search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பவர் டேபிள் கட்டண உயர்வு இன்று முதல் அமல்
    X

    கட்டண உயர்வு ஒப்பந்தம் போடப்பட்ட காட்சி.

    பவர் டேபிள் கட்டண உயர்வு இன்று முதல் அமல்

    • ஏப்ரல் 21-ந்தேதி 8-வது சுற்று பேச்சுவார்த்தை நடந்தது.
    • இன்று முதல் புதிய கூலி உயர்வு ஏற்படுத்தி வழங்குவது என முடிவானது.

    திருப்பூர்:

    பின்னலாடை ரகங்களுக்கு தையல் கட்டண உயர்வு நிர்ணயிப்பது குறித்து திருப்பூரில் பவர் டேபிள் உரிமையாளர் சங்கம் மற்றும் தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம்(சைமா) இடையே ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்தது.

    வரும் 2025ம் ஆண்டு வரையிலான அடுத்த 4 ஆண்டுகளில் மொத்தம் 75 சதவீதம் கட்டண உயர்வு வழங்க வேண்டும் என பவர் டேபிள் உரிமையாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்தது. சைமா இந்த உயர்வுக்கு உடன்படவில்லை. இருதரப்பிடையே கடந்த பல மாதமாக பேச்சு நடைபெற்றது.

    இதில் ஏப்ரல் 21-ந்தேதி 8-வது சுற்று பேச்சுவார்த்தை நடந்தது.இதில் முதலாண்டு 20 சதவீதம் அடுத்த 3ஆண்டுகள் தலா 10 சதவீதம் என மொத்தம் 50 சதவீதம் வழங்க வேண்டும் என பவர் டேபிள் சங்கம் கேட்டுக் கொண்டது.சங்க உறுப்பினர்களிடம் ஆலோசித்து முடிவு தெரிவிப்பதாக 'சைமா' நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    அதன் பின் ஒரு மாதமாகியும்சைமா சங்கம், பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. இதையடுத்துபவர் டேபிள் சங்கம், ஜூன் 10-ந் தேதிக்குள் ஒப்பந்தம் ஏற்படுத்தவில்லை எனில் வேலை நிறுத்தம் செய்வதாக அறிவித்தது.இதையடுத்து, 'சைமா', தனது உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தியது.

    அதன் பின் நேற்று முன்தினம் மீண்டும் 9வது சுற்று பேச்சு நடைபெற்றது.இதில் இன்று முதல் புதிய கூலி உயர்வு ஏற்படுத்தி வழங்குவது என முடிவானது.அதன்படி பனியன் ரகங்களுக்கு முதல் ஆண்டில் 17 சதவீதமும், அடுத்தடுத்த ஆண்டுகள் தலா 7 சதவீதம் என மொத்தம் 38 சதவீதம் உயர்த்தி வழங்குவது.

    அதே போல் பேக்பட்டி மற்றும் பாக்கெட் ரகங்களுக்கு முதலாண்டில் 14 சதவீதமும் அடுத்த 3 ஆண்டுக்கு தலா 7 சதவீதம் என மொத்தம் 35 சதவீதம் கூலி உயர்வு வழங்குவது என ஒப்பந்தம் கையெழுத்தானது.உயர்த்தப்பட்ட புதிய கூலி உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

    Next Story
    ×