என் மலர்
புதுச்சேரி

முகாமை தொடங்கி வைத்த எதிர்கட்சி தலைவர் சிவா கைகழுவதல் குறித்த விழிப்புணர்வு பதாகையை வெளியிட்ட காட்சி.
மருத்துவ முகாம்-எதிர்கட்சி தலைவர் சிவா தொடங்கி வைத்தார்
- வில்லியனூர் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் வில்லியனூர் மூத்த குடிமக்கள் நலவாழ்வுச் சங்கம் இணைந்து வில்லியனூரில் பொது மருத்துவ முகாம் நடத்தினர்.
- வில்வம் பவுண்டேஷன் சார்பில் தயார் செய்யப்பட்ட கைக்கழுவுதல் குறித்த பாதுகாப்பு விழிப்புணர்வு பதாகையை வௌியிட்டார்.
புதுச்சேரி:
வில்லியனூர் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் வில்லியனூர் மூத்த குடிமக்கள் நலவாழ்வுச் சங்கம் இணைந்து வில்லியனூரில் பொது மருத்துவ முகாம் நடத்தினர்.
வில்லியனூர் தனியார் திருமண நிலையத்தில் நடந்த முகாமை எதிர்க்கட்சித் தலைவர் சிவா தொடங்கி வைத்து, வில்வம் பவுண்டேஷன் சார்பில் தயார் செய்யப்பட்ட கைக்கழுவுதல் குறித்த பாதுகாப்பு விழிப்புணர்வு பதாகையை வௌியிட்டார்.
வில்லியனூர் ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் திலகம், சுகாதார செவிலியர் மேற்பார்வையாளர் ஷாகிரா பானு ஆகியோர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் பொதுமக்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு பொது மருத்துவம், மகளிர் மருத்துவம், அறுவை சிகிச்சை, குழந்தை மருத்துவம், தோல் சிகிச்சை, கண் சிகிச்சை, பல் சிகிச்சை உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொண்டனர்.
முகாமில் மூத்த குடிமக்கள் நல்வாழ்வுச் சங்க நிர்வாகிகள் கலைமாமணி பரசுராமன், மண்ணாங்கட்டி, விஸ்வநாதன், ரஜினி முருகன், விஜயன், சரவணன், மற்றும் தி.மு.க. தொகுதி செயலாளர் ராமசாமி, தொகுதி இளைஞர் அணி அமைப்பாளர் மணிகண்டன், ரமணன், சபரிநாதன், ரபீக், நடராஜன், பழனிசாமி, முருகன் ஆகியோர் பங்கேற்றனர்.
முகாமிற்கான ஏற்பாடுகளை வில்வம் பவுண்டேஷன் மற்றும் வாஞ்சிநாதன் இளந்தொண்டர் மன்றத்தினர் செய்திருந்தனர்.






