search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குற்றவாளி"

    • போலீஸ் சூப்பிரண்டு பேட்டி
    • போலீஸ் நிலையத்தில் ஆய்வு

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி போலீஸ் நிலையத்துக்கு குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரன் பிரசாத் நேற்று மாலை "திடீர்" என்று வந்தார். அங்கு வந்த அவருக்கு போலீசார் அணிவகுப்பு மரியாதை அளித்தனர்.

    பின்னர் அவர் போலீஸ் நிலையத்தில் ஆய்வு நடத்தினார். அப்போது போலீசாரிடம் குறைகளை கேட்டறிந்தார். போலீசாருக்கு சில அறிவு ரைகளையும் வழங்கினார். போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் பற்றியும் எவ்வளவு புகார் மனுக்கள் வருகின்றன என்பது குறித்தும் அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டார்.

    கன்னியாகுமரி சர்வதேச சுற்றுலா தல மாக திகழ்வதால் போலீஸ் நிலையத்தையும் சுற்றுப்பு றங்களையும் தூய்மையாகவும் அழகாகவும் வைத்துக் கொள்ள போலீசாருக்கு அறிவுறுத்தினார்.

    பின்னர் குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரன் பிரசாத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் நாள் ஒன்றுக்கு எவ்வளவு புகார் மனுக்கள் வருகின்றன என்பது குறித்தும் எந்த மாதிரியான வழக்குகள் பதிவாகுகின்றன என்பது குறித்தும் எவ்வளவு வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறித்தும் நான் ஆய்வு மேற்கொண்டேன். நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டு உள்ளேன்.

    டி.ஜி.பி.யின் அறிவுறுத்தலின் பேரில் இன்று (வெள்ளிக்கிழமை) குமரி மாவட்டம் முழுவதும் உள்ள போலீசாருக்கு மருத்துவ பரிசோதனை நாகர்கோவிலில் நடைபெற இருக்கிறது. இதில் 2 ஆயிரம் போலீசார் பங்கேற்கின்றனர். 50-க்கும் மேற்பட்ட சிறப்பு மருத்துவர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு போலீசாருக்கு பரிசோதனை செய்கின்றனர்.

    சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் வாரத்தின் கடைசி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்களில் கடற்கரைப் பகுதியில் இருசக்கர வாகனங்களில் போலீஸ் ரோந்து ஏற்படுத்தப்படும்.

    கன்னியாகுமரியில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கழுத்து அடிபட்ட நிலையில் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு ரெயில்வே பாலத்தின் அடியில் வீசப்பட்டு பிண மாக கிடந்தார். மர்மமான முறையில் நடந்த அந்த வாலிபரின் கொலை வழக்கு குறித்து மிக விரைவில் துப்பு துலக்கப்படும்.

    அதற்காக கன்னியாகுமரி போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். பின்னர் கன்னியா குமரியில் நடைபெற்ற போலீ சாரின் குடும்பங்களின் ஒன்று கூடல் நிகழ்ச்சியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தொடங்கி வைத்தார். அவர்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார்.

    பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளி என நீதிபதி தீர்ப்பளிக்க அதனை ஏற்க முடியாத 78 வயது நபர், கோர்ட் அறையிலேயே தன்னை கத்தியால் குத்திக்கொண்டார்.
    நியூயார்க்:

    அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தை சேர்ந்த ஜான்னி ஐகார்ட் என்ற 78 வயது முதியவர் பாலியல் புகார் ஒன்றில் கைதாகி ப்ளூமிங்டன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி ஐகார்டை குற்றவாளி என அறிவித்தார்.

    தீர்ப்பால் அதிர்ச்சியடைந்த ஐகார்ட் தன்னுடைய பையில் வைத்திருந்த சிறிய கத்தியை எடுத்து கோர்ட் அறையில் வைத்தே தனது அடிவயிற்றில் குத்தினார். ரத்த வெள்ளத்துடன் மருத்துவமனைக்கு ஐகார்ட் கொண்டு செல்லப்பட்டார்.

    அவருக்கான தண்டனை அடுத்த மாதம் அறிவிக்கப்படும் என்றாலும், கத்தியுடன் அவர் நீதிமன்றத்துக்கு வந்தது எப்படி?, பாதுகாப்பு கருவிகள் எதற்கு உள்ளன என போலீசார் மீது கேள்விக்கத்திகள் பாய்ந்துள்ளது.
    1988-ம் ஆண்டு சாலையில் சண்டையிட்டு முதியவரை தாக்கிய வழக்கில் பஞ்சாப் மந்திரி நவ்ஜோத்சிங் சித்து குற்றவாளி என சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. #NavjotSinghSidhu
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய பஞ்சாப் மந்திரியுமான நவ்ஜோத்சிங் சித்து, கடந்த 1988-ம் ஆண்டு
    பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள சாலையில் குர்னம் சிங், என்பவருடன் ஏற்பட்ட சண்டையில், அவரது தலையில், நவ்ஜோத் சிங் சித்து பலமாக தாக்கினார்.

    இதில் படுகாயமடைந்த, குர்னம் சிங், சில நாட்களுக்கு பின் உயிரிழந்தார். இந்த வழக்கை விசாரித்த பாட்டியாலா கோர்ட், சித்துவை விடுவித்தது. இருப்பினும், மேல்முறையீடு செய்யப்பட்டதில் அரியானா ஐகோர்ட் 2007-ம் ஆண்டு, சித்துவை குற்றவாளி என அறிவித்தது. அவருக்கு, மூன்று ஆண்டு சிறைத் தண்டனையும்,ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

    இதனை எதிர்த்து சித்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் செல்லமேஸ்வர், எஸ்.கே கவுல் அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. கொலை செய்யும் நோக்கத்துடன் தாக்கப்பட்டதாக அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் இருந்து சித்து விடுவிக்கப்பட்டார்.

    அதே வேளையில், கொடூரமாக தாக்கப்பட்டதாக அவர் மீது உள்ள வழக்கில் சித்து குற்றவாளி என நீதிபதிகள் அறிவித்தனர்.  
    அவருக்கான தண்டனை விபரங்கள் பின்னர் அறிவிக்கப்பட உள்ளது.

    முன்னதாக, கடந்த மாதம் 14-ம் தேதி வழக்கு விசாரணையின் போது, “சித்துவுக்கு மூன்று ஆண்டு சிறைத் தண்டனை விதித்து, ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவில் தவறு இல்லை” என பஞ்சாப் மாநில அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 
    ×