search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ஆரோவில்லில் நிலங்களை கையகப்படுத்தும் முயற்சிக்கு எதிர்ப்பு
    X

    ஆரோவில் நிர்வாகம் சுற்றியுள்ள பகுதிகளில் நிலங்களை கையகப்படுத்தும் முயற்சிக்கு எதிராக பல்வேறு கிராம மக்கள் நடத்திய ஆலோசனை கூட்டம்.

    ஆரோவில்லில் நிலங்களை கையகப்படுத்தும் முயற்சிக்கு எதிர்ப்பு

    • கிராம மக்கள் திடீரென கூடி கூட்டம் நடத்தியதால் பரபரப்பு
    • விவசாயிகள் தங்களின் விருப்பத்திற்கேற்ப கூடுதல் விலைக்கு ஆரோவில் நிர்வாகத்திடம் அளித்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி ஒட்டிய தமிழக பகுதியான சர்வதேக நகரமான ஆரோவில்லில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட உள்நாடு மற்றும் வெளிநாட்டு வாசிகள் வசித்து வருகின்றனர்.

    ஆரோவில் நகரத்தை சுற்றி இடையஞ்சாவடி, குயிலாப்பாளையம், பொம்மையார்பாளையம், கோட்டக்கரை உள்ளிட்ட கிராமப் பகுதிகள் உள்ளது.

    இப்பகுதியில் வசிக்கும் மக்கள், ஆரோவில் சுற்றியும் மையப்பகுதியிலும் விவசாய நிலங்களை வைத்துள்ளனர். 1968-ம் ஆண்டு ஆரோவில் நிறுவனம் துவங்கப்ப ட்டபோது, இரும்பை ஊராட்சியில் 70 சதவீதம் நிலங்களையும், பொம்மை யார்பாளையம் ஊராட்சியில் 30 சதவீதம் நிலங்களையும், விவசாயிகள் தங்களின் விருப்பத்திற்கேற்ப கூடுதல் விலைக்கு ஆரோவில் நிர்வாகத்திடம் அளித்தனர்.

    இந்நிலையில் ஆரோவில் மையப்பகுதியை சுற்றி எஞ்சியுள்ள விவசாய நிலங்கள், அரசு நிலங்களையும், விரிவாக்கப்பணிக்காக விவசாயிகளிடம் வாங்கு வதற்கான முயற்சிகளை ஆரோவில் நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

    மாத்திர் மந்திர் சுற்றியும், அதற்கு வெளியில் உள்ள நிலங்களையும், அரசு நிலங்களையும் கையெகப்படுத்தும் முயற்சிக்கு இரும்பை மற்றும் பொம்மையார்பாளையம் ஊராட்சியில் உள்ள பொது மக்கள் மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    குறிப்பாக ஆரோவில் பகுதியில் அமைந்துள்ள வண்டிப்பாதை, நீரோடப்பா தை, மேய்ச்சல் நிலங்களை அப்பகுதி மக்கள் பயன்படுத்தாத வகையில் தடை ஏற்படுத்தி வருவதாக ஆரோவில் நிர்வாகம் மீது அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டி வருகின்றனர்.

    இந்நிலையில் இரும்பை மற்றும் பொம்மையார்பாளையம் ஊராட்சி மக்கள் இரும்பை மாகாளேஸ்வரர் கோவில் வளாகத்தில் ஆலோசனைக்கூட்டம் நடத்தினர். அதில், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், பங்கேற்ற அனைவரும் இரும்பை ஊராட்சி யின் வண்டிப்பாதை, மேய்ச்சல் நிலம், நீரோடை பாதையை ஆரோவில் நிர்வாகத்திற்கு தாரை வார்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மேலும், ஆரோவில் பகுதியில் உள்ள அனைத்து வண்டிப்பாதைகளையும் பூர்வீக மக்கள் பயன்படுத்த தடையாக உள்ள சோதனை சாவடிகளை உடனடியாக அகற்றுவது, ஆரோவில் நிர்வாகம் நிலத்தை வாங்கினாலும், வெளி நிலத்திற்கு ஈடாக தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். இந்த கோரிக்கைகள் அடங்கிய தீர்மானத்தை கலெக்டர், பி.டி.ஓ., அதிகாரிகளிடம் ஒப்படைக்க அப்பகுதி மக்கள் முடிவு செய்துள்ளனர்.

    Next Story
    ×