என் மலர்
உலகம்
- நீங்கள் அவர்களுடன் விளையாட முடியாது.
- வட கொரியா தொடர்ந்து சோதனை செய்து வருகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சிபிஎஸ் செய்தி நிறுவனத்தின் நேர்காணலில் பங்கேற்றார்.
அப்போது, சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷிய அதிபர் புதின், இருவரில் யாரை சமாளிப்பது மிகவும் கடினம் என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த டிரம்ப், "அவர்கள் இருவரும் வலிமையான மற்றும் புத்திசாலித்தனமான தலைவர்கள், அவர்களை குறைத்து மதிப்பிடக்கூடாது. நீங்கள் அவர்களை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் அவர்களுடன் விளையாட முடியாது." என்று தெரிவித்தார்.
அதே நேர்காணலில், எட்டு போர்களை நிறுத்த முடிந்ததாக கூறிய டிரம்ப், உக்ரைன் போரை தன்னால் மட்டும் நிறுத்த முடியவில்லை, ஆனால் அது விரைவில் நடக்கும் என்று தெரிவித்தார்.
தனக்கு புதினுடன் நல்ல உறவு உள்ளது என்றும் அதனால் ரஷியா-உக்ரைன் போரை நிறுத்துவது மிகவும் எளிதானது என்று நினைத்தது தவறு என்று டிரம்ப் கூறினார்.
மேலும் அமெரிக்கா அணு ஆயுத சோதனை நடந்த திட்டமிட்டுள்ளது குறித்து பேசிய டிரம்ப், ரஷிய சோதனைகளை நடத்துவதாக அறிவித்துள்ளது, வட கொரியா தொடர்ந்து சோதனை செய்து வருகிறது.
பாகிஸ்தானும் சோதனை செய்கிறது. சோதனை செய்யாத ஒரே நாடு நாங்கள்தான். அவை எவ்வாறு செயல்படுகின்றன என்பதை நாங்கள் பார்ப்போம்" என்று தெரிவித்தார்.
பேட்டியில், சீனா, ரஷியா ஆகியவை அணு ஆயுதத்தை சோதனை செய்யவில்லை என்றும் அணு ஆயுதத்தை தாங்கிச் செல்லும் டிரோன் உள்ளிட்ட உபகரணங்களை தான் சோதனை செய்வதாக நிருபர் கூறினார்.
இதற்கு பதிலளித்த டிரம்ப், அவை ரகசியமாக அணு ஆயுத சோதனைகளை மேற்கொள்கின்றன அவை வெளியே கூறப்படுவதில்லை என தெரிவித்தார்.
- AI 174 போயிங் 777 ரக விமானம் மதியம் 2.47 மணிக்கு சான் பிரான்சிஸ்கோவிலிருந்து புறப்பட்டது.
- இரவு 9.59 மணிக்கு கொல்கத்தா வழியாக வந்து டெல்லியில் தரையிறங்க திட்டமிடப்பட்டது.
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவிலிருந்து டெல்லிக்குச் வந்துகொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் மங்கோலியாவிற்கு திருப்பி விடப்பட்டது.
AI 174 போயிங் 777 ரக விமானம் மதியம் 2.47 மணிக்கு சான் பிரான்சிஸ்கோவிலிருந்து புறப்பட்டது. இரவு 9.59 மணிக்கு கொல்கத்தா வழியாக வந்து டெல்லியில் தரையிறங்க திட்டமிடப்பட்டது.
ஆனால் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகமங்கோலியா தலைநகர் உலான்பாதரில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதாக ஏர் இந்தியா விமான நிறுவனம் அறிவித்தது.
விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் பணியாளர்களும் பாதுகாப்பாக இருப்பதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
- வங்கதேச அரசியலமைப்பில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
- இது தொடர்பான வரைவில் கையெழுத்திட அரசியல் கட்சிகள் மறுப்பு தெரிவிக்கின்றன.
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் இளைஞர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆகஸ்ட் மாதம் வன்முறையாக வெடித்தது. இதனால் ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்தியாவில் அடைக்கலம் புகுந்துள்ளார். முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் பொதுத்தேர்தல் நடைபெறும் என இடைக்கால அரசு அறிவித்துள்ளது.
முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு, 30-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி ஒருமித்த கருத்துகளுடன் வங்கதேசத்தின் அரசியலமைப்பு, வாக்குமறை, நிர்வாகம் ஆகியவற்றில் பல திருத்தங்கள் கொண்டுவர முடிவு செய்தது.
இது தொடர்பாக இடைக்கால அரசு ஒரு வரைவு திட்டத்தை உருவாக்கியது. அதில் கையெழுத்திட அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தது. ஆவணங்களில் கையெழுத்திட கடந்த மாதம் 17ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது சீரமைப்பு செயல்படுத்தும் செயல்பாட்டில் வேறுபாடுகள் வெளிபட்டன. முக்கிய கட்சிகள் வாக்கெடுப்பை தேர்தல் நாளில் அல்லது அதற்கு முன்னதாக நடத்த வேண்டும் கோரிக்கை விடுத்தது. சில கட்சிகள் நவம்பர் மாதம் (இந்தமாதம்) நடத்த வேண்டும் எனத் தெரிவித்தது.
இதனால் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. இந்த நிலையில் ஒரு வாரத்திற்குள் ஒருமித்த கருத்துக்கு வாருங்கள் என அனைத்து கட்சிகளையும் இடைக்கால அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இல்லையென்றால், அரசு தனது சொந்த முடிவை எடுக்கும் என அறிவித்துள்ளது.
- நள்ளிரவு 6.3 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம்.
- 5.20 லட்சம் மக்கள் வசிக்கும் முக்கிய நகரின் அருகில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் நள்ளிரவு 1.59 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 6.3 ரிக்டர் அளவில் மஸார்-இ-ஷெரிஃப் நகரத்துக்கு 28 கி.மீ.க்கு அடியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மஸார்-இ-ஷெரிஃபில் 5.2 லட்சம் மக்கள் வசித்து வருகிறார்கள்.
கடுமையான நிலநடுக்கத்தால் வீடுகள் இடிந்து விழுந்தன. கடுமையான அதிர்வால் மக்களில் வீட்டில் இருந்து வெளியே ஓடிவந்தனர். இரவு நேரம் என்பதால், சிலரால் வெளியேற முடிவில்லை.
இந்த நிலநடுக்கத்தால் 20 பேர் உயிரிழந்துள்ளனர். 320 பேர் காயம் அடைந்துள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தில் ப்ளூ என்ற 15ஆம் நூற்றாண்டின் மசூதி சேதம் அடைந்துள்ளது. நிலநடுக்கத்தால் நாட்டின் பெரும்பாலான பகுதியில் மின்தடை ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதங்களில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு கடும் சேதம் ஏற்படுவதால் தலிபான் அரசு கடும் சவால்களை எதிர்கொண்டு வருகிறது.
- 2023 தாக்குதலின்போது உயிரிழந்தவர்கள் உடல்களை ஹமாஸ், இஸ்ரேலிடம் ஒப்படைத்து வருகிறது.
- ஹமாஸ் அனுப்பி வைக்கும் ஒரு உடலுக்கு, 15 பாலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் அனுப்பி வைக்கிறது.
இஸ்ரேல்- காசா (ஹமாஸ்) இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக பிணைக்கைதிகள் மற்றும் பிணைக்கைதிகள் உடல்களை ஹமாஸ் ஒப்படைக்க வேண்டும். அதேபோல் இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீன கைதிகள் மற்றும் பாலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் ஒப்படைக்க வேண்டும்.
உயிரோடு இருந்த 20 பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவித்தது. அதன்பின் 2023ஆம் ஆண்டு தாக்குதலில் உயிரிழந்த இஸ்ரேலியர்களின் உடல்களை ஒப்படைத்து வருகிறது.
அதனடிப்பையில் நேற்றிரவு 2023 அக்டோபர் 7ஆம் தேதி தாக்குதல் நடத்தப்பட்டபோது உயிரிழந்த 3 இஸ்ரேல் ராணுவ வீரர்களின் உடல்களை ஹமாஸ் ஒப்படைத்தது.
இதனைத் தொடர்ந்து 45 பாலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் ஒப்படைத்துள்ளது. இந்த உடல்கள் நாசர் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
போர் நிறுத்தம் ஏற்பட்ட கடந்த மாதம் அக்டோபர் 10ஆம் தேதியில் இருந்து, இதுவரை ஹமாஸ் 20 பிணைக்கைதிகளின் உடல்களை ஒப்படைத்துள்ளது. இன்னும் 8 உடல்களை ஒப்படைக்க வேண்டியுள்ளது.
சிலநாட்களுக்கு ஒருமுறை ஒன்று அல்லது இரண்டு உடல்களை ஹமாஸ் அனுப்பி வைக்கிறது. வேகமாக உடல்களை அனுப்பி வைக்க இஸ்ரேல் வலியுறுத்துகிறது. மேலும், சில உடல்கள் பிணைக்கைதிகள் உடல்கள் இல்லை எனக் கூறுகிறது. காசா முழுவதும் பேரழிவு ஏற்பட்டுள்ளதால், உடல்களை ஒப்படைக்கும் பணி சிக்கலாக உள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் அனுப்பும் ஒவ்வொரு உடலுக்கும், இஸ்ரேல் 15 பாலஸ்தீனர்களின் உடல்களை அனுப்ப வேண்டும்.
- உலகின் பிற நாடுகளுடன் உறவை கட்டியெழுப்ப முடிவு செய்துள்ளோம்.
- வெளிநாடுகளுடன் சிறந்த உறவை வலுப்படுத்துவது மிகவும் அவசியமாகும்.
அமெரிக்காவின் வரி விதிப்பு விவகாரம் தொடர்பாக கனடா வெளியிட்ட விளம்பரம் சர்ச்சையானது. இதையடுத்து கனடாவுடனான அனைத்து விதமான வர்த்தக பேச்சுவார்தையை நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
இந்த நிலையில் கனடா பிரதமர் மார்க் கார்னி அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-
உலகின் பிற நாடுகளுடன் உறவை கட்டியெழுப்ப முடிவு செய்துள்ளோம். உலக பொருளாதாரத்தில் 60 சதவீத பங்களிப்பை வழங்கும் ஆசிய பசிபிக் பகுதியில் உள்ள நாடுகளுடன் உறவை மேம்படுத்துவதை விட சிறந்த இடம் வேறு இல்லை.
இந்தியாவுடனான உறவில் நாங்கள் முன்னேற்றம் அடைந்து வருகிறோம், இந்தியாவுடனான வர்த்தக உறவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். இந்திய பிரதமர் மோடியை சந்தித்தது இல்லை. ஆனால் எங்களது வெளியுறவு துறை மந்திரி உள்ளிட்ட பிற மந்திரிகள் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். வெளிநாடுகளுடன் சிறந்த உறவை வலுப்படுத்துவது மிகவும் அவசியமாகும்.
அமெரிக்காவை மட்டுமே நம்பி இருக்கும் தன்மையை மாற்ற வேண்டும். இது ஒரே இரவில் நடக்காது என எனக்கு தெரியும். நாங்கள் மிக விரைவில் முன்னேறி வருகிறோம் என்றார்.
- நிலநடுக்கத்தால் மஸார்-இ-ஷெரிஃப் உள்ளிட்ட பகுதிகளில் மிகவும் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
- சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்ததாக தகவல் வெளியான நிலையில், உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அச்சப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில் நள்ளிரவு 1.59 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 6.3 ரிக்டர் அளவிலான நிலடுக்கத்தால் 4 பேர் உயிரிழந்ததாகவும் 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
மஸார்-இ-ஷெரிஃப் நகரத்துக்கு 28 கி.மீ.க்கு அடியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டது. மேலும், நள்ளிரவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மஸார்-இ-ஷெரிஃப் உள்ளிட்ட பகுதிகளில் மிகவும் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே, சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்ததாக தகவல் வெளியான நிலையில், உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அச்சப்படுகிறது.
ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதங்களில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பொதுத் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
- ஒருமித்த கருத்து ஏற்பட கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்தியாவின் அண்டை மாநிலமான நேபாளத்தில், ஊழல் அரசியல் தலைவர்களுக்கு எதிராக Gen Z என்ற பெயரில் இளைஞர்கள் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் காரணமாக பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் 73 வயதான முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சுஷிலா கார்கி பிரதமராக பதவி ஏற்றார். பதவி ஏற்ற சுஷிலா கார்கி, அடுத்த வருடம் மார்ச் 5ஆம் தேதி பொதுத் தேர்தல் நடத்தப்படும் என அறிவித்தார்.
அதற்கான பணிகளை அவர் செய்து வருகிறார். இந்த நிலையில், நேபாளத்தில் உள்ள 7 மாகாண முதல்வர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.
மாறிவிட்ட அரசியல் சூழலில் மத்திய மற்றும் மாகாண அரசுகளுக்கு இடையேயான உரையாடல் மற்றும் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதற்காக இந்தக் கூட்டம் கூட்டப்பட்டதாக பிரதமரின் செய்தித் தொடர்பாளர் ராம் பகதூர் ராவல் தெரிவித்தார்.
தேர்தல் தொடர்பாக கட்சிகளின் நிலைகளை தெளிவாக தெரிந்து கொள்ள நேற்று, நேபாளி காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்கள் ககன் தபா, பிஷ்வா பிரகாஷ் சர்மாவை சந்தித்து பேசினார்.
நேபாளி காங்கிரஸ், தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளது என உறுதி அளித்துள்ளது. நாங்கள் Gen Z குரூப்புகளுடனும் மற்ற அரசியல் கட்சிகளுடன் தீவிர பேச்சுவார்த்தை நடத்துவோம் எனத் தெரிவித்தனர்.
- தீயணைப்பு வீரர்கள் உடனே சம்பவ இடத்துக்குச் சென்று பல மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.
- தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் இரங்கல் தெரிவித்தார்.
மெக்சிகோ சிட்டி:
மெக்சிகோ நாட்டின் வடமேற்கே அமைந்துள்ள சொனோரா மாகாணத்தில் ஹெர்மோசில்லோ நகரில் உள்ள கடை ஒன்றில் நேற்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
தீ மளமளவென பரவியதில் பலர் சிக்கி கொண்டனர். கரும் புகை சூழ்ந்து அவர்களால் தப்பி வெளியே வர முடியவில்லை. இந்த விபத்தில் சிக்கி 23 பேர் பலியானார்கள். 11 பேர் காயமடைந்தனர்.
தீ விபத்து சம்பவம் பற்றி அறிந்த ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தார்.
தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உதவி செய்வதற்காக, குழுக்களை அனுப்பும்படி உள்துறை மந்திரிக்கு கிளாடியா உத்தரவிட்டுள்ளார். தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ பகுதிக்குச் சென்று, பல மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.
தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஒண்டாரியோ மாகாண அரசு அமெரிக்க வரிகளை விமர்சித்து விளம்பரம் ஒன்றை வெளியிட்டது.
- கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது டிரம்ப் கூடுதலாக 10 சதவீதம் வரி விதித்தார்.
கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய், அலுமினியம், இரும்பு உள்பட பல்வேறு பொருட்களுக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப் 10 முதல் 50 சதவீதம் வரை வரிகளை உயர்த்தினார். இதை சரி செய்ய இரு நாடுகள் இடையேயும் வர்த்தக பேச்சுவார்த்தை நடந்து வந்தது.
இதற்கிடையே கனடா வெளியிட்ட விளம்பர வீடியோ இன்று சர்ச்சையை ஏற்படுத்தியது.
1987 ஆம் ஆண்டு முன்னாள் அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் ஒரு உரையில், வரிகள் ஒவ்வொரு அமெரிக்க தொழிலாளி மற்றும் நுகர்வோரையும் பாதிக்கும் என்றும், கடுமையான வர்த்தகப் போருக்கு வழிவகுக்கும் என்றும் பேசியிருந்தார்.
இந்த வீடியோவை இணைத்து கனடாவின் ஒண்டாரியோ மாகாண அரசு அண்மையில் அமெரிக்க வரிகளை விமர்சித்து விளம்பரம் ஒன்றை வெளியிட்டது.
ரொனால்ட் ரீகனின் உரை தவறாக சித்தரிக்கப்பட்டதாகவும், வீடியோவை பயன்படுத்த தங்களிடம் அனுமதி கேட்கவில்லை என்றும் ரொனால்ட் ரீகன் அறக்கட்டளை கூறியது.
இதற்கிடையே பொய்களை பரப்புவதாக கூறி டிரம்ப், கனடாவுடனான பேச்சுவார்த்தைகள் அனைத்தையும் நிறுத்துவதாக அறிவித்தார்.
இந்நிலையில் கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது டிரம்ப் கூடுதலாக 10 சதவீதம் வரி விதித்தார்.
இந்நிலையில், கனடாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பே இல்லை என்று டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய டிரம்ப், "கனடா அதிபர் மார்க் கார்னி என் நல்ல நண்பர்தான். கனடா எனக்கு மிகவும் பிடிக்கும். கனடா வெளியிட்ட போலியான விளம்பரம் எனக்கு கோபத்தை ஏற்படுத்திவிட்டது. அதனால் கனடாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பே இல்லை" என்று தெரிவித்தார்.
- ரஷியாவின் முக்கிய துறைமுகம் மற்றும் எண்ணெய் கப்பல் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தி உள்ளது.
- எண்ணெய் கப்பல் மற்றும் துறைமுகம் தீப்பிடித்து எரிந்தது.
ரஷியா- உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ரஷியாவின் முக்கிய துறைமுகம் மற்றும் எண்ணெய் கப்பல் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தி உள்ளது.
ரஷியாவின் கருங்கடல் துறைமுகமான துவாப்சை குறிவைத்து டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. அங்கிருந்த எண்ணை கப்பல் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் எண்ணை கப்பல் மற்றும் துறைமுகம் தீப்பிடித்து எரிந்தது. உடனே அங்கிருந்த பணியாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.
இந்த தாக்குதலில் துறைமுகம் மற்றும் எண்ணை கப்பல் கடும் சேதம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. துறைமுகத்தின் கட்டிடங்கள் மற்றும் பிற உள்கட்டமைப்புகளும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துவாப்ஸ் துறைமுகம் ரஷியாவின் கச்சா எண்ணை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பொருட்களை சர்வதேச சந்தைகளுக்கு கொண்டு செல்வதற்கான முக்கிய பகுதிகளில் ஒன்றாகும். இந்த தாக்குதலால் ரஷியாவின் கச்சா எண்ணை விநியோகம் பாதிக்கப்படும்.
துவாப்ஸ் துறைமுகத்தில் உள்ள எண்ணை முனையம், ரஷியாவின் மிகப்பெரிய எண்ணை நிறுவனமான ரோஸ்நெப்ட்டுக்கு சொந்தமானது. சமீபத்தில் இந்த நிறுவனம் மீது அமெரிக்கா பொருளாதார தடையை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே துவாப்ஸ் அருகே உள்ள சோஸ்னோவி கிராமத்திலும் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அடுக்குமாடி கட்டிடம் சேதமடைந்தது. மேலும் துவாப்சில் உள்ள ரெயில் நிலையத்திலும் சிறிது சேதங்கள் ஏற்பட்டது.
- நைஜீரியா அரசுக்கு அமெரிக்காவின் உதவிகள் நிறுத்தப்படும்
- நைஜீரியா அரசுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
நைஜீரியா நாட்டில் கிறிஸ்தவ மக்கள் அதிக அளவில் வாழ்கின்றனர். அந்நாட்டில் அடிக்கடி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலால் ஏராளமான கிறிஸ்தவர்கள் கொல்லப்படுவதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.
இந்நிலையில், நைஜீரியா அரசுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து டிரம்ப் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "கிறிஸ்தவர்களை கொன்று குவிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தவறினால், உதவிகள் நிறுத்தப்பட்டு ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இஸ்லாமிய பயங்கரவாதிகள் அழிக்கப்படுவார்கள்" என்று பதிவிட்டுள்ளார்.






