என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவை எதிர்கட்சி தலைவருக்கு பாராட்டு
    X
    கோப்பு படம்.

    புதுவை எதிர்கட்சி தலைவருக்கு பாராட்டு

    • வில்லியனூர் மாட வீதியில் உள்ள அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளிக்கு தியாகி ஏ. முத்து குமாரசாமி பெயர் சூட்டப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
    • எதிர்கட்சி தலைவர் சிவாவை தியாகி முத்துக்குமாரசாமியின் குடும்பத்தார் மோகன் குமார், ஆகியோர் சந்தித்து, பாராட்டு தெரிவித்தனர்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் மாட வீதியில் உள்ள அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளிக்கு தியாகி ஏ. முத்து குமாரசாமி பெயர் சூட்டப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    பள்ளிக்கு தியாகியின் பெயரைச்சூட்ட, சட்டமன்றத்தில் கோரிக்கை எழுப்பி வலியுறுத்திய எதிர்கட்சி தலைவர் சிவாவை தியாகி முத்துக்குமாரசாமியின் குடும்பத்தார் மோகன் குமார், ராஜகுமார், விஜயகுமார், முத்துக்குமார், சந்திரகுமார், சிவக்குமார், நீலகண்டன், பரசுராமன், ரஜினி முருகன், செல்வநாதன், ஹரி, குமரேசன், கலிய முருகன் ஆகியோர் சந்தித்து, பாராட்டு தெரிவித்தனர்.

    இந்த நிகழ்ச்சியின்போது தி.மு.க. தொகுதி செயலாளர் ராமசாமி, மாநில விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் செல்வ நாதன், ஆதிதிராவிடர் அணி கலியமூர்த்தி, தொகுதி இளைஞர் அணி அமைப்பாளர் மணிகண்டன் மற்றும் ராஜி, ரமணன், சபரி, முத்துப்பாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×