என் மலர்tooltip icon

    உலகம்

    • சர்வதேச பயணிகளை ஆஸ்திரேலியாவை சுற்றிப்பார்க்க அழைக்கும் பணியில் சாரா ஈடுபடப்போகிறார்.
    • இது இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான தொடர்புகளை வலுப்படுத்த உதவும் எனவும் கூறப்படுகிறது.

    கிரிக்கெட்டின் கடவுள் என்று அன்போடு அழைக்கப்படும் முன்னாள் இந்திய கிரிக்கெட் நட்சத்திரமான சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர். இவர் ஆஸ்திரேலியாவின் சர்வதேச சுற்றுலா பிரச்சாரத்திற்கான பிராண்ட் அம்பாசிட்டராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    Come and Say G'Day என்ற இந்த பிரசாரம் உலகம் முழுவதும் சென்றடையக் கூடியது. 130 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.1140 கோடி) மதிப்புமிக்க இந்த விளம்பர பிரசாரம் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குத் தொடரும் எனக் கூறப்படுகிறது.

    உலகளாவிய சுற்றுலா பயணிகள் தங்கள் அடுத்த விடுமுறை பயணத்திற்கு ஆஸ்திரேலியாவைத் தேர்ந்தெடுக்க ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரபலங்கள் இதில் விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பட்டியலில் இந்தியாவுக்கான விளம்பரத் தூதராக சாரா டெண்டுல்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இதில் 27 வயது மாடல் சாரா, சர்வதேச பயணிகளை ஆஸ்திரேலியாவை சுற்றிப்பார்க்க அழைக்கும் பணியில் ஈடுபடப்போகிறார். இதற்காக அவர் உலகம் முழுவதும் வலம் வருவார் எனக் கூறப்படுகிறது.

    சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருக்கும் சாரா டெண்டுல்கர், இந்திய இளைஞர்களை ஆஸ்திரேலியாவை நோக்கி கவர்ந்திழுப்பார் என நம்பப்படுகிறது. இது இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான தொடர்புகளை வலுப்படுத்த உதவும் எனவும் கூறப்படுகிறது.

    • அதிபர் டிரம்பை அழைக்கப் போவதில்லை. அவருடன் பேச விரும்பவில்லை என்றார்.
    • பிரதமர் மோடி மற்றும் பிற நாட்டு தலைவர்களுடன் பேசுவேன் என்றார் பிரேசில் அதிபர்.

    பிரேசிலியா:

    பிரேசில் மீது அமெரிக்கா கூடுதலாக 40 சதவீதம் வரி விதித்தது. இதனால் பிரேசிலிய இறக்குமதிகள் மீதான மொத்த வரி 50 சதவீதம் ஆக அதிகரித்துள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையே கடும் மோதலை ஏற்படுத்தி உள்ளது.

    இதற்கிடையே, வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பிரேசில் அதிபர் லூலா டா சில்வா உடன் எப்போது வேண்டுமானாலும் பேசுவேன் என அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், பிரேசில் அதிபர் லூலா டா சில்வா பேசியதாவது:

    பிரேசில் தனது வர்த்தக நலன்களைப் பாதுகாக்க உலக வர்த்தக அமைப்பு உள்பட அனைத்து கருவிகளையும் பயன்படுத்தும்.

    அதிபர் டொனால்டு டிரம்பை நான் அழைக்கப் போவதில்லை. அவருடன் பேச விரும்பவில்லை.

    அதற்கு பதிலாக பிரதமர் மோடி மற்றும் பிற நாட்டு தலைவர்களுடன் பேசுவேன். நான் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை அழைப்பேன். புதினால் இப்போது பயணம் செய்ய முடியாததால் நான் அவரை அழைக்க மாட்டேன். நான் பல அதிபர்களுடன் பேசுவேன் என தெரிவித்தார்.

    • ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய டிரம்ப் ஆட்சேபனை.
    • அமெரிக்கா யுரேனியம் இறக்குமதி செய்கிறதே? என்ற கேள்விக்கு, அது பற்றி தெரியாது என நழுவல்.

    ரஷியா- உக்ரைன் இடையிலான போர் 3 வருடத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இரு நாடுகளுக்கு இடையிலான போரை நிறுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டார். ஆனால் புதின் போரை நிறுத்த விரும்பவில்லை.

    இதனால் ரஷியாவுக்கு எதிராக கடுமையான பொருளாதார தடை விதிக்க முடிவு செய்துள்ளார். மேலும், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளிடம், எண்ணெய் வாங்கக் கூடாது என எச்சரித்து வருகிறார். அப்படி வாங்கினால் அந்த நாடுகள் மீது கூடுதல் வரி விதிக்கப்படும் என எச்சரித்தார்.

    அனால் இந்தியா மற்றும் சீனா ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தமாட்டோம் எனத் தெரிவித்துள்ளன. இந்தியா அதற்கான காரணத்தையும் தெரிவித்துள்ளது.

    இதனால் இந்திய பொருட்கள் மீது 25 சதவீதம் வரி விதித்த டிரம்ப், கூடுதலாக கணிசமான வரி விதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு இன்று வெளியாகலாம்.

    இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிடம், மற்ற நாடுகள் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யக் கூடாது என வலியுறத்துகிறீர்கள். ஆனால் அமெரிக்கா யுரேனியம், உரங்களை ரஷியாவிடம் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறதே? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு டொனால்டு டிரம்ப் "அது பற்றி ஏதும் எனக்குத் தெரியாது. அதை நான் சரிபார்க்க வேண்டும்" எனத் பதில் அளித்தார்.

    • பாகிஸ்தானுக்கு சீனா மிகவும் நெருக்கமான நட்பு நாடாக இருந்து வருகிறது.
    • பாகிஸ்தானுடன் தற்போது அமெரிக்கா அதிக நெருக்கம் காட்டி வருகிறது.

    பாகிஸ்தான் உடனான நட்பை மேம்படுத்திக் கொள்ள அமெரிக்கா முயற்சி செய்து வருகிறது. பாகிஸ்தானுக்கு மிகவும் நெருக்கமான நாடாக சீனா இருந்து வருகிறது. பல பில்லியன் டாலர் அளவிலான கூட்டுத் திட்டங்களை பாகிஸ்தானில் சீனா செயல்படுத்தி வருகிறது.

    இந்தியா- பாகிஸ்தான் இடையிலான சமீபத்திய போரில் சினா பாகிஸ்தானுக்கு பெருமளவில் உதவியது. இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா குரல் கொடுத்தது. இந்த நிலையில்தான் பயங்கரவாதத்திற்கு எதிரான பாகிஸ்தான் நடவடிக்கையை அமெரிக்கா பாராட்டியுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீருக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விருந்தளித்தார். இந்தியா- பாகிஸ்தான் போரை தான் நிறுத்தியதாக டிரம்ப் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.

    பாகிஸ்தான் உடனான அமெரிக்காவின் நெருக்கம் இந்தியா, சீனா மற்றும் மத்திய கிழக்குப் பகுதியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் சீனாவை விலையாக கொடுத்து, அமெரிக்கா உடனான உறவை பாகிஸ்தான் வளர்க்காது என சீன நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    சீனாவின் உலகளாவிய செல்வாக்கைக் கட்டுப்படுத்துவதற்கான உத்தி வரம்பை பாகிஸ்தான் புரிந்து கொள்கிறது. சீனா உடனான நட்பை விலையாக கொடுத்து பாகிஸ்தான் அமெரிக்கா உடனான நட்பை வளர்க்காது. பாகிஸ்தானை எளிதாக டிரம்ப் வசம் சிக்க வைக்க முடியாது. அமெரிக்காவின் தலையீடு குறுகிய கால புவிசார் அரசியல் சலசலப்பை உருவாக்கியுள்ளது, ஆனால் சீனா-பாகிஸ்தான் சார்பு நிலையின் அடித்தளத்தை அசைக்க வாய்ப்பில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

    • மாணவர் விசாவில் அமெரிக்காவுக்கு படிக்க செல்லும் மாணவர்கள் மீதும் கெடுபிடிகள் காட்டப்பட்டு வருகின்றன.
    • விசா காலத்தை கடந்து எந்த வெளிநாட்டினரும் தங்கக்கூடாது என்பதற்காக இத்திட்டம் கொண்டுவரப்படுகிறது.

    நியூயார்க்:

    அமெரிக்க ஜனாதிபதியாக இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற டிரம்ப், சட்டவிரோத குடியேற்றங்களை தடுப்பதில் தீவிரமாக இருக்கிறார். சட்டவிரோதமாக குடியேறியவர்களை கைது செய்தல், நாடு கடத்துதல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    மாணவர் விசாவில் அமெரிக்காவுக்கு படிக்க செல்லும் மாணவர்கள் மீதும் கெடுபிடிகள் காட்டப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், தற்காலிக பயணமாக அமெரிக்கா செல்பவர்கள் ரூ.13 லட்சம் வரை டெபாசிட் செலுத்தினால்தான் விசா வழங்கப்படும் என்ற புதிய திட்டத்தை விரைவில் சோதனை முறையில் டிரம்ப் அரசு அமல்படுத்தப்பட உள்ளது.

    கடந்த 2023-ம் நிதியாண்டுக்கான அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை அறிக்கையில், அந்த ஆண்டில் 5 லட்சத்துக்கு மேற்பட்ட வெளிநாட்டினர் விசா காலத்தை தாண்டி, அமெரிக்காவில் தங்கி இருந்ததாக கூறப்பட்டுள்ளது. எனவே, விசா காலத்தை கடந்து எந்த வெளிநாட்டினரும் தங்கக்கூடாது என்பதற்காக இத்திட்டம் கொண்டுவரப்படுகிறது.

    • லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2028 ஒலிம்பிக் போட்டி நடைபெற இருக்கிறது.
    • பாதுகாப்பான, தடையற்ற, வரலாற்றி வெற்றி மிக்க தொடராக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்- டிரம்ப்.

    அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2028 ஒலிம்பிக் போட்டி நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கு தற்போதில் இருந்தே தயாராகுவதற்காக பணிக்குழுவை அமைத்துள்ளார் அதிபர் டொனால்டு டிரம்ப். இந்த குழுவின் பணி என்ன? என்பதை முழுமையாக வெள்ளை மாளிகை வெளியிடவில்லை.

    "பாதுகாப்பான, தடையில்லாத, வரலாற்று வெற்றி ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் அமெரிக்காவிற்கு ஒரு அற்புதமான தருணமாக உருவாகி வருகிறது. இது நம்பமுடியாததாக இருக்கும். இது மிகவும் உற்சாகமாக இருக்கிறது" என டொனால்டு டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

    2002ஆம் ஆண்டு அமெரிக்கா குளிர்கால ஒலிம்பிக் போட்டியை நடத்தியது. அதன்பின் 2028 லாஞ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டியை நடத்த இருக்கிறது.

    இந்த ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் உள்ளிட்ட சில போட்டிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.

    • காய்ச்சல், உடல் வலி போன்ற லேசான அறிகுறிகள் இருந்தாலே அருகில் உள்ள ஆஸ்பத்திரியை அணுகி சோதனை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
    • பூந்தொட்டிகள், டயர்கள் போன்ற தண்ணீர் தேங்கும் இடங்களை அப்புறப்படுத்த வேண்டும்.

    சீனாவில் சமீப காலமாக சிக்குன்குனியா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக தெற்கு குவாங்டாங் மாகாணத்தின் போஷான் உள்ளிட்ட 12 நகரங்களில் இந்த தொற்று வேகமெடுத்துள்ளது.

    இதனால் கடந்த ஒரு மாதத்தில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிக்குன்குனியா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே சீன பயணத்தை தவிர்க்குமாறு தனது நாட்டு மக்களுக்கு அமெரிக்கா அறிவுறுத்தி உள்ளது.

    இதனையடுத்து கொரோனா தொற்று காலத்தில் எடுக்கப்பட்டதுபோல விழிப்புணர்வு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. அதன்படி சிக்குன் குனியா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்த பிறகே வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

    மேலும் காய்ச்சல், உடல் வலி போன்ற லேசான அறிகுறிகள் இருந்தாலே அருகில் உள்ள ஆஸ்பத்திரியை அணுகி சோதனை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    இதுகுறித்து அந்த நாட்டின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், சிக்குன்குனியா தொற்று பரவுவதற்கு முக்கிய காரணம் கொசுக்களே. தேங்கும் தண்ணீரில்தான் அவை அதிகளவில் உற்பத்தியாகின்றன.

    எனவே பூந்தொட்டிகள், டயர்கள் போன்ற தண்ணீர் தேங்கும் இடங்களை அப்புறப்படுத்த வேண்டும். மீறினால் சுமார் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • நோயாளியை ஏற்றிச் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது.
    • விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு முன்னதாக விபத்து ஏற்பட்டு, தீப்பற்றி எரிந்தது.

    அமெரிக்காவின் வடக்கு அரிசோனாவில் உள்ள நவஜோ நேசனில் மருத்துவ போக்குவரத்து விமானம் விபத்துக்குள்ளாகி, தீப்பிடித்து எரிந்தது. இதில் 4 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

    மருத்துவமனையை சேர்ந்தவர்கள், நோயாளி ஒருவரை விமானத்தில் ஏற்றிக் கொண்டு மருத்துவமனைக்கு வந்து கொண்டிருந்தனர்.

    பீச்கிராஃப் 300 வகையைச் சேர்ந்த விமானம் விமான நிலையத்தில் தரையிறங்க தயாரானது. அப்போது எதிர்பாராத வகையில் விமானம் விபத்துக்குள்ளானது.

    "விபத்து குறித்து அறிந்ததும் மனம் உடைந்தேன். இவர்கள் (மருத்துவமனையைச் சேர்ந்தவர்கள்) மற்றவர்களைக் காப்பாற்ற தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள்" என நவஜோ நேசன் தலைவர் தெரிவித்துள்ளார்.

    • கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் பேசினார்.
    • இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா விடுக்கும் அச்சுறுத்தல்களை குறிப்பிட்டார்.

    ரஷியாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்து உக்ரைன் போருக்கு உதவுவதால் இந்தியா மீதது ஏற்கனவே விதிக்கப்பட்ட 25% வரியை அடுத்த 24 மணிநேரத்தில் மேலும் உயர்த்துவேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று அறிவித்தார்.

    இதற்கிடையே இந்தியா தொடர்பான அமெரிக்காவின் அச்சுறுத்தல்கள் குறித்து ரஷிய அதிபர் மாளிகையான கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் செய்தியாளர்களிடம் நேற்று பேசினார்.

    ரஷிய அரசு செய்தி நிறுவனமான 'டாஸ்'க்கு அளித்த பேட்டியில், "இறையாண்மை கொண்ட நாடுகளுக்கு தங்கள் வர்த்தக கூட்டாளர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை உண்டு, அதை யாரும் கேள்வி கேட்க முடியாது" என்று தெரிவித்தார்.

    மேலும், இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா விடுக்கும் அச்சுறுத்தல்களை அவர்கள் கவனித்து வருவதாகவும், ஆனால் அவற்றை முறையானதாகக் கருதவில்லை என்றும் கூறினார். 

    • இரண்டாம் உலகப் போருக்கு முன்பு மருத்துவப் பட்டம் பெற்றார்.
    • ஒலிம்பிக் ஜோதியை ஏந்திய உலகின் மிக வயதான நபர் ஆனார்.

    ஜப்பானின் மிக வயதான பெண்மணியான மியோகோ ஹிரோயாசு 114 வயதில் இறந்த நிலையில் ஓய்வுபெற்ற மருத்துவருமான ஷிகேகோ ககாவா மிக வயதான பெண்மணியாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது 114.

    1911 இல் டோக்கியோவில் பிறந்த அவருக்கு மூன்று குழந்தைகள். இரண்டாம் உலகப் போருக்கு முன்பு மருத்துவப் பட்டம் பெற்ற இவர், போரின் போது ஒசாகாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் மருத்துவராக தனது பணியை தொடங்கினார்.

    பின்னர் அவர் சொந்த மருத்துவமனையைத் திறந்தார். அங்கு மகப்பேறு, மகளிர் மருத்துவ நிபுணராகப் பணியாற்றினார். அவர் 86 வயதில் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

    டோக்கியோவில் நடைபெற்ற 2021 ஒலிம்பிக்கிற்கான ஜோதியை ஏந்திச் சென்ற ஷிகேகோ ககாவா, ஒலிம்பிக் ஜோதியை ஏந்திய உலகின் மிக வயதான நபர் ஆனார்.

    நீண்ட காலம் வாழ அவர்களுக்கு எந்த சிறப்பு வழக்கமோ அல்லது உணவு முறையோ இல்லை என்று அவர்களது குடும்ப உறுப்பினர்கள் ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் தெரிவித்தனர்.

    தினமும் ஒரே நேரத்தில் தூங்கி ஒரே நேரத்தில் எழுத்துகொள்வதாகவும் வேளை உணவருத்துவதாகவும் தெரிவித்தனர்.

    ஷிகேகோ தனது இறுதி காலத்தை செய்தித்தாள்கள் படிப்பதிலும், சீட்டாட்டம் விளையாடுவதிலும், வரைவதிலும் கழிக்கிறார். 

    • பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் அரசாங்கத்திற்கு எதிராக அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
    • குறிப்பாக பஞ்சாப் மாகாணத்தில் அதிக எண்ணிக்கையிலான கைதுகள் நடந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

    பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சித் தலைவருமான இம்ரான் கான் ஊழல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் 2023 முதல் சிறையில் உள்ளார்.

    இந்நிலையில் இம்ரான் கானை சிறையில் இருந்து விடுவிக்கக் கோரி நாடு முழுவதும் PTI கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் நேற்று போராட்டம் நடத்தினர்.

    பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் அரசாங்கத்திற்கு எதிராக அவர்கள் கோஷங்களை எழுப்பினர். இந்த போராட்டங்களின் போது போலீசார் 500க்கும் மேற்பட்ட PTI தலைவர்கள் மற்றும் தொண்டர்களை கைது செய்ததாக கட்சி வட்டாரங்கள் குற்றம் சாட்டின.

    குறிப்பாக பஞ்சாப் மாகாணத்தில் அதிக எண்ணிக்கையிலான கைதுகள் நடந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

    இம்ரான் கான் இரண்டு ஆண்டுகள் சிறைவாசத்தை நிறைவு செய்ததை முன்னிட்டு இந்த போராட்டங்கள் நடத்தப்பட்டதாக PTI தலைவர்கள் தெரிவித்தனர்.

    அரசாங்கம் அவரது அடிப்படை உரிமைகளை பறித்துள்ளதாகவும், அவரது சட்டக் குழு அல்லது குடும்ப உறுப்பினர்கள் அவரைச் சந்திக்கக் கூட அனுமதிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தனர்.

    • வங்கதேசத்தில் கடந்த வருடம் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.
    • தற்போது இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் இருந்து வருகிறார்.

    வங்கதேசத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பாராளுமன்ற தேர்தல் நடத்தப்படும் என இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார்.

    கடந்த ஆண்டு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தி, ஆட்சியை கவிழ்த்து ஒரு வருடம் நிறைவு அடைந்த நிலையில், வங்கதேசத்தின் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ், தொலைகாட்சியில் அந்நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

    அப்போது "இடைக்கால அரசின் சார்பில், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரம்ஜான் பண்டிகைக்கு முன்பாக தேர்தல் ஆணையம் பாராளுமன்ற தேர்தலை நடத்த வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையருக்கு கடிதம் எழுதுவேன்" எனத் தெரிவித்துள்ளார்.

    ரம்ஜான் பிப்ரவரி மாதம் 17 அல்லது 18ஆம் தேதி தொடங்குகிறது. முன்னதாக, பொதுத் தேர்தல் ஏப்ரல் மாதம் முதல் பாதியில் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

    ×