search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஷியாவில் வெந்நீர் குழாயில் விழுந்த கார்
    X
    ரஷியாவில் வெந்நீர் குழாயில் விழுந்த கார்

    ரஷியாவில் வெந்நீர் குழாயில் விழுந்த கார்: 2 பேர் உடல் வெந்து பலி

    ரஷியாவில் சாலையில் சென்றுகொண்டிருந்த கார், வெந்நீர் குழாய் மீது விழுந்து உடைப்பு ஏற்பட்டதால், காரில் இருந்த 2 பேரும் உடல் வெந்து சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
    மாஸ்கோ :

    ரஷியாவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள பென்ஷா நகரில் தற்போது கடுங்குளிர் காலம் ஆகும். இந்த காலத்தில் குளிரை சமாளிக்க குழாய் மூலம் வீடுகளுக்கு வெந்நீர் சப்ளை செய்யப்படுவது வழக்கம். இதற்காக சாலைகளுக்கு அடியில் ராட்சத குழாய்களை பதித்து, அதன் மூலம் வீடுகளுக்கு வெந்நீர் சப்ளை செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் பென்ஷா நகரில் உள்ள ஒரு சாலையில் 2 ஆண்களுடன் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டது. இதில் அந்த கார் பள்ளத்துக்குள் விழுந்தது. விழுந்த வேகத்தில் கார் சாலைக்கு அடியில் உள்ள வெந்நீர் குழாயை உடைத்து கொண்டு உள்ளே பாய்ந்தது. இதில் காருக்குள் இருந்த 2 பேரும் உடல் வெந்து, சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

    இதையடுத்து, கிரேன் உதவி மூலம் வெந்நீர் குழாய்க்குள் விழுந்த கார் தூக்கப்பட்டு, 2 பேரின் உடலும் மீட்கப்பட்டது. அவர்களது உடல் அடையாளம் காணமுடியாத வகையில் வெந்துபோய் இருந்தது. வெந்நீர் குழாயில் இருந்து வெளியான அதிக வெப்பம் காரணமாக தார் சாலை உருகி பள்ளம் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த விபத்து குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
    Next Story
    ×