என் மலர்tooltip icon

    உலகம்

    • ஜார்ஜின் மொபைல் போன் காரில் கீழே விழுந்தது.
    • மொத்தம் 329 மில்லியன் டாலர்களை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

    எலான் மஸ்க்கின் மின்சார வாகன நிறுவனமான டெஸ்லாவுக்கு அமெரிக்க நீதிமன்றம் பெரும் தொகையை அபராதமாக விதித்து தீர்ப்பளித்துள்ளது.

    2019 ஆம் ஆண்டு புளோரிடாவின் கீ லார்கோவில் ஜார்ஜ் மெக்கீ என்ற நபர் தனது டெஸ்லா காரை ஓட்டிச் சென்று அதிநவீன ஆட்டோபைலட் அம்சத்தைப் பயன்படுத்தினார்.

    இது டெஸ்லா வழங்கிய தானியங்கி ஓட்டுநர் அமைப்பு. வழியில், ஜார்ஜின் மொபைல் போன் காரில் கீழே விழுந்தது. கார் ஆட்டோபைலட்டில் இருப்பதாக நினைத்து, ஜார்ஜ் குனிந்து தொலைபேசியை எடுக்க முயன்றார்.

    இருப்பினும், அந்த நேரத்தில், கார் கட்டுப்பாட்டை இழந்து, அருகில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு காரில் மோதி, இரண்டு பேர் மீது மோதியது.

    இந்த சம்பவத்தில், 22 வயது பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்தார், அவரது நண்பர் படுகாயமடைந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் நீதிமன்றத்தை அணுகினர்.

    நீண்ட விசாரணைக்குப் பிறகு, சமீபத்தில் புளோரிடா நீதிமன்றம் தனது தீர்ப்பை அறிவித்தது.

    இந்த விபத்துக்கான இழப்பீடாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு மொத்தம் 329 மில்லியன் டாலர்களை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

    மேலும், விபத்துக்கு ஆட்டோபைலட் அமைப்பும் ஒரு காரணியாக இருப்பதைக் கண்டறிந்த நீதிமன்றம், டெஸ்லா நிறுவனம் தன் பங்குக்கு 242 மில்லியன் டாலர்களை (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 1,996 கோடி) வழங்க உத்தரவிட்டது. மீதமுள்ள தொகையை வாகனத்தின் ஓட்டுநர் செலுத்த வேண்டும்.

    இருப்பினும், புளோரிடா நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து டெஸ்லா மேல்முறையீடு செய்வதாக அறிவித்துள்ளது.  

    • டிரம்ப் தனது இரண்டாவது பதவிக்காலத்தில் 6 மாதங்களில் 6 போர்களை நிறுத்தியுள்ளார்.
    • குறிப்பாக டிரம்ப், இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியுள்ளார்

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கு மீண்டும் ஒருமுறை அமைதிக்கான நோபல் பரிசை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லெவிட், உலகெங்கிலும் உள்ள பல மோதல் மண்டலங்களில் பல அமைதி ஒப்பந்தங்கள் மற்றும் போர் நிறுத்தங்களுக்கு டிரம்ப் மத்தியஸ்தம் செய்ததாகக் கூறினார்.

    டொனால்டு டிரம்ப் தனது இரண்டாவது பதவிக்காலத்தில் 6 மாதங்களில் 6 போர்களை நிறுத்தியுள்ளார். குறிப்பாக டிரம்ப், இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியுள்ளார். அதனால்தான் டிரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசை வழங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று லெவிட் தெரிவித்தார்

    இந்நிலையில், ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், "இதை வெள்ளை மாளிகையிடம் கேட்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

    • உலகின் முதல் 10 பணக்காரர்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டு இருக்கிறது.
    • உலகின் முதல் 10 பெரும் பணக்காரர்கள் பட்டியலில் 9 பேர் அமெரிக்கர்கள் ஆவர்.

    அமெரிக்க பங்குச்சந்தை குறியீடுகளை மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் புதிய உச்சங்களுக்கு கொண்டு சென்றுள்ளன. இதன் அடிப்படையில் உலகின் முதல் 10 பணக்காரர்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டு இருக்கிறது.

    இதில் எலான் மஸ்க் 401 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் (இந்திய மதிப்பில் ரூ.34 லட்சம் கோடி) முதலிடத்தில் உள்ளார். 2-வது இடத்தில் லாரி எலிசனும், 3-வது இடத்தில் மார்க் ஜுக்கர்பெர்க்கும் உள்ளனர். ஜெப் பெசோஸ், லாரி பேஜ், ஜென்சன் ஹுவாங், செர்ஜி பிரின், ஸ்டீவ் பால்மர், வாரன் பபெட், பெர்னார்ட் அர்னால்ட் ஆகியோர் முறையே 4 முதல் 10 இடங்களில் உள்ளனர்.

    நேற்றைய தேதி நிலவரப்படி வெளியிடப்பட்ட உலகின் முதல் 10 பெரும் பணக்காரர்கள் பட்டியலில் 9 பேர் அமெரிக்கர்கள் ஆவர். பெர்னார்ட் அர்னால்ட் பிரான்சை சேர்ந்தவர்.

    • டிரம்ப் முயற்சித்தும் கூட உக்ரைன் - ரஷியா போரை நிறுத்த முடியவில்லை.
    • ரஷியா மீது வர்த்தக கட்டுப்பாடுகளும் 100 சதவீதம் வரியும் விதிக்கப்படும் என டிரம்ப் தெரிவித்தார்.

    ரஷ்யாவிற்கு அருகே 2 அணுஆயுத நீர் மூழ்கி கப்பல்களை நிலைநிறுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளார். அணு ஆயுதம் குறித்து அச்சுறுத்தும் வகையில் பேசிய ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதி டிமிட்ரி மெட்வெடேவின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த நடவடிக்கையை டிரம்ப் எடுத்துள்ளார். .

    உக்ரைன் - ரஷியா போர் 3 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்தியா - பாகிஸ்தான் சண்டை உட்பட பல போர்களை தடுத்து நிறுத்தியதாக தம்பட்டம் அடுத்துவரும் டிரம்ப் முயற்சித்தும் கூட உக்ரைன் - ரஷியா போரை நிறுத்த முடியவில்லை.

    இதனால் கோபமடைந்த டிரம்ப் உக்ரைனில் போரை நிறுத்த ரஷிய அதிபர் புதினுக்கு தான் அளித்த 50 நாள் காலக்கெடுவை 10 முதல் 12 நாட்களாக குறைத்தார்.

    ஆகஸ்ட் 7-9க்குள் அமைதிப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் காணப்பட வேண்டும் என டிரம்ப் நிபந்தனை விதித்துள்ளார். இல்லையெனில் ரஷியா மீது வர்த்தக கட்டுப்பாடுகளும் 100 சதவீதம் வரியும் விதிக்கப்படும் என டிரம்ப் தெரிவித்தார்.

    மேலும், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில் வாங்குவதால் டிரம்ப் இந்திய பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்தார். இந்தியாவும், ரஷியாவும் இறந்த பொருளாதாரங்கள் (Dead Economies) என்று விமர்சித்தார்.

    இதனிடையே, டிரம்பின் கருத்துக்கு ரஷிய முன்னாள் அதிபரும், ரஷிய பாதுகாப்பு கவுன்சில் துணைத்தலைவருமான டிமிட்ரி மெட்வதேவ் தனது எக்ஸ் பக்கத்தில், "ரஷியா ஒன்றும் இஸ்ரேலோ, ஈரானோ அல்ல. ஒவ்வொரு காலக்கெடுவும் மிரட்டல், போருக்கான பாதை. இந்தியா, ரஷியாவின் இறந்த பொருளாதாரங்கள் குறித்த டிரம்ப்பின் பேச்சால் அவர் ஆபத்தான எல்லைக்குள் நுழைகிறார். அவர் இல்லாத இறந்த கைகள் (dead hand) எவ்வளவு ஆபத்தானது பற்றியும் நினைவில் கொள்ள வேண்டும்' என தெரிவித்தார்.

    இறந்த கைகள் (dead hand) என்பது ரஷியா - அமெரிக்கா பனிப்போரின்போது ரஷியாவால் அமைக்கப்பட்ட அணு ஆயுத தாக்குதல் கட்டமைப்பாகும். இந்த கட்டமைப்பு, ரஷியா மீது அமெரிக்கா அணு ஆயுத தாக்குதல் நடத்தி ரஷியாவின் தலைவர்கள் உயிரிழந்தபோதும், அணு ஆயுத கட்டளைகளை அளிக்காதபோதும், தன்னிச்சையாக ரஷியாவின் ஒட்டுமொத்த அணு ஆயுதங்களையும் அமெரிக்காவை நோக்கி ஏவும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. பனிப்போர் காலத்தில் அமைக்கப்பட்ட இந்த அணு ஆயுத கட்டமைப்பு தற்போதும் செயல்பாட்டில் உள்ளது" என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், ரஷிய முன்னாள் அதிபர் டிமிட்ரியின் மிரட்டலை தொடர்ந்து ரஷியா நோக்கி அணு ஆயுதம் தாங்கிய 2 நீர்மூழ்கி கப்பல்களை அனுப்பி டிரம்ப் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    இது தொடர்பாக டிரம்ப் தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "ரஷிய முன்னாள் அதிபர் டிமிட்ரி மெட்வதேவின் முட்டாள்தனமான, ஆத்திரமூட்டும் மிரட்டல்களுக்கு பதிலடியாக அணு ஆயுதம் தாங்கிய 2 நீர்மூழ்கி கப்பல்களை ரஷியா நோக்கி நிலைநிறுத்த உத்தரவிட்டுள்ளேன். வார்த்தைகள் மிகவும் முக்கியம். அந்த வார்த்தைகள் சில சமயங்களில் காரணமற்ற விளைவுகளை ஏற்படுத்தலாம். டிமிட்ரியின் தற்போதைய வார்த்தைகள் அதுபோன்ற விளைவுகளை ஏற்படுத்ததாது என நம்புகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

    இதனை அடுத்து டிரம்பின் மிரட்டலுக்கு ரஷியா பதிலடி கொடுத்துள்ளது. இது தொடர்பாக பேசிய ரஷிய எம்.பி. விக்டர் வடலொட்ஸ்கெ, "அணு ஆயுதம் தாங்கிய அமெரிக்க நீர்மூழ்கி கப்பல்களை விட அணு ஆயுதம் தாங்கிய ரஷிய நீர்மூழ்கி கப்பல்கள் அதிகம். டிரம்ப் உத்தரவிட்ட அணு ஆயுதம் தாங்கிய 2 நீர்மூழ்கி கப்பல்களும் எங்கு உள்ளன. அதன் செயல்பாடுகள் குறித்து எங்களுக்கு தெரியும். எனவே, டிரம்ப்பின் கருத்துக்கு ரஷியாவிடமிருந்து அணு ஆயுதம் தாங்கிய நீர்மூழ்கி கப்பல்கள் நிலைநிறுத்தி பதிலடி கொடுக்க வேண்டிய அவசியமில்லை" என்று தெரிவித்தார்.

    • ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில் வாங்கி வருகிறது.
    • இந்தியா பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் 25 சதவீதம் வரி விதித்துள்ளார்.

    இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

    ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில் வாங்குவதால் டிரம்ப் 25 சதவீதம் வரி விதித்துள்ளார்.

    இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய டிரம்ப், "இந்தியா இனி, ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கப் போவதில்லை என கேள்விப்பட்டதாகவும், அப்படி நடந்தால் உண்மையில் அது நல்ல நடவடிக்கை" என்று தெரிவித்தார்.

    • சாலையை கடந்த ரோபோ, சட்டென்று நின்று திரும்பி, நடைபாதையில் நடக்க ஆரம்பிக்கிறது.
    • வீடியோ வலைத்தளவாசிகளை வெகுவாக கவர்ந்தது.

    சாலையை கடக்கும் மனித வடிவ ரோபோ பற்றிய வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாக வலம் வருகிறது. துபாயின் 'எமிரேட்ஸ் டவர்' அருகே உள்ள ஒரு சாலையில் கார் ஒன்று வேகமாக செல்கிறது. அப்போது காரின் குறுக்கே ரோபோ ஒன்று மிதமான வேகத்தில் ஓடியபடி சாலையைக் கடக்கிறது. இதை காருக்குள் இருந்த ஒருவர் ஆச்சரியமாக பார்த்து படம் பிடிக்கிறார்.

    சாலையை கடந்த ரோபோ, சட்டென்று நின்று திரும்பி, நடைபாதையில் நடக்க ஆரம்பிக்கிறது. ரோபோவின் பின்னால் அதன் எஜமானர் நடந்து செல்கிறார். அவர் கையில் ரிமோட் கண்ட்ரோல் வைத்து ரோபோவை இயக்குவது தெரிகிறது. அதற்கேற்ப ரோபோ மனிதனைவிட சற்று வேகமான நடையில் பரபரப்பாக ஓடுவதுபோலவே நடந்து செல்கிறது. இந்த வீடியோ வலைத்தளவாசிகளை வெகுவாக கவர்ந்தது.

    ரோபோக்கள் இன்னும் அதிகமாக மனிதர்களுடன் வலம் வரும் காலம் நெருங்கிவிட்டதாக பலரும் கருத்து பதிவிட்டு பாராட்டினார்கள்.



    • அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் சிறைச்சாலை அமைந்துள்ளது.
    • இங்கு சுமார் 1,500 கைதிகள் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் லூசியானா மாகாணம் நியூ ஆர்லியன்ஸ் நகரில் சிறைச்சாலை அமைந்துள்ளது. அங்கு விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் என சுமார் 1,500 பேர் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர்.

    இந்தச் சிறையில் கலீல் பிரையன் (30) என்ற கைதியும் அடைக்கப்பட்டு இருந்தார். இவரது தண்டனை காலம் முடிந்த நிலையில் கடந்த வாரம் அவரை விடுதலை செய்ய கோர்ட் உத்தரவிட்டது. ஆனால் பெயர் குழப்பத்தால் அதே பெயருடைய மற்றொரு கைதியை சிறை அதிகாரிகள் விடுதலை செய்தனர்.

    இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எனவே பணியில் கவனக்குறைவாக செயல்பட்டதாக 2 சிறைத்துறை அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இதே சிறையில் இருந்துதான் கடந்த மே மாதம் 10 கைதிகள் தப்பி ஓடியது குறிப்பிடத்தக்கது.

    • 2025-ம் ஆண்டின் அடுத்த சூரிய கிரகணம் செப்டம்பர் 21-ந்தேதி நிகழ உள்ளது.
    • இது முழு இருளாக மாறாமல் மாலைநேர வெளிச்சம் போல மங்கலான வெளிச்சத்துடன் இருக்கும்.

    கடந்த சில நாட்களாக நாளை உலகம் 6 நிமிடங்கள் இருளில் மூழ்கும் இது 100 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அரிய நிகழ்வு என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இதற்கு நாசா மறுத்துள்ளது.

    சூரியனுக்கும் பூமிக்கும் நடுவில் சந்திரன் நகர்ந்து வந்து சூரியனை முழுவதுமாக மறைக்கும்போது தான் சூரிய கிரகணம் ஏற்படுகிறது.

    இந்த நேரத்தில் சூரியனின் வெளிச்சம் சிறிது நேரத்திற்கு பூமி மேல் விழாது. இதுவே சூரிய கிரகணம் ஆகும். 2025-ம் ஆண்டின் அடுத்த சூரிய கிரகணம் செப்டம்பர் 21-ந்தேதி நிகழ உள்ளது. ஆனாலும் அது மிகச் சிறிய சூரியகிரகணம்தான்.

    கடந்த 1991-ம் ஆண்டுக்குப் பிறகு வரும் ஆகஸ்டு 2, 2027-ம் ஆண்டு நிகழ இருக்கும் சூரிய கிரகணம் தான் இந்த நூற்றாண்டில் நிகழ இருக்கும் மிக நீண்ட சூரிய கிரகணம்.

    இந்த கிரகணம் 6 நிமிடம் 22 வினாடி வரை நீடிக்க உள்ளது . ஆனாலும் இது பூமியை முழுவதும் இருளாக ஆக்காது. ஸ்பெயின், ஜிப்ரால்டர், மொராக்கோ, அல்ஜீரியா, துனிசியா, லிபியா, எகிப்து, சூடான், சவுதி அரேபியா, ஏமன் மற்றும் சோமாலியா உள்ளிட்ட 11 நாடுகளில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும்.

    ஆனாலும் இது முழு இருளாக மாறாமல் மாலைநேர வெளிச்சம் போல மங்கலான வெளிச்சத்துடன் இருக்கும். மற்ற நாடுகளில் இதை காண முடியாது. இதுகுறித்து மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

    • கேரி சம்பவ இடத்திலேயே இறந்ததாக காவல்துறை அறிக்கை தெரிவித்துள்ளது.
    • 29, 30 மற்றும் 54 வயதுடைய மூன்று பெண்களும் உள்ளனர்.

    பிரிட்டனில் சீக்கிய இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த நபர் 30 வயதான குர்முக் சிங் அல்லது கேரி என அடையாளம் காணப்பட்டார். அவர் பிரிட்டன் குடிமகன் ஆவார்.

    ஜூலை 23 (புதன்கிழமை) கிழக்கு லண்டனின் இல்ஃபோர்டில் உள்ள ஃபெல்பிரிட்ஜ் சாலையில் அவர் கும்பல் ஒன்றால் கத்தியால் குத்தி கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. கேரி சம்பவ இடத்திலேயே இறந்ததாக  காவல்துறை அறிக்கை தெரிவித்துள்ளது.

    இந்த வழக்கில் சந்தேகத்தின் பேரில் அமர்தீப் சிங் என்ற 27 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    அமர்தீப்பைத் தவிர, கேரியைக் கத்தியால் குத்தியதற்காக மற்ற சிலரும் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

    கைது செய்யப்பட்டவர்களில் 29 வயதுடைய ஒரு இளைஞர், 29, 30 மற்றும் 54 வயதுடைய மூன்று பெண்களும் உள்ளனர். கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.  

    • சிரியா மீது இதுவரை இல்லாத அளவுக்கு 41% வரியை விதிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
    • கனடா மீது முன்னர் 25 சதவீதமாக விதிக்கப்பட்ட வரியும் 35 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் மீது புதிய வரிகள் தொடர்பான நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார்.

    பல நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10% முதல் 41% வரை வரி விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த உத்தரவின்படி, இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25%, தைவானில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 20% மற்றும் தென்னாப்பிரிக்காவிலிருந்து வரும் பொருட்களுக்கு 30% ஆகியவை அடங்கும்.

    இது தவிர, சிரியா மீது இதுவரை இல்லாத அளவுக்கு 41% வரியை விதிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    லாவோஸ் மற்றும் மியான்மர் மீது 40 சதவீதமும், சுவிட்சர்லாந்து மீது 39 சதவீதமும், செர்பியா மற்றும் ஈராக் மீது 35 சதவீதமும், அல்ஜீரியா மற்றும் லிபியா மீது 30 சதவீதமும் வரி விதிக்கப்பட்டுள்ளது.

    இது தவிர, கனடா மீது முன்னர் 25 சதவீதமாக விதிக்கப்பட்ட வரியும் 35 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    இந்த புதிய வரிகள் அடுத்த ஒரு வாரத்திற்குள் செயல்படுத்தப்படும் என்று டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

    • வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லெவிட் தெரிவித்தார்.
    • டிரம்ப், இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியதாகவும் தெரிவித்தார்.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கு மீண்டும் ஒருமுறை அமைதிக்கான நோபல் பரிசை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    வியாழக்கிழமை, வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லெவிட், உலகெங்கிலும் உள்ள பல மோதல் மண்டலங்களில் பல அமைதி ஒப்பந்தங்கள் மற்றும் போர் நிறுத்தங்களுக்கு டிரம்ப் மத்தியஸ்தம் செய்ததாகக் கூறினார்.

    டொனால்டு டிரம்ப் தனது இரண்டாவது பதவிக்காலத்தில் 6 மாதங்களில் 6 போர்களை நிறுத்தியுள்ளார். அதனால்தான் டிரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசை வழங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று லெவிட் தெரிவித்தார்

    இதன் போது, டிரம்ப், இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியதாகவும் லெவிட் குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது.  

    • விமானம் 90 வினாடிகளில் 38,000 அடிக்கும் அதிகமான உயரத்தில் இருந்து 35,775 அடிக்கு கீழே இறங்கியது.
    • சுமார் 9 மணி நேர பயணத்தில், 2 மணி நேரம் கடந்த நிலையில், இந்த சம்பவம் நடந்துள்ளது.

    அமெரிக்காவில் சால்ட் லேக் நகரில் இருந்த ஆம்ஸ்டர்டாமிற்குச் சென்ற டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் டர்புலன்ஸ் (turbulence) காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் 25 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    அமெரிக்க நேரப்படி புதன்கிழமை மாலை, 275 பயணிகள் மற்றும் 13 விமானக் குழுவினருடன் சென்ற இந்த விமானம், நடுவானில் காற்று அலைகளால் தடுமாற தொடங்கிய நிலையில் மினியாபோலிஸ்-செயின்ட் பால் சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது.

    Flightradar24 என்ற விமான கண்காணிப்பு வலைத்தளத்தின் தரவுகளின்படி, விமானம் 90 வினாடிகளில்38,000 அடிக்கும் அதிகமான உயரத்தில் இருந்து 35,775 அடிக்கு கீழே இறங்கியது.

    சுமார் 9 மணி நேர பயணத்தில், 2 மணி நேரம் கடந்த நிலையில், இந்த சம்பவம் நடந்துள்ளது. விமானம் மினியாபோலிஸில் பாதுகாப்பாக தரையிறங்கியது.

    அங்கு மருத்துவக் குழுவினர் பயணிகளுக்கும் விமானக் குழுவினருக்கும் மருத்துவ பரிசோதனை செய்தனர். அவர்களில் 25 பேர் உள்ளூர் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். 

    ×