என் மலர்
நீங்கள் தேடியது "Masoud Pezeshkian"
- கடந்த ஜூன் மாதம் இஸ்ரேல் ஈரான் மீது கடுமையான தாக்குதல் நடத்தியது.
- ஈரானும் பதில் தாக்குதல் நடத்தியதால் 12 நாட்கள் போர் நீடித்தது.
இஸ்ரேல் கடந்த ஜூன் மாதம் கடுமையான தாக்குதல் நடத்திய நிலையில், முக்கியமான முடிவுகளை எடுப்பதற்காக ஈரான் உச்சமட்ட தேசிய பாதுகாப்பு கவுன்சிலை நிறுவியுள்ளது.
இந்த உச்சமட்ட தேசிய பாதுகாப்பு கவுன்சில், ஈரான் நாட்டின் உயர்ந்த பாதுகாப்பு அமைப்பாக கருதப்படும். ஈரான் அதிபர் மசூத் பெசெஸ்கியன் தலைமையில் இந்த கவுன்சில் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கவுன்சில் பாதுகாப்பு திட்டம், ஈரான் அயுதப்படைகளின் திறனை மேம்படுத்துவது உள்ளிட்டவைகளை கையாளும். பாராளுமன்ற சபாநாயகர், தலைமை நீதிபதி, ராணுவப் பிரிவுகளின் தலைவர்கள் மற்றும் இதன் தொடர்பான அமைச்சர்கள் இதில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட இருக்கிறார்கள்.
கடந்து ஜூன் மாதம் இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதால், ஈரானும் பதில் தாக்குதல் நடத்தியது. 12 நாட்கள் நடைபெற்ற இந்த போரில் ஈரானில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ராணுவத் தளபதி மற்றும் கமாண்டர்ஸ் ஆகியோரும் அடங்குவர்.
1980ஆம் ஆண்டு ஈரானுக்கும், ஈராக்கிற்கும் இடையில் நடைபெற்ற போரில் இரு தரப்பிலும் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அப்போது இது போன்று பாதுகாப்பு கவுன்சில் அமைக்கப்பட்டது.
- இஸ்மாயில் ஹனியே படுகொலைக்கு பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் சூளுரை.
- இஸ்ரேல் தலைநகர் மீது வான்தாக்குதல் நடத்த ஈரான் அதிபர் யோசிப்பதாக தகவல்.
இஸ்ரேலுடனான நேரடி போரைத் ஈரான் புதிய அதிபர் மசூத் பெசெஸ்கியன் விரும்பவில்லை எனவும், இதனால் ஈரான் அதிபருக்கும் இஸ்லாமிய புரட்சிப் படைக்கும் (Islamic Revolutionary Guard Corps (IRGC)) இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் தி டெய்லி டெலிகிராப் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டதற்கு இஸ்ரேல்தான் காரணம் என ஈரான் குற்றம்சாட்டியது. அத்துடன் இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் நடத்தப்படும என ஈரான் உயர் அதிகாரம் படைத்த தலைவர் அயதுல்லா காமேனி சூளுரைத்தார்.
தற்போது இஸ்ரேல் மீது எந்தவகையான தாக்குதலை நடத்துவது என்பதில் ஈரான் அதிபருக்கும் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக அதில் குறிப்பிட்டுள்ளது.
ஈரானின் அண்டை நாடுகளில் உள்ள இஸ்ரேலின் உளவுத்துறை (மொசாட்) தளங்களை தாக்குவதற்கு அதிபர் மசூத் பெசெஸ்கியன் முன்மொழிந்துள்ளதாக "தி டெய்லி டெலிகிராப்" நாளிதழ் சுட்டிக்காட்டியுள்ளது.
அதே நேரத்தில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையின் தலைவர்கள் டெல் அவிவ் மற்றும் இஸ்ரேலின் பிற நகரங்களில் ஹிஸ்புல்லா மற்றும் மற்றவர்களின் ஆதரவுடன் வான்தாக்குதல் நடத்தலாம் என்பதில் உறுதியாக உள்ளனர்.
இஸ்ரேலுடன் நேரடி போரில் ஈடுபட்டால் ஈரான் அதிக விளைவுகளை சந்திக்கும் என அதிபர் யோசிக்கிறார். இதுதான் முக்கிய காரணமாக அதிபர் தரப்பில் பார்க்கப்படுகிறது.
அதிபரின் முன்மொழிவை புறக்கணித்து இஸ்ரேலை தாக்க இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தயாராகி வருவதாகவும், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா காமேனியின் உத்தரவை இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை கண்டிப்பாக நிறைவேற்றும் என்றும் நாளிதழ் மேலும் தெரிவித்துள்ளது.
ஈரானின் தன்னிச்சை அதிகாரம் படைத்த செல்வாக்குமிக்கதாக புரட்சிகர காவல்படை இருந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.






