என் மலர்
உலகம்
- ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என எச்சரித்தார் டிரம்ப்.
- ஆனால் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தவில்லை.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தங்கள் நாட்டுடன் உலக நாடுகள் வரி விதிப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். ஜூலை இறுதி வரை காலக்கெடு நிர்ணயித்திருந்தார். இந்தக் காலக்கெடுவுக்குள் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ளவில்லை என்றால், அந்தந்த நாட்டில் இருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு வரி விதிக்கப்படும் என வலியுறுத்திருந்தார்.
அமெரிக்கா- இந்தியா இடையில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படவில்லை. இதனால் 25 சதவீதம் வரி விதிக்கப்படுவதாக அதிபர் டிரம்ப் அறிவித்தார். அத்துடன் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது எனவும் எச்சரித்தது. ஆனால், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தவில்லை.
இதற்கிடையே, அதிபர் டிரம்ப் கூறுகையில், இந்தியா ரஷியாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து, அதிக லாபத்திற்கு ஓபன் மார்க்கெட்டில் விற்பனை செய்து வருகிறது. உக்ரைனில் எவ்வளவு மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள் என்பது அவர்களுக்கு கவலை இல்லை. இதனால் இந்தியாவுக்கு எதிரான வரிவிதிப்பை கணிசமாக உயர்த்தவுள்ளேன் என்றார்.
இந்நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் இந்திய பொருள்களுக்கு கணிசமாக வரி விதிக்கப்படும் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
- பின்னணியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் வரவேற்பாளர் குரல் ஒலிக்கிறது.
- வைரலான வீடியோவை பார்த்த பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர்.
தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு துறைகளிலும் ரோபோக்கள் பயன்படுத்தப்படுகிறது. அதே போல மனிதர்கள் செய்யும் வேலைகளை டிஜிட்டல் மற்றும் ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் எளிதாக செய்ய முடிகிறது.
இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள ஒரு ஓட்டலில் மெய்நிகர் வரவேற்பாளராக செயல்படும் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த ஓட்டல் மியாமி மாநிலத்தில் அமைந்துள்ளது. அங்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் தொலைதூரத்தில் இருந்து ஓட்டல் வரவேற்பறையில் உள்ள மேஜையில் டிஜிட்டல் திரை வழியாக இயக்குகிறார். ஓட்டலுக்கு வரும் விருந்தினர்களுக்கு செக்-இன் செயல் முறையில் உதவுகிறார்.
அப்போது பின்னணியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் வரவேற்பாளர் குரல் ஒலிக்கிறது. திரையில் அவர் விருந்தினர்கள் முன்பு பேசி அவர்களுக்கு ஓட்டலின் விதிகளை கூறி வாடிக்கையாளர்களுக்கு அறைக்கு செல்ல வழிகாட்டுவது போன்று காட்சிகள் உள்ளது. வைரலான வீடியோவை பார்த்த பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர். ஒரு பயனர், மக்கள் இந்த இடங்களை புறக்கணிக்க வேண்டும். இதனால் பலர் வேலைகள் இழக்க நேரிடும் என பதிவிட்டனர். அதே நேரம் சிலர் இந்த முயற்சியை பாராட்டினர்.
- ரஷியா மீது வர்த்தக கட்டுப்பாடுகளும் 100 சதவீதம் வரியும் விதிக்கப்படும் என டிரம்ப் தெரிவித்தார்.
- இந்தியாவும், ரஷியாவும் இறந்த பொருளாதாரங்கள் (Dead Economies) என்று விமர்சித்தார்.
உக்ரைன் - ரஷியா போர் 3 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்தியா - பாகிஸ்தான் சண்டை உட்பட பல போர்களை தடுத்து நிறுத்தியதாக தம்பட்டம் அடுத்துவரும் டிரம்ப் முயற்சித்தும் கூட உக்ரைன் - ரஷியா போரை நிறுத்த முடியவில்லை.
இதனால் கோபமடைந்த டிரம்ப் உக்ரைனில் போரை நிறுத்த ரஷிய அதிபர் புதினுக்கு தான் அளித்த 50 நாள் காலக்கெடுவை 10 முதல் 12 நாட்களாக குறைத்தார்.
ஆகஸ்ட் 7-9க்குள் அமைதிப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் காணப்பட வேண்டும் என டிரம்ப் நிபந்தனை விதித்துள்ளார். இல்லையெனில் ரஷியா மீது வர்த்தக கட்டுப்பாடுகளும் 100 சதவீதம் வரியும் விதிக்கப்படும் என டிரம்ப் தெரிவித்தார்.
மேலும், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில் வாங்குவதால் டிரம்ப் இந்திய பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்தார். இந்தியாவும், ரஷியாவும் இறந்த பொருளாதாரங்கள் (Dead Economies) என்று விமர்சித்தார்.
இந்நிலையில், அமெரிக்காவின் வரிவிதிப்பு தொடர்பாக பேசிய ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜகரோவா, "அமெரிக்காவின் சட்டவிரோத ஒருதலைபட்சமான வரிவிதிப்பை ரஷ்யா எப்போதும் எதிர்த்து நிற்கும். புதிய காலனித்துவம் மூலம் உலகத்தை கட்டுப்படுத்த முயலும் அமெரிக்காவின் போக்கை ஏற்க முடியாது" என்று தெரிவித்தார்.
- ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என டிரம்ப் எச்சரித்தார்.
- ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்கி இந்தியா, பெரிய லாபத்திற்கு விற்பதாக டிரம்ப் குற்றச்சாட்டு
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தங்கள் நாட்டுடன் உலக நாடுகள் வரி விதிப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். ஜூலை இறுதி வரை காலக்கெடு நிர்ணயித்திருந்தார். இந்த காலக்கெடுவுக்குள் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ளவில்லை என்றால், அந்தந்த நாட்டில் இருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு வரி விதிக்கப்படும் என வலியுறுத்திருந்தார்.
அமெரிக்கா- இந்தியா இடையில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படவில்லை. இதனால் 25 சதவீதம் வரி விதிக்கப்படுவதாக டிரம்ப் அறிவித்தார். அத்துடன் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என அவர் எச்சரித்தார்.
ஆனால், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தவில்லை. இந்த நிலையில், இந்தியா ரஷியாவிடம் இருந்து ரஷியா பணத்திற்கு அதிக அளவில் கச்சாய் எண்ணெய் மட்டும் வாங்கவில்லை. அதிக அளவில் எண்ணெய் கொள்முதல் செய்து, அதிக லாபத்திற்கு ஓபன் மார்க்கெட்டில் விற்பனை செய்து வருகிறது.
ரஷியா தாக்குதலில் உக்ரைனில் எவ்வளவு மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள் என்பது அவர்களுக்கு கவலை இல்லை. இதன் காரணமாக நான் இந்தியாவுக்கு எதிராக வரி விதிப்பை கணிசமான அளவில் உயர்த்த இருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்கி இந்தியா, பெரிய லாபத்திற்கு விற்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டிய நிலையில், அது முற்றிலும் தவறானது என சர்வதேச வர்த்தக ஆராய்ச்சி அமைப்பான GTRI விளக்கம் அளித்துள்ளது.
மேலும், ரஷியாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை உயரும் என எச்சரிக்கை எனவும் GTRI தெரிவித்துள்ளது.
- பணயக்கைதிகள் வேண்டுமென்றே பட்டினியால் கொல்லப்படவில்லை, அவர்கள் எங்கள் போராளிகள் மற்றும் பொதுமக்கள் சாப்பிடும் அதே உணவையே சாப்பிடுகிறார்கள்.
- பட்டினியால் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் ஆவர்.
ஹமாஸ் அமைப்பின் இராணுவப் பிரிவான அல்-கஸ்ஸாம் படைப்பிரிவு, தங்கள் காவலில் உள்ள இஸ்ரேலிய பணய கைதி எலும்பும் தோலுமாக இருக்கும் வீடியோவை வெளியிட்டது.
இஸ்ரேல் காசாவுக்கு உணவு, தண்ணீர் மற்றும் மருந்துகளை மறுத்து வரும் நிலையில் பட்டினியால் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் ஆவர்.
இந்நிலையில் இஸ்ரேலின் தடையினால் இஸ்ரேலிய கைதிகளும் உணவின்றி பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை காட்டும் விதமாக இந்த வீடியோ வெளியிடப்பட்டது.
"பணயக்கைதிகள் வேண்டுமென்றே பட்டினியால் கொல்லப்படவில்லை, அவர்கள் எங்கள் போராளிகள் மற்றும் பொதுமக்கள் சாப்பிடும் அதே உணவையே சாப்பிடுகிறார்கள். அவர்களுக்கு எந்த சிறப்பு சலுகைகளும் கிடைக்கவில்லை" என்று ஹமாஸ் கூறியுள்ளது.
ஏற்கனவே இஸ்ரேலில் ஆளும் பிரதமர் நேதன்யாகு அரசுக்கு எதிராக போராடி வரும் அந்நாட்டு மக்களின் சீற்றத்தை இது மேலும் அதிகரித்தது.
இதையடுத்து இஸ்ரேலிய கைதிகளுக்கு செஞ்சிலுவைச் சங்கம் உதவி வழங்க வேண்டும் என்ற இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு வலியறுத்தினார்.
செஞ்சிலுவைச் சங்கத் தலைவர் ஜூலியன் லாரிசனை தொலைபேசியில் அழைத்து பணய கைதிகளுக்கு உடனடியாக உணவு மற்றும் மருத்துவ உதவி வழங்கப்பட வேண்டும் என்று நேதன்யாகு கோரியதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் காசாவிற்கு மனிதாபிமான உதவி வழித்தடங்கள் திறக்கப்பட்டு உணவு மற்றும் உதவிப் பொருட்கள் அனுமதிக்கப்பட்டால், இஸ்ரேலிய கைதிகளுக்கு செஞ்சிலுவைச் சங்கம் உதவ அனுமதிப்போம் என என்று ஹமாஸ் அமைப்பு நிபந்தனை விதித்துள்ளது.
- 12 பேர் மட்டுமே பாதுகாப்பாக கரையை அடைந்தனர்.
- கடந்த சில மாதங்களில் மட்டும், நூற்றுக்கணக்கான அகதிகள் படகு கவிழ்ந்த சம்பவங்களில் இறந்துள்ளனர்.
ஏமனில் செங்கடலில் படகு கவிழ்ந்ததில் 76 அகதிகள் உயிரிழந்தனர். ஞாயிற்றுக்கிழமை, ஏமனின் அப்யான் மாகாணம் அருகே 157 அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கடலில் கவிழ்ந்தது.
இதன் விளைவாக, 157 பேர் தண்ணீரில் விழுந்தனர். இவர்கள் பெரும்பாலானோர் கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவை சேர்த்தவர்கள் ஆவர்.
கான்பார் மாவட்டத்தில் கடற்கரையில் 54 உடல்கள் கரை ஒதுங்கியுள்ளன. மேலும் சில உடல்கள் வேறொரு பகுதியில் கண்டெடுக்கப்பட்டன. இதுவரை 32 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
உலகம் முழுவதும், அதிக சுமை காரணமாக அகதிகள் பயணிக்கும் படகுகள் தொடர்ந்து விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கடந்த சில மாதங்களில் மட்டும், நூற்றுக்கணக்கான அகதிகள் படகு கவிழ்ந்த சம்பவங்களில் இறந்துள்ளனர்.
- இந்தியா ரஷியாவிடம் இருந்து ரஷியா பணத்திற்கு அதிக அளவில் கச்சாய் எண்ணெய் மட்டும் வாங்கவில்லை.
- அதிக அளவில் எண்ணெய் கொள்முதல் செய்து, அதிக லாபத்திற்கு ஓபன் மார்க்கெட்டில் விற்பனை செய்து வருகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தங்கள் நாட்டுடன் உலக நாடுகள் வரி விதிப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். ஜூலை இறுதி வரை காலக்கெடு நிர்ணயித்திருந்தார். இந்த காலக்கெடுவுக்குள் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ளவில்லை என்றால், அந்தந்த நாட்டில் இருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு வரி விதிக்கப்படும் என வலியுறுத்திருந்தார்.
அமெரிக்கா- இந்தியா இடையில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படவில்லை. இதனால் 25 சதவீதம் வரி விதிக்கப்படுவதாக டிரம்ப் அறிவித்தார். அத்துடன் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என எச்சரித்தது.
ஆனால், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தவில்லை. இந்த நிலையில், இந்தியா ரஷியாவிடம் இருந்து ரஷியா பணத்திற்கு அதிக அளவில் கச்சாய் எண்ணெய் மட்டும் வாங்கவில்லை. அதிக அளவில் எண்ணெய் கொள்முதல் செய்து, அதிக லாபத்திற்கு ஓபன் மார்க்கெட்டில் விற்பனை செய்து வருகிறது.
ரஷியா தாக்குதலில் உக்ரைனில் எவ்வளவு மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள் என்பது அவர்களுக்கு கவலை இல்லை. இதன் காரணமாக நான் இந்தியாவுக்கு எதிராக வரி விதிப்பை கணிசமான அளவில் உயர்த்த இருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
- கடந்த ஜூன் மாதம் இஸ்ரேல் ஈரான் மீது கடுமையான தாக்குதல் நடத்தியது.
- ஈரானும் பதில் தாக்குதல் நடத்தியதால் 12 நாட்கள் போர் நீடித்தது.
இஸ்ரேல் கடந்த ஜூன் மாதம் கடுமையான தாக்குதல் நடத்திய நிலையில், முக்கியமான முடிவுகளை எடுப்பதற்காக ஈரான் உச்சமட்ட தேசிய பாதுகாப்பு கவுன்சிலை நிறுவியுள்ளது.
இந்த உச்சமட்ட தேசிய பாதுகாப்பு கவுன்சில், ஈரான் நாட்டின் உயர்ந்த பாதுகாப்பு அமைப்பாக கருதப்படும். ஈரான் அதிபர் மசூத் பெசெஸ்கியன் தலைமையில் இந்த கவுன்சில் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கவுன்சில் பாதுகாப்பு திட்டம், ஈரான் அயுதப்படைகளின் திறனை மேம்படுத்துவது உள்ளிட்டவைகளை கையாளும். பாராளுமன்ற சபாநாயகர், தலைமை நீதிபதி, ராணுவப் பிரிவுகளின் தலைவர்கள் மற்றும் இதன் தொடர்பான அமைச்சர்கள் இதில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட இருக்கிறார்கள்.
கடந்து ஜூன் மாதம் இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதால், ஈரானும் பதில் தாக்குதல் நடத்தியது. 12 நாட்கள் நடைபெற்ற இந்த போரில் ஈரானில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ராணுவத் தளபதி மற்றும் கமாண்டர்ஸ் ஆகியோரும் அடங்குவர்.
1980ஆம் ஆண்டு ஈரானுக்கும், ஈராக்கிற்கும் இடையில் நடைபெற்ற போரில் இரு தரப்பிலும் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அப்போது இது போன்று பாதுகாப்பு கவுன்சில் அமைக்கப்பட்டது.
- இந்தியா - பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன் என டிரம்ப் தொடர்ந்து சொல்லி வருகிறார்.
- டிரம்பின் பெயரை குறிப்பிடாமல் இதனை மத்திய அரசு மறுத்து வருகிறது.
காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியா பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களை ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் இந்திய படைகள் தாக்கி அழித்தது. இந்த போரை நான் தான் நிறுத்தினேன் என அமெரிக்க அதிபர் தொடர்ந்து சொல்லி வருகிறார். ஆனால் இதனை மத்திய அரசு மறுத்து வருகிறது.
இந்நிலையில் மீண்டும் அவர் இதே கருத்தை கூறி உள்ளார். இது தொடர்பாக டிரம்ப் தன்னுடைய ட்ரூத் எனப்படும் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "உலகளவில் 5 போர்களை நான் நிறுத்தி உள்ளேன்.மே மாதம் 10-ந்தேதி நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்தியா-பாகிஸ்தான் உடனடியாக போரை நிறுத்த ஒப்புக்கொண்டது. உலகளவில் ஒரு மாதத்திற்கு சராசரியாக ஒரு போரை நான் முடிவுக்கு கொண்டு வந்துள்ளேன் என்று நினைக்கிறேன். உங்களுக்கு தெரியும் நாங்கள் மில்லியன் கணக்கான உயிர்களை காப்பாற்றி இருக்கிறோம். இதில் 31 ஆண்டுகளாக நீடித்து வரும் காங்கோ-ருவாண்டோ நாடுகளுக்கு இடையேயான போரும் உள்ளடக்கம். நான் நிறைய போர்களை தீர்த்து வைத்துள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட் சமீபத்தில்கூறும் போது உலகெங்கிலும் பல மோதலை முடிவுக்கு கொண்டு வந்ததற்காக டிரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டும். தாய்லாந்து-கம்போடியா, இஸ்ரேல்-ரஷியா, காங்கோ ஜனநாயக குடியரசு-ருவாண்டோ, இந்தியா-பாகிஸ்தான், செர்பியா-கொசோவா, எகிப்து-எத்தியோப்பியா நாடுகளின் மோதலை டிரம்ப் முடிவுக்கு கொண்டு வந்ததாக தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அமெரிக்காவில் 4 இந்தியர்கள் மாயமானதாக தேடப்பட்டு வந்தனர்.
- அந்த 4 பேரும் விபத்தில் சிக்கி உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்தது.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து பென்சில்வேனியா சென்ற இந்திய வம்சாவளிக் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மாயமாகினர். உறவினர்கள் தொடர்பு கொள்ள முயற்சித்தும் அவர்களைக் கண்டறிய முடியவில்லை. இதையடுத்து, போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
விசாரணையில், காணாமல் போன 4 இந்தியர்களும் ஜூலை 29-ம் தேதி பென்சில்வேனியாவில் உள்ள ஒரு கடைக்குச் சென்றதும், அதன்பின் அவர்கள் மாயமானதும் தெரிய வந்தது.
காணாமல் போனவர்கள் டாக்டர் கிஷோர் திவான் (89), ஆஷா திவான் (85), ஷைலேஷ் திவான் (86), கீதா திவான் (84) ஆகியோர் என தெரியவந்தது. ஹெலிகாப்டர் மூலம் அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடந்தது.
இந்நிலையில், காணாமல் போன 4 பேரும் சாலை விபத்தில் உயிரிழந்தது கண்டறியப்பட்டுள்ளது என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த மேற்கு விர்ஜினியா நகர ஷெரிப் விசாரணை முடிந்த பிறகு கூடுதல் தகவல் வெளியிடப்படும் என தெரிவித்தார்.
- பாலஸ்தீன நாடு நிறுவப்படாதவரை ஆயுதங்களை கீழே போடுவதற்கு நாங்கள் உடன்பட மாட் டோம்.
- நிவாரண உதவி வினியோக மையங்கள் அருகே இஸ்ரேல் நடத்திய துப்பாக்கி சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர்.
இஸ்ரேலுக்கும் - பாலஸ்தீனத்தை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையேயான போர் 2-வது ஆண்டை நெருங்கி உள்ளது.
இப்போரில் காசாவில் குழந்தைகள், பெண்கள் உள்பட 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இப்போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா முயற்சித்து வருகிறது.
இதுதொடர்பான பேச்சுவார்த்தையில் இதுவரை முடிவு எட்டப்பட வில்லை. போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தைகளில் ஹமாஸ் அமைப்பினர் ஆயுதங்களை கீழே போட வேண்டும் என்று இஸ்ரேல் நிபந்தனை விதித்து உள்ளது.
இதற்கிடையே ஹமாஸ் அமைப்பினர் தங்களது ஆயுதங்களை கீழே போட விருப்பத்தை வெளிப்படுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்பின் மத்திய கிழக்கு தூதர் ஸ்டீவ் விட்காப் தெரிவித்தார். ஆனால் அதை ஹமாஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:-
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் வரை இஸ்ரேலுக்கு எதிரான போரை கைவிட மாட்டோம். ஜெருசலேமை தலைநகராக கொண்ட ஒரு சுயாதீனமான, முழு இறையாண்மை கொண்ட பாலஸ்தீன நாடு நிறுவப்படாதவரை ஆயுதங்களை கீழே போடுவதற்கு நாங்கள் உடன்பட மாட் டோம். எங்களது உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
காசாவில் உணவுக்காக காத்திருக்கும் மக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிசூடு நடத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ளது. இதற்கிடையே நிவாரண உதவி வினியோக மையங்கள் அருகே இஸ்ரேல் ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர்.
- இந்தோனேசியாவில் லக்கி லக்கி எரிமலை வெடித்துச் சிதறியது.
- அதில் இருந்து வானுயரத்துக்கு தீக்குழம்பு வெளியேறியது.
ஜகார்த்தா:
பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் இருப்பதால் இந்தோனேசியாவில் பல எரிமலைகள் அமைந்துள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்கது வெவோடோபி நகரில் உள்ள லிவோட்பி எரிமலை.
1,500 மீட்டர் உயரமுள்ள அந்த எரிமலை பிரபலமாக லக்கி லக்கி என அறியப்படுகிறது. இந்த மலையின் அழகைக் காண வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் படையெடுக்கின்றனர்.
அந்த எரிமலை சமீப காலமாக அடிக்கடி வெடித்துச் சிதறுகிறது. அதன்படி லக்கி லக்கி எரிமலை பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் எரிமலையில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் உயரத்துக்கு தீக்குழம்பு வெளியேறியது.
இதனை தொடர்ந்து அடுத்த சில மணி நேரங்களில் மீண்டும் எரிமலை வெடிக்க தொடங்கியது. எனவே அந்த இடம் முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சி அளித்தது.
இதனால் எரிமலையை சுற்றியுள்ள பகுதியில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டது. எரிமலையில் இருந்து வெளியேறிய சாம்பல் 8 கிலோமீட்டர் தூரம் வரை ஆறாக ஓடியது.
எரிமலை அருகே உள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.






