தந்தை பெரியாருக்கு பிடித்த சொல் சுயமரியாதை- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

பல நூற்றாண்டு காலமாக உலகின் தலைசிறந்த அறிவாளிகளை உருவாக்கியுள்ளது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்.ஒரு இனத்துக்கே சுயமரியாதை உணர்வை ஊட்டியவர் பெரியார்.
தந்தை பெரியாருக்கு பிடித்த சொல் சுயமரியாதை- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
Published on

லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியாரின் திருவுருவப் படத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டை ஒட்டி பெரியாரின் படத்தை திறந்து வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

* பெரியார் உலகமயமாகிவிட்டார் என்பதற்கு உதாரணம் தான் ஆக்ஸ்போர்டு பல்கலையில் பெரியார் படம் திறக்கப்பட்டுள்ளது.

* பல நூற்றாண்டு காலமாக உலகின் தலைசிறந்த அறிவாளிகளை உருவாக்கியுள்ளது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்.

* உலகம் முழுக்க பெரியார் தேவைப்படுகிறார் என்பதன் அடையாளம்தான் ஆக்ஸ்போர்டு பல்கலையில் அவரது உருவப்படம் திறக்கப்பட்டுள்ளது.

* பெரியாரின் பேரன் என்ற கம்பீரத்துடன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் அவரது உருவப்படத்தை திறந்து வைத்தேன்.

* பகுத்தறிவு பகலவன் பெரியாரின் திருவுருவப் படத்தை ஆக்ஸ்போர்டு பல்கலையில் திறந்து வைத்தது என் வாழ்நாள் பெருமை.

* சமூகத்துக்கான வாழ்வியல் தத்துவத்தை உலகத்துக்கு எடுத்துரைத்தவர் பெரியார்.

* ஒரு இனத்துக்கே சுயமரியாதை உணர்வை ஊட்டியவர் பெரியார்.

* பகுத்தறிவு, சமத்துவம், பெண்கள் முன்னேற்றத்துக்கு அயராது பாடுபட்டவர் பெரியார்.

* தந்தை பெரியாருக்கு மிகவும் பிடித்தமான சொல் சுயமரியாதை என்றார். 

X

Maalai Malar
www.maalaimalar.com