search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ரூ.12 லட்சம் செலவில் புதிய மின்மாற்றி-எதிர்க்கட்சித் தலைவர் சிவா இயக்கி வைத்தார்
    X

    புதிய மின்மாற்றியை சிவா எம்.எல்.ஏ, இயக்கி வைத்த காட்சி.

    ரூ.12 லட்சம் செலவில் புதிய மின்மாற்றி-எதிர்க்கட்சித் தலைவர் சிவா இயக்கி வைத்தார்

    • புதிய மின்மாற்றியை பொது மக்கள் பயன்பாட்டிற்கு இயக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • மின்துறை அதிகாரிகளை துரிதப்படுத்தி அங்கு ரு.12 லட்சம் செலவில் புதிய மின்மாற்றி அமைத்தார்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் மார்க்கெட் பகுதியில் குறைந்த மின்னழுத்தம் காரணமாக அடிக்கடி மின்நிறுத்தம் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் செய்தனர்.

    மேலும்,அங்குள்ள பழைய மின்மாற்றியை அகற்றிவிட்டு, அதிக மின்திறன் கொண்ட புதிய மின் மாற்றியை நிறுவ வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

    இதனையடுத்து எதிர்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. மின்துறை அதிகாரிகளை துரிதப்படுத்தி அங்கு ரு.12 லட்சம் செலவில் புதிய மின்மாற்றி அமைத்தார்.

    புதிய மின்மாற்றியை பொது மக்கள் பயன்பாட்டிற்கு இயக்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.இதில எதிர்க்கட்சித் தலைவர் சிவா புதிய மின்மாற்றியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இயக்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில், மின்துறை உதவிப் பொறியாளர் முருகேசன், இளநிலைப் பொறியாளர் பாலமுருகன், தி.மு.க. தொகுதி செயலாளர் ராமசாமி, மாநில விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் செல்வநாதன், தொகுதி இளைஞர் அணி அமைப்பாளர் மணிகண்டன், ரமணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×