search icon
என் மலர்tooltip icon
    • மாணவர்கள், ஆசிரியர்களுக்கு ஜெகத்ரட்சகன் பொன்னாடை அணிவித்து பாராட்டினார்.
    • ஆசிரியர்கள் பள்ளி நிறுவனர் எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி.யை நேரில் சந்தித்து ஆசி பெற்றனர்.

    புதுச்சேரி:

    அகரத்தில் உள்ள ஸ்ரீ பாரத் வித்யாஷ்ரம் சி.பி. எஸ்.இ. மேல்நிலைப்பள்ளி 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

    தேர்வில் அதிக மதிப் பெண்கள் எடுத்து சாதித்த மாணவ-மாணவிகள் மற்றும் அதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள் பள்ளி நிறுவனர் எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி.யை நேரில் சந்தித்து ஆசி பெற்றனர்.

    அப் போது பள்ளியின் தாளாளர் ஜெ.சந்தானகிருஷ்ணன், முதல்வர் சாந்தி ஜெயசுந்தர் மற்றும் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு ஜெகத்ரட்சகன் பொன்னாடை அணிவித்து பாராட்டினார்.

    • வில்லியனூரில் இருந்து புதுவை சாராயத்தை கேனில் வாங்கி வந்த நபரை சுற்றி வளைத்து பிடித்தனர்.
    • விற்பனை செய்ய வாங்கி வந்த 5 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    புதுச்சேரி:

    மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் விஷசாராயம் குடித்து 12 பேர் உயிரிழந்த நிலையில் தமிழகம் முழுவதும் போலீசார் கள்ளச்சாராய வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் புதுவை அருகே தமிழக பகுதியான ஆரோவில் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பூத்துறை காட்டு பகுதியில் சாராய விற்பனை நடந்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ஆரோவில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் சாதாரண உடையில் சென்று சாராய விற்பனையை கண்காணித்து வந்த நிலையில், அப்போது வில்லியனூரில் இருந்து புதுைவ சாராயத்தை கேனில் வாங்கி வந்த நபரை சுற்றி வளைத்து பிடித்தனர்.

    தமிழக பகுதிக்கு கள்ளச்சாராயம் கடத்தியவர் அதிரடி கைது தமிழக பகுதிக்கு கள்ளச்சாராயம் கடத்தியவர் அதிரடி கைது அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் பூத்துறை கிராமத்தைச் சேர்ந்த முத்து (வயது 55) என்பது தெரிய வந்தது. அவர் விற்பனை செய்ய வாங்கி வந்த ஐந்து லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    அவர் மீது கள்ளச்சாராயம் விற்பனை செய்த வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • பொம்மை விற்பனை செய்து கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் பொம்மை விலை கேட்டுள்ளார்.
    • புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று பெரியக்கடை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை வீராம்பட்டினம் சண்முகா வீதியை சேர்ந்தவர் அருண் (32) காமராஜர் சாலையில் உள்ள பிரபல திரையரங்கில் ஆபரேட்டராக வேலை செய்து வருகிறார்.

     அருண் தனது மனைவி குழந்தைகள் மற்றும் நண்பர் ஸ்டீபன் ஆகியோருடன் புதுவை கடற்கரைக்கு சென்றார். அங்கு குழந்தைகள் பொம்மை கேட்டுள்ளனர்.

    உடனே அவர் நேரு சிலை அருகே பொம்மை விற்பனை செய்து கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் பொம்மை விலை கேட்டுள்ளார்.

     அந்த பெண் அதிக விலை கூறியதாக தெரிகிறது. அதற்கு அருண் இவ்வளவு விலை சொல்கிறீர்களே என கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண் அவர்களை பார்த்து தகாத வார்த்தைகளால் திட்டி சொன்ன விலைக்கு பொம்மையை வாங்கி செல்லுமாறு மிரட்டியதாக கூறப்படுகிறது.

    மேலும் பக்கத்தில் கடை வைத்திருந்த வாலிபர் மற்றும் அவரது மனைவி ஆகியோரும் அவர்களை திட்டி, இரும்பு பைப்பால் அருணையும், ஸ்டீபனையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த இருவரும் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று பெரியக்கடை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    அதன் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் பொம்மை கடை வைத்திருந்தது செல்வி என்பதும் பக்கத்து கடைக்காரர் மணி மற்றும் அவரது மனைவி என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் செல்வி, மணி மற்றம் அவரது மனைவியை தேடி வருகின்றனர்.

    • தேனீக்கள் கொட்டியதில் சிலர் மடுகரை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றனர்.
    • அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    புதுச்சேரி:

    நெட்டப்பாக்கம் அருகே மொளப்பாக்கம் சாலையின் இருபுறங்களிலும் புளியமரம், இலவம் பஞ்சு மரம், வேப்ப மரம் உள்ளிட்ட பல்வேறு மரங்கள் உள்ளன. இந்த நிலையில் இலவம் பஞ்சு மரத்தில் தேனீக்கள் கூடு கட்டி வைத்துள்ளன.

    இதனால் சாலையில் செல்ப வர்களை தேனீக்கள் விரட்டி விரட்டி கொட்டுகின்றன. இதுபோல்  தேனீக்கள் கொட்டியதில் சிலர் மடுகரை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றனர்.

    எனவே இலவம் பஞ்சு மரத்தில் கட்டியுள்ள தேனீக்களை அப்புறப்படுத்த துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

    • பிரபல ரவுடி உள்பட 2 பேர் கைது
    • 2 பேரையும் பிடித்து, அவர்கள் வைத்திருந்த கத்தியை பறிமுதல் செய்தனர்.

    புதுச்சேரி:

    வில்லியனூரில் உள்ள தனியார் மதுக்கடை யில் 2 பேர் மது அருந்திவிட்டு அங்கிருந்தவர்களிடம் தகாத வார்த்தையால் திட்டிக் கொண்டு கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுவதாக வில்லியனூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    சம்பவ இடத்திற்கு வில்லியனூர் சப்-இன்ஸ்பெக்டர் வேலு தலைமையிலான போலீசார் சென்று அங்கு ரகளை ஈடுபட்ட கோபாலன் கடையை சேர்ந்த குமார் என்கிற கலைகுமார்(23), ராஜா(21) ஆகிய 2 பேரையும் பிடித்து, அவர்கள் வைத்திருந்த கத்தியை பறிமுதல் செய்தனர். கைதான குமார் என்கிற கலைக்குமார் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • 7 பேருக்கு பட்டா வழங்கப்பட்டு வீடுகள் கட்டி கொடுக்கப்படவில்லை.
    • பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து விரைவில் அதற்கான தீர்வு காணப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.

    புதுச்சேரி:

    உழவர்கரை தொகுதிக்குட்பட்ட பிச்சவீரன்பட்டில் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் 127 வீடுகள் கட்டப்பட்டு 2016 ஆண்டில் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இதில் 52 நபர்களுக்கு வீடு வழங்குவதாக ஆணை வழங்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு வீடு இல்லை. ஏழு பேருக்கு பட்டா வழங்கப்பட்டு வீடுகள் கட்டி கொடுக்கப்படவில்லை. பல ஆண்டுகளாக இந்த குளறுபடி நீடித்து வரும் நிலையில்.

    அங்கிருந்த அரசு இடங்கள் ஒரு சிலரால் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு களை அகற்றி உரியவர்க ளுக்கு வீடு கட்டி கொடுக்க வேண்டும் என பிச்ச வீரன்பட்டு பொதுமக்கள் சார்பில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா, உழவர்கரை தொகுதி எம்எல்ஏ சிவசங்கரன் ஆகியோரிடம் மனு அளிக்கப்பட்டது.

    இந்நிலையில்  சிவசங்கரன் எம்.எல்.ஏ மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் சாய்.இளங்கோவன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் பிச்ச வீரன்பட்டில் உள்ள சர்ச்சைக்குரிய இடங்களை ஆய்வு செய்தனர். அப்போது அங்குள்ள பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து விரைவில் அதற்கான தீர்வு காணப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். 

    • மக்கள் வாழ்வுரிமை இயக்கம் வலியுறுத்தல்
    • கள்ளச்சாராய பலி குறித்து முழுமையான ஓய்வுபெற்ற நீதிபதி விசாரணைக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட வேண்டும்.

    புதுச்சேரி:

    மக்கள் வாழ்வுரிமை இயக்க செயலாளர் ஜெகன்நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 20-க்கும் மேற்பட்டோர் கள்ளச்சாராயம் குடித்து இறந்துள்ளனர். கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த தவறிய தமிழ்நாடு அரசு, பொதுமக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். சாராயத்தை ஒழிக்க தவறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    புதுவையில் மெத்தனால் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து புதுவை அரசு விசாரணை நடத்த வேண்டும். கள்ளச்சாராய பலி குறித்து முழுமையான ஓய்வுபெற்ற நீதிபதி விசாரணைக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • அறிவியல், பாலிடெக்னிக், ஓட்டல் மேலாண்மை சார்ந்த படிப்புகளை சேர்ந்த 30 கல்வி நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
    • முருகபிரகாஷ், 21-ந் தேதி தனியார் பயிற்சி நிறுவன இயக்குனர் யோகி ஆகியோர் உரையாற்றுகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை தொழிலாளர் துறை இயக்குனர் மாணிக்கதீபன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    புதுவை தொழிலாளர் துறையின் வேலை வாய்ப்பகம் சார்பில் உயர் கல்வி கண்காட்சி காந்தி திடலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  முதல் 21-ந் தேதி வரை 3 நாட்கள் கண்காட்சி நடக்கிறது.   6 முதல்   9 மணி வரை நடக்கும் கண்காட்சியில் புதுவை, தமிழகத்தை சேர்ந்த மருத்துவம், பொறியியல், கலை, அறிவியல், பாலிடெக்னிக், ஓட்டல் மேலாண்மை சார்ந்த படிப்புகளை சேர்ந்த 30 கல்வி நிறுவனங்கள் பங்கேற்கின்றன.

    கண்காட்சியை முதல அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைக்கிறார். அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், சந்திரபிரியங்கா உட்பட பலர் பங்கேற்கின்றனர். மேற்படிப்பு தொடர்பாக துறை வல்லுநர்கள் உரையாற்ற உள்ளனர். 19-ந் தேதி ஐ.ஐ.டி துறை தலைவர் ஹரிகிருஷ்ணன், 20-ந் தேதி புதுவை பொறியியல் கல்லூரி தலைவர் முருகபிரகாஷ், 21-ந் தேதி தனியார் பயிற்சி நிறுவன இயக்குனர் யோகி ஆகியோர் உரையாற்றுகின்றனர்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • சிவா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    • தர்பூசணி, மோர், குளிர்பானம், வெள்ளரிக்காய், நுங்கு உள்ளிட்ட குளிர்ச்சியான பொருட்களை வழங்கினார்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் தொகுதி தி.மு.க சார்பில் 4 மாட வீதி அண்ணாசிலை அருகில் நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

    இதனை தி.மு.க. மாநில அமைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான சிவா திறந்து வைத்து, பொதுமக்களுக்கு இளநீர், தர்பூசணி, மோர், குளிர்பானம், வெள்ளரிக்காய், நுங்கு உள்ளிட்ட குளிர்ச்சியான பொருட்களை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் தி.மு.க. தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, செல்வநாதன், சோமசுந்தரம், தொகுதி அவைத் தலைவர் ஜலால் ஹைனீன், துணைச் செயலாளர்கள் ஜெகன்மோகன், அரிகிருஷ்ணன், பொருளாளர் கந்தசாமி, ரமணன், சபரிநாதன், ராஜேந்திரன், செல்வநாதன், அங்காளன்,

    கிளைச் செயலாளர்கள் அருள்மணி, மிலிட்டரி முருகன், சுரேஷ், அன்புநிதி, வீரக்கண்ணு, திலகர், சுப்ரமணியன், கதிரவன், வெங்கடேசன், அக்பர், கமால்பாஷா, ரகுராமன், தஷ்ணா, ராமதாஸ், ரமேஷ், தேசிங்கு, ரபீக், பாஸ்கர், சிலம்பு, மணவாளன், செல்வநாயகம், லட்சுமணன், பாலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    மோர் பந்தலை எதிர்கட்சி தலைவர் சிவா திறந்து வைத்து பொதுமக்களுக்கு மோர் வழங்கினார்.

    • நாராயணசாமி மீது ஓம்சக்தி சேகர் சாடல்
    • இந்தியாவில் ஏற்பட்ட அனைத்து மரணங்களுக்கும் பொறுப்பேற்று நாராயணசாமி அரசியலில் இருந்தே விலகுவாரா?

    புதுச்சேரி:

    முன்னாள் எம்.எல்.ஏ ஒம்சக்தி சேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் கள்ள சாராயம் குடித்து ஏற்பட்ட மரணத்திற்கு புதுவை முதல்-அமைச்சர் பதவி விலக சொல்வது இந்த ஆண்டின் மிக பெரிய காமெடி என மக்கள் பரவலாக பேசி வருகின்றனர். எங்கே தமிழக தி.மு.க அரசை விமர்சனம் செய்தால் கூட்டணி உடைந்து அதற்கு நாம் காரணமாகி விடுவோமா என்ற பயத்தில் என்ன பேசுவது என்று தெரியாமல் போகிற போக்கில் பேசி வருகிறார்.

    முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி மத்திய மந்திரி, மாநில முதல்-அமைச்சர் என மிக பெரிய பொறுப்பான நிலைகளில் இருந்து விட்டு இப்போது நிலை தவறி பேசுவது ஒரு முன்னாள் முதல்- அமைச்சருக்கு அழகல்ல.

    நீட் தேர்வுக்கு பயந்து மாணவர் ஒருவர் தற்கொலை செய்தவுடன் முதல் -அமைச்சர் ரங்கசாமி பதவி விலக நாராயணசாமி கேட்டார். அவர் மத்திய மந்திரி பதவியில் இருந்த போது தி.மு.க காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் கொண்டு வந்த நீட் தேர்வு பயம் காரணமாக இந்தியாவில் ஏற்பட்ட அனைத்து மரணங்களுக்கும் பொறுப்பேற்று நாராயணசாமி அரசியலில் இருந்தே விலகுவாரா?

    தான் ஆட்சியில் இருந்த போது எப்போதும் கவர்னரிடம் போராட்டம் செய்தே காலத்தை கழித்து வாக்களித்த மக்களுக்கு எந்த நலனையும் செய்யாமல் இருந்து விட்டு இப்போது தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முதல்-அமைச்சர் ரங்கசாமி செய்யும் நற்பணிகளை பொறுத்து கொள்ள முடியாத நாராயணசாமி தேவையின்றி பேசுவதை நிறுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கிராம மக்கள் திடீரென கூடி கூட்டம் நடத்தியதால் பரபரப்பு
    • விவசாயிகள் தங்களின் விருப்பத்திற்கேற்ப கூடுதல் விலைக்கு ஆரோவில் நிர்வாகத்திடம் அளித்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி ஒட்டிய தமிழக பகுதியான சர்வதேக நகரமான ஆரோவில்லில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட உள்நாடு மற்றும் வெளிநாட்டு வாசிகள் வசித்து வருகின்றனர்.

     ஆரோவில் நகரத்தை சுற்றி இடையஞ்சாவடி, குயிலாப்பாளையம், பொம்மையார்பாளையம், கோட்டக்கரை உள்ளிட்ட கிராமப் பகுதிகள் உள்ளது.

    இப்பகுதியில் வசிக்கும் மக்கள், ஆரோவில் சுற்றியும் மையப்பகுதியிலும் விவசாய நிலங்களை வைத்துள்ளனர். 1968-ம் ஆண்டு ஆரோவில் நிறுவனம் துவங்கப்ப ட்டபோது, இரும்பை ஊராட்சியில் 70 சதவீதம் நிலங்களையும், பொம்மை யார்பாளையம் ஊராட்சியில் 30 சதவீதம் நிலங்களையும், விவசாயிகள் தங்களின் விருப்பத்திற்கேற்ப கூடுதல் விலைக்கு ஆரோவில் நிர்வாகத்திடம் அளித்தனர்.

    இந்நிலையில் ஆரோவில் மையப்பகுதியை சுற்றி எஞ்சியுள்ள விவசாய நிலங்கள், அரசு நிலங்களையும், விரிவாக்கப்பணிக்காக விவசாயிகளிடம் வாங்கு வதற்கான முயற்சிகளை ஆரோவில் நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

    மாத்திர் மந்திர் சுற்றியும், அதற்கு வெளியில் உள்ள நிலங்களையும், அரசு நிலங்களையும் கையெகப்படுத்தும் முயற்சிக்கு இரும்பை மற்றும் பொம்மையார்பாளையம் ஊராட்சியில் உள்ள பொது மக்கள் மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    குறிப்பாக ஆரோவில் பகுதியில் அமைந்துள்ள வண்டிப்பாதை, நீரோடப்பா தை, மேய்ச்சல் நிலங்களை அப்பகுதி மக்கள் பயன்படுத்தாத வகையில் தடை ஏற்படுத்தி வருவதாக ஆரோவில் நிர்வாகம் மீது அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டி வருகின்றனர்.

    இந்நிலையில் இரும்பை மற்றும் பொம்மையார்பாளையம் ஊராட்சி மக்கள் இரும்பை மாகாளேஸ்வரர் கோவில் வளாகத்தில் ஆலோசனைக்கூட்டம் நடத்தினர். அதில், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், பங்கேற்ற அனைவரும் இரும்பை ஊராட்சி யின் வண்டிப்பாதை, மேய்ச்சல் நிலம், நீரோடை பாதையை ஆரோவில் நிர்வாகத்திற்கு தாரை வார்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மேலும், ஆரோவில் பகுதியில் உள்ள அனைத்து வண்டிப்பாதைகளையும் பூர்வீக மக்கள் பயன்படுத்த தடையாக உள்ள சோதனை சாவடிகளை உடனடியாக அகற்றுவது, ஆரோவில் நிர்வாகம் நிலத்தை வாங்கினாலும், வெளி நிலத்திற்கு ஈடாக தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். இந்த கோரிக்கைகள் அடங்கிய தீர்மானத்தை கலெக்டர், பி.டி.ஓ., அதிகாரிகளிடம் ஒப்படைக்க அப்பகுதி மக்கள் முடிவு செய்துள்ளனர்.

    • எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிகஸ் கம்யூனிகேஷ், பிகாம் பட்டப்படிப்புகளை வழங்குகிறது.
    • கூடுதலாக பிடெக் இன்பர்மேஷன் என்ஜினியரிங் படிப்பு இந்த கல்வியாண்டில் தொடங்கப்பட உள்ளது.

     புதுச்சேரி:

    புதுவை அரசு மகளிர் பொறியியல் கல்லூரி முதல்வர் ராணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுவை அரசு 2022-23ம் கல்வியாண்டில் பாலிடெக்னிக் கல்லூரியை மகளிர் பொறியியல் கல்லூரியாக தரம் உயர்த்தியது. புதுவை லாஸ்பேட்டையில் இயங்கி வரும் கல்லூரியில் பிடெக் ஆர்க்கிடெக், கம்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிகஸ் கம்யூனிகேஷ், பிகாம் பட்டப்படிப்புகளை வழங்குகிறது.

    இந்த 5 படிப்புகளுக்கும் 2-ம் ஆண்டு லேட்ரல் என்ட்ரியில் சேர டிப்ளமோ முடித்த மாணவிகள் சென்டாக் மூலம் விண்ணப்பிக்கலாம். கூடுதலாக பிடெக் இன்பர்மேஷன் என்ஜினியரிங் படிப்பு இந்த கல்வியாண்டில் தொடங்கப்பட உள்ளது.

    வரும் கல்வியாண்டுக்கும் சென்டாக் மூலம் மாணவிகள் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம். மேலும் தகவல்களுக்கு கல்லூரி உதவி மையம், இணையதளத்தை அணுகலாம்

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×