என் மலர்
உலகம்
- நடப்பு ஆண்டின் முதல் பாதியில் 37,000 பேர் உயிரிழந்துள்ளனர்.
- இறந்தவர்கள் அனைவரும் வீடுகளில் தனியாக தங்கி இருந்தனர் என தெரியவந்தது.
டோக்கியோ:
ஜப்பான் நாட்டு மக்கள் தொகையில் வயதானோர் அதிகம் வசித்து வருகின்றனர். அவர்கள் தனித்து வாழ்ந்து வருகின்றனர். வயது மூத்தோரின் தனிமை பிரச்சனை அங்கு அதிகரித்து காணப்படுகிறது.
இந்நிலையில், நடப்பு ஆண்டின் முதல் பாதியில் 37 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு தேசிய போலீஸ் ஏஜென்சி தெரிவித்துள்ளது.
விசாரணையில், உயிரிழந்தவர்கள் அனைவரும் வீடுகளில் தனியாக தங்கி இருந்தனர் என்பதும், அவர்களில் 4 ஆயிரம் பேர் இறந்து ஒரு மாதத்திற்கு பிறகே கண்டுபிடிக்கப்பட்டனர் என்பதும் தெரிய வந்தது.
ஜப்பான் நாட்டு மக்கள் தொகையில் வயதானோர் அதிகம் வசித்து வருகின்றனர். அவர்கள் தனித்து வாழ்ந்து வருகின்றனர். வயது மூத்தோரின் தனிமை பிரச்சனை அங்கு அதிகரித்து காணப்படுகிறது.
இதுதொடர்பாக தேசிய போலீஸ் ஏஜென்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
இந்த கணக்கெடுப்பு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில் எடுக்கப்பட்டது. இப்படி உயிரிழந்தவர்களில் 65 வயது முதல் 70 வயது தாண்டியவர்கள் அதிகம். வீட்டில் தனியாக இறந்தவர்களில் 40 சதவீதம் பேர் ஒரு நாளுக்குள் கண்டுபிடிக்கப்பட்டனர். 4 ஆயிரம் பேர் இறந்து ஒரு மாதத்திற்கும் மேலாகியே கண்டுபிடிக்க முடிந்தது. 130 பேர் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன் குறைந்தது ஒரு ஆண்டாவது கவனிக்கப்படாமல் இருந்துள்ளனர் என தெரிவித்துள்ளது.
- ஜான்ஸ்டவுன் பகுதியில் டிரம்பின் பேரணியில் மர்ம நபர் தடையை மீறி டிரம்பை நெருங்க முயற்சித்த செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- சிறிது நேரத்திலேயே கூட்டத்திலிருந்த மற்றொரு நபரையும் கைவிளங்கிட்டு போலீஸ் அழைத்துச்சென்றது.
நவம்பர் மாதம் நடக்க உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் முன்னாள் அதிபர் டொனல்டு டிரம்ப் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கடந்த ஜூலை 13 ஆம் தீதி பென்சில்வேனியாவில் நடந்த பேரணியில் டிரம்ப் மீது நடத்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தை அடுத்து அவருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் பென்சில்வேனியாவில் உள்ள ஜான்ஸ்டவுன் பகுதியில் டிரம்பின் பேரணியில் மர்ம நபர் தடையை மீறி டிரம்பை நெருங்க முயற்சித்த செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக வெளியான வீடியோ காட்சிகளில், தாடி வைத்து கூரோலிங் கிளாஸ் அணிந்த நடுத்தர வயது நபர் ஒருவர், பொதுமக்கள் தடையை மீறி செய்தியாளர்கள் இருந்த பகுதிக்குள் நுழைந்து மேடையில் ஏற முயன்றார். அவரை தடுத்து நிறுத்திய போலீஸ் அங்கிருந்து அழைத்துச் சென்றது. சிறிது நேரத்திலேயே கூட்டத்திலிருந்த மற்றொரு நபரையும் கைவிளங்கிட்டு போலீஸ் அழைத்துச்சென்றது. தாடி வைத்த நபருக்கும், இரண்டாவது நபருக்கும் தொடர்பு உள்ளதாக என்று தெரியவரவில்லை.
- சுமார் 100 டன்களுக்கும் அதிகமான மீன்கள் இதுவரை கரை ஒதுங்கியுள்ளன.
- இதனால் அங்கு ஒரு மாத காலத்துக்கு அவசர நிலை அறிவிக்கும் அளவுக்கு நிலைமை கட்டுப்பாட்டை மீறிச் சென்றுள்ளது.
கிரீஸ் நாட்டில் மத்திய பகுதியில் உள்ள துறைமுக நகரமான வோலோஸ் [Volos] நகரத்தில் உள்ள கடற்கரை மற்றும் நீர் நிலைகளிலிருந்து மீன்கள் கொத்துக் கொத்தாக உயிரிழந்து மிதப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அங்கு ஒரு மாத காலத்துக்கு அவசர நிலை அறிவிக்கும் அளவுக்கு நிலைமை கட்டுப்பாட்டை மீறிச் சென்றுள்ளது.
சுமார் 100 டன்களுக்கும் அதிகமான மீன்கள் உயிரிழந்து மிதக்கின்றன. காலநிலை மாற்றம் காரணிகளால் இந்த அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிகப்படியான மீன்களின் உயிரிழப்பு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு அழுகிய மீன்களால் உடல்நலக்குறைவு ஏற்படும் அபாயமும் உள்ளது.
உயிரிழந்த மீன்களை அகற்றும் பணியில் உள்ளூர் நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையே இறந்த நிலையில் மீன்கள் கரை ஒதுங்கி குமிந்து கிடக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
- ஸ்டார் லைனர் விண்கலம் தற்போது இவர்கள் இன்றி வரும் செப்டம்பர் 6 ஆம் தேதி மாலை 6.04 மணிக்குப் பூமியை நோக்கிய பயணத்தைத் தொடங்கும்
- கடந்த 2003ஆம் ஆண்டு நாசா சார்பில் விண்வெளி ஆராய்ச்சி பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பும் போது விண்கலம் வெடித்து சிதறியதில் கல்பனா சாவ்லா உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்தனர்.
இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், மற்றும் புட்ச் வில்மோர் கடந்த ஜூன் 5 ஆம் தேதி ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றனர். அங்கு அவர்கள் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். சுனிதா மற்றும் புட்ச் ஆகியோர் ஆய்வு பணிகளை முடித்துக் கொண்டு எட்டு நாட்களில் பூமிக்க திரும்ப திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், ஸ்டார் லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருவரும் பூமிக்குத் திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதன் காரணமாகக் கடந்த 80 நாட்களாக சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் இருவரும் சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கியுள்ளனர். இருவரையும் பூமிக்கு அழைத்த வர இருந்த ஸ்டார் லைனர் விண்கலம் தற்போது இவர்கள் இன்றி வரும் செப்டம்பர் 6 ஆம் தேதி மாலை 6.04 மணிக்குப் பூமியை நோக்கிய பயணத்தைத் தொடங்கும் ஸ்டார் லைனர் விண்கலம் என்று சுமார் 6 மணி நேரம் பயணித்து விண்கலம் மறுநாள் 12.03 மணிக்கு பூமியை அடையும் என்று நாசா அறிவித்துள்ளது.

பூமிக்குத் திரும்ப உள்ள ஸ்டார் லைனர் விண்கலத்திலேயே ஏன் இவர்கள் இருவரையும் அழைத்து வர வில்லை என்று நாசா விளக்கம் ஒன்றையும் அளித்துள்ளது. அதாவது, இதுபோன்ற பயணத்தின்போது விண்கலம் வெடித்து உயிரிழந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீரர் கல்பனா சாவ்லாவின் மரணமே தற்போது சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை பழுதுபட்ட விண்கலத்தில் அழைத்து வர வேண்டாம் என்ற முடிவை நாசா எடுக்க காரணமாக அமைத்துள்ளது.

இதனாலேயே இன்னும் 8 மாதங்கள் கழித்து அடுத்த வருடம் பிப்ரவரியில் இருவரையும் பூமிக்கு அழைத்து வரும் முடிவுக்கு நாசாவை தள்ளியுள்ளது. கடந்த காலங்களில் நாங்கள் தவறு செய்துள்ளோம் என்ற நாசாவைச் சேர்ந்த பில் நெல்சனின் கூற்று இதை உறுதிப்படுத்துகிறது. கடந்த 2003ஆம் ஆண்டு நாசா சார்பில் விண்வெளி ஆராய்ச்சி பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பும் போது விண்கலம் வெடித்து சிதறியதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கல்பனா சாவ்லா உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
- எம்ஐ-8 ரஷியாவிலும், அண்டை நாடுகளிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
- இரண்டு எஞ்சின் ஹெலிகாப்டரான எம்ஐ-8 1960 களில் வடிவமைக்கப்பட்டது.
ரஷியாவில் எம்ஐ-8டி ரக ஹெலிகாப்டர் ஒன்று வாக்கசெட்ஸ் எரிமலை பகுதியில் இருந்து நிக்கோலேவ்கா கிராமத்தில் உள்ள தளத்திற்கு புறப்பட்டது. ஆனால், ஹெலிகாப்டர் புறப்பட்ட சில மணி நேரங்களில் திட்டமிடப்பட்ட நேரத்தில் தொடர்பை துண்டித்தது.
இந்த ஹெலிகாப்டரில் மூன்று பணியாளர்கள் மற்றும் 19 பயணிகள் என மொத்தம் 22 பேருடன் சென்ற ரஷிய ஹெலிகாப்டர் நாட்டின் கிழக்கு கம்சட்கா தீபகற்பத்தில் காணாமல் போனதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைப்பின் முதற்கட்டத் தகவல் வெளியானது.
இந்நிலையில், மாயமான ஹெலிகாப்டரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
1960 களில் வடிவமைக்கப்பட்ட இரண்டு எஞ்சின் ஹெலிகாப்டரான எம்ஐ-8 ரஷியாவிலும், அண்டை நாடுகளிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
முன்னதாக ஆகஸ்ட் 12 ஆம் தேதி, 16 பேருடன் பயணித்த எம்ஐ-8 ஹெலிகாப்டர் ரஷியாவின் தூர கிழக்குப் பகுதியான கம்சட்காவில் அதிகாலையில் விபத்துக்குள்ளானது.
கம்சட்கா தீபகற்பம் அதன் இயல்புக்காக சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமானது. இது மாஸ்கோவிற்கு கிழக்கே 6,000 கிமீ (3,728 மைல்கள்) மற்றும் அலாஸ்காவிற்கு மேற்கே சுமார் 2,000 கிமீ தொலைவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- கணவன் கஞ்சா செடிகளை வாங்கி மனைவிக்கு தெரியாமல் அவரது காரில் பின்புறம் நட்டு வைத்துள்ளார்.
- சிங்கப்பூரில் போதைப்பொருட்கள் பயன்படுத்தினால் அதற்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும்.
சிங்கப்பூரில் 37 வயதான டான் சியாங்லாங்கிற்கு 2021 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஆனால் ஒரு வருடத்திற்கு பிறகு தனது மனைவியை பிரிந்தார் சியாங்லாங். ஆனால் அவர்கள் விவாகரத்து பெறவில்லை.
சிங்கப்பூர் சட்டப்படி திருமணம் முடிந்து 3 ஆண்டுகள் ஆகியிருந்தால் மட்டும் தான் விவாகரத்து கோரமுடியும். ஆனால் தம்பதியினரில் யாராவது ஒருவரின் மேல் குற்ற வழக்கு இருந்தால் சீக்கிரம் விவாகரத்து பெறமுடியும்.
ஆகையால் கணவன் ஒரு திட்டம் தீட்டியுள்ளான். 500 கிராம் அளவிலான கஞ்சா செடிகளை வாங்கி மனைவிக்கு தெரியாமல் அவரது காரில் பின்புறம் நட்டு வைத்துள்ளார். இவற்றில் பாதி கஞ்சா செடிகள் நன்றாக வளர்ந்துள்ளது.
பின்னர் போலீசார் அவரது காரை சோதனை செய்த போது போதைப்பொருட்களை கண்டுபிடித்து அவரை கைது செய்தனர். ஆனால் போலீசாரின் விசாரணையில் அவர் கஞ்சா வளர்த்ததற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. அப்போது அவரது காரில் பொருத்தப்பட்டிருந்த கேமராவை ஆய்வு செய்த போது அவரின் கணவன் கஞ்சா செடிகள் நட்டத்தை போலீசார் கண்டுபிடித்தனர்.
தனது மனைவிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என நினைத்துக்கொண்டிருந்த வேளையில் கணவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தற்போது இவருக்கு சுமார் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பபட்டது.
சிங்கப்பூரில் போதைப்பொருட்கள் பயன்படுத்தினால் அதற்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
- உக்ரைன் பகுதிகள் மீது ரஷியா விடாமல் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது.
- ரஷியாவின் ரோன்களின் தாக்குதலை முறியடிக்க 70 உக்ரைன் பெண்கள் பாதுகாப்பு படையில் சேர்ந்துள்ளனர்.
ரஷியா - உக்ரைன் போர் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அண்மையில் உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷிய ராணுவம் டிரோன் தாக்குதலை ரஷியா நடத்தியது. இந்த டிரோன்களை தங்களின் ராணுவம் தாக்கி அழித்ததாக உக்ரைன் தெரிவித்திருந்தது.
இந்த தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ரஷியாவின் சராதோவ் [Saratov] பகுதியில் உக்ரைன் டிரோன்களை ஏவி சரமாரியாகத் தாக்குதல் நடத்தியது. உக்ரைனின் 20 டிரோன்களை தாக்கி அழித்துள்ளதாக ரஷிய ராணுவம் தெரிவித்தது. டிரோன் விழுந்து சராதோவ் பகுதியில் உள்ள 38 மாடி குடியிருப்பு கட்டடம் தீப்பற்றி எரிந்தது.
உக்ரைன் பகுதிகள் மீது ரஷியா விடாமல் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. ராட்சத மிசைல்கள் மற்றும் டிரோன்களை உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைன் பகுதிகள் மீது தாக்குதல்கள் நடந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ரஷியாவின் டிரோன் தாக்குதலை முறியடிக்க உக்ரைன் பெண்கள் போர்க்களத்திற்கு வந்துள்ளனர். இந்த பெண்கள் குழு ரஷியாவின் டிரோன்களை சுட்டு வீழ்த்தியுள்ளனர்.
ரஷியாவின் தாக்குதலை சமாளிக்க ஒவ்வொரு மாதமும் 10 ஆயிரம் உக்ரைன் ஆண்கள் ராணுவத்தில் சேர்க்கப்படுகின்றனர். அவர்கள் உக்ரைன் எல்லையை பாதுகாத்து வருகின்றனர். ஆண்களோடு கைகோர்த்து தற்போது பெண்களும் நாட்டை பாதுகாக்க முன்வந்துள்ளனர். ரஷியாவின் டிரோன் தாக்குதலை முறியடிக்க முதற்கட்டமாக 70 பெண்கள் பாதுகாப்புப் படையில் சேர்ந்துள்ளனர்.
- கமலா ஹாரிஸ், டிரம்ப் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- செயற்கை கருத்தரித்தல் சிகிச்சைக்கு லட்சக்கணக்கில் செலவாகும்
அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் 5-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் பதவிக்கு கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். குடியரசு கட்சி வேட்பாளராக டிரம்ப் போட்டியிடுகிறார்.
இந்த தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் முதலாவது கறுப்பின மற்றும் ஆசிய அமெரிக்க பெண் என்ற வரலாற்று சாதனையை கமலா ஹாரிஸ் படைத்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில் கமலா ஹாரிஸ், டிரம்ப் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மிச்சிகனில் நடந்த குடியரசுக் கட்சியின் பேரணியில் கலந்து கொண்டு பேசிய டிரம்ப், "அமெரிக்காவிற்கு அதிக குழந்தைகள் வேண்டும். நான் 2 ஆவது முறையாக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை இலவசமாக மேற்கொள்ளப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.
மேலும், இந்த திட்டத்திற்கு தேவையான நிதியுதவியை அரசு அல்லது மருத்துவ காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கும் என்று அவர் தெரிவித்தார்.
செயற்கை கருத்தரித்தல் சிகிச்சைக்கு லட்சக்கணக்கில் செலவாகும் நிலையில் டிரம்பின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
- பிரேசில் நாட்டில் எக்ஸ் தளத்திற்கு தற்காலிக தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
- பிரேசில் நாட்டில் எக்ஸ் ஆப்பை 2.2 கோடிக்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்
பிரபல சமூக வலைத்தளமான டிவிட்டரை வாங்கி எக்ஸ் என பெயர் மாற்றிய உலகப் பணக்காரரும் டெஸ்லா நிறுவனருமான எலான் மஸ்க் அதில் பல மாற்றங்களைக் கொண்டுவந்தார். பெரிய அளவில் ஊழியர்களைப் பணி நீக்கம் செய்து தளத்தில் பாலிசிகளில் பல திருத்தங்களை மேற்கொண்டார்.
சமீபத்தில் பிரேசில் நாட்டில் எக்ஸ் தளம் மீது விதிக்கப்பட்ட புதிய தணிக்கை உத்தரவுகளால், அங்குள்ள எக்ஸ் அலுவலகத்தை மொத்தமாக மூடி ஊழியர்களை அதிரடியாக நீக்கினார் எலான் மஸ்க். அலுவலகம் மூடப்பட்டாலும் பிரேசிலில் எக்ஸ் சேவைகள் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்
இந்நிலையில் இதுதொடர்பான வழக்கை விசாரித்து வரும் பிரேசில் உச்ச நீதிமன்றம், பிரேசில் நாட்டில் X தளத்திற்கான சட்ட விவகார பிரதிநிதியை அடுத்த 24 மணி நேரத்தில் நியமிக்க வேண்டும் என்றும், தவறினால் பிரேசிலில் எக்ஸ் தளம் முடக்கப்படும் என்றும் உத்தரவிட்டிருந்தது.
பிரேசில் உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவை ஏற்க முடியாது என்று எலான் மஸ்க் திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதனையடுத்து, பிரேசில் நாட்டில் எக்ஸ் தளத்திற்கு தற்காலிக தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 24 மணிநேரத்திற்குள் எக்ஸ் தளத்தை பிரேசில் நாட்டிலிருந்து முடக்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு தேசிய தகவல் தொடர்பு நிறுவனத்திற்கு நீதிபதி அலெக்ஸாண்ட்ரே டி மோரேஸ் உத்தரவிட்டார்.
மேலும், கூகுள், ஆப்பிள் ஆப் ஸ்டோர்களில் எக்ஸ் ஆப்பை தடுக்கும் தொழில்நுட்பத் தடைகளை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் VPN போன்றவற்றை பயன்படுத்தி எக்ஸ் ஆப்பை பிரேசில் மக்கள் பயன்படுத்தினால் 8,874 டாலர் ( இந்திய மதிப்பில் சுமார் ரூ.7,44,000) அபராதம் விதிக்கப்படும் என்றும் நீதிபதி அலெக்ஸாண்ட்ரே டி மோரேஸ் தெரிவித்தார்.
பிரேசில் உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எலான் மஸ்க் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவரது எக்ஸ் பதிவில், "சுதந்திரமான பேச்சு என்பது ஜனநாயகத்தின் அடித்தளம். பிரேசிலில் தேர்ந்தெடுக்கப்படாத ஒரு போலி நீதிபதி அதை அரசியல் நோக்கங்களுக்காக அழித்து வருகிறார்" என்று பதிவிட்டுள்ளார்.
பிரேசில் நாட்டில் எக்ஸ் ஆப்பை 2.2 கோடிக்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பாகிஸ்தானில் கனமழை பெய்து வருகிறது.
- இதனால் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்றவை ஏற்படுகிறது.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் சில பகுதிகள் தற்போது பெய்து வரும் கனமழையால் திடீர் வெள்ளம் மற்றும் பல மாவட்டங்களில் நிலச்சரிவு போன்றவற்றை எதிர்கொண்டுள்ளது. மேலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு நாடு முழுவதும் பலத்த காற்றுடன் கூடிய பரவலான மழை பெய்யும் என்று பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தின் அப்பர் டிர் மாவட்டத்தில் இன்று திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது.
இதில் ஒரு வீட்டின் மேல் கூரை சரிந்தது. இந்தச் சம்பவத்தில் 3 பெண்கள், 6 குழந்தைகள், 3 ஆண்கள் என மொத்தம் 12 பேர் உயிரிழந்தனர்.
விசாரணையில், இந்த விபத்தில் உயிரிழந்த 12 பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இரு நாள் பயணமாக கொழும்பு சென்றுள்ளார்.
- இலங்கை சென்றுள்ள அஜித் தோவல் அதிபர் ரணில் விக்ரமசிங்கேவை சந்தித்துப் பேசினார்.
கொழும்பு:
தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களின் ஆலோசனைக் கூட்டம் இலங்கையில் இன்று நடைபெற்றது. இதில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கலந்து கொண்டார்.
அஜித் தோவல் இன்று காலை கொழும்பு சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், கொழும்புவில் அதிபர் ரணில் விக்ரமசிங்கேவை அஜித் தோவல் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தச் சந்திப்பின்போது இலங்கையுடன் அரசியல் மற்றும் பொருளாதார விஷயங்கள் குறித்து உரையாடியதாக தெரிகிறது.
இலங்கையில் செப்டம்பர் 21-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அஜித் தோவலின் இந்த வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தனே, அந்நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சகல ரத்நாயக ஆகியோரையும் சந்தித்தார்.
இந்தியா, இலங்கை, மாலத்தீவுகள் இடையே ஏற்படுத்தப்பட்ட கூட்டமைப்பு தற்போது விரிவிடைந்துள்ளது. இதில் மொரிசியஸ் மற்றும் வங்கதேசம் ஆகியவை உறுப்பினர்களாக சேர்ந்துள்ளன. சீஷெல்ஸ் பார்வையாளராக இணைந்துள்ளது.
- எக்ஸ் அலுவலகத்தை மொத்தமாக மூடி ஊழியர்களை அதிரடியாக நீக்கினார் எலான் மஸ்க்.
- அலுவலகம் மூடப்பட்டாலும் பிரேசிலில் எக்ஸ் சேவைகள் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்
பிரபல சமூக வலைத்தளமான டிவிட்டரை வாங்கி எக்ஸ் என பெயர் மாற்றிய உலகப் பணக்காரரும் டெஸ்லா நிறுவனருமான எலான் மஸ்க் அதில் பல மாற்றங்களைக் கொண்டுவந்தார். பெரிய அளவில் ஊழியர்களைப் பணி நீக்கம் செய்து தளத்தில் பாலிசிகளில் பல திருத்தங்களை மேற்கொண்டார். உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தப்படும் சமூக வலைதளமாக எக்ஸ் திகழ்ந்து வரும் நிலையில் 24 மணி நேரத்துக்குள் பிரேசில் நாட்டில் எக்ஸ் தளம் முடக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் பிரேசில் நாட்டில் எக்ஸ் தளம் மீது விதிக்கப்பட்ட புதிய தணிக்கை உத்தரவுகளால், அங்குள்ள எக்ஸ் அலுவலகத்தை மொத்தமாக மூடி ஊழியர்களை அதிரடியாக நீக்கினார் எலான் மஸ்க். அலுவலகம் மூடப்பட்டாலும் பிரேசிலில் எக்ஸ் சேவைகள் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்
இந்நிலையில் இதுதொடர்பான வழக்கை விசாரித்து வரும் பிரேசில் உச்ச நீதிமன்றம், பிரேசில் நாட்டில் X தளத்திற்கான சட்ட விவகார பிரதிநிதியை அடுத்த 24 மணி நேரத்தில் நியமிக்க வேண்டும் என்றும், தவறினால் பிரேசிலில் எக்ஸ் தளம் முடக்கப்படும் என்றும் உத்தரவிட்டுள்ளது.






