானியம், பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, கல்விக் கடன் ரத்து என்னவானது?
வானகரம்:
சென்னை வானகரத்தில் நடைபெற்று வரும் அ.தி.மு.க. செயற்குழு- பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
* வேறு வழியில்லாமல் 28 மாதங்கள் கழித்து மகளிருக்கு ரூ.1000 திட்டம் தொடங்கப்பட்டது.
* குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 கொடுப்பது கூட அ.தி.மு.க.வின் அழுத்தத்தால் தான்.
* மக்கள் பணம் பெற்றுக்கொண்டாலும் அ.தி.மு.க.வுக்கு தான் மக்கள் ஓட்டு போடுவார்கள்.
* அம்மா மினி கிளினிக், இருசக்கர வாகனம் போன்ற திட்டங்களை தி.மு.க. அரசு நிறுத்தியது.
* அ.தி.மு.க. ஆட்சியில் 52 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது.
* மக்களின் செல்வாக்கை தி.மு.க. அரசு இந்து விட்டதால் 10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவதாக அறிவிப்பு.
* கல்லூரி திறக்கப்பட்டு 5 மாதம் கழித்து தான் மடிக்கணினி வழங்கப்படுகிறது, இதனால் என்ன பயன்?
* அடுத்தாண்டு நடைபெறும் தேர்தலில் மாணவர்களின் வாக்குகள் தேவை என்பதால் மடிக்கணினி வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
* நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளைக் கூறி ஆட்சியை தி.மு.க. பிடித்துள்ளது.
* கேஸ் சிலிண்டர் மானியம், பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, கல்விக் கடன் ரத்து என்னவானது?
* டெல்டா மாவட்டங்களில் 15 நாட்கள் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் நெல்மணிகள் நாசம்.
* 15 நாட்களாக நெல் மூட்டைகளை காவல் காத்துக்கொண்டிருக்கிறோம் என விவசாயிகள் கூறினர்.
* டெல்டாவில் பயிர் பாதிப்புகளை பார்க்காமல் ரெயில் நிலையத்திற்கு சென்றார் உதயநிதி.
* விவசாயிகளை பார்ப்பதற்கு அஞ்சிதான் பார்க்காமல் சென்று விட்டார் துணை முதலமைச்சர்.
* பொருட்களை வாங்கும் சக்தியை ஏழை மக்கள் இழந்து விட்டனர்.
* மின் கட்டணத்தை 52 சதவீத அளவுக்கு தி.மு.க. அரசு உயர்த்தி இருக்கிறது.
* மின் கட்டணம் என்று சொன்னாலே ஷாக் அடிக்கிறது என்று கூறியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
* தி.மு.க. ஆட்சியில் மின்சாரக் கட்டணத்தை கேட்டாலே ஷாக் அடிக்கிறது.
* வரி மேல் வரி போட்டு மக்களை உறிஞ்சிக் கொண்டிருக்கிறது தி.மு.க. அரசு.
* உடல் உறுப்பை விற்று வாழ்க்கையை நடத்தும் துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.
* கிட்னி முறைகேடு தொடர்பாக இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
* தி.மு.க. ஆட்சியில் உடல் உறுப்பைக் கூட விட்டு வைக்கவில்லை.
* அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் கிட்னி முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.
* மகளிருக்கு இலவச பயணம் என்று கூறுகிறீர்கள், ஆனால் பேருந்துகள் ஓட்டு உடைசலாக உள்ளன.
* 2019-ல் அதிமுக ஆட்சியில் ரூ.3 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகள் பெறப்பட்டன.
* 77 சதவீத அளவுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டு விட்டதாக முதலமைச்சர் பச்சைப்பொய் சொல்கிறார்.
* முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை கேட்டால், வெள்ளை காகிதத்தை காட்டுகிறார்கள்.
* அ.தி.மு.க.வின் திட்டங்களை ஸ்டிக்கர் ஒட்டி திறந்து வைக்கிறது தி.மு.க. அரசு.
* ஏதாவது ஒரு திட்டத்தை தி.மு.க.வால் கொண்டு வர முடிந்ததா?
* கொரோனா காலத்தில் வரியே இல்லாமல் ஆட்சியை நடத்தினோம்
* கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்றது என்று கூறினார்.
- கூட்டணியில் யாரை இணைப்பது என்பது தொடர்பாக இ.பி.எஸ்-க்கு முழு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றம்.
- எல்லோருக்கும் எல்லாம் என ஆசைகாட்டி அனைத்து தரப்பு மக்களையும் ஏமாற்றி வருவதாக தி.மு.க. அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம்.
சென்னையில் அ.தி.மு.க. செயற்குழு-பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வழி நெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதலில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அவர் பேசுகையில், "அவைத் தலைவர் தமிழ்மகன் உசேனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் அ.தி.மு.க. சட்ட விதிகளின்படி துணைச் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தற்காலிக அவைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டு கூட்டத்தை நடத்தி தர வேண்டும் என்று முன் மொழிகிறேன்" என்றார்.
இதை திண்டுக்கல் சீனிவாசன் வழிமொழிவதாக கூறினார். இதையடுத்து கே.பி.முனுசாமி தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்,
* 2026 சட்டசபை தேர்தல் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க எடப்பாடி பழனிசாமிக்கு முழு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றம்.
* கூட்டணியில் யாரை இணைப்பது என்பது தொடர்பாக இ.பி.எஸ்-க்கு முழு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றம்.
* நீட், கல்விக்கடன் ரத்து, பழைய ஓய்வூதிய திட்டம், 100 நாள் வேலையை 150-ஆக உயர்த்துவது போன்ற வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை. கடந்த தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றாத தி.மு.க. அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம்.
* வடகிழக்கு பருவமழையின்போது மக்களை காக்க தவறிவிட்டதாக தி.மு.க. அரசிற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம்.
* கோவை, மதுரை மெட்ரோ விவகாரத்தில் தி.மு.க. அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றம். முறையான தரவுகளுடன் மெட்ரோவிற்கு விண்ணப்பிக்கவில்லை என தீர்மானம் நிறைவேற்றம்.
* எல்லோருக்கும் எல்லாம் என ஆசைகாட்டி அனைத்து தரப்பு மக்களையும் ஏமாற்றி வருவதாக தி.மு.க. அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவப்படங்களுக்கு எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
- நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்.
சென்னையில் அ.தி.மு.க. செயற்குழு-பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வழி நெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து அ.தி.மு.க. பொதுக்குழு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தொடங்கியது.
முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவப்படங்களுக்கு எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து தற்காலிக அவைத்தலைவராக கே.பி.முனுசாமி அ.தி.மு.க. பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழ்மகன் உசேன் உடல்நலக்குறைவால் பங்கேற்காததால் தற்காலிக அவைத்தலைவர் தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நீதிமன்ற உத்தரவிற்கே சவால் விடுவதா? என தி.மு.க. அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
* நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்.
* மேல்முறையீடு என்ற பெயரில் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றம்.
* நீதித்துறையின் தனித்தன்மை காக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- மாவிலை தோரணங்களுடன் கூடிய பிரமாண்ட வரவேற்பு வளைவும் அமைக்கப்பட்டிருந்தது.
- செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்தவர்களுக்கு 3 நுழைவு பாதைகள் அமைக்கப்பட்டு இருந்தன.
சென்னை:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை சந்திப்பதற்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.
அந்த வகையில் அ.தி.மு.க.வும் தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகி வருகிறது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அதே நேரத்தில் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்கிற கோரிக்கையும் வலுத்து வருகிறது. ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி எந்தவித முக்கியத்துவமும் அளிக்காமல் கட்சி பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
ஆனாலும் அ.தி.மு.க.வில் இருந்து வெளியேற்றப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன், சசிகலா ஆகியோரை மீண்டும் கட்சியில் சேர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகள் திரைமறைவில் நடந்துகொண்டே இருக்கின்றன.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஓ.பன்னீர் செல்வம் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசினார். தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை, டி.டி.வி. தினகரனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். இது அ.தி.மு.க. ஒருங்கிணைப்புக்கான பணிகள் வேகப்படுத்தப்பட்டு இருப்பதை காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் சென்னையில் இன்று அ.தி.மு.க. செயற்குழு-பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மண்டபத்தின் நுழைவு வாயில் அருகே உள்ள காலி மைதானத்தில் உணவு தயாரிப்பு கூடம், உணவு அருந்தும் கூடம், வாகன நிறுத்துமிடம் ஆகியவற்றுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் உருவம் பொறித்த வரவேற்பு பதாகைகளுடன் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன.
எடப்பாடி பழனிசாமியை வரவேற்று வைக்கப்பட்டிருந்த அனைத்து பேனர்களிலும் வருங்கால முதல்வர் என்கிற வாசகங்கள் இடம் பெற்றிருந்தது. மாவிலை தோரணங்களுடன் கூடிய பிரமாண்ட வரவேற்பு வளைவும் அமைக்கப்பட்டிருந்தது.

காலை முதலே மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை, செண்டை மேளம், புலியாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நுழைவு வாயில் பகுதியில் நடந்து கொண்டிருந்தன. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்ட நிகழ்வுகளை வெளியே இருந்து பார்வையிடும் வகையில் எல்.இ.டி. திரை அமைக்கப்பட்டு இருந்தது.
மண்டபத்தின் முகப்பு வாயில் தென்னை ஓலை, குருத்துக்களால் இரட்டை இலை சின்னத்துடன் அழகுற அமைக்கப்பட்டு இருந்தது. முகப்பில் மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. கரும்பு தோரணங்களும் அமைக்கப்பட்டு இருந்தன.
2026 தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு செல்லும் என்பதை காட்டும் வகையில் மண்டபத்தின் நுழைவு வாயில் செயின்ட் ஜார்ஜ் கோட்டை வடிவில் அமைக் கப்பட்டு இருந்தது. மண்ட பத்தின் உள்ளே வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தது. குடிநீர் வசதி, மருத்துவ வசதி, ஆம்புலன்ஸ் வசதியும் செய்யப்பட்டி ருந்தது. தீயணைப்பு வாகனங்களும் நிறுத்தப்பட்டு இருந்தன.
செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்தவர்களுக்கு 3 நுழைவு பாதைகள் அமைக்கப்பட்டு இருந்தன. செயற்குழு உறுப்பினர்கள் வருவதற்கு தனி பாதையும், பொதுக்குழு உறுப்பினர்கள் வருவதற்கு தனி பாதையும், சிறப்பு அழைப்பாளர்கள் வருவதற்கு தனி பாதையும் அமைக்கப்பட்டு இருந்தன.
செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் ஆகியோருக்கு தனித்தனியாக அடையாள அட்டைகள் வழங்கப்பட்டிருந்தன. கூட்டத்துக்கு வந்தவர்களின் அடையாள அட்டைகள் சரிபார்க்கப்பட்டு உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
சுமார் 200-க்கும் மேற்பட்ட போலீசார் அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தனியார் பாதுகாவலர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க தமிழகம் முழுவதும் இருந்து உறுப்பினர்கள் கார்களில் வந்ததால் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வழி நெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிலையம், நெற்குன்றம், மதுரவாயல், வானகரம் என ஒவ்வொரு பகுதிகளிலும் சாலையின் இருபுறங்களிலும் ஆயிரக்கணக்கான தொண்டர்களும், பொதுமக்களும், திரண்டு நின்று அவருக்கு மலர்தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் மண்டபத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு தாரை, தப்பட்டை, செண்டை மேளம் முழங்க பூரண கும்ப மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
- மானாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் என கலை நிகழ்ச்சிகளுடன் வரவேற்பு அளிக்க இருக்கிறோம்.
- ஒவ்வொரு பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் கழகத் தொண்டர்களும் திரண்டு பொதுச்செயலாளர் நாளைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பிரமாண்டமாக வரவேற்கிறோம் .
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு அ.தி.மு.க. தீவிரமாக தயாராகி வருகிறது
தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் நாளை நடைபெறும் அ.தி.மு.க. பொதுக்குழு- செயற்குழு கூட்டத்தில் பங்கேற்கிறார். இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நாளை காலை 10 மணி அளவில் வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கிறார்கள்.
மண்டபத்தின் நுழைவு வாயில் அருகே உள்ள காலி மைதானத்தில் உணவு தயாரிப்பு கூடம், உணவு அருந்தும் கூடம், வாகன நிறுத்துமிடம் ஆகியவற்றுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எல்.இ.டி திரைகள் அமைக்கும் பணிகள் முன்னாள் அமைச்சரும் திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளருமான பா.பென்ஜமின் தலைமையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே இந்த பணியை தலைமை கழக மேலாளர் பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தினார்.
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வந்து செல்லும் பாதை கழக நிர்வாகிகள் உணவருந்தும் இடம் உணவு தயாரிப்பு கூடம் பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்கள் அமருமிடம் ஆகியவற்றையும் பார்வையிட்டனர்.
செயற்குழு மற்றும் பொதுக்குழு ஏற்பாடுகள் குறித்து முன்னாள் அமைச்சர் பா.பென்ஜமின் கூறியதாவது:-
கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளும் இந்த கழகத்தின் செயற்குழு பொதுக்குழு ஆண்டுதோறும் நடைபெறுவது போன்று இல்லாமல் 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்கு வித்திடும் வகையில் நடைபெற உள்ளது. கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்திற்கு வருகை தரும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு திருவள்ளூர் மத்திய மாவட்டத்தின் எல்லையான கோயம்பேடு மேம்பாலத்தில் இருந்து ஸ்ரீ வாரு வெங்கடாஜலபதி பேலஸ் வரை சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
மானாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் என கலை நிகழ்ச்சிகளுடன் வரவேற்பு அளிக்க இருக்கிறோம். சாலை எங்கும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி ஜெயலலிதா ஆகியோர் உருவம் பொறித்த வரவேற்பு பதாகைகள் மாஇலை தோரணங்களுடன் கூடிய பிரமாண்ட வரவேற்பும் அளிக்கப்படுகிறது.
கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிலையம், நெற்குன்றம், மதுரவாயல், வானகரம் என ஒவ்வொரு பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் கழகத் தொண்டர்களும் திரண்டு பொதுச்செயலாளர் நாளைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பிரமாண்டமாக வரவேற்கிறோம் .
இதற்கான பணிகள் கடந்த ஒரு வாரமாக விறுவிறுப்பாக நடைபெற்று உள்ளது.
இவ்வாறு பெஞ்சமின் தெரிவித்தார்.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் நடைபெற உள்ள இந்த பொதுக்குழு கூட்டம் அரசியல் களத்தில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
- ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது.
- அ.திமு.க. பொதுக்குழு மற்றம் செயற்குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை:
அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் அடுத்த மாதம் 10-ந்தேதி நடைபெற உள்ளதாக அதன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
அதன்படி, சென்னை வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், அ.திமு.க. பொதுக்குழு மற்றம் செயற்குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
- தொண்டர்கள் விருப்பத்திற்கேற்பவும், கட்சியின் நலனைக்கருதியும் ஒற்றை தலைமை என்பது ஏற்படுத்தப்பட்டது.
- கட்சியின் பொதுக்குழுவுக்கே அனைத்து அதிகாரமும் உள்ளது, எனவே அதன் முடிவே இறுதியானது.
சென்னை:
அ.தி.மு.க பொதுக்குழு செல்லும் என்ற சென்னை ஐேகார்ட்டு உத்தரவுக்கு எதிராக ஓ.பி.எஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவுக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், அ.தி.மு.க பொதுக்குழு உறுப்பினர்களில் பெரும்பான்மையினர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உள்ளனர். எனவே தற்போது ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு அற்பமான ஒன்று ஆகும்.
தொண்டர்கள் விருப்பத்திற்கேற்பவும், கட்சியின் நலனைக்கருதியும் ஒற்றை தலைமை என்பது ஏற்படுத்தப்பட்டது. கட்சியின் பொதுக்குழுவுக்கே அனைத்து அதிகாரமும் உள்ளது, எனவே அதன் முடிவே இறுதியானது.
மேலும் கட்சியின் செயல்பாடுகளில் முடக்கம் ஏற்பட்டதால் தான் ஒற்றை தலைமை வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது, அதுவே பொதுக்குழுவிலும் பிரதிபலித்தது.
ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க அலுவலகத்தை சூறையாடி கட்சியின் விதிகளை மீறியுள்ளார். கட்சிக்கு எதிராக செயல்பட்டுள்ளார். எனவே அவர் எந்த நிவாரணமும் பெற தகுதி இல்லாதவர்.
மேலும் கட்சி பொதுக்குழு கூட்டப்படுவதற்கு முன்னர் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றியே கட்சியின் பொதுக்குழு கூட்டப்பட்டது.
இவ்வாறு பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அ.தி.மு.க.வில் மாவட்டம் வாரியாக நிர்வாகிகளை நியமித்துள்ள ஓ.பி.எஸ். பொதுக்குழு கூட்டம் சட்ட விரோதமானது என்று தனது வக்கீல்கள் மூலம் வாதாடி வெற்றி பெற முயன்று வருவார்.
- தனது வக்கீல்களுடன் தீவிரமாக ஆலோசித்து வரும் ஓ.பி.எஸ். அடுத்த கட்டமாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் பற்றியும் விவாதித்து வருகிறார்.
சென்னை:
அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே மோதல் முற்றியதை தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.
இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையில் அவருக்கு சாதகமாக தீர்ப்பு அளிக்கப்பட்டு இருந்தது. பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று அளிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஐகோர்ட்டு பெஞ்சில் அப்பீல் செய்யப்பட்டது.
இதனை விசாரித்த நீதிபதிகள் அ.தி.மு.க. சட்ட விதிகளுக்கு உட்பட்டே பொதுக்குழு கூட்டப்பட்டு உள்ளது என்றும் எனவே பொதுக்குழு செல்லும் என்றும் தீர்ப்பளித்தனர். இதனை எதிர்த்து ஓ.பி.எஸ். சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.
சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி அளித்த தீர்ப்பில் ஓ.பி.எஸ்.சுக்கு சாதகமான அம்சங்கள் இடம் பெற்றிருந்தன. இதனை மையமாக வைத்து சுப்ரீம் கோர்ட்டில் தேவையான கூடுதல் ஆவணங்களுடன் மனு தாக்கல் செய்ய ஓ.பி.எஸ். தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தங்கள் தரப்புக்கு சாதகமாகவே தீர்ப்பு வரும் என்று ஓ.பி.எஸ். மற்றும் அவரது ஆதரவாளர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு சாதகமாக வரும் பட்சத்தில் அதனை வைத்து அ.தி.மு.க.வை கைப்பற்றி விடலாம் என்று ஓ.பி.எஸ். கணக்கு போட்டு வைத்து உள்ளார்.
அ.தி.மு.க.வில் மாவட்டம் வாரியாக நிர்வாகிகளை நியமித்துள்ள ஓ.பி.எஸ். பொதுக்குழு கூட்டம் சட்ட விரோதமானது என்று தனது வக்கீல்கள் மூலம் வாதாடி வெற்றி பெற முயன்று வருவார். இதற்காக தனது வக்கீல்களுடன் தீவிரமாக ஆலோசித்து வரும் ஓ.பி.எஸ். அடுத்த கட்டமாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் பற்றியும் விவாதித்து வருகிறார்.
இதற்கு முன்பு பொதுக்குழு கூட்டங்கள் எப்படி நடந்தன? எடப்பாடி கூட்டிய பொதுக்குழு கூட்டம் எப்படி நடந்தது என்பதை எல்லாம் ஒப்பிட்டு சுப்ரீம் கோர்ட்டில் வாதாட ஓ.பி.எஸ். வக்கீல்கள் முடிவு செய்து காய் நகர்த்தி வருகிறார்கள்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமியும் அதிரடியாக வியூகம் வகுத்து வருகிறார். ஐகோர்ட்டில் 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் தங்களுக்கு சாதகமாக வந்துள்ள தீர்ப்பை சுட்டிக் காட்டி அ.தி.மு.க. சட்ட விதிகளுக்கு உட்பட்டே பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது என்பதை எடுத்துக் கூற உள்ளனர். அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்காக கட்சி சார்பில் வெளியிடப்பட்ட அறிவுப்புகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தயாரித்து வைத்துள்ள எடப்பாடி ஆதரவு வக்கீல்கள் சுப்ரீம் கோர்ட்டில் வெற்றி நிச்சயம் என்கிற நம்பிக்கையோடு காய் நகர்த்துகிறார்கள். டிசம்பர் 6-ந் தேதி நடைபெற உள்ள விசாரணைக்கு இன்னும் ஒரு வார காலமே இருக்கும் நிலையில் எடப்பாடி பழனிசாமி ஆதரவு வக்கீல்களும் சட்ட நுணுக்கங்களை ஆராய்ந்து கோர்ட்டிலும் வெற்றி பெற்று விட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.
இதனால் எடப்பாடி பழனிசாமி, மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு ஆதரவு நிர்வாகிகள் 6-ந் தேதி நடைபெற உள்ள வழக்கு விசாரணையை மிகவும் ஆவலுடன் எதிர் பார்த்து காத்திருக்கிறார்கள்.
அ.தி.மு.க. தலைமை கழகம் தொடர்பான வழக்கில் சட்ட போராட்டம் நடத்தி வெற்றி பெற்றது போல, பொதுக்குழு வழக்கிலும் நிச்சயம் எங்களுக்கே வெற்றி கிடைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி ஆதரவு வக்கீல்கள் தெரிவித்து உள்ளனர்.
அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டி இருப்பது தமிழக அரசியல் அரங்கிலும் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.
- உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை காரணம் காட்டி யாரையும் செயல்பட விடாமல் ஓபிஎஸ் தடுத்து வருகிறார்.
- அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான மனுக்கள் மீது வரும் திங்கட்கிழமை விசாரணை நடத்தப்படுகிறது.
அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், " நிலுவையில் உள்ள மனுக்களை காரணம் காட்டி பொதுக்குழு தீர்மானங்களை செயல்படுத்த கூடாது என ஓபிஎஸ் கூறுவது ஏற்புடையதல்ல.
உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை காரணம் காட்டி யாரையும் செயல்பட விடாமல் ஓபிஎஸ் தடுத்து வருகிறார்.
தேர்தல் ஆணையத்தை எதிர்மனுதாரராக சேர்க்காமலயே, அதன் செயல்பாடுகளுக்கு ஓபிஎஸ் முட்டுக்கட்டை விதித்து வருகிறார்" என்று கூடுதல் மனுவில் ஓபிஎஸ் மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றம்சாட்டினார்.
இதற்கிடையே, அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான மனுக்கள் மீது வரும் திங்கட்கிழமை விசாரணை நடத்தப்படும் என்று உச்சநீதிமன்றம் கூறப்பட்டிருந்தது.
- ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்பட்டதால் பொதுக்குழு அவரை நீக்கியதாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதிடப்பட்டது.
- கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்ற விதியை மாற்றியுள்ளதாக வைரமுத்து தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஓ.பி.எஸ். ஆதரவாளரான வைரமுத்து என்பவரும் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் விசாரித்து வருகிறார்கள்.
பல கட்டங்களாக தொடர்ந்து நடந்த இந்த வழக்கின் விசாரணை நேற்றும் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கை விசாரிக்க வேண்டியதன் அவசியத்தையும், இதுவரை வழக்கு கடந்து வந்த பாதைகளையும் கேட்டனர். அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பு வக்கீல் சி.ஏ.சுந்தரம், சென்னை ஐகோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் சிவில் வழக்கு தொடர்ந்ததையும், எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்ட விபரத்தையும் எடுத்து கூறினார்கள்.
ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யப்பட்டனர். அந்த பதவி 2026-ம் ஆண்டு வரை உள்ளது என்று வைரமுத்து தரப்பு வக்கீல் ரஞ்சித் குமார் கூறினார். ஆனால் இருவரும் போட்டியில்லாமல் தேர்வு செய்யப்பட்டது செயற்குழுவில் தான். அதற்கு பொதுக் குழுவின் ஒப்புதல் தேவை என்றார். அ.தி.மு.க. பொதுக்குழு கட்சியின் விதிகளுக்கு முரணாக கூட்டப்பட்டதாகவும், தேர்வு செய்யப்பட்ட ஒருங்கிணைப்பாளரை அந்த பொதுக்குழுவில் நீக்கி இருக்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதற்கு, ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்பட்டதால் பொதுக்குழு அவரை நீக்கியதாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த பரபரப்பான கட்டத்தில் இன்று பிற்பகலில் மீண்டும் விசாரணை நடைபெற்றது. அப்போது, அதிமுக பொதுக்குழுவை ஆண்டுக்கு ஒரு முறை கூட்ட வேண்டும், தேவைப்பட்டால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து பொதுக்குழுவை கூட்ட முடியும் என ஓபிஎஸ் தரப்பு வாதிட்டது.
அதிமுகவின் அடிப்படை விதிகளையே தற்போது மாற்றி அமைத்துள்ளனர், கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்ற விதியையும் மாற்றியுள்ளனர் என வைரமுத்து தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், அடுத்தகட்ட விசாரணையை நாளை நண்பகல் 12 மணிக்கு ஒத்திவைத்தனர். இந்த வாரத்திற்குள் விசாரணையை நிறைவு செய்ய நீதிபதிகள் முடிவு செய்துள்ளனர். அதனால் நாளை இரு தரப்பினரும் வாதங்களை இறுதி செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அதற்கேற்ப இரு தரப்புக்கும் நேரம் ஒதுக்கப்படும்.






