search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தான்: பரச்சினார் தீவிரவாத தாக்குதல் பலி எண்ணிக்கை 73 ஆக உயர்வு
    X

    பாகிஸ்தான்: பரச்சினார் தீவிரவாத தாக்குதல் பலி எண்ணிக்கை 73 ஆக உயர்வு

    பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் நாட்டின் எல்லையோரம் உள்ள கைபர் பகதுங்வா மாகாணத்தின் தலைநகரான பெஷாவர் அருகே தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலின் பலி எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளது.
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் பாகிஸ்தானின் கைபர் பகதுங்வா மாகாணத்தின் தலைநகரான பெஷாவர் நகரம் அமைந்துள்ளது.

    பெஷாவர் நகரில் இருந்து வடமேற்கே சுமார் 250 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் பரச்சினார் நகரத்தில் உள்ள மார்க்கெட் பகுதியில் லஷ்கர் இ ஜாங்வி என்ற தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் நடத்திய இரட்டை வெடிகுண்டு தாக்குதலில் 30 பேர் பலியானதாகவும் நூற்றுக்கும் அதிகமானவர்கள் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் முதல்கட்ட தகவல் வெளியானது.

    இந்நிலையில், இன்று மாலை நிலவரப்படி இந்த இரட்டை தாக்குதலில் பலி எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளதாகவும் ஐம்பதுக்கும் அதிகமானவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

    இந்த கோரச் சம்பவத்தால் ரம்ஜான் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டிய அப்பகுதி மக்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
    Next Story
    ×