என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ரூ.6லட்சம் செலவில் புதிய சாலை-எதிர்கட்சி தலைவர் சிவா தொடங்கி வைத்தார்
    X

    புதிய சாலை அமைக்கும் பணியை சிவா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த காட்சி.

    ரூ.6லட்சம் செலவில் புதிய சாலை-எதிர்கட்சி தலைவர் சிவா தொடங்கி வைத்தார்

    • புதுவை நகராட்சி மூலம் ரூ 6 லட்சம் மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடந்தது.
    • புதுவை நகராட்சி ஆணையர் ரொமில் சிங் டாங்க், செயற்பொறியாளர் சிவபாலன், உதவிப் பொறியாளர் வெங்கடாஜலபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் தொகுதி கொம்பாக்கம் 33 -வது வார்டு, ஒட்டம்பாளையம் தண்ணீர் தொட்டி வீதியில் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதுவை நகராட்சி மூலம் ரூ 6 லட்சம் மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடந்தது.

    தொகுதி எம்.எல்.ஏ.வும், எதிர்க்கட்சித் தலைவருமான சிவா புதிய சாலை அமைக்கும் பணியினை பூஜை செய்து தொடங்கி வைத்தார். புதுவை நகராட்சி ஆணையர் ரொமில் சிங் டாங்க், செயற்பொறியாளர் சிவபாலன், உதவிப் பொறியாளர் வெங்கடாஜலபதி, இளநிலைப் பொறியாளர் ஞானசேகரன், தி.மு.க. தொகுதி செயலாளர் ராமசாமி, மாநில ஆதிதிராவிட அணி கலியமூர்த்தி, தொகுதி இளைஞர் அணி அமைப்பாளர் மணிகண்டன், ரமணன், தர்மராஜ், ஜெகன், ஜனா, கே.வி.ஆர். ஏழுமலை, ராஜேந்திரன், செல்வநாதன், சுப்பிரமணி, மிலிட்டரி முருகன், வரதன், கதிரவன், வாசு, செல்வம், அருண், நடராசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×