search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெள்ளை மாளிகையில் ஊழியர்கள் செல்போன் பயன்படுத்த தடை
    X

    வெள்ளை மாளிகையில் ஊழியர்கள் செல்போன் பயன்படுத்த தடை

    வெள்ளை மாளிகையில் பணிபுரியும் ஊழியர்கள் வேலை நேரத்தின் போது தங்களது தனிப்பட்ட சொந்த செல்போன்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ அலுவலகமாக வெள்ளை மாளிகை திகழ்கிறது. தலைநகர் வாஷிங்டனில் உள்ள இம்மாளிகையில் அதிபரின் இல்லமும் அமைந்துள்ளது.

    தற்போது வெள்ளை மாளிகையில் பணிபுரியும் ஊழியர்கள் வேலை நேரத்தின் போது தங்களது தனிப்பட்ட சொந்த செல்போன்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

    அதிபர் டொனால்டு டிரம்பின் அலுவல் நிர்வாக உதவியாளர்களும் செல்போன் பயன்படுத்த கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை வெள்ளை மாளிகையின் தலைமை அலுவலர் ஜான் கெல்லி பிறப்பித்துள்ளார். இந்த தடை உத்தரவு இன்று முதல் அமலுக்கு வருகிறது.


    வெள்ளை மாளிகையில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகள் ரகசியமாக பத்திரிகைகளுக்கு செய்திகளாக வழங்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டை அதிபர் டிரம்ப் எழுப்பியிருந்தார். அதை தடுக்கவே இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    மேலும், ரகசியமாக செய்திகள் வெளியாவதை தடுக்க ஊழியர்களின் செல்போன்கள் வெள்ளை மாளிகையின் வயர்லெஸ் நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.#TamilNews
    Next Story
    ×