என் மலர்
உலகம்
- சீனா, ரஷியாவுடன் வர்த்தகத்தை அதிகரிக்க இந்தியா முடிவு செய்தது.
- அமெரிக்க அதிபர் டிரம்ப் தென் கொரியாவுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா, சீனா உள்பட பல்வேறு நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதித்தார். வரி விதிப்பு விவகாரத்தில் இந்தியா, சீனாவுடன் அமெரிக்கா மோதல் போக்கை கடை பிடித்தது.
இதற்கிடையே சீனாவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங், ரஷிய அதிபர் புதின் ஆகியோர் சந்தித்து பேசினர்.
மேலும் சீனா, ரஷியாவுடன் வர்த்தகத்தை அதிகரிக்க இந்தியா முடிவு செய்தது. இதையடுத்து மோடி எப்போதும் எனக்கு நண்பர் தான். இந்தியா- அமெரிக்கா உறவு சிறப்பாக உள்ளது என்று டிரம்ப் தெரிவித்தார்.
இதற்கிடையே சீனாவுடன் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் சீன அதிபர் ஜின் பிங்குடன் டிரம்ப் அடுத்த மாதம் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாடு தென் கொரியாவின் ஜியாங்சு நகரில், அக்டோபர் இறுதியில் தொடங்கி, நவம்பர் தொடக் கம் வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க அதிபர் டிரம்ப் தென் கொரியாவுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளார். அவருடன் உயர்மட்ட ஆலோசகர்களும் செல்ல உள்ளனர்.
மாநாட்டின்போது சீன அதிபர் ஜின்பிங்கை டிரம்ப் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று டிரம்ப் நிர்வாக அதிகாரிகள் கூறியதாக அமெரிக்க ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டு உள்ளது.
அதில் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் டிரம்ப், ஜின்பிங் இடையே இருதரப்பு சந்திப்பு குறித்து தீவிர விவாதங்கள் நடந்துள்ளது. ஆனால் இன்னும் உறுதியான திட்டங்கள் எதுவும் முடிவு செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறும்போது, "டிரம்பின் தென்கொரிய பயணத்தில் பொருளாதார ஒத்துழைப்பில் கவனம் செலுத்தப்படும். வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு அணு ஆயுத ஒத்துழைப்பு உள்ளிட்ட விவகாரங்களிலும் கவனம் செலுத்தப்படும்" என்றார்.
- கீவ்வில் உள்ள ஏராளமான கட்டிடங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.
- ஒடேசா, கார்கிவ், டினிப்ரோசபோரி ஷியா உள்ளிட்ட நகரங்களிலும் டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்.
ரஷியா- உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், மறுபுறம் இரு தரப்பும் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றன.
இந்தநிலையில் நள்ளிரவில் உக்ரைன் தலைநகர் கீவ் உள்பட பல்வேறு நகரங்களை குறிவைத்து ரஷியா டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இதில் கீவ்வின் பெச்செர்ஸ்கி மாவட்டத்தில் உள்ள ஒரு அரசாங்க கட்டிடத்தின் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் அந்த கட்டிடம் தீப்பிடித்து எரிந்தது. உடனே தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த கட்டிடம் உக்ரைனின் அமைச்சரவை கூடும் கட்டிடம் ஆகும்.
மேலும், கீவ்வில் உள்ள ஏராளமான கட்டிடங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் குழந்தை உள்பட 3 பேர் பலியானார்கள். 18 பேர் காயம் அடைந்தனர். இதுதொடர்பாக உக்ரைன் பிரதமர் யூலியா ஸ்வைரிடென்கோ கூறும்போது,"எதிரி தாக்குதலால் அரசு கட்டிடத்தின் கூரை மற்றும் மேல் தளங்கள் சேதமடைந்திருப்பது இதுவே முதல் முறை ஆகும்" என்றார்.
அதேபோல் ஒடேசா, கார்கிவ், டினிப்ரோசபோரி ஷியா உள்ளிட்ட நகரங்களிலும் டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
இதற்கு பதிலடியாக ரஷியாவின் எண்ணை குழாய் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- மக்களின் பதிவுகளில் பிரசாரத்தை எலான் மஸ்க் அனுமதிக்கிறார்.
- உக்ரேனியர்களை கொல்வதை நிறுத்துங்கள்.
வரி விதிப்பு விவகாரம் மற்றும் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்பாக இந்தியாவை அமெரிக்க அதிபர் டிரம்பின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ கடுமையாக விமர்சித்து வருகிறார். அவர் தனது கருத்துக்களை எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
இந்த நிலையில் இந்தியாவை விமர்சிக்கும் பீட்டர் நவரோவின் கருத்துகளின் உண்மைதன்மை சரிபார்ப்பு நடவடிக்கையை எக்ஸ் வலைதள நிர்வாகம் எடுத்து உள்ளது. இதனால் கோபம் அடைந்த பீட்டர் நவரோ எக்ஸ் வலைதளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க்கை சாடியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பதிவில் கூறியதாவது:-
மக்களின் பதிவுகளில் பிரசாரத்தை எலான் மஸ்க் அனுமதிக்கிறார். உண்மை சரிபார்ப்பு குறிப்புகள் முட்டாள்தனமான குறிப்புகளாக உள்ளன. இந்தியா லாபம் ஈட்டுவதற்காக மட்டுமே ரஷிய எண்ணெயை வாங்குகிறது. ரஷியா உக்ரைன் மீது ரஷியா போரை தொடங்குவதற்கு முன்பு இந்தியா ரஷிய எண்ணெயை வாங்கவில்லை. உக்ரேனியர்களை கொல்வதை நிறுத்துங்கள். அமெரிக்க வேலைகளை எடுப்பதை நிறுத்துங்கள் என்று தெரிவித்து உள்ளார்.
- சர்வதேச சீக்கிய இளைஞர் கூட்டமைப்பு (ISYF) போன்ற காலிஸ்தான் பயங்கரவாத குழுக்கள் கனடாவில் நிதி திரட்டுகின்றன.
- பயங்கரவாதம் நாட்டிற்குள்ளேயே ஆதரவைப் பெறுகிறது என்பதை கனடா வெளிப்படையாக ஒப்புக்கொள்வது இதுவே முதல் முறை.
காலிஸ்தான் பிரிவினைவாதிகள் உட்பட பல பயங்கரவாத அமைப்புகள் கனடாவில் நிதி உதவி பெறுவது அம்பலமாகி உள்ளது.
கனடா நிதி அமைச்சகம் 'கனடாவில் பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியுதவி மதிப்பீடு-2025' என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில், "கனடிய குற்றவியல் சட்டத்தில் பட்டியலிடப்பட்டுள்ள ஹமாஸ், ஹிஸ்புல்லா, பாப்பர் கல்சா இன்டர்நேஷனல் மற்றும் சர்வதேச சீக்கிய இளைஞர் கூட்டமைப்பு (ISYF) போன்ற காலிஸ்தான் பயங்கரவாத குழுக்கள் கனடாவில் நிதி திரட்டுவதாக உளவுத்துறை மற்றும் காவல்துறை வட்டாரங்கள் அடையாளம் கண்டுள்ளன' என்று கூறப்பட்டுள்ளது.
கிரிப்டோகரன்சி மற்றும் வங்கிகள் மூலம் இந்த நிதி திரட்டல் நடத்தப்படுகிறது. இந்திய மாநிலமான பஞ்சாபில் ஒரு சுதந்திர அரசை நிறுவுவதற்காக காலிஸ்தான் பயங்கரவாத குழுக்கள் வன்முறையில் ஈடுபட்டு வருவதாக அறிக்கை கூறுகிறது.
மேலும், பயங்கரவாத குழுக்கள் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களுக்கு பெறப்பட்ட நிதியை பயன்படுத்துவதாகவும் அறிக்கை கூறுகிறது.
பயங்கரவாதம் நாட்டிற்குள்ளேயே ஆதரவைப் பெறுகிறது என்பதை கனடா வெளிப்படையாக ஒப்புக்கொள்வது இதுவே முதல் முறை.
முன்னதாக, இந்திய அரசாங்கம் கனேடிய அரசாங்கம் காலிஸ்தானியர்களை ஊக்குவிப்பதாகவும், இந்தியாவைப் பிளவுபடுத்தும் நடவடிக்கைகளுக்கு உதவுவதாகவும் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
- நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பு, குடியேற்றக் கொள்கைகள் மற்றும் காவல் துறையின் மிக முக்கியமான துறைகளை ஷபானா மேற்பார்வையிடுவார்.
- இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நுழைந்த முதல் முஸ்லிம் பெண் எம்.பி.க்களில் ஒருவரானார்.
பிரிட்டன் அரசியல் வரலாற்றில் முதல் முறையாக, ஒரு முஸ்லிம் பெண் உள்துறைச் செயலாளராக பதவி ஏற்றுள்ளார்.
பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் அமைச்சரவை மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த ஷபானா மஹ்மூத் உள்துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
இந்த நியமனத்தின் மூலம், நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பு, குடியேற்றக் கொள்கைகள் மற்றும் காவல் துறையின் மிக முக்கியமான துறைகளை ஷபானா மேற்பார்வையிடுவார்.
பாகிஸ்தானில் இருந்து இங்கிலாந்தின் பர்மிங்காமுக்கு குடிபெயர்ந்த பெற்றோர்க்கு 1980 இல் பிறந்தார் ஷபானா.
புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று சிறிது காலம் வழக்கறிஞராகப் பயிற்சி பெற்றார்.
2010 இல், பர்மிங்காம் லேடிவுட் தொகுதியிலிருந்து தொழிலாளர் கட்சியின் எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்தத் தேர்தலில் அவர் வெற்றி பெற்று, இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நுழைந்த முதல் முஸ்லிம் பெண் எம்.பி.க்களில் ஒருவரானார்.
கட்சியில் பல முக்கிய நிழல் பதவிகளை வகித்தார். 2024 தேர்தலில் தொழிலாளர் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு, அவர் நீதித்துறை செயலாளராகவும், லார்ட் சான்சலராகவும் நியமிக்கப்பட்டார்.
- டொனால்டு டிரம்ப் 23 ஆம் தேதி உரையாற்றுவார்.
- அவருக்கு பதிலாக வெளியுறவு அமைச்சர் கலந்து கொள்கிறார்
ஐக்கிய நாடுகள் சபையின் 80வது கூட்டத்தொடர் வரும் 9ம் தேதி நியூயார்க் நகரில் தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து, செப்டம்பர் 23 முதல் 29ம் தேதி வரை உயர்மட்டக் கூட்டம் நடைபெறுகிறது.
இந்நிலையில் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்போர் பட்டியலில் இருந்து பிரதமர் மோடியின் பெயர் திடீரென நீக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொள்கிறார்.
இந்தக் கூட்டத்தில் பிரேசில் நாட்டின் பிரதிநிதி முதலில் உரையாற்றுகிறார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 23 ஆம் தேதி உரையாற்றுவார். வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் செப்டம்பர் 27 ஆம் தேதி இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி உரையாற்றுவார்.
இந்தியா மீதான அமெரிக்காவின் 50 சதவீத வரி, ரஷியா, சீனாவுடன் ஏற்பட்ட நெருக்கம் ஆகியவை சர்வதேச அரசியலில் விவாதப்பொருளாக மாறி வரும் நிலையில் ஐநா கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்காதது கவனம் பெற்றுள்ளது.
- இடிபாடுகளுக்கு அடியில் பலர் சிக்கியிருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.
- காசாவில் இதுவரை இஸ்ரேல் ராணுவத்தால் 64,368 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
காசா நகரில் இருந்து மக்களை வெளியேற இஸ்ரேலிய இராணுவம் கட்டாயப்படுத்தி எச்சரிக்கை விடுத்து வருகிறது.
இந்த சூழல் நேற்று, இடம்பெயர்ந்த பாலஸ்தீனக் குடும்பங்கள் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களை குறிவைத்து குண்டுகளை வீசி இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் 41 பேர் உயிரிழந்தனர்.
இடிபாடுகளுக்கு அடியில் பலர் சிக்கியிருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.
அக்டோபர் 2023-ல் போர் தொடங்கியதிலிருந்து, காசாவில் இதுவரை இஸ்ரேல் ராணுவத்தால் 64,368 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 162,367 பேர் காயமடைந்துள்ளனர். காசா நகரை முழுமையாக கைப்பற்ற ராணுவத்துக்கு இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்க்கது.
- பிரச்சினைகள் குறித்த கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டோம்.
- தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கும் என்று தெரிவித்தார்.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் பிரதமர் மோடி இன்று தொலைபேசியில் உரையாடினார்.
இந்த உரையாடல் குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட , மோடி, " அதிபர் மேக்ரோனுடன் மிகச் சிறந்த உரையாடல் நடைபெற்றது.
பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை நாங்கள் மதிப்பிட்டோம்.
உக்ரைன் போரை விரைவில் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் உட்பட சர்வதேச மற்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்த கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டோம்.
உலக அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை வளர்ப்பதில் இந்தியா-பிரான்ஸ் மூலோபாய கூட்டாண்மை தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கும்" என்று தெரிவித்தார்.
- ஒன்று அல்லது 2மாதங்களில் இந்தியா பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் தெரிவிக்கும்.
- ரஷியாவின் எண்ணையை லாபம், வருவாய்க்காக மட்டுமே இந்தியா வாங்குகிறது.
அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இந்தியாவுடன் வர்த்தக மோதலை துணிச்சலாக பார்க்கிறோம். ஏனென்றால் மிகப்பெரிய வாடிக்கையாளருடன் சண்டையிடுவது நன்றாக இருக்கிறது. ஆனால் இறுதியில் இந்தியாவுக்கு அமெரிக்கா தேவைப்படும். விரைவில் அமெரிக்காதான் தேவை என்று சொல்வார்கள்.
50 சதவீத வரியை நீக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஒன்று அல்லது 2மாதங்களில் இந்தியா பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் தெரிவிக்கும். அவர்கள் அமெரிக்காவிடம் மன்னிப்பு கேட்பார்கள். டிரம்புடன் ஒரு ஒப்பந்தம் செய்ய முயற்சிப்பார்கள். வர்த்தக ஒப்பந்தம் செய்ய இந்தியா முயற்சிக்கும்போது, மோடியை எவ்வாறு கையாள வேண்டும் என்பதை டிரம்ப் முடிவு செய்வார்"என்றார்.
அதேபோல் டிரம்பின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ கூறுகையில்,"இந்தியா விதிக்கும் அதிகபடியான வரியால் அமெரிக்க வேலை வாய்ப்புகள் பாதிக்கப்படுகின்றன். ரஷியாவின் எண்ணையை லாபம், வருவாய்க்காக மட்டுமே இந்தியா வாங்குகிறது.
ரஷியாவின் போர் இயந்திரத்திற்கு உணவளிக்கிறது. போரில் உக்ரேனியர்கள், ரஷ்யர்கள் இறக்கின்றனர். அமெரிக்க வரி செலுத்துவோர் அதிகமாக செலவிடுகிறார்கள்.
இவ்வாறு கூறியுள்ளார்.
- உக்ரைனின் 26 நட்பு நாடுகள் நிலம், கடல் அல்லது வான் வழியாக துருப்புக்களை அனுப்ப உறுதி.
- ரஷியா ஏற்றுக்கொள்ளக் கூடிய உக்ரைனுக்கான பாதுகாப்பு உத்தரவாதமாக இருக்க முடியாது.
ரஷியா- உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இப்போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார்.
சமீபத்தில் ரஷிய அதிபர் புதினுடன் டிரம்ப் நேரடி பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் புதின் சில நிபந்தனைகளை விதித்தார். பிறகு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பேசினார்.
இதற்கிடையே உக்ரைனுக்கு பாதுகாப்பு உத்தரவாதங்களை அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் வழங்க வேண்டும் என்று ஜெலன்ஸ்கி வலியுறுத்தினார். இதில் போர் நிறுத்தப்பட்ட தருணத்தில் பாதுகாப்பை வழங்க உதவுவதற்காக உக்ரைனின் 26 நட்பு நாடுகள் நிலம், கடல் அல்லது வான் வழியாக துருப்புக்களை அனுப்ப உறுதியளித்துள்ளதாக பிரான்ஸ் அதிபர் மெக்ரான் தெரிவித்தார்.
இந்த நிலையில் வெளிநாட்டு ராணுவத்தால் உக்ரைனுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்கள் வழங்கக் கூடாது என்று ரஷியா தெரி வித்து உள்ளது.
இது தொடர்பாக ரஷிய அதிபர் புதின் கூறுகையில்," எந்தவொரு போர்நிறுத்தமும் நடைமுறைக்கு வந்த மறுநாளே, உக்ரைனில் படைகளை நிறுத்தும் மேற் கத்திய நாடுகளின் திட்டங்களை நாங்கள் நிராகரிக்கிறோம். உக்ரைனுக்கு அனுப்பப்படும் எந்தவொரு துருப்பும் சட்டபூர்வமான இலக்குகளாக இருக்கும்." என்றார்.
கிரெம்ளின் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறும்போது, "உக்ரைனின் பாதுகாப்பு உத்தரவாதங்களை வெளி நாட்டு, குறிப்பாக ஐரோப் பிய மற்றும் அமெரிக்க, ராணுவங்களால் உறுதி செய்ய முடியாது. இது ரஷியா ஏற்றுக்கொள்ளக் கூடிய உக்ரைனுக்கான பாதுகாப்பு உத்தரவாதமாக இருக்க முடியாது.
மோதலைத் தீர்ப்பது குறித்து ரஷியாவுக்கும், உக்ரைனுக்கும் விற்கும் இடையேயான உயர்மட்டக் கூட்டத்திற்கு முன் நிறைய பணிகள் செய்யப்பட வேண்டும்" என்றார்.
- சீனாவிடம் இந்தியாவை இழந்ததற்கு நாங்கள் காரணம் இல்லை என்று நினைக்கிறேன்.
- ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதால் நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன்.
இந்தியா மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் 50 சதவீத வரியை விதித்ததையடுத்து இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெயை இந்தியா வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த வரி விதிப்பு நடவடிக்கையை டிரம்ப் எடுத்தார். இதற்கிடையே சீனாவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங், ரஷிய அதிபர் புதின் ஆகியோருடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
மேலும் 3 தலைவர்கள் சேர்ந்து உற்சாகமாக கலந்துரையாடினார்கள். இதனால் அதிருப்தி அடைந்த டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறும் போது, இந்தியாவையும், ரஷியாவையும் இருள் சூழ்ந்த சீனாவிடம் அமெரிக்கா இழந்துவிட்டது போல் தெரிகிறது. அவர்கள் ஒன்றாக வளமான எதிர்காலத்தை பெற்று கொள்ளட்டும் என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் மோடியை கடுமையாக விமர்சித்து வந்த டிரம்ப் அதிலிருந்து பல்டி அடித்து உள்ளார். வெள்ளை மாளிகையில் டிரம்ப் பேட்டி அளித்தபோது, இந்தியாவை, சீனாவிடம் இழந்ததற்கு யார் காரணம்? என்றும் இந்தியாவுடனான உறவை புதுப்பிப்பீர்களா? என்றும் நிருபர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு டிரம்ப் பதில் அளித்து கூறியதாவது:-
சீனாவிடம் இந்தியாவை இழந்ததற்கு நாங்கள் காரணம் இல்லை என்று நினைக்கிறேன். ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதால் நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன். அதுபற்றி நான் அவர்களுக்கு தெரியப்படுத்தினேன்.
மேலும் இந்தியா மீது 50 சதவீத வரி விதித்தோம். இது மிக அதிகமான வரி. மோடியுடன் நான் மிகவும் நன்றாகப் பழகுகிறேன் என்பது உங்களுக்குத் தெரியும்.
அவர் 2 மாதங்களுக்கு முன்பு இங்கு வந்திருந்தார். அப்போது நாங்கள் ரோஸ் கார்டனுக்குச் சென்று ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினோம். மோடி எப்போதும் எனக்கு நண்பர் தான். அவருடன் எப்போதும் நட்புறவுடன் இருப்பேன். அவர் ஒரு சிறந்த பிரதமர். அதேவேளையில் இந்த குறிப்பிட்ட தருணத்தில் அவர் செய்தது எனக்கு பிடிக்கவில்லை.
ஆனால் இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையே மிகவும் சிறப்பு வாய்ந்த உறவு உள்ளது. அது பற்றி கவலைப்பட ஒன்றுமில்லை. எப்போதாவது தான் இதுபோன்ற தருணங்கள் வருகின்றன.
இந்தியா மற்றும் பிற நாடுகளுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் சிறப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. அவர்கள் அனைவருடனும் நாங்கள் சிறப்பாகச் செயல்படுகிறோம். கூகுள் உள்பட அமெரிக்காவின் பெரிய நிறுவனங்களுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் எடுத்த நடவடிக்கையால் அதிருப்தி அடைந்து உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்த சந்தர்ப்பத்தில் ஏஐ துறையில் முதலீடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர்களுடன் கலந்துரையாடினார்.
- அவருக்கு அழைப்பே விடுக்கப்படவில்லை என்று ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டது.
அமெரிக்காவின் தொழில்நுட்ப ஜாம்பவான்களுக்கு அதிபர் டிரம்ப் கடந்த நேற்று முன் தினம் வெள்ளை மாளிகையில் இரவு விருந்து வைத்தார்.
இந்த சந்தர்ப்பத்தில் ஏஐ துறையில் முதலீடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர்களுடன் கலந்துரையாடினார்.
மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ், ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் இதில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த விருந்தில் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் சி.இ.ஓ. எலான் மஸ்க் பங்கேற்கவில்லை. அவருக்கு அழைப்பே விடுக்கப்படவில்லை என்று ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டது.
இந்நிலையில் இதுகுறித்து ஊடகத்திற்கு கொடுத்த பேட்டியில் பேசிய மஸ்க், அதிபர் டிரம்பின் நிர்வாகத்திடமிருந்து தனக்கு அழைப்பு வந்ததாக அவர் கூறினார்.
இருப்பினும், தவிர்க்க முடியாத காரணங்களால் தான் செல்ல முடியவில்லை என்றும் தனக்கு பதிலாக தனது நிறுவனத்திலிருந்து ஒரு பிரதிநிதியை அனுப்பியதாக மஸ்க் கூறினார். நெருங்கிய நண்பர்களாக இருந்த மஸ்க் - டிரம்ப் அண்மையில் பிரிந்தது குறிப்பிடத்தக்கது.






