என் மலர்tooltip icon

    உலகம்

    • பேஸ்புக் கணக்கு 5 முறை முடக்கப்பட்டது.
    • விளம்பர வருவாய் இழப்பு ஏற்பட்டது என முறையிட்டார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவைச் சேர்ந்தவர் மார்க் ஜுகர்பெர்க். இவர் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார்.

    இந்நிலையில், வழக்கறிஞர் மார்க் மெட்டா நிறுவன சி.இ.ஓ.வான மார்க் ஜுகர்பெர்க் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

    அதில், ஒரே பெயரைக் கொண்டுள்ளதால் தனது பேஸ்புக் கணக்கு 5 முறை முடக்கப்பட்டது என்றும், கணக்கு முடக்கப்பட்டதால் தனக்கு விளம்பர வருவாய் இழப்பு ஏற்பட்டதால் இழப்பீடு தரவேண்டும் என முறையிட்டுள்ளார்.

    கடந்த 8 ஆண்டுகளில் மெட்டா நிறுவனம் தனது வணிகக் கணக்கை 5 முறையும், தனிப்பட்ட கணக்கை 4 முறையும் முடக்கியது.

    எனக்கூறும் அவர், போலி பெயர் ஆள்மாறாட்டம் குற்றச்சாட்டுகளின் கீழ் தனது பக்கங்களை மூடியதற்காக தொழில்நுட்ப நிறுவனமான மெட்டா அலட்சியமாக செயல்பட்டுள்ளது என குற்றம் சாட்டுகிறார்.

    ஒவ்வொரு முறையும் பேஸ்புக் கணக்கை திரும்பப் பெற பல மாதங்கள் ஆனது. கடைசியாக தனது கணக்கைத் திரும்பப் பெற 6 மாதங்கள் ஆனது. பேஸ்புக்கில் இல்லாததால் விளம்பரம் மற்றும் வாடிக்கையாளர் தொடர்பு செலவுகளில் ஆயிரக்கணக்கான டாலர்களை இழந்துள்ளேன்.

    வழக்கறிஞர் மார்க் தனது போராட்டங்களை விவரிக்கும் வகையில் ஒரு வலைதளத்தையும் உருவாக்கியுள்ளார். ஒரே பெயரை கொண்டதால் ஏற்பட்ட இந்தக் குழப்பம் அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

    • அரசு உறவு வேறு, ராஜாங்க உறவு வேறு. தனிப்பட்ட நட்பு என்பது வேறு.
    • அதனால் தான் அவர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது என்றார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் பால்டன் இங்கிலாந்து செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

    அமெரிக்க அதிபர் டிரம்புக்கும், இந்திய பிரதமர் மோடிக்கும் இடையே ஒரு காலத்தில் தனிப்பட்ட முறையில் நல்ல உறவு இருந்தது. அது இப்போது முடிந்துவிட்டது என நான் நினைக்கிறேன்.

    இது அனைவருக்கும் ஒரு பாடம். உதாரணமாக இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மருக்கு இது ஒரு பெரிய பாடம்.

    டிரம்பை நம்பி ஏமாற்றம் அடைய வேண்டாம். ஒரு நல்ல தனிப்பட்ட உறவு சில சமயங்களில் உதவக்கூடும். ஆனால் அது உங்களை மோசமானவற்றில் இருந்து பாதுகாக்காது.

    அரசு உறவு வேறு, ராஜாங்க உறவு வேறு. தனிப்பட்ட நட்பு என்பது வேறு. அதனால் தான் அவர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

    டிரம்ப் சர்வதேச உறவுகளை தலைவர்களுடனான தனது தனிப்பட்ட உறவுகளின் கண்ணோட்டத்தில் பார்க்கிறார் என நினைக்கிறேன். எனவே அவருக்கு விளாடிமிர் புதினுடன் நல்ல உறவு இருந்தால் அமெரிக்காவுக்கு ரஷியாவுடன் நல்ல உறவு இருக்கிறது என அவர் கருதுகிறார்.

    ஹூஸ்டனில் நடந்த ஹவுடி மோடி பேரணி முதல் அரசு வருகைகள் வரை தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்த மோடி-டிரம்ப் இடையிலான உறவுகள் இப்போது மோசமாகி உள்ளது. இரு நாட்டு உறவு மோசமான நிலையை அடைந்துள்ளது என தெரிவித்தார்.

    இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தகப் போர் நீடித்து வரும் சூழ்நிலையில், ஜான் பால்டன் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பல நூற்றாண்டு காலமாக உலகின் தலைசிறந்த அறிவாளிகளை உருவாக்கியுள்ளது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்.
    • ஒரு இனத்துக்கே சுயமரியாதை உணர்வை ஊட்டியவர் பெரியார்.

    லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியாரின் திருவுருவப் படத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டை ஒட்டி பெரியாரின் படத்தை திறந்து வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    * பெரியார் உலகமயமாகிவிட்டார் என்பதற்கு உதாரணம் தான் ஆக்ஸ்போர்டு பல்கலையில் பெரியார் படம் திறக்கப்பட்டுள்ளது.

    * பல நூற்றாண்டு காலமாக உலகின் தலைசிறந்த அறிவாளிகளை உருவாக்கியுள்ளது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்.

    * உலகம் முழுக்க பெரியார் தேவைப்படுகிறார் என்பதன் அடையாளம்தான் ஆக்ஸ்போர்டு பல்கலையில் அவரது உருவப்படம் திறக்கப்பட்டுள்ளது.



    * பெரியாரின் பேரன் என்ற கம்பீரத்துடன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் அவரது உருவப்படத்தை திறந்து வைத்தேன்.

    * பகுத்தறிவு பகலவன் பெரியாரின் திருவுருவப் படத்தை ஆக்ஸ்போர்டு பல்கலையில் திறந்து வைத்தது என் வாழ்நாள் பெருமை.

    * சமூகத்துக்கான வாழ்வியல் தத்துவத்தை உலகத்துக்கு எடுத்துரைத்தவர் பெரியார்.

    * ஒரு இனத்துக்கே சுயமரியாதை உணர்வை ஊட்டியவர் பெரியார்.

    * பகுத்தறிவு, சமத்துவம், பெண்கள் முன்னேற்றத்துக்கு அயராது பாடுபட்டவர் பெரியார்.

    * தந்தை பெரியாருக்கு மிகவும் பிடித்தமான சொல் சுயமரியாதை என்றார். 



    • சுமார் 45 நிமிடங்கள் தனிப்பட்ட முறையில் பேசினார்.
    • பிரதமர் மோடியிடம் விளக்கினேன்.

    அண்மையில் சீனாவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அப்போது அங்கு வருகை தந்திருந்த ரஷிய அதிபர் புதினுடன் தனியாக காரில் சென்றபடி மோடி பேசிக்கொண்ட புகைப்படங்கள் வைரலானது.

    இரு தலைவர்களும் சுமார் 45 நிமிடங்கள் தனிப்பட்ட முறையில் பேசியதாக அப்போது ரஷிய அதிபர் மாளிகை (கிரெம்ளின்) வட்டாரங்கள் தெரிவித்தன.

    இந்நிலையில் சீன பயணத்தை முடித்த பின்னர் புதின் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் இதுகுறித்து விளக்கம் கொடுத்தார்.

    காரில் மோடியுடனான உரையாடல் குறித்து ஒரு நிருபர் கேட்டபோது, "அதில் மறைக்க எதுவும் இல்லை. அலாஸ்காவில் டொனால்டு டிரம்புடன் நான் நடத்திய விவாதங்கள் குறித்து பிரதமர் மோடியிடம் விளக்கினேன்" என்று புதின் கூறினார்.

    • அமெரிக்க பாதுகாப்புத் துறைக்கு (பென்டகன்) உத்தரவு பிறப்பித்துள்ளார்.
    • துரதிர்ஷ்டவசமாக, முந்தைய நிர்வாகத்தின் பலவீனமான கொள்கைகள் காரணமாக ரஷ்யாவும் சீனாவும் நெருக்கமாகிவிட்டன.

    இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த 80வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் சீனாவின் பெய்ஜிங்கில் நேற்று பிரமாண்டமான இராணுவ அணிவகுப்பு நடைபெற்றது.

    இந்த அணிவகுப்பை சீன ஜின்பிங்குடன் ரசிய அதிபர் புதின் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் ஆகியோர் பார்வையிட்டனர்.

    அமெரிக்காவிற்கு எதிராக சீனா, ரஷ்யா மற்றும் வட கொரியா இணைந்து சதி செய்வதாக அதிபர் டிரம்ப் நேரடியாக குற்றம் சாட்டினார்.

    இந்நிலையில் ரஷியா, சீனாவை எதிர்கொள்ள இராணுவ தயார்நிலையை கணிசமாக அதிகரிக்க அமெரிக்க பாதுகாப்புத் துறைக்கு (பென்டகன்) உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    சீனா, ரஷியா, வட கொரியா மூன்று நாடுகளுக்கும் இடையிலான பிணைப்பு அமெரிக்காவிற்கு எதிராக வலுவடைந்து வருவதற்கான அறிகுறி என்று வாஷிங்டன் நம்புகிறது.

    டிரம்ப்பின் உத்தரவுகளை பென்டகன் தலைவர் பீட் ஹெக்செத் உறுதிப்படுத்தினார்.

    இதுகுறித்து ஃபாக்ஸ் நியூஸிடம் பேட்டியளித்த ஹெக்செத், "இந்த நடவடிக்கைகள் போரை நாடுவதற்காக அல்ல, மாறாக வீரர்களின் மன உறுதியை புதுப்பிக்க மட்டுமே.

    துரதிர்ஷ்டவசமாக, முந்தைய நிர்வாகத்தின் பலவீனமான கொள்கைகள் காரணமாக ரஷ்யாவும் சீனாவும் நெருக்கமாகிவிட்டன. இது அமெரிக்கத் தலைமை இல்லாததற்கான சான்றாகும்.

    அதனால்தான் ஜனாதிபதி டிரம்ப் ராணுவத்தை மீண்டும் கட்டியெழுப்பவும், தடுப்பு திறனை மறுசீரமைக்க தயாராக இருக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

    நாங்கள் மோதலை விரும்பவில்லை. சீனா, ரஷ்யா மற்றும் பிற நாடுகளுக்கு நாங்கள் போரைத் தவிர்க்கத் தயாராக இருக்கிறோம் என்பதை தெளிவுபடுத்தியுள்ளோம்" என்று கூறினார். 

    • இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை (FTA) விரைவில் இறுதி செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது.
    • இந்தியாவின் ஆதரவை பிரதமர் மோடி மீண்டும் வெளிப்படுத்தினார்.

    பிரதமர் நரேந்திர மோடி நேற்று (வியாழக்கிழமை) மாலை, ஐரோப்பிய யூனியன் தலைவர் அன்டோனியோ கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோருடன் கானபெரென்ஸ் காலில் தொலைபேசியில் உரையாடினார்.

    இதன்போது இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை (FTA) விரைவில் இறுதி செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது.

    பேச்சுவார்த்தையில், பரஸ்பர வர்த்தகம், தொழில்நுட்பம், பாதுகாப்பு துறைகளில் இருதரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை இரு தரப்புத் தலைவர்களும் வரவேற்றனர்.

    இது தவிர, உக்ரைனில் நீண்டகாலமாக நிலவும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இரு தரப்பினரின் முயற்சிகள் குறித்தும் கருத்துகள் பரிமாறப்பட்டன.

    மோதலுக்கு அமைதியான தீர்வு கண்டு ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்க இந்தியாவின் ஆதரவை பிரதமர் மோடி மீண்டும் வெளிப்படுத்தினார்.

    மேலும், அடுத்த இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டிற்காக இந்தியாவுக்கு வருகை தருமாறு ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களை பிரதமர் மோடி அழைத்தார். 

    • ஜெர்மன் புவியியல் ஆய்வு மையமான GFZ அறிக்கைப்படி, பூமியில் பத்து கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் டெல்லி மற்றும் ஜம்மு-காஷ்மீர் பகுதிகளிலும் உணரப்பட்டன.

    ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியான குனார் மாகாணத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 11.47 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்தது 6.0, 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது.

    இதில் 2,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 3,600-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

    நூற்றுக்கணக்கான கிராமங்கள் தரைமட்டமாகின. லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    அதே பகுதியில் கடந்த செய்வ்வாய்கிழமை மாலையும் 5.2 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது.

    இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் தென் கிழக்குப் பகுதியில், நேற்று (வியாழக்கிழமை) இரவு 9:56 மணியளவில் 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்ப்பட்டுள்ளது.

    ஜெர்மன் புவியியல் ஆய்வு மையமான GFZ அறிக்கைப்படி, பூமியில் பத்து கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

    இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் டெல்லி மற்றும் ஜம்மு-காஷ்மீர் பகுதிகளிலும் உணரப்பட்டன. அதிர்வுகள் ஏற்பட்ட பகுதிகளில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தில் ஏற்பட்ட பொருள் மற்றும் உயிர்சேதங்கள் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை 

    • 7 நாள்களுக்குள் பதிவு செய்ய வேண்டுமென கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி அரசு உத்தரவிட்டிருந்தது.
    • டெலிகிராம் உள்ளிட்ட சில நிறுவனங்கள் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளது

    பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உட்பட 26 சமூக ஊடக செயலிகளுக்கு நேபாள அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது.

    நேபாளத்தின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் விதிமுறைகளுக்கு உள்பட்டு பதிவு செய்யப்படாத சமூக வலைதள நிறுவனங்கள் அனைத்தும், 7 நாள்களுக்குள் பதிவு செய்ய வேண்டுமென கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி அரசு உத்தரவிட்டிருந்தது.

    இந்நிலையில் தற்போது அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, ஆகஸ்ட் 28 முதல் சமூக ஊடக நிறுவனங்கள் பதிவு செய்ய ஏழு நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது.

    புதன்கிழமை இரவு காலக்கெடு முடிவடைந்தபோதும், மெட்டா (பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப்), ஆல்பாபெட் (யூடியூப்), எக்ஸ் (ட்விட்டர்), ரெடிட் மற்றும் லிங்க்ட்இன் உள்ளிட்ட முக்கிய தளங்கள் எதுவும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவில்லை. எனவே பதிவு செய்யப்படாத தளங்களுக்கு தடை விதிப்பதாக அறிவித்துள்ளது.

    இந்தத் தடை வியாழக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்று அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

    இதற்கிடையில், டெலிகிராம் உள்ளிட்ட சில நிறுவனங்கள் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளது என்றும் அதுகுறித்து பரிசீலித்து வருவதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    நேபாள அரசாங்கத்தின் முடிவுக்கு பேஸ்புக் மற்றும் பிற சமூக ஊடக நிறுவனங்கள் இன்னும் பதிலளிக்கவில்லை.   

    • ஆப்கானிஸ்தானில் கடந்த 31-ம் தேதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • இடிபாடுகளுக்குள் சிக்கிய மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

    காபூல்:

    ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் கடந்த 31-ம் தேதி நள்ளிரவு 6.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

    இந்த நிலநடுக்கத்தால் குனார், நாங்கர்ஹர் ஆகிய மாகாணங்களில் சுமார் 6,782 வீடுகள் முழுவதுமாக இடிந்து விழுந்தன. இடிபாடுகளுக்குள் சிக்கிய மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

    இந்நிலையில், நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 2,205 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 3,394 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். சமமற்ற நிலப்பரப்புகளினால் நிலநடுக்கம் பாதித்த பல கிராமங்களை மீட்புப் படை சென்றடைவது கடினமாக உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அமெரிக்க அரசு விதித்த வரிவிதிப்பு கடந்த 27-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
    • இந்தியா உள்ளிட்ட நாடுகள்மீது விதிக்கப்பட்ட வரிகள் சட்டவிரோதம் என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்றுக் கொண்ட டொனால்டு டிரம்ப், பொருளாதார ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    இதன் ஒரு பகுதியாக உலக நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிக்கும் அறிவிப்பை டிரம்ப் வெளியிட்டார். அதன்படி இந்தியாவுக்கு 25 சதவீத வரியை டிரம்ப் விதித்தார். மேலும், உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் கூடுதலாக 25 சதவீத வரியை டிரம்ப் அறிவித்தார். அதன்படி, இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மொத்தமாக 50 சதவீத வரி விதிக்கப்பட்டது.

    இந்த வரி விதிப்பு கடந்த 27-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

    அமெரிக்காவின் வரி விதிப்பால் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்படும் பாதிப்பை சரிகட்ட மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இதற்கிடையே, வரிவிதிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த அமெரிக்க நீதிமன்றம், அதிபர் டிரம்ப் விதித்த வரிகள் சட்டவிரோதமானவை. இத்தகைய வரிகளை விதிக்க டிரம்புக்கு எந்த அதிகாரமும் இல்லை என தீர்ப்பளித்தது.

    இந்நிலையில், நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அதிபர் டிரம்ப் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். அதில், உக்ரைன் போரால் ஏற்பட்டுள்ள தேசிய அவசர நிலையை சமாளிக்கவே ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் இந்தியாவுக்கு எதிராக வரிகளை விதித்தோம் என தெரிவித்துள்ளார்.

    • இருவருடன் நடந்து சென்ற வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் இதைக் கவனித்து சிரித்தார்.
    • அறுவை சிகிச்சையின் திறனைப் பயன்படுத்தி, எதிர்காலத்தில் மனிதகுலம் மிகவும் சுறுசுறுப்பான வாழ்க்கையை வாழ முடியும் என்று புதின் கூறினார்.

    உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் மற்றும் பிற அறுவை சிகிச்சைகள் மூலம் இறவாமையை அடைய முடியுமா?

    இதுகுறித்து சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினும் பேசிக்கொண்டது வைரலாகி வருகிறது.

    சீனாவின் பெய்ஜிங்கில் உள்ள தியனன்மென் சதுக்கத்தில் இராணுவ அணிவகுப்புக்கு நடந்து செல்லும்போது இருவருக்கும் இடையிலான தனிப்பட்ட உரையாடல் மைக் திடீரென ஆன் ஆனதால் கசிந்தது.

    அவர்கள் பேசியதாவது, 

    ஜி ஜின்பிங்: கடந்த காலத்தில், மக்கள் 70 வயதைத் தாண்டி வாழ்வது அரிது என்று கூறினோம். ஆனால் இன்று, உங்கள் 70 களில் கூட, (நீங்கள்) இன்னும் ஒரு குழந்தையாகவே இருக்கிறீர்கள்.

    புதின்: ஆம். மிகச் சில ஆண்டுகளில், உயிரி தொழில்நுட்பத்தின் வளர்ச்சியுடன், மனித உறுப்புகள் தொடர்ந்து மாற்றப்படும். நீங்கள் எவ்வளவு காலம் வாழ்கிறீர்களோ, அவ்வளவு இளமையாக இருப்பீர்கள். அந்த வகையில், இறவாமை சாத்தியமாகும்.

    ஜி ஜின்பிங்: இந்த நூற்றாண்டில் மனிதர்கள் 150 ஆண்டுகள் வரை வாழ முடியும் என்று சிலர் கணிக்கின்றனர்.

    இருவருடன் நடந்து சென்ற வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் இதைக் கவனித்து சிரித்தார். உரையாடலின் மொழிபெயர்ப்பை அவர் கேட்டாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

    பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் இது குறித்து கேட்டபோது, புதின் உரையாடலை உறுதிப்படுத்தினார்.

    "நாங்கள் அணிவகுப்புக்கு நடந்து சென்றபோது ஜி ஜின்பிங் இதைப் பற்றிப் பேசினார் என்று நான் நினைக்கிறேன். தொழில்நுட்பம், சுகாதார அமைப்புகள் மற்றும் அறுவை சிகிச்சையின் திறனைப் பயன்படுத்தி, எதிர்காலத்தில் மனிதகுலம் மிகவும் சுறுசுறுப்பான வாழ்க்கையை வாழ முடியும்" என்று புதின் கூறினார்.

    • உலகில் எந்த மனிதனை விடவும் வரிகளைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும்.
    • வரி விதிப்பு அமெரிக்காவிற்கு பேரம்பேசும் சக்தியை வழங்குகிறது.

    சீனா மற்றும் பிரேசில் போல இந்தியாவும் அமெரிக்காவை வரிகளால் கொல்கிறது என்று டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

    ஸ்காட் ஜென்னிங்ஸ் ரேடியோ நிகழ்ச்சியில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், "சீனா வரிகளால் எங்களை கொல்கிறது, இந்தியா வரிகளால் எங்களை கொல்கிறது, பிரேசில் வரிகளால் எங்களை கொல்கிறது. அவர்களை விட வரிகளைப் பற்றி எனக்குநன்றாகத் தெரியும்.

    உலகில் எந்த மனிதனை விடவும் வரிகளைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். இந்தியா தான் உலகில் அதிக வரி விதிக்கும் நாடு. ஆனால் இப்போது அமெரிக்கா இனி மீது எந்த வரியும் இருக்காது என்று அவர்கள் என்னிடம் கூறியுள்ளனர்" என்று தெரிவித்தார்.

    மேலும் " இந்தியா மீது 50 சதவீத வரி விதிப்பு இல்லாவிட்டால் அவர்கள் இந்த  முடிவுக்கு வந்திருக்க மாட்டார்கள். அதனால் வரி விதிப்பு அவசியம். வரி விதிப்பு அமெரிக்காவிற்கு பேரம்பேசும் சக்தியை வழங்குகிறது" என்றார். 

    ×