என் மலர்
நீங்கள் தேடியது "Tariff increase"
- அமெரிக்க அரசு விதித்த வரிவிதிப்பு கடந்த 27-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
- இந்தியா உள்ளிட்ட நாடுகள்மீது விதிக்கப்பட்ட வரிகள் சட்டவிரோதம் என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்றுக் கொண்ட டொனால்டு டிரம்ப், பொருளாதார ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக உலக நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிக்கும் அறிவிப்பை டிரம்ப் வெளியிட்டார். அதன்படி இந்தியாவுக்கு 25 சதவீத வரியை டிரம்ப் விதித்தார். மேலும், உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் கூடுதலாக 25 சதவீத வரியை டிரம்ப் அறிவித்தார். அதன்படி, இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மொத்தமாக 50 சதவீத வரி விதிக்கப்பட்டது.
இந்த வரி விதிப்பு கடந்த 27-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
அமெரிக்காவின் வரி விதிப்பால் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்படும் பாதிப்பை சரிகட்ட மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதற்கிடையே, வரிவிதிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த அமெரிக்க நீதிமன்றம், அதிபர் டிரம்ப் விதித்த வரிகள் சட்டவிரோதமானவை. இத்தகைய வரிகளை விதிக்க டிரம்புக்கு எந்த அதிகாரமும் இல்லை என தீர்ப்பளித்தது.
இந்நிலையில், நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அதிபர் டிரம்ப் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். அதில், உக்ரைன் போரால் ஏற்பட்டுள்ள தேசிய அவசர நிலையை சமாளிக்கவே ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் இந்தியாவுக்கு எதிராக வரிகளை விதித்தோம் என தெரிவித்துள்ளார்.
- ஏப்ரல் 21-ந்தேதி 8-வது சுற்று பேச்சுவார்த்தை நடந்தது.
- இன்று முதல் புதிய கூலி உயர்வு ஏற்படுத்தி வழங்குவது என முடிவானது.
திருப்பூர்:
பின்னலாடை ரகங்களுக்கு தையல் கட்டண உயர்வு நிர்ணயிப்பது குறித்து திருப்பூரில் பவர் டேபிள் உரிமையாளர் சங்கம் மற்றும் தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம்(சைமா) இடையே ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்தது.
வரும் 2025ம் ஆண்டு வரையிலான அடுத்த 4 ஆண்டுகளில் மொத்தம் 75 சதவீதம் கட்டண உயர்வு வழங்க வேண்டும் என பவர் டேபிள் உரிமையாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்தது. சைமா இந்த உயர்வுக்கு உடன்படவில்லை. இருதரப்பிடையே கடந்த பல மாதமாக பேச்சு நடைபெற்றது.
இதில் ஏப்ரல் 21-ந்தேதி 8-வது சுற்று பேச்சுவார்த்தை நடந்தது.இதில் முதலாண்டு 20 சதவீதம் அடுத்த 3ஆண்டுகள் தலா 10 சதவீதம் என மொத்தம் 50 சதவீதம் வழங்க வேண்டும் என பவர் டேபிள் சங்கம் கேட்டுக் கொண்டது.சங்க உறுப்பினர்களிடம் ஆலோசித்து முடிவு தெரிவிப்பதாக 'சைமா' நிர்வாகிகள் தெரிவித்தனர்.
அதன் பின் ஒரு மாதமாகியும்சைமா சங்கம், பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. இதையடுத்துபவர் டேபிள் சங்கம், ஜூன் 10-ந் தேதிக்குள் ஒப்பந்தம் ஏற்படுத்தவில்லை எனில் வேலை நிறுத்தம் செய்வதாக அறிவித்தது.இதையடுத்து, 'சைமா', தனது உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தியது.
அதன் பின் நேற்று முன்தினம் மீண்டும் 9வது சுற்று பேச்சு நடைபெற்றது.இதில் இன்று முதல் புதிய கூலி உயர்வு ஏற்படுத்தி வழங்குவது என முடிவானது.அதன்படி பனியன் ரகங்களுக்கு முதல் ஆண்டில் 17 சதவீதமும், அடுத்தடுத்த ஆண்டுகள் தலா 7 சதவீதம் என மொத்தம் 38 சதவீதம் உயர்த்தி வழங்குவது.
அதே போல் பேக்பட்டி மற்றும் பாக்கெட் ரகங்களுக்கு முதலாண்டில் 14 சதவீதமும் அடுத்த 3 ஆண்டுக்கு தலா 7 சதவீதம் என மொத்தம் 35 சதவீதம் கூலி உயர்வு வழங்குவது என ஒப்பந்தம் கையெழுத்தானது.உயர்த்தப்பட்ட புதிய கூலி உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.






