என் மலர்tooltip icon

    பாராளுமன்ற தேர்தல் 2024

    • அண்ணாமலை கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நிலையில் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரத்துக்கு தயாராகி வருகிறார்.
    • நாளை மாலை நடைபெறும் பிரமாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 40 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்து வைத்து பேசுகிறார்.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 20-ந்தேதி தொடங்கியது. வருகிற 27-ந்தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.

    இதனால் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

    நாளை மறுநாள் முதல் அடுத்த 3 நாட்களும் முக்கிய அரசியல் கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய உள்ளனர். தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வை சேர்ந்த வேட்பாளர்கள் அனைவரும் வருகிற 25-ந்தேதி வேட்பு மனுக்களை தாக்கல் செய்கிறார்கள்.

    பிரசாரத்துக்கு இன்னும் 25 நாட்களே இருப்பதால் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தையும் தொடங்கி உள்ளனர். தங்களது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வேட்பாளர்கள் முக்கிய பிரமுகர்களை சந்தித்தும் ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

    முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் திருச்சி சிறுகனேரியில் தேர்தல் பிரசாரத்தை நேற்று மாலை தொடங்கினார். அங்கு நடந்த தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய மு.க.ஸ்டாலின், திருச்சி தொகுதியில் போட்டியிடும் துரை வைகோ, பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேரு ஆகியோரை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    முதல்நாள் பிரசாரத்தை முடித்துக்கொண்டு நேற்று இரவே தஞ்சாவூருக்கு சென்ற மு.க.ஸ்டாலின் இன்று காலையில் பூங்காவில் நடைபயிற்சியில் ஈடுபட்டார். அப்போது 2-வது நாள் பிரசாரத்தை மேற்கொண்டார்.


    பூங்காவில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தஞ்சாவூரில் இன்று மாலை நடைபெறும் 2-வது நாள் பிரசார பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று மு.க.ஸ்டாலின் பேசுகிறார்.

    தி.மு.க. இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் இருந்து தனது தேர்தல் பிரசாரத்தை இன்று மாலை தொடங்குகிறார்.

    விருதுநகர் வடக்கு மாவட்டம் காரியாபட்டி பஸ் நிலையம் அருகே பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேசும் உதயநிதி ஸ்டாலின் வருகிற 27-ந்தேதி வரை தொடர்ச்சியாக பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று பொதுக்கூட்டங்களில் பேசி தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார்.

    தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் உள்ளிட்டோரும் தங்களது கட்சி வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி சேலத்தில் நாளை (24-ந்தேதி) தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். சேலம் ஜலகண்டாபுரம் அருகே உள்ள கரிய வரதராஜ பெருமாள் கோவிலில் காலை 9 மணி அளவில் சாமி தரிசனம் செய்யும் எடப்பாடி பழனிசாமி பின்னர் திறந்த வேனில் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.

    ஒவ்வொரு தேர்தலிலும் எடப்பாடி பழனிசாமி இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் தான் தனது பிரசாரத்தை தொடங்குவார். அதே போல் இந்த பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தையும் தொடங்க உள்ளார். பின்னர் சேலத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமி திருச்சிக்கு புறப்பட்டு செல்கிறார்.

    திருச்சியில் நவலூர் குட்டப்பட்டு என்ற இடத்தில் நாளை மாலை நடைபெறும் பிரமாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 40 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்து வைத்து பேசுகிறார்.

    கூட்டத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா, புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, எஸ்.டி.பி.ஐ. கட்சி தலைவர் நெல்லை முபாரக் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்களும் எடப்பாடி பழனிசாமியுடன் ஒரே மேடையில் பங்கேற்று தங்களது பிரசாரத்தை தொடங்குகிறார்கள்.

    பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நிலையில் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரத்துக்கு தயாராகி வருகிறார். அவரது சுற்றுப்பயண விவரங்கள் தயாராகி வருகிறது. பாரதிய ஜனதா கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோரும் தங்களது கட்சி வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளனர்.

    இதன் மூலம் தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தலைவர்கள், வேட்பாளர்கள் ஓட்டு வேட்டையால் பாராளுமன்ற தேர்தல் களம் பரபரப்பாக காணப்படுகிறது.

    • பாரதிய ஜனதா கட்சி மிக தந்திரமாக செயல்பட்டு வருகிறது.
    • பாரதிய ஜனதாவின் சூழ்ச்சிக்கு அ.தி.மு.க. பலியாகாது என்று நம்புகிறேன்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    பாரதிய ஜனதா கட்சி மிக தந்திரமாக செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு பகுதியிலும் காலூன்றுவதற்காக அவர்கள் புதிய யுக்தியை கையாள்கிறார்கள். ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள சிறிய கட்சிகளிடம் சேர்ந்து கொண்டு ஊடுருவுகிறார்கள்.

    பிறகு அந்த கட்சிகளின் வாக்கு வங்கியை சீர் குலைத்து சூறையாடி விடுவதை பா.ஜ.க. வழக்கத்தில் வைத்திருக்கிறது. இதன் மூலம் அந்த மாநிலத்தில் 2-வது இடத்தை பிடிப்பதை வழக்கத்தில் வைத்திருக்கிறது. அ.தி.மு.க. இதை புரிந்து கொள்ள வேண்டும்.


    தோழமையுடன் கேட்டுக் கொள்கிறேன். அ.தி.மு.க.வினர் இதை புரிந்து கொள்ளாவிட்டால் அவர்களும் நாளடைவில் தங்களது வாக்கு வங்கியை இழக்க நேரிடும்.

    பாரதிய ஜனதாவின் சூழ்ச்சிக்கு அ.தி.மு.க. பலியாகாது என்று நம்புகிறேன். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு பிறகும் அ.தி.மு.க. வின் வாக்கு வங்கி நிலை குலையாமல் இருக்கிறது. அதுதான் அந்த கட்சியின் பலம்.

    நாங்கள் தி.மு.க.வுடன் கொள்கைரீதியாக மட்டுமே உடன்பாடு வைத்திருக்கிறோம். பா.ஜ.க. தலைவர்கள் மத ரீதியிலான பிரசாரத்தை மட்டுமே செய்கிறார்கள். அவர்கள் என்ன சாதனைகள் செய்தார்கள் என்று சொல்வதே இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ரூ.50,000-க்கு மேல் ஆவணமின்றி எடுத்துச் செல்லப்படும் ரொக்கம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
    • உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட தங்கத்தை பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    ராசிபுரம்:

    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. ரூ.50,000-க்கு மேல் ஆவணமின்றி எடுத்துச் செல்லப்படும் ரொக்கம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டரூ.6.2 கோடி மதிப்பிலான 29 கிலோ தங்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

    மல்லூர் பகுதியில் சேலத்தில் இருந்து புதுக்கோட்டைக்கு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட தங்கத்தை பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மார்ச் 28 மற்றும் ஏப்ரல் 8 ஆகிய தேதிகளுக்கான சுற்றுப் பயணத் திட்டம் மட்டும் மாற்றும் செய்யப்பட்டுள்ளது.
    • ஏப்ரல் 8-ந்தேதி மாலை 4 மணிக்கு காரைக்குடியிலும், இரவு 7 மணிக்கு ராமநாதபுரம் அரண்மனையிலும் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை :

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பிலும், அதன் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பிரசார சுற்றுப் பயணம் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதில், மார்ச் 28 மற்றும் ஏப்ரல் 8 ஆகிய தேதிகளுக்கான சுற்றுப் பயணத் திட்டம் மட்டும் மாற்றும் செய்யப்பட்டுள்ளது.

    அதாவது, வருகிற 28-ந்தேதி மாலை 4 மணிக்கு விருதுநகர் தொகுதிக்குட்பட்ட பாவடி தோப்பு திடல், சிவகாசியிலும் இரவு 7 மணிக்கு ஜெயம் தியேட்டர் அருகில் பழங்காநத்தம் மதுரையிலும் பிரசாரம் செய்கிறார்.

    ஏப்ரல் 8-ந்தேதி மாலை 4 மணிக்கு காரைக்குடியிலும், இரவு 7 மணிக்கு ராமநாதபுரம் அரண்மனையிலும் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேர்தல் விதிகளை மீறி தனியார் திருமண மண்டபத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் அறிமுக கூட்டத்தை நடத்தியதாக புகார் அளிக்கப்பட்டது.
    • தேர்தல் பறக்கும் படையினர் கொடுத்த புகாரின் பேரில் தரமணி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    சென்னை:

    தமிழகத்தில் ஏப்ரல் 19-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த புதன்கிழமை அன்று தொடங்கியது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

    இந்நிலையில், தென்சென்னை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயவர்தன் மீது தரமணி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தேர்தல் விதிகளை மீறி தனியார் திருமண மண்டபத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் அறிமுக கூட்டத்தை நடத்தியதாக புகார் அளிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து தென் சென்னை தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் மற்றும் தனியார் திருமண மண்டப உரிமையாளர் பாலாஜி மீது தேர்தல் பறக்கும் படையினர் கொடுத்த புகாரின் பேரில் தரமணி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • திருச்சியில் நாளை அ.தி.மு.க. வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் 40 பேரை ஒரே மேடையில் எடப்பாடி பழனிசாமி அறிமுகப்படுத்தி பிரசாரம் செய்கிறார்.
    • திறந்த வேனில் தனது பிரசாரத்தை தொடங்குகிறார்.

    சேலம்:

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இதில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் புதிய தமிழகம், தே.மு.தி.க. எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

    இதில் அ.தி.மு.க. 33 இடங்களில் போட்டியிடுகிறது. தே.மு.தி.க. 5 தொகுதிகளிலும், புதிய தமிழகம் தென்காசியிலும், எஸ்.டி.பி.ஐ. கட்சி திண்டுக்கல் தொகுதியிலும் போட்டியிடுகிறது. அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

    இதே போல் கூட்டணி கட்சி வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு உள்ளனர். திருச்சியில் நாளை (24-ந்தேதி) அ.தி.மு.க. வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் 40 பேரை ஒரே மேடையில் எடப்பாடி பழனிசாமி அறிமுகப்படுத்தி பிரசாரம் செய்கிறார்.

    இதற்காக எடப்பாடி பழனிசாமி இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் வந்தார். பின்னர் ஓமலூரில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு சென்று கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார்.

    தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி சேலம் ஜலகண்டாபுரம் அருகே உள்ள கரியவரதராஜ பெருமாள் கோவிலில் நாளை காலை 9 மணியளவில் சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் அந்த பகுதியில் திறந்த வேனில் தனது பிரசாரத்தை தொடங்குகிறார்.

    ஒவ்வொரு தேர்தலிலும் எடப்பாடி பழனிசாமி இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் தான் தனது பிரசாரத்தை தொடங்குவார். அதே போல் இந்த பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தையும் தொடங்க உள்ளார். பின்னர் இங்கிருந்து திருச்சிக்கு புறப்பட்டு செல்கிறார்.

    எடப்பாடி பழனிசாமி நாளை முதல் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்குவதால் அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் உற்சாகம் அடைந்து உள்ளனர்.

    • பிரதமர் மோடி 3-வது முறையாக பிரதமராக வரும்போது கோவை உலக அளவில் சிறந்து விளங்கும்.
    • தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் வளர்ச்சி வர வேண்டும்.

    கோவை:

    கோவை விமான நிலையத்தில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:-

    கோவை பாராளுமன்ற தொகுதியை பொருத்தவரை 3 வேட்பாளர்களுக்கு இடையே நடக்கும் போட்டி இல்லை. 70 ஆண்டுகளாக தமிழகத்தில் நடக்கக்கூடிய அதர்மம் ஒரு பக்கமும், தர்மம் ஒரு பக்கமும் உடையதான தேர்தல். தமிழகத்தில் எங்கும் இல்லாத அளவுக்கு பணமழை கோவையில் பொழியும்.

    பிரதமர் மோடி 3-வது முறையாக பிரதமராக வரும்போது கோவை உலக அளவில் சிறந்து விளங்கும். 39 பாராளுமன்ற தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். ஜூன் 4-ந் தேதி தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்.

    எனக்கு டெல்லி அரசியலில் விருப்பம் இல்லை. தமிழக அரசியலில்தான் அதிக விருப்பம். பிரதமர் மோடியின் உத்தரவுக்கு இணங்க கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறேன்.

    தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் வளர்ச்சி வர வேண்டும். தமிழகத்தில் 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் பா.ஜனதா வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.

    பிரதமர் தமிழகத்திற்கு ஏன் அடிக்கடி வருகிறார் என்றால் இங்கு வெற்றி பெறும் எம்.பி.க்கள் மூலம் தமிழகத்திற்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு, தமிழகத்தை மாற்றி காட்டுவோம். அதற்காக தான் பிரதமர் மோடி சபதம் எடுத்து களத்தில் இறக்கி உள்ளார்.

    கோவை தொகுதியில் கோடிக்கணக்கான ரூபாய் கொண்டு வந்து செலவு செய்வார்கள். ஆனால் நான் ஓட்டுக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்கமாட்டேன். பா.ஜனதா எதுவும் செலவு செய்யாது. தமிழக வரலாற்றில் செலவு குறைந்த தேர்தலாக இந்த தொகுதி தேர்தல் இருக்கும்.

    கடந்த தேர்தலின்போது அறிவித்த அதே அறிக்கையை தி.மு.க. வெளியிட்டுள்ளது. இதில் எதையும் அவர்கள் நிறைவேற்றபோவது இல்லை.

    மக்களுக்கு உண்மையான ஜனநாயகத்தை காட்ட வேண்டும். தமிழகத்தின் அரசியல் மாற்றம் கோவையில் இருந்து தொடங்கும். நான் பெரிய வேட்பாளர் இல்லை. கோவை மக்களை நம்பி அவர்களுடன் சேர்ந்து 2 ஆண்டுகளில் இந்த மாற்றம் தமிழகத்தில் எடுத்து செல்லும் சாதாரண நபர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுகிறது.
    • ஏணி சின்னம் கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் ஐ.யூ.எம்.எல். கட்சி சார்பில் விண்ணப்பம் அளிக்கப்பட்டு இருந்தது.

    புதுடெல்லி:

    தமிழகத்தில் முதல் கட்டமாக ஏப்ரல் 19-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது.

    பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள பிரதான கட்சியான தி.மு.க. முழு வீச்சில் தயாராகி உள்ளது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் தி.மு.க. 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

    கூட்டணி கட்சிகளான காங்கிரஸ்-9, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் தலா 2 இடங்களிலும், ம.தி.மு.க., கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் தலா ஒரு இடத்தில் போட்டியிடுகின்றன. இதில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளது.

    திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுகிறது.

    ஏணி சின்னம் கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் ஐ.யூ.எம்.எல். கட்சி சார்பில் விண்ணப்பம் அளிக்கப்பட்டு இருந்தது.

    இந்நிலையில் ஐ.யூ.எம்.எல். கட்சியின் கோரிக்கையை ஏற்று ஏணி சின்னத்தை ஒதுக்கி இந்திய தேர்தல் ஆணையம் இன்று உத்தரவிட்டுள்ளது.

    ஐ.யூ.எம்.எல். கட்சியின் சார்பில் ராமநாதபுரம் தொகுதியில் நவாஸ் கனி களம் காண்கிறார்.

    • சிறுமி ஒருவர் முதலமைச்சருக்கு சால்வை கொடுத்து வாழ்த்தினார்.
    • ஏராளமானோர் முதலமைச்சருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    தஞ்சாவூா்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் குறைவான நாட்களே உள்ள தால் முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தனது பிரசாரத்தை தொடங்கினார். நேற்று மாலை திருச்சியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.

    பொதுக்கூட்டம் முடிந்த பின்னர் நேற்று இரவு தஞ்சைக்கு வந்தார். முன்னதாக அவருக்கு தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி சார்பில் பிரமாண்டமாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, இரவு தஞ்சை சங்கம் ஹோட்டலில் தங்கினார்.

    இந்த நிலையில் இன்று காலை வழக்கமான நடைபயிற்சி மேற்கொள்வதற்காக ஓட்டலில் இருந்து காரில் புறப்பட்டு தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு மைதானத்திற்கு சென்றார் . காரை விட்டு இறங்கியவுடன் நடைபயிற்சி, விளையாடும் மாணவ-மாணவிகள், பெண்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கைத்தட்டி முதலமைச்சரை வரவேற்றனர். இந்த உற்சாக வரவேற்பை ஏற்றுக்கொண்டு அதே உற்சாகத்துடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மைதானத்தில் நடைபயிற்சி மேற்கொண்டார்.

    அப்போது நடைப்பயிற்சி மேற்கொண்டவாறே பொதுமக்கள், பெண்களிடம் தஞ்சை பாராளுமன்ற தொகுதி

    தி.மு.க. வேட்பாளர் முரசொலிக்கு உங்கள் வாக்குகளை செலுத்துங்கள் எனக்கூறி வாக்கு சேகரித்தார். அப்போது கூடியிருந்த சிறுமிகளிடம் நீங்கள் தினமும் இங்கு வந்து தான் விளையாட்டு பயிற்சி மேற்கொள்வீர்களா? எந்த வகையான விளையாட்டு பயிற்சியை மேற்கொள்வீர்கள்? என ஆர்வத்துடன் கேட்டார். அதற்கு நாங்கள் பேட்மிட்டன் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு பயிற்சி மேற்கொள்வோம் என சிறுமிகள் உற்சாகத்துடன் பதில் அளித்தனர். அவர்களை முதலமைச்சர் வாழ்த்தினார். மேலும், சிறுமி ஒருவர் முதலமைச்சருக்கு சால்வை கொடுத்து வாழ்த்தினார். மேலும், சிறிது நேரம் கைப்பந்து விளையாடினர்.

    தொடர்ந்து, மைதானத்தில் நடைபயிற்சி மேற்கொண்டவாறே பொதுமக்களிடம் தி.மு.க.வுக்கு வாக்குகள் சேகரித்தார். அப்போது ஏராளமானோர் முதலமைச்சருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அப்போது பயிற்சி மேற்கொண்டிருந்த காங்கிரஸ் மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையாரிடம் நலம் விசாரித்தார்.

    பின்னர், அங்கிருந்து புறப்பட்டு தஞ்சை காமராஜர் மார்க்கெட்டிற்கு சென்றார். அங்கு வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்தார். முதலமைச்சரை நேரில் பார்த்த சந்தோஷத்தில் வியாபாரிகள் மகிழ்ச்சியில் மூழ்கினர். அவர்கள் முதலமைச்சருக்கு வாழைப்பழம், எலுமிச்சை பழங்களை பரிசாக கொடுத்தனர். மேலும், வியாபாரிகள் தங்களது கோரிக்கைகளை தெரிவித்தனர். சிலர் மனுவும் அளித்தனர். அதற்கு முதலமைச்சர் உங்களது கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

    இதையடுத்து மார்க்கெட்டில் இருந்து புறப்பட்டு ஒரு கடையில் பொதுமக்களுடன் அமர்ந்து டீ குடித்தார். பின்னர், அங்கிருந்து புறப்பட்டு தங்கியுள்ள சங்கம் ஹோட்டலுக்கு சென்றார்.

    • தி.மு.க. இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தனது தேர்தல் பிரசாரத்தை இன்று தொடங்குகிறார்.
    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசார பயணத்திட்டம் ஏற்கனவே வகுக்கப்பட்டது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவரும், முதyமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் பிரசாரத்தை திருச்சியில் நேற்று தொடங்கினார். அவர், பொதுக்கூட்டங்கள் வாயிலாக வாக்குகள் திரட்டுகிறார். திருச்சியில் நேற்று பிரசாரத்தை தொடங்கிய அவர் வருகிற 17-ந் தேதி மத்திய சென்னை தொகுதியில் பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.

    தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர்கள், தி.மு.க. முன்னணி நிர்வாகிகள், நட்சத்திர பேச்சாளர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுவார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த நிலையில் தி.மு.க. இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தனது தேர்தல் பிரசாரத்தை இன்று தொடங்குகிறார்.

    அவர், மத்திய சென்னை தி.மு.க. வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து சேப்பாக்கம் பகுதி 62-வது வட்டத்தில் அமைந்துள்ள ஐயா தெரு, பஜார் தெரு சந்திப்பில் இன்று காலை 8.30 மணி முதல் திறந்த ஜீப்பில் சென்று வாக்குசேகரிப்பில் ஈடுபட உள்ளார். இந்த தகவலை தி.மு.க. சேப்பாக்கம் பகுதி செயலாளரும், மாநகராட்சி மண்டல குழு தலைவருமான எஸ்.மதன்மோகன் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசார பயணத்திட்டம் ஏற்கனவே வகுக்கப்பட்டது. இதில் கடைசி நேரத்தில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இப்பணிகள் முடிவடைந்தவுடன் அவருடைய பிரசார பயண விவரம் முழுவதும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • தருமபுரி தொகுதியில் பா.ம.க. சார்பில் சவுமியா அன்புமணி போட்டியிடுகிறார்.
    • காஞ்சிபுரம் தொகுதியில் ஜோதி வெங்கடேஷ் போட்டியிடுகிறார்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான அணியில் பா.ம.க, தமிழ் மாநில காங்கிரஸ், அ.ம.மு.க. உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. பா.ம.க.வுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. நேற்று முன்தினம் மற்ற கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

    பாராளுமன்ற தேர்தலில் பா.ம.க. சார்பில் போட்டியிடும் 9 வேட்பாளர்கள் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டது. அதில் காஞ்சிபுரம் தொகுதியில் மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

    இதற்கிடையே, தருமபுரி தொகுதி பா.ம.க. வேட்பாளர் மாற்றப்பட்டு, அன்புமணி ராமதாஸ் மனைவியான சவுமியா அன்புமணி போட்டியிடுவார் என அறிவிப்பு வெளியானது.

    இந்நிலையில், காஞ்சிபுரம் தொகுதிக்கு பா.ம.க. சார்பில் ஜோதி வெங்கடேஷ் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • பாஜக கூட்டணியில், பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன
    • பாராளுமன்ற தேர்தலில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான அணியில் பா.ம.க., தமிழ் மாநில காங்கிரஸ், அ.ம.மு.க. உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. பல கட்டங்களாக நடைபெற்று வந்த பேச்சுவார்த்தை கடந்த 2 தினங்களுக்கு முன் நிறைவு பெற்றது.

    இதையடுத்து பா.ம.க.வுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. தொடர்ந்து நேற்று முன்தினம் மற்ற கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

    இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதில், தருமபுரி தொகுதியில் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அரசாங்கம் என்பவரை வேட்பாளராக அக்கட்சி அறிவித்தது.

    இந்நிலையில், தருமபுரி தொகுதி பாமக வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அத்தொகுதியில் அன்புமணியின் மனைவியான சவுமியா அன்புமணி போட்டியிடுவார் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

    ×