search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2019 பி.எம்.டபுள்யூ. எக்ஸ்5"

    பி.எம்.டபுள்யூ. நிறுவனம் பல்வேறு அம்சங்களுடன் இந்தியாவில் 2019 எக்ஸ்5 காரை அறிமுகம் செய்துள்ளது.



    பி.எம்.டபுள்யூ. நிறுவனம் புதிய தலைமுறை எக்ஸ்5 காரை இந்தியவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய பி.எம்.டபுள்யூ. எஸ்.யு.வி. காரின் விலை ரூ.72.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 2019 ஆண்டு முழுக்க பி.எம்.டபுள்யூ. நிறுவனம் மொத்தம் 12 வாகனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அவற்றில் புதிய தலைமுறை எக்ஸ்5 மாடலும் ஒன்றாகும்.

    புதிய பி.எம்.டபுள்யூ. எக்ஸ்5 இருவித டீசல் மாடல்கள்- பி.எம்.டபுள்யூ. எக்ஸ்5 எக்ஸ் டிரைவ்30டி ஸ்போர்ட் மற்றும் பி.எம்.டபுள்யூ. எக்ஸ்5 எக்ஸ் டிரைவ்30டி எக்ஸ்-லைன் கிடைக்கிறது. பெட்ரோல் வேரியண்ட் பி.எம்.டபுள்யூ. எக்ஸ்5 எக்ஸ் டிரைவ் 40i எம் ஸ்போர்ட் விலை ரூ.82.40 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 



    புதிய பி.எம்.டபுள்யூ. கார் இதுவரை வெளியான எக்ஸ்5 மாடல்களில் பெரிய கார் ஆகும். இந்த கார் 35 எம்.எம். நீளமாகவும், 32 எம்.எம். அகலமாகவும், 11 எம்.எம். உயரமாக இருக்கிறது. இருசக்கரங்களுக்கு இடையே இருக்கும் இடைவெளி அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய காரின் பூட் ஸ்பேஸ் 645 லிட்டர்களாக இருக்கிறது.

    பி.எம்.டபுள்யூ. மாடலின் உள்புறம் மற்ற மாடல்களை போன்று வழங்கப்படுகிறது. இது பி.எம்.டபுள்யூ. லைவ் காக்பிட் புரோஃபஷனல் டிஸ்ப்ளே என அழைக்கப்படுகிறது. இத்துடன் ஃபுளோட்டிங் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகள் வழங்கப்படுகின்றன.

    மற்ற பி.எம்.டபுள்யூ. மாடல்களை போன்று புதிய காரிலும் வாய்ஸ் கமாண்ட் மற்றும் ஜெஸ்ட்யூர் கண்ட்ரோல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் கேபின் லெதர் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்துடன் ஃபோர்-சோன் கிளைமேட் கண்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜிங், பின்புற இருக்கையில் அமர்வோருக்கு ஸ்கிரீன்கள், பானரோமிக் சன்ரூஃப், கார்பெட் லைட், ஆம்பியன்ட் லைட்டிங் மற்றும் கியர் செலக்டர் லைட் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படுகின்றன.
    பிஎம்டபுள்யூ 2019 எக்ஸ்5 அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    பிஎம்டபுள்யூ நிறுவனத்தின் 2019 எக்ஸ்5 அறிமுகம் செய்யப்பட்டது. நான்காம் தலைமுறை எக்ஸ்5 எஸ்யுவி மாடலில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய பிஎம்டள்யூ மாடல் பிரிமீயம் எஸ்யுவி மாடலின் 20-வது ஆண்டு விழாவை முன்னிட்டு வெளியிடப்படுகிறது.

    பக்கவாட்டுகளில் கிரீஸ் லைன்கள் முந்தைய மாடல்களை விட மிக நேர்த்தியாக மாற்றப்பட்டுள்ளது. எனினும் ஒட்டுமொத்த தோற்றம் தற்போதைய மாலை போன்றே காட்சியளிக்கிறது. புதிய மாடல் முந்தைய மாடலை விட நீலமாகவும், அகலமாகவும், உயரமாக இருக்கிறது.
     
    இதன் வீல்பேஸ் 42 மில்லிமீட்டர் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது, குளோபல் வேரியன்ட் 20 இன்ச் 5-ஸ்போக் கொண்ட வீல்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. எனினும் இந்த ஆப்ஷன் இந்தியாவில் வெளியிடப்படும் மாடலில் இருக்காது என கூறப்படுகிறது.

    பின்புறம் வடிவமைப்பு முற்றிலும் மாற்றப்பட்டு, புதிய டெயில் லேம்ப் மற்றும் பம்ப்பர்களை கொண்டுள்ளது. இதன் ஸ்பாயிலர் மற்றும் ஷார்க்-ஃபின் ஆன்டெனா புதிய மாடலில் மிகவும் அழகாக காட்சியளிக்கிறது. 



    உள்புற டேஷ்போர்டு அதிநவீன வடிவமைப்பு கொண்டிருக்கிறது. மேலும் புதிய பிஎம்டபுள்யூ எக்ஸ்5 புத்தம் புதிய 'லைவ் காக்பிட் புரோஃபஷனல்' யூனிட் கொண்டிருக்கும் முதல் மாடல் என்ற பெருமையை பெற்றிருக்கிறது. இதில் 12.3 இன்ச் ஹெச்டி டிஸ்ப்ளேக்களும் அடங்கும், இவை இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகும்.

    இந்த சிஸ்டம் 20 ஜிபி இன்டெர்னல் மெமரி, யுஎஸ்பி, ப்ளூடூத் கனெக்டிவிட்டி, ரியல்-டைம் வெயிக்கில் டேட்டாவை இயக்கும் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் கனெக்ட்டெட் பேக்கேஜ் புரோஃபஷனல் அம்சம் வழங்கப்பட்டிருப்பதால், ரிமோட் சேவைகள், கான்சியர்ஜ், நேரலை டிராஃபிக் மற்றும் பல்வேறு இதர தகவல்களை வழங்குகிறது.

    புதிய பிஎம்டபுள்யூ எக்ஸ்5 மாடலில் Xடிரைவ்40i ட்ரிம் வேரியன்ட் ஆக அறிமுகம் செய்யப்படும். இதில் 3.0 லிட்டர் ஸ்டிரெயிட்-சிக்ஸ் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் 340 பிஹெச்பி மற்றும் 500 என்எம் டார்கியூ செயல்திறன் கொண்டுள்ளது. இந்தியாவில் இந்த மாடலில் தற்போதைய 3.0 லிட்டர் ஸ்டிரெயிட்-சிக்ஸ் டீசல் இன்ஜின் வழங்கப்படுகிறது, இந்த இன்ஜின் 265 பிஹெச்பி பவர், 620 என்எம் டார்கியூ வழங்குகிறது. இந்த இன்ஜின்கள் 8-ஸ்பீடு ZF ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது. 

    2019-ம் ஆண்டின் முதல் காலாண்டில் சர்வதேச சந்தையில் புதிய பிஎம்டபுள்யூ எக்ஸ்5 அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து இந்தியாவில் இந்த மாடல் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ.80 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ×