search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பிரதமர் மோடி தலைமையில் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு இன்று தொடக்கம்
    X

    பிரதமர் மோடி தலைமையில் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு இன்று தொடக்கம்

    • ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டை இந்தியா சார்பில் பிரதமர் மோடி இன்று தலைமையேற்று நடத்தவுள்ளார்.
    • கடந்த ஆண்டு செப்டம்பரில் உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் பகுதியில் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு நடந்தது

    புதுடெல்லி:

    ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டை இந்தியா முதன் முறையாக தலைமை தாங்கி நடத்தவுள்ளது.

    இந்நிலையில், இந்தியா ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டை மெய்நிகர் காட்சி வழியே இன்று நடத்த உள்ளது.

    இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜீ ஜின்பிங், பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் ஆகியோருடன் மத்திய ஆசிய நாடுகளைச் சேர்ந்த பல தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.

    ரஷிய அதிபர் விளாடிமிர் புதினும் மாநாட்டில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டை பிரதமர் மோடி தலைமையேற்று நடத்த இருக்கிறார்.

    இதேபோல், அமைப்பின் ஓர் உறுப்பினராக விடுத்த ஈரானின் வேண்டுகோளை ஏற்று அந்நாட்டையும் சேர்த்துக்கொண்டு, அமைப்பு விரிவாக்கம் செய்யப்படக்கூடும் என கூறப்படுகிறது. இதுதவிர, பெலாரஸ் நாட்டையும் எஸ்.சி.ஓ.வில் தலைவர்கள் சேர்க்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

    இந்த உச்சி மாநாட்டில் பயங்கரவாத ஒழிப்பு, போதை பொருள் கடத்தல் மற்றும் தீவிரவாத ஒழிப்பு ஆகியவற்றில் முக்கிய கவனம் செலுத்தி அதுபற்றி தலைவர்கள் விவாதத்தில் ஈடுபட உள்ளனர்

    கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உஸ்பெகிஸ்தான் நாட்டின் சமர்கண்ட் பகுதியில் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு நடந்தது

    குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×