search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shanghai Cooperation Summit"

    • புதிய நிரந்த உறுப்பினராகியுள்ள ஈரானுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • பாகிஸ்தானும் எஸ்.சி.ஓ அமைப்பின் நிரந்தர உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டன. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் 8 நாடுகள் இடம் பெற்றுள்ளன.

    புதுடெல்லி:

    ரஷியா, சீனா, கிர்கிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் இணைந்து கடந்த 2001-ம் ஆண்டு ஜூன் மாதம் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பை (எஸ்.சி.ஓ) உருவாக்கியது.

    அதன்பின்னர் 2005-ம் ஆண்டு முதல் இந்த அமைப்பில் இந்தியா பார்வையாளராக பங்கேற்றது. கடந்த 2017-ம் ஆண்டு இந்தியாவும், பாகிஸ்தானும் எஸ்.சி.ஓ அமைப்பின் நிரந்தர உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டன. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் 8 நாடுகள் இடம் பெற்றுள்ளன.

    இந்த அமைப்பில் உள்ள நாடுகள் சுழற்சி முறையில் தலைமையேற்று வருகின்றன. அந்த வகையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 16-ந் தேதி சாமர்கண்ட் பகுதியில் நடைபெற்ற மாநாட்டில் எஸ்.சி.ஓ அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றது.

    இந்த நிலையில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு பிரதமர் மோடி தலைமையில் காணொலி வாயிலாக இன்று நடைபெற்றது. மதியம் 12.30 மணி அளவில் இந்த மாநாடு தொடங்கியது.

    சீன அதிபர் ஜின்பிங், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், பாகிஸ்தான் அதிபர் ஷாபாஸ் செரீப் மற்றும் எஸ்.சி.ஓ அமைப்பில் இடம் பெற்றுள்ள நாடுகளின் தலைவர்கள் வீடியோ கான்பிரசிங் மூலம் நடந்த இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.

    இந்த மாநாட்டில் பங்கேற்க ஐ.நா.சபை, தென் கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பு (ஆசியான்), காமன்வெல்த் நாடுகள் அமைப்பு (சி.ஐ.எஸ்), கூட்டு பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பு (சி.எஸ்.டி.ஓ), யுரேசிய பொருளாதார ஒன்றியம் (இ.ஏ.இ.யு) ஆசியாவில் கலந்துரையாடல் மற்றும் நம்பிக்கையை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளான மாநாட்டு அமைப்பு (சி.ஐ.சி.ஏ.) ஆகிய 6 சர்வதேச, பிராந்திய அமைப்புகளின் தலைவர்களும் இதில் பங்கேற்றனர்.

    இந்த அமைப்பில் புதிய நிரந்த உறுப்பினராகியுள்ள ஈரானுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

    ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிராந்திய பாதுகாப்பு நிலவரம், வர்த்தகம், நாடுகள், போக்குவரத்து தொடர்பை மேலும் வலுப்படுத்துவது, ஆப்கானிஸ்தான் நிலவரம், உக்ரைன் மீதான போர் விவகாரம் எஸ்.சி.ஓ அமைப்பின் உறுப்பு நாடுகள் இடையே ஒத்துழைப்பை விரிவுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    • ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டை இந்தியா சார்பில் பிரதமர் மோடி இன்று தலைமையேற்று நடத்தவுள்ளார்.
    • கடந்த ஆண்டு செப்டம்பரில் உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் பகுதியில் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு நடந்தது

    புதுடெல்லி:

    ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டை இந்தியா முதன் முறையாக தலைமை தாங்கி நடத்தவுள்ளது.

    இந்நிலையில், இந்தியா ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டை மெய்நிகர் காட்சி வழியே இன்று நடத்த உள்ளது.

    இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜீ ஜின்பிங், பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் ஆகியோருடன் மத்திய ஆசிய நாடுகளைச் சேர்ந்த பல தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.

    ரஷிய அதிபர் விளாடிமிர் புதினும் மாநாட்டில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டை பிரதமர் மோடி தலைமையேற்று நடத்த இருக்கிறார்.

    இதேபோல், அமைப்பின் ஓர் உறுப்பினராக விடுத்த ஈரானின் வேண்டுகோளை ஏற்று அந்நாட்டையும் சேர்த்துக்கொண்டு, அமைப்பு விரிவாக்கம் செய்யப்படக்கூடும் என கூறப்படுகிறது. இதுதவிர, பெலாரஸ் நாட்டையும் எஸ்.சி.ஓ.வில் தலைவர்கள் சேர்க்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

    இந்த உச்சி மாநாட்டில் பயங்கரவாத ஒழிப்பு, போதை பொருள் கடத்தல் மற்றும் தீவிரவாத ஒழிப்பு ஆகியவற்றில் முக்கிய கவனம் செலுத்தி அதுபற்றி தலைவர்கள் விவாதத்தில் ஈடுபட உள்ளனர்

    கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உஸ்பெகிஸ்தான் நாட்டின் சமர்கண்ட் பகுதியில் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு நடந்தது

    குறிப்பிடத்தக்கது.

    ×