என் மலர்
உலகம்
- இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் செய்தியாளர்களை சந்தித்தார்.
- இந்தியாவை விமர்சிக்கும்போது, அவர் பிரதமர் மோடியைப் பாராட்ட முன்வருகிறார். அவர்களுக்கு இடையே ஒரு நம்பமுடியாத உறவு உள்ளது
ரஷியாவிடம் குறைந்த விலையில் எண்ணெய் வாங்கி உக்ரைன் போருக்கு நிதியளிப்பதாக இந்தியாவின் பொருட்களுக்கு 50 சதவீதம் விதித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப். இதைதொடர்ந்து இந்தியா - அமெரிக்கா உறவுகளில் விரிசல் ஏற்பட்டது. இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக பேச்சுவார்தைகளிலும் சுணக்கம் உருவானது.
இந்நிலையில் இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், " ரஷியாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தச் செய்வது எங்கள் நிர்வாகத்தின் முன்னுரிமை.
வர்த்தக ஒப்பந்தத்திலிருந்து நாம் வெகு தொலைவில் இல்லை. அவர்கள்(இந்தியா) இந்த ஒப்பந்தத்தின் விவரங்களைப் பற்றி எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
மற்ற நாடுகளை விட சில நேரங்களில் இந்தியாவிடமிருந்து நாங்கள் அதிகமாக எதிர்பார்க்கிறோம். அடுத்த சில வாரங்களில் இந்தப் பிரச்சினை தீர்க்கப்படும் என்று நான் நினைக்கிறேன்" என்று தெரிவித்தார்.
மேலும் டிரம்ப் - மோடி உறவு குறித்து பேசிய கோர், " நீங்கள் கவனித்திருந்தால் தெரியும். அதிபர் டிரம்ப் மற்ற நாடுகள் மீது வரி விதிக்க நேரும்போதெல்லாம் அந்த நாடுகளின் தலைவர்களை அவர் குறிவைக்கிறார். ஆனால் இந்தியாவை விமர்சிக்கும்போது, அவர் பிரதமர் மோடியைப் பாராட்ட முன்வருகிறார். அவர்களுக்கு இடையே ஒரு நம்பமுடியாத உறவு உள்ளது" என்று தெரிவித்தார்.
இதற்கிடையே அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேசுகையில், "வர்த்தக ஒப்பந்த விவாகரத்தில் மிகவும் நல்ல முறையில் விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பிரதமர் மோடியும் அதிபர் டிரம்பும் இந்தாண்டு நவம்பர் மாதத்துக்குள் ஒரு நல்ல ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். இருதரப்பிலும் திருப்தியடைந்துள்ளனர்'' என்று தெரிவித்தார்.
அதேநேரம், இந்தியாவுடனான வர்த்தகம் குறித்து அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஹாவர்ட் லூட்னிக் பேசுகையில், ''ரஷியாவுடன் எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தினால் மட்டுமே, வர்த்தகப் பிரச்னைகள் தீர்க்கப்படும்'' என்று தெரிவித்தார்.
இந்தியா ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்திச் செய்வதே அமெரிக்காவின் முதன்மை நோக்கமாக இருக்கும் நிலையில் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படும் என்று இரு தரப்பும் கூறுவதில் முரண்பாடு எழுந்துள்ளது.
இதனால் ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்துகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் எந்த காரணம் கொண்டும் ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த மாட்டோம் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்மையில் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
- மத்தியஸ்தம் செய்த நாடு மீதே இஸ்ரேல் நடத்திய தாக்குதலை ஐ.நா, இந்தியா, ஈரான், சவுதி அரேபியா ஆகியவை கண்டித்தன.
- ஒட்டுமொத்த வளைகுடாவும் அபாயத்தில் இருக்கிறது.
காசாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து விவாதிக்க ஹமாஸ் அரசியல் தலைவர்கள் கத்தார் தலைநகர் தோஹாவில் கடந்த செப்டம்பர் 9 அன்று கூடியிருந்தனர்.
அப்போது, இஸ்ரேல் போர் விமானங்கள் திடீரென கத்தாரில் ஹமாஸ் அலுவலகம் மீது வான்வழித் தாக்குதல் நடத்தின.
இதில், ஹமாஸ் தலைவர்கள் உயிர் தப்பினர். ஆனால், 5 ஹமாஸ் உறுப்பினர்களும், ஒரு கத்தார் பாதுகாப்புப் படையினரும் கொல்லப்பட்டனர்.
அமைதி திரும்ப மத்தியஸ்தம் செய்த நாடு மீதே இஸ்ரேல் நடத்திய தாக்குதலை ஐ.நா, இந்தியா, ஈரான், சவுதி அரேபியா ஆகியவை கண்டித்தன.
இந்த தாக்குதல் கோழைத்தனமானது என கத்தார் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் முன்னதாக கண்டித்திருந்தார்.
இந்நிலையில் தாக்குதல் குறித்து அந்நாட்டு பிரதமர் அப்துல் ரஹ்மான் அல் தானி நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், தாக்குதல் நடைபெற்ற அன்று காலை நான் பிணைக் கைதி ஒருவரது குடும்பத்தினருடன் பேசினேன். அவர்கள் அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து கவனிக்கின்றனர். ஆனால், தாக்குதலின் மூலம் நேதன்யாகு அந்த பிணைக் கைதிகளுக்கான அனைத்து நம்பிக்கையையும் கொன்றுவிட்டார்.
இஸ்ரேலால் ஒட்டுமொத்த வளைகுடாவும் அபாயத்தில் இருக்கிறது. இஸ்ரேலின் அட்டூழியம் மற்றும் காட்டுமிராண்டித்தனம் தொடர்வதைத் தடுக்க விரைவில் நடவடிக்கை எடுக்க அரபு - இஸ்லாமிய உச்சி மாநாடு நடைபெறும். அதில் இஸ்ரேல் மீதான பதிலடி தாக்குதல் குறித்து முடிவெடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.
- குயின்ஸ்லாந்து மாகாணத்தில் உள்ள லாக் ஹார்ட் ஆற்றில் ஏராளமான முதலைகள் காணப்படுகின்றன.
- ஹோல்ஸ்டனின் இந்த செயலுக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கான்பெரா:
அமெரிக்காவைச் சேர்ந்த சமூக வலைதள பிரபலம் மைக் ஹோல்ஸ்டன். இவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சமூக வலைதளங்களில் பின்தொடர்கின்றனர். சமீபத்தில் இவர் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுலா சென்றிருந்தார். அங்கு குயின்ஸ்லாந்து மாகாணத்தில் உள்ள லாக் ஹார்ட் ஆற்றில் ஏராளமான முதலைகள் காணப்படுகின்றன.
அங்கு சென்ற அவர் அதில் ஒரு முதலையின் கழுத்தை இறுக பிடித்தார். பின்னர் அதனுடன் மல்யுத்தம் செய்வதுபோல வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார். அந்த வீடியோ வைரலான நிலையில் அதுவே அவருக்கு பிரச்சனையாகவும் அமைந்தது.
ஹோல்ஸ்டனின் இந்த செயலுக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவரை கைது செய்ய வேண்டும் என கோரிக்கைகளும் வலுத்தன. அதன்பேரில் ஆஸ்திரேலிய போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி நடுரோட்டில் கவிழ்ந்து வெடித்துச் சிதறியது.
- இந்த தீயால் சாலையில் சென்று கொண்டிருந்த 18 வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன.
மெக்சிகோ சிட்டி:
மெக்சிகோ தலைநகர் மெக்சிகோ சிட்டி நெடுஞ்சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும். அங்கு கியாஸ் டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.
அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி நடுரோட்டில் கவிழ்ந்தது. அதன்பின் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இந்த தீயால் சாலையில் சென்று கொண்டிருந்த 18 வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன. இதனால் அந்த இடம் போர்க்களம் போல மாறியது.
இதையடுத்து அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த கோர விபத்தில் சிக்கி 8 பேர் உடல் கருகி பலியாகினர். 90-க்கும் மேற்பட்டோருக்கு படுகாயம் ஏற்பட்டது. மீட்பு படையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனால் அந்த நெடுஞ்சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- அதிபர் டிரம்பின் தீவிர ஆதரவாளரான சார்லி கிர்க் சுட்டுக் கொல்லப்பட்டார்.
- இச்சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் தீவிர ஆதரவாளரான சார்லி கிர்க் (31) சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வலதுசாரி ஆதரவாளரான சார்லி கிர்க், உட்டா பல்கலைகழகத்தில் மாணவர்களிடையே பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென அவரது கழுத்தில் குண்டு துளைத்தது. இதனையடுத்து உடனடியாக அறுவை சிகிச்சை செய்தும் சிகிச்சை பலனின்றி சார்லி கிர்க் உயிரிழந்தார்.
சார்லி கிர்க் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்த அதிபர் டிரம்ப், கொலையில் சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரையும் அமெரிக்க அரசாங்கம் கண்டுபிடித்து தண்டிக்கும் என காட்டமாக தெரிவித்தார்.
இந்நிலையில், சார்லி கிக்குக்கு அமெரிக்க அரசின் உயர்ந்த மெடல் ஆப் பிரீடம் விருது விரைவில் வழங்கப்படும் என அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
- வன்முறையை பயன்படுத்தி சிறையை உடைத்து கைதிகள் தப்பி ஓட்டம்.
- ஒரு சிறையில் இருந்து 692 பேர் தப்பி ஓடிய நிலையில், ஒரு கைதி திரும்பி வந்து சரணடைந்துள்ளார்.
நேபாளத்தில் ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராக சமூக வலைத்தளம் மூலம் குரூப் உருவாக்கி இளைஞர்கள் போராட்டத்திற்கு ஆதரவு திரட்டி வந்தனர். அதனைத்தொடர்ந்து அரசு சமூக வலைத்தளங்களுக்கு தடைவிதித்தது. இதனால் இளைஞர்கள் வீதியில் இறங்கி போராடினர். இந்த போராட்டம் வன்முறையாக வெடித்தது. அரசு கட்டிடங்களை தீவைத்து கொழுத்தினர்.
இதனைப் பயன்படுத்தி நாட்டில் உள்ள 25-க்கும் மேற்பட்ட சிறைச்சாலைகள் உடைக்கப்பட்டு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் தப்பி ஓடினர்.
இதில் நேபாளத்தின் தொலைதூர வடக்கு மாகாணமான கைலாலியின் தலைநகர் தங்காடியில் உள்ள சிறையும் உடைக்கப்பட்டு கைதிகள் தப்பி ஓடினர். இந்த சிறையில் இருந்து சுமார் 692 சிறைக்கைதிகள் தப்பி ஓடினர். தப்பித்துச் சென்ற ஒருசில நாட்களில் ஒரேயொரு கைதி மீண்டும் சிறைக்கு திரும்பியுள்ளார்.
அடுத்த அரசு அமைக்கப்பட்ட பிறகு, தண்டனைக் காலம் இரண்டு மடங்காக அறிவிக்கப்படலாம் என்ற அச்சத்தில் திரும்பி வந்ததாக தெரிவித்துள்ளார். தன்னுடைய தவறு எனக்கூறி சிறையில் சரணடைந்துள்ளார். ஆனால் அதிகாரிகள் அவரது அடையாளத்தை வெளியிடவில்லை.
தப்பி ஓடியிருக்கலாம். ஆனால் போலீஸ் மீண்டும் அவரை கைது, சிறையை உடைத்து தப்பிச் சென்றதாக புதிய குற்றாட்டுக்கு ஆளானால், தண்டனை மேலும் அதிகமாகவும் என்பதை உணர்ந்து சரணடைந்துள்ளார்.
- முன்னாள் தலைமை நீதிபதி இடைக்கால பிரதமராக பதவி ஏற்க வாய்ப்பு இருந்தது.
- தற்போது அவருக்குப் பதிலாக இன்ஜினீயரை போராட்டக்குழுவினர் பரிந்துரை செய்துள்ளதாக தகவல்.
அரசியல் தலைவர்களின் ஊழல்களை எதிர்த்து இளைஞர்கள் ஜென் இசட் போராட்டங்கள் (Gen Z protests) என்ற பெயரில் சமூக வலைத்தளங்கள் மூலம் பிரசாரம் மேற்கொண்டனர். இதனால் நேபாளம் அரசு சமூக வலைத்தளங்களுக்கு தடைவித்தது.
இதனால் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் வன்முறையாக வெடித்தது. பாராளுமன்றம் உள்ளிட்ட அரசு கட்டிடங்களுக்கு தீவைத்தனர். வன்முறை மற்றும் துப்பாக்கி சூட்டில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரழந்தனர்.
போராட்டம் எதிரொலியால் ஜனாதிபதி, பிரதமர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனால் இடைக்கால அரசு அமைத்து உடனடியான போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ராணுவம் இதற்கான முயற்சியை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது.
நேற்று முன்னாள் தலைமை நீதிபதியான சுஷிலா கார்கி இடைக்கால பிரதமாக பதவி ஏற்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.
ஜென் இசட் பேராட்டம் குழுக்கள் ஆலோசனை நடத்தி காத்மாண்டு மேயர் பலேந்த்ரா பலேன் ஷா மற்றும் சுஷிலா கார்கி ஆகியோர் பெயர்களை பரிசீலனை செய்துள்ளது.
முதல் தேர்வு காத்மாண்டு மேயர் பலேந்த்ராவாகத்தான் இருந்துள்ளார். ஆனால், இவர் இடைக்கால அரசின் தலைவராக இருக்க மறுத்துவிட்டதாக தெரிகிறது. இதற்கிடையே முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்கி, தற்காலிய கட்டுப்பாட்டில் புதிய அரசு அமைப்பது தொடர்பாக ராணுவத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், கீசிங் என்பவரை இடைக்கால பிரதமராக நியமிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது. குல் மான் கீசிங் நேபாளத்தின் மின்சார நெருக்கடியை சமாளித்த திறமையான என்ஜினீயர் ஆவார். இவர் தேசப்பற்று கொண்டவர். எல்லோருக்கும் பிடித்தமானவர் என போராட்டக்காரர்கள் கூறுகின்றனர்.
முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்கியை போராட்டக்காரர்களில் ஒரு பிரிவினர் நிராகரித்துவிட்டதாகத் தெரிகிறது. முன்னாள் நீதிபதிகள் பிரதமராக வருவதை அரசியலமைப்பு தடை செய்கிறது என்றும், 73 வயதில் அவர் 'மிகவும் வயதானவர்' என்றும் அவர்கள் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால இடைக்கால தலைவரை நியமிப்பதில் குழப்பமான சூழ்நிலை நிலவி வருகிறது.
நேபாள அரசியலமைப்பின்படி, ஒரு கட்சியை சேர்ந்தவர், அவருக்கு மெஜாரிட்டி இருக்கும் பட்சத்தில் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார். அப்படி இல்லை என்றால், ஜனாதிபதி நியமனம் செய்வார். அல்லது எதாவது எம்.பி. முன் முயற்சி மேற்கொண்டு, நம்பிக்கை வாக்கெடுப்பபை எதிர்கொள்ள வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்தால், பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படும்.
- விண்வெளித் துறையில் அமெரிக்கா - சீனா இடையே போட்டி அதிகரித்து வருகிறது.
- நிலாவுக்கு மனிதர்களை அனுப்ப அமெரிக்கா மற்றும் சீனா தீவிரமாக வேலை செய்து வருகின்றன.
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா பல்வேறு விண்வெளியை ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது.
விண்வெளித் துறையில் அமெரிக்கா - சீனா இடையே போட்டி அதிகரித்து வருகிறது. நிலா மற்றும் செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்வதில் உலக நாடுகள் மும்முரம் காட்டி வருகின்றன. நிலா மற்றும் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்ப அமெரிக்கா மற்றும் சீனா தீவிரமாக வேலை செய்து வருகின்றன.
இந்நிலையில், நிலா மற்றும் சீனாவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் குறித்த விவரங்கள் சீனாவுக்கு தெரிந்துகூட கூடாது என்பதற்காக நாசாவில் வேலை செய்ய சீனர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாசா மையத்திற்கு சீனர்கள் வரவும், விண்வெளித் திட்டங்கள் தொடர்பான தரவுகளை அணுகவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
- இஸ்ரேல் படையினர் வான்வழி தாக்குதலை நடத்தினர்.
- தலைநகர் சனாவில் உள்ள ராணுவ தலைமையகம், எரிபொருள் நிலையம் உள்ளிட்ட இடங்களில் தாக்குதல்.
ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செயல்பட்டு வருகிறார்கள். பாலஸ்தீனத்தின் காசாமுனை மீதான இஸ்ரேலின் போரை கண்டித்து, அந்நாட்டின் மீது 2023 முதல் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது.
இந்த நிலையில் ஏமன் தலைநகர் சனா உள்பட பல பகுதிகளில் இஸ்ரேல் படையினர் வான்வழி தாக்குதலை நடத்தினர்.
தலைநகர் சனாவில் உள்ள ராணுவ தலைமையகம், எரிபொருள் நிலையம் உள்ளிட்ட இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலில் 35 பேர் பலியானார்கள். 130 -க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
சில நாட்களுக்கு முன்பு இஸ்ரேல் விமான நிலையம் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் டிரோன் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- பணக்காரர்கள் பட்டியலில் எலான் மஸ்க் சில மணிநேரங்கள் 2 ஆம் இடத்தில் இருந்தார்.
- 384 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் மஸ்க் மீண்டும் முதலிடத்தை பிடித்தார்.
ப்ளூம்பர்க் வெளியிட்ட உலக பணக்காரர்கள் பட்டியலில் எலான் மஸ்க்கை பின்னுக்கு தள்ளி, ஆரக்கிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் லேரி எல்லிசன் முதலிடம் பிடித்து அசத்தினார். ஆனால் அடுத்த சில மணிநேரங்களில் எலான் மஸ்க் மீண்டும் முதல் இடம் பிடித்தார்.
ஆரக்கிள் நிறுவன பங்குகளில் திடீர் உயர்வால் உலக பணக்காரர்களின் பட்டியலில் சில மணிநேரம் லேரி எல்லிசன் முதலிடம் பிடித்திருந்தார்.
தற்போது 384 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் மஸ்க் தன்னுடைய முதலிடத்தை தக்கவைத்துள்ளார்.
383 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் லேரி எல்லிசன் 2 ஆம் இடம் பிடித்துள்ளார். 264 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் மெட்டா நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் 3 ஆம் இடமும் 252 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசாஸ் 4 ஆம் இடம் பிடித்துள்ளார்.
- சார்லி கிர்க் பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென அவரது கழுத்தில் குண்டு துளைத்தது.
- உடனடியாக அறுவை சிகிச்சை செய்தும் சிகிச்சை பலனின்றி சார்லி கிர்க் உயிரிழந்தார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் தீவிர ஆதரவாளரான சார்லி கிர்க் (31) சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வலதுசாரி ஆதரவாளரான சார்லி கிர்க், உட்டா பல்கலைகழகத்தில் மாணவர்களிடையே பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென அவரது கழுத்தில் குண்டு துளைத்தது. இதனையடுத்து உடனடியாக அறுவை சிகிச்சை செய்தும் சிகிச்சை பலனின்றி சார்லி கிர்க் உயிரிழந்தார்.
சார்லி கிர்க்கின் கொலைக்கு சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரையும் அமெரிக்க அரசாங்கம் கண்டுபிடித்து தண்டிக்கும் என்று டிரம்ப் தனது சமூக வலைதள பதிவில் காட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் அரசியல் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சார்லி கிர்க்கை சுட்டவரை இதுவரை போலீசார் கைது செய்யவில்லை.
- எலிசனின் சொத்து மதிப்பு 101 பில்லியன் டாலர்களாக உயர்ந்தது.
- ஆரக்கிள் நிறுவனத்தின் 41 சதவீத பங்குகளை எலிசன் தன்வசம் வைத்துள்ளார்.
ஆரக்கிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் லேரி எலிசன், உலகின் முதல் பணக்காரராக ஆகி உள்ளார். தனது சொத்து மதிப்பில் எலான் மஸ்க்கை அவர் முந்தி உள்ளார்.
ஆரக்கிள் இணை நிறுவனரின் மொத்த நிகர மதிப்பு எலான் மஸ்க்கின் 385 பில்லியன் டாலர்களுடன் ஒப்பிடும்போது 393 பில்லியன் டாலர்களைத் தொட்டதாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
தொழில்நுட்ப நிறுவனமான ஆரக்கிளின் பங்குகள் 43 சதவீதம் வரை உயர்ந்ததால், உலகின் மிகப் பெரிய பணக்காரர் என்ற தனது இடத்தை எலோன் மஸ்க் இழந்துள்ளார். ஆரக்கிள் நிறுவனத்தின் 41 சதவீத பங்குகளை எலிசன் தன்வசம் வைத்துள்ளார். அதன் மதிப்பு 101 பில்லியன் டாலர்களாக உயர்ந்தது.
ஆரக்கிளை இணைந்து நிறுவிய 81 வயதான எலிசன், தற்போது தலைவராகவும் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாகவும் உள்ளார். அவரது நிகர மதிப்பில் பெரும்பகுதி தரவுத்தள மென்பொருள் நிறுவனத்தில் உள்ளது.
தற்போது எலிசன் மற்றும் எலான் மஸ்க் ஆகியோர் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர்.






