என் மலர்
நீங்கள் தேடியது "Siva MLA"
- வில்லியனூர் மாட வீதியில் உள்ள அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளிக்கு தியாகி ஏ. முத்து குமாரசாமி பெயர் சூட்டப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
- எதிர்கட்சி தலைவர் சிவாவை தியாகி முத்துக்குமாரசாமியின் குடும்பத்தார் மோகன் குமார், ஆகியோர் சந்தித்து, பாராட்டு தெரிவித்தனர்.
புதுச்சேரி:
வில்லியனூர் மாட வீதியில் உள்ள அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளிக்கு தியாகி ஏ. முத்து குமாரசாமி பெயர் சூட்டப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
பள்ளிக்கு தியாகியின் பெயரைச்சூட்ட, சட்டமன்றத்தில் கோரிக்கை எழுப்பி வலியுறுத்திய எதிர்கட்சி தலைவர் சிவாவை தியாகி முத்துக்குமாரசாமியின் குடும்பத்தார் மோகன் குமார், ராஜகுமார், விஜயகுமார், முத்துக்குமார், சந்திரகுமார், சிவக்குமார், நீலகண்டன், பரசுராமன், ரஜினி முருகன், செல்வநாதன், ஹரி, குமரேசன், கலிய முருகன் ஆகியோர் சந்தித்து, பாராட்டு தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியின்போது தி.மு.க. தொகுதி செயலாளர் ராமசாமி, மாநில விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் செல்வ நாதன், ஆதிதிராவிடர் அணி கலியமூர்த்தி, தொகுதி இளைஞர் அணி அமைப்பாளர் மணிகண்டன் மற்றும் ராஜி, ரமணன், சபரி, முத்துப்பாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- வில்லியனூர் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் வில்லியனூர் மூத்த குடிமக்கள் நலவாழ்வுச் சங்கம் இணைந்து வில்லியனூரில் பொது மருத்துவ முகாம் நடத்தினர்.
- வில்வம் பவுண்டேஷன் சார்பில் தயார் செய்யப்பட்ட கைக்கழுவுதல் குறித்த பாதுகாப்பு விழிப்புணர்வு பதாகையை வௌியிட்டார்.
புதுச்சேரி:
வில்லியனூர் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் வில்லியனூர் மூத்த குடிமக்கள் நலவாழ்வுச் சங்கம் இணைந்து வில்லியனூரில் பொது மருத்துவ முகாம் நடத்தினர்.
வில்லியனூர் தனியார் திருமண நிலையத்தில் நடந்த முகாமை எதிர்க்கட்சித் தலைவர் சிவா தொடங்கி வைத்து, வில்வம் பவுண்டேஷன் சார்பில் தயார் செய்யப்பட்ட கைக்கழுவுதல் குறித்த பாதுகாப்பு விழிப்புணர்வு பதாகையை வௌியிட்டார்.
வில்லியனூர் ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் திலகம், சுகாதார செவிலியர் மேற்பார்வையாளர் ஷாகிரா பானு ஆகியோர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் பொதுமக்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு பொது மருத்துவம், மகளிர் மருத்துவம், அறுவை சிகிச்சை, குழந்தை மருத்துவம், தோல் சிகிச்சை, கண் சிகிச்சை, பல் சிகிச்சை உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொண்டனர்.
முகாமில் மூத்த குடிமக்கள் நல்வாழ்வுச் சங்க நிர்வாகிகள் கலைமாமணி பரசுராமன், மண்ணாங்கட்டி, விஸ்வநாதன், ரஜினி முருகன், விஜயன், சரவணன், மற்றும் தி.மு.க. தொகுதி செயலாளர் ராமசாமி, தொகுதி இளைஞர் அணி அமைப்பாளர் மணிகண்டன், ரமணன், சபரிநாதன், ரபீக், நடராஜன், பழனிசாமி, முருகன் ஆகியோர் பங்கேற்றனர்.
முகாமிற்கான ஏற்பாடுகளை வில்வம் பவுண்டேஷன் மற்றும் வாஞ்சிநாதன் இளந்தொண்டர் மன்றத்தினர் செய்திருந்தனர்.
- மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜானகிராமனின் 82-வது பிறந்தநாளையொட்டி நெல்லித்தோப்பு தொகுதி லெனின் வீதியில் உள்ள கீர்த்தி மகாலில் பொதுமக்களுக்கு ரூ.5 லட்சம் செலவில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
- நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத், தி.மு.க. அவைத்தலைவர் எஸ்.பி. சிவகுமார் முன்னாள் எம்.பி. சி.பி. திருநாவுக்கரசு, தி.மு.க. மாநில, தொகுதி அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜானகிராமனின் 82-வது பிறந்தநாளையொட்டி நெல்லித்தோப்பு தொகுதி லெனின் வீதியில் உள்ள கீர்த்தி மகாலில் பொதுமக்களுக்கு ரூ.5 லட்சம் செலவில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவில் தி.மு.க மாநில அமைப்பாளர் சிவா நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சிக்கு ஜானகிராமன் மகன் சரவணன் என்ற ஆறுமுகம் முன்னிலை வகித்தார். தொகுதி செயலாளர் நடராஜன் உட்பட நெல்லித்தோப்பு தொகுதி தி.மு.க. நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். விழா முடிந்ததும் வந்திருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு அறுசுவை உணவு விருந்தளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத், தி.மு.க. அவைத்தலைவர் எஸ்.பி. சிவகுமார் முன்னாள் எம்.பி. சி.பி. திருநாவுக்கரசு, தி.மு.க. மாநில, தொகுதி அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக ஆம்பூர் சாலையில் உள்ள முன்னாள் முதல்- அமைச்சர் ஆர்.வி.ஜானகிராமன் வீட்டில் அலங்கரிக்கப்பட்ட அவரின் படத்திற்கு மாநில தி.மு.க. சார்பில் மாநில அமைப்பாளர் சிவா தலைமையில், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் ஆர்.வி.ஜா. சரவணன் என்கின்ற ஆறுமுகம், மாநில மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் கைலாஷ் ஆகியோர் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
மேலும் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், முதல்-அமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் ஜான்குமார், நெல்லித்தோப்பு எம்.எல்.ஏ. ரிச்சசர்ட், முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, விஸ்வநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. அனந்தராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் மறைந்த ஜானகிராமன் குடும்பத்தார் விஜயலட்சுமி, சாந்தாபாய், சரவணன், சந்திரேஷ் குமார், அசோக்குமார், மருத்துவரணி மாநில செயலாளர் டாக்டர் கைலாஷ்,என்ஜினீயர் மனோஜ் குமார் மற்றும் என்ஜினீயர் அரவிந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- புதுவை அரசின் ஊரக வளர்ச்சி முகமை மற்றும் வில்லியனூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் வில்லியனூரில் மகளிர் சுயஉதவிக் குழுவினரின் உற்பத்தி பொருட்களை நுகர்வோரிடம் நேரடியாக விற்பனை செய்ய பொங்கல் அங்காடி மற்றும் கிராம சந்தை தனியார் திருமண மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
- அதற்கு அதிகாரிகள் குழு சிறப்பானதொரு பயிற்சி அளிக்க வேண்டும். மகளிர் குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை சந்தைப்படுத்துவதை விளம்பரப்படுத்த வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை அரசின் ஊரக வளர்ச்சி முகமை மற்றும் வில்லியனூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் வில்லியனூரில் மகளிர் சுயஉதவிக் குழுவினரின் உற்பத்தி பொருட்களை நுகர்வோரிடம் நேரடியாக விற்பனை செய்ய பொங்கல் அங்காடி மற்றும் கிராம சந்தை தனியார் திருமண மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இதனை எதிர்க்கட்சித் தலைவர் சிவா தொடங்கி வைத்து, சிறப்பாக செயல்பட்ட மகளிர் குழுவினருக்கு சான்றிதழ் வழங்கி ரூ. 92 லட்சத்திற்கான கடன் உதவியும் வழங்கி பேசினார்.
அவர் பேசியதாவது:-
புதுவையில் முதன் முறையாக அதுவும் கிராமப்புற மக்களின் தேவைகளுக்காக இதுபோன்ற மக்கள் அங்காடிகளை திறப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மகளிர் சுயஉதவிக் குழுக்கள் தயாரிக்கின்ற பொருட்கள் குறைந்த விலையில் தரமானதாக இருக்க வேண்டும்.
அதற்கு அதிகாரிகள் குழு சிறப்பானதொரு பயிற்சி அளிக்க வேண்டும். மகளிர் குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை சந்தைப்படுத்துவதை விளம்பரப்படுத்த வேண்டும். மார்க்கெட்டில் கிடைக்காத பொருட்களை கண்டுபிடித்து அதனை மகளிர் குழுக்கள் தயாரிக்க வேண்டும்.
அதற்கு வங்கிகள் கடனுதவி அளித்து அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். மகளிர் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை அரசே நேரிடையாக சந்தைப்படுத்துகின்ற வகையில் பண்டிகைகால சிறப்பு அங்காடி திறக்க வேண்டும்.
இவ்வாறு சிவா பேசினார்.
நிகழ்ச்சியில் வில்லியனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன்குமார், இணை வட்டார வளர்ச்சி அதிகாரி கலைமதி, வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர்கள், கிராம சேவக், சேவக், வட்டார அளவிலான கூட்ட மைப்பின் பொறுப்பா ளர்கள், பணியாளர்கள் மற்றும் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
பொங்கல் அங்கன்வாடி மற்றும் கிராம சந்தை நாளை (வெள்ளிக்கிழமை) மாலை வரை செயல்படும். இதில் மண்பானை வகைகள், பொங்கல் பொருட்கள், அழகுசாதனப் பொருட்கள், பலகார மாவு வகைகள், மாட்டுத் தீவனம், வயர் கூடைகள், மரசாமான்கள், கைவினைப் பொருட்கள், மூலிகைச் செடிகள், அசைவப் பொருட்கள் உள்ளிட்ட 100–-க்கும் மேற்பட்ட பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
- வில்லியனூர் கொம் பாக்கம் வார்டுக்கு உட்பட்ட பாப்பாஞ்சாவடி பகுதியில் ஓட்டாம்பாளையம் சாலையில் கழிவு நீர் செல்லும் கால்வாய் மீது அமைக்கப்பட்டிருந்த சிமெண்ட் சிலாப் சேதமடைந்தது.
- தகவல் அறிந்த எதிர்க்கட்சித் தலைவர் சிவா எம்.எல்.ஏ. அந்த பகுதியில் சேதமடைந்த சிமெண்ட் சிலாப்புகளை அகற்றிவிட்டு, புதிதாக நடைப்பாதை அமைக்க நடவடிக்கை எடுத்தார்.
புதுச்சேரி:
வில்லியனூர் கொம் பாக்கம் வார்டுக்கு உட்பட்ட பாப்பாஞ்சாவடி பகுதியில் ஓட்டாம்பாளையம் சாலையில் கழிவு நீர் செல்லும் கால்வாய் மீது அமைக்கப்பட்டிருந்த சிமெண்ட் சிலாப் சேதமடைந்தது.
இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். தகவல் அறிந்த எதிர்க்கட்சித் தலைவர் சிவா எம்.எல்.ஏ. அந்த பகுதியில் சேதமடைந்த சிமெண்ட் சிலாப்புகளை அகற்றிவிட்டு, புதிதாக நடைப்பாதை அமைக்க நடவடிக்கை எடுத்தார்.
இந்த பணிகளை எதிர்க்கட்சித் தலைவர் சிவா ஆய்வு செய்து, பணியை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். நிகழ்சியில் தி.மு.க. தொகுதி செயலாளர் ராமசாமி, மாநில விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் செல்வநாதன், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் கலியமூர்த்தி, துணை செயலாளர் அங்காளன் தொகுதி இளைஞர் அணி அமைப்பாளர் மணிகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- புதுவை மாநிலத்தில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளது. முக்கியமான விஷயங்கள் குறித்து பேச சபையில் அனுமதி இல்லை. கல்வி நிலையங்கள் அரசிடம் இல்லாமல், அதிகாரிகள் கையில் உள்ளது. மாணவர்களுக்கு இதுவரை நோட்டு, புத்தகங்கள் வழங்கப்படவில்லை.
- பள்ளி மாணவர்களுக்கு முட்டை சரியாக வழங்கப்படுவதில்லை. ஏ.எப்.டி. உள்ளிட்ட பஞ்சாலை பிரச்சனைகள் பேசமுடியவில்லை.
புதுச்சேரி:
சட்டமன்ற வெளி நடப்புக்கு பின் எதிர்கட்சி தலைவர் சிவா நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவை மாநிலத்தில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளது. முக்கியமான விஷயங்கள் குறித்து பேச சபையில் அனுமதி இல்லை. கல்வி நிலையங்கள் அரசிடம் இல்லாமல், அதிகாரிகள் கையில் உள்ளது. மாணவர்களுக்கு இதுவரை நோட்டு, புத்தகங்கள் வழங்கப்படவில்லை.
சீருடை, இலவச சைக்கிள் ஆகியவையும் தரப்படவில்லை. குறிப்பாக நல்ல தரமான உணவு இல்லை. தொண்டு நிறுவனம் மூலம் மாணவர்களுக்கு உணவு தரப்படுவதாக கூறுகிறார்கள். ஆனால் அதற்கான நிதியை தனியார் நிறுவனங்களிடம் இருந்து தொண்டு நிறுவனம் வசூலிக்கிறது. இது ஒரு ஏமாற்று வேலை.ஆர்.எஸ்.எஸ். இதன் பின்னணியில் செயல்படுகிறது.
பள்ளி மாணவர்களுக்கு முட்டை சரியாக வழங்கப்படுவதில்லை. ஏ.எப்.டி. உள்ளிட்ட பஞ்சாலை பிரச்சனைகள் பேசமுடியவில்லை. ஏதாவது பிரச்சனை வரும்போது மட்டும் முதல்- அமைச்சர் மாநில அந்தஸ்தை கையில் எடுத்து கொள்கிறார். ஜானகிராமன் முதல்-அமைச்சராக இருந்த போது மாநில அந்தஸ்து குறித்து பேச எதிர்கட்சி தலைவர்கள் உள்பட அனைவரையும் டெல்லி அழைத்து சென்று பேசினார்.
ரேஷன் கடையை மூடும்போது யாரையும் கேட்கவில்லை. ஆனால் அதை திறக்க மட்டும் அனுமதி பெற வேண்டுமா?
புதுவையில் 2 விளையாட்டு மைதான ங்களை தவிர வேறு மைதானங்கள் இல்லை.தொழிற்சாலைகள் மூட ப்பட்டு வருகிறது. இவை குறித்து விவாதிக்கப்படவில்லை. ஜி20 மாநாட்டினால் புதுவையில் 10 சாலைகள் போடப்பட்டுள்ளது.
சட்டமன்ற உறுப்பினர்கள் பல முறை கோரிக்கை வைத்தும், நிதி இல்லை என கூறினார்கள்.
இப்போது நிதி எங்கிருந்து வந்தது. கருணாநிதிக்கு சிலை வைக்க கடந்த ஆட்சியிலும், இந்த ஆட்சியிலும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. ஜெயலலிதாவிற்கு சிலை வைப்பதில் எங்களுக்கு எந்த வித ஆட்சேபனையும் இல்லை.
இவ்வாறு சிவா கூறினார்.
- வில்லியனூர் தூய லூர்து அன்னை திருத்தலத்தில் பேராயர் பிரான்சிஸ் கலிஸ் தலமையில் கல் மாதா தூண் அர்ச்சிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது
- நிகழ்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர் சிவா பங்கேற்று லூர்து அன்னை மாதாவினுடைய தூணை அர்ச்சித்து ஆசிர்வாதம் பெற்றார்.
புதுச்சேரி:
வில்லியனூர் தூய லூர்து அன்னை திருத்தலத்தில் பேராயர் பிரான்சிஸ் கலிஸ் தலமையில் கல் மாதா தூண் அர்ச்சிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது
பேராயர் பிரான்சிஸ் கலிஸ் 32 அடி உள்ள ஒரு கல் வில்லியனூர் தூய லூர்து அன்னை மாதாவினுடைய தூணை மந்திரித்து அர்ச்சித்து ஆசிர்வதித்து திறந்து வைத்தார்.
அனைத்து பணிகளையும் திருத்தலத்தினுடைய அதிபர் பிச்சைமுத்து அடிகளார், உதவி தந்தை ஜீவா பங்கு பேரவை மக்களோடு இணைந்து ஒருங்கிணைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர் சிவா பங்கேற்று லூர்து அன்னை மாதாவினுடைய தூணை அர்ச்சித்து ஆசிர்வாதம் பெற்றார். பேரவை நிர்வாகிகள் மற்றும் தி.மு.க . நிர்வாகிகள் தொகுதி இளைஞர் அணி அமைப்பாளர் மணிகண்டன், சபரிநாதன், பாஸ்கர், மந்திரிகுமார், ஹரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- புதிய மின்மாற்றியை பொது மக்கள் பயன்பாட்டிற்கு இயக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- மின்துறை அதிகாரிகளை துரிதப்படுத்தி அங்கு ரு.12 லட்சம் செலவில் புதிய மின்மாற்றி அமைத்தார்.
புதுச்சேரி:
வில்லியனூர் மார்க்கெட் பகுதியில் குறைந்த மின்னழுத்தம் காரணமாக அடிக்கடி மின்நிறுத்தம் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் செய்தனர்.
மேலும்,அங்குள்ள பழைய மின்மாற்றியை அகற்றிவிட்டு, அதிக மின்திறன் கொண்ட புதிய மின் மாற்றியை நிறுவ வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
இதனையடுத்து எதிர்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. மின்துறை அதிகாரிகளை துரிதப்படுத்தி அங்கு ரு.12 லட்சம் செலவில் புதிய மின்மாற்றி அமைத்தார்.
புதிய மின்மாற்றியை பொது மக்கள் பயன்பாட்டிற்கு இயக்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.இதில எதிர்க்கட்சித் தலைவர் சிவா புதிய மின்மாற்றியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இயக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், மின்துறை உதவிப் பொறியாளர் முருகேசன், இளநிலைப் பொறியாளர் பாலமுருகன், தி.மு.க. தொகுதி செயலாளர் ராமசாமி, மாநில விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் செல்வநாதன், தொகுதி இளைஞர் அணி அமைப்பாளர் மணிகண்டன், ரமணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- ஏரியின் போக்கு வாய்க்கால் பகுதி பழைய பாலத்தை புதியதாக கட்டவும், போக்குவாய்க்காலை பலப்படுத்தி பாதுகாப்புச் சுவர் அமைக்கவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
- பாலம் கட்டுமானப் பணியை தரமாகவும், விரைவாகவும் கட்டி முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
புதுச்சேரி:
வில்லியனூர் தொகுதி கொம்பாக்கம் ஏரியின் போக்கு வாய்க்கால் பகுதி பழைய பாலத்தை புதியதாக கட்டவும், போக்குவாய்க்காலை பலப்படுத்தி பாதுகாப்புச் சுவர் அமைக்கவும் பொதுப்பணித்துறை நீர்பாசனக் கோட்டம் மூலம் ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
முதல்கட்ட பணியை எதிர்க்கட்சித் தலைவர் சிவா தொடங்கி வைத்தார். அப்போது, பாலம் கட்டுமானப் பணியை தரமாகவும், விரைவாகவும் கட்டி முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பொதுப்பணித்துறை நீர்பாசனக் கோட்ட உதவிப் பொறியாளர் மதிவாணன், இளநிலைப் பொறியாளர் சங்கர் மற்றும் தி.மு.க. தொகுதி செயலாளர் ராமசாமி, மாநில விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் செல்வநாதன், தொகுதி இளைஞர் அணி அமைப்பாளர் மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- புதுவை நகராட்சி மூலம் ரூ 6 லட்சம் மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடந்தது.
- புதுவை நகராட்சி ஆணையர் ரொமில் சிங் டாங்க், செயற்பொறியாளர் சிவபாலன், உதவிப் பொறியாளர் வெங்கடாஜலபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
வில்லியனூர் தொகுதி கொம்பாக்கம் 33 -வது வார்டு, ஒட்டம்பாளையம் தண்ணீர் தொட்டி வீதியில் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதுவை நகராட்சி மூலம் ரூ 6 லட்சம் மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடந்தது.
தொகுதி எம்.எல்.ஏ.வும், எதிர்க்கட்சித் தலைவருமான சிவா புதிய சாலை அமைக்கும் பணியினை பூஜை செய்து தொடங்கி வைத்தார். புதுவை நகராட்சி ஆணையர் ரொமில் சிங் டாங்க், செயற்பொறியாளர் சிவபாலன், உதவிப் பொறியாளர் வெங்கடாஜலபதி, இளநிலைப் பொறியாளர் ஞானசேகரன், தி.மு.க. தொகுதி செயலாளர் ராமசாமி, மாநில ஆதிதிராவிட அணி கலியமூர்த்தி, தொகுதி இளைஞர் அணி அமைப்பாளர் மணிகண்டன், ரமணன், தர்மராஜ், ஜெகன், ஜனா, கே.வி.ஆர். ஏழுமலை, ராஜேந்திரன், செல்வநாதன், சுப்பிரமணி, மிலிட்டரி முருகன், வரதன், கதிரவன், வாசு, செல்வம், அருண், நடராசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- ரூ.8 லட்சத்து 91 ஆயிரத்து 150 செலவில் சாலை மற்றும் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடந்தது.
- எதிர்க்கட்சித் தலைவ ருமான சிவா பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
புதுவை நகராட்சிக் குட்பட்ட கொம்பாக்கம் வார்டில் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, கொம்பாக்கம் பாலாஜி நகரில் ரூ.8 லட்சத்து 91 ஆயிரத்து 150 செலவில் சாலை மற்றும் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடந்தது.
தொகுதி எம்.எல்.ஏ.வும் எதிர்க்கட்சித் தலைவ ருமான சிவா பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.
இதில், புதுவை நகராட்சி ஆணையர் ரொமில் சிங் டாங்க், செயற்பொறியாளர் சிவபாலன், உதவிப் பொறி யாளர் வெங்கடாஜலபதி, இளநிலைப் பொறியாளர் ஞானசேகரன், ஊர் பொதுமக்கள் தேவநாதன், வேலு படையாட்சி, ஜெகன்மோகன், ஜனா, கந்தசாமி, வேல்முருகன், சக்திவேல், அழகிரி, பாஸ்கரன், கனகராஜ், தமிழரசன், மாரிமுத்து, சுரேஷ், ஜீவா, ரமேஷ், வெங்கடேசன், வரதன், சத்தியமூர்த்தி, தனுசு, அருண், தி.மு.க. நிர்வாகிகள் தொகுதி செயலாளர் ராமசாமி, மாநில விவசாய அணி அமைப்பாளர் சோமு என்ற சோமசுந்தரம், மாநில விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் செல்வநாதன், ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் கலியமூர்த்தி, தொகுதி இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன், ராஜி, சபரி, திலகர், வேதாச்சலம், தங்கராசு, ஏழுமலை, ஹரி கிருஷ்ணன், மிலிட்டரி முருகன், வீரப்பன், தட்சிணாமூர்த்தி, பாலமுருகன், பாலு, அஞ்சாபுலி, நாகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- வீடுகட்ட விண்ணப்பித்த பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான மானியம் பெற பணி ஆணையை பெற எதிர்க்கட்சி தலைவர் நடவடிக்கை எடுத்தார்.
- இதனை தொகுதி எம்.எல்.ஏ.வும் எதிர்க்கட்சித் தலைவருமான சிவா பயனாளிகளுக்கு வழங்கினார்.
புதுச்சேரி:
வில்லியனூர் தொகுதியில் குடிசை மாற்று வாரியம் மூலம் வீடுகட்ட விண்ணப்பித்த பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான மானியம் பெற பணி ஆணை மற்றும் விடுபட்ட 2 மற்றும் 3-ம் தவணைத் தொகை பெறும் பயனாளிகளுக்கு விரைந்து நிதியுதவி கிடைக்க எதிர்கட்சி தலைவர் சிவா நடவடிக்கை எடுத்தார்.
அதன்படி 23 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கு ரூ.26 லட்சத்து 60 ஆயிரம் அவர்களது பெயர்களில் வங்கிகளில் செலுத்தப்பட்டதற்கான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது. இதனை தொகுதி எம்.எல்.ஏ.வும் எதிர்க்கட்சித் தலைவருமான சிவா பயனாளிகளுக்கு வழங்கினார்.
வில்லியனூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் குடிசை மாற்று வாரிய இளநிலை பொறியாளர் அனில்குமார், ஆய்வாளர் இளங்கோ மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






