என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • இட ஒதுக்கீட்டு இடங்களில் சரிக் கட்டப்பட்டுள்ளனவா என்பதும் ஆய்வு செய்யப்பட வேண்டும்.
    • எந்தெந்த ஐஐடிகள் இட ஒதுக்கீட்டு நெறிமுறைகளை மீறி இருக்கின்றன என்பதும் பொது வெளிக்கு தெரிய வரும்.

    சென்னை:

    மதுரை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எக்ஸ் தள பக்கத்தில் 'ஐ.ஐ.டி இட ஒதுக்கீடு; முனைவர் படிப்பில் 560 ஓ.பி.சி, எஸ்.சி, எஸ்.டி மாணவர் இடங்கள் பறிப்பு' என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள பதிவில்,

    இந்தியாவில் உள்ள ஐஐடிகளில் 2023-24 கல்வி ஆண்டில் எத்தனை முனைவர் பட்ட மாணவர்கள் அனுமதிக்கப்பட்டார்கள், அவர்களில் எத்தனை பேர் எஸ்.சி, எஸ்.டி, இதர பிற்படுத்தப்பட்டோர் என்பதை துறைவாரியாக தருமாறு நான் பாராளுமன்றத்தில் கேள்வி (922/10.02.2025) எழுப்பி இருந்தேன். அதற்கான பதிலை கல்வி இணையமைச்சர் டாக்டர் சுகந்தா மஜும்தார் பாராளுமன்றத்தில் தந்துள்ளார்.

    நான் கேட்ட கேள்விக்கு ஒரே வரியில் முனைவர் படிப்புகளுக்கு மொத்தம் 6210 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்களில் 2484 பேர் எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி மாணவர்கள் என்று தெரிவித்திருக்கிறார். பதிலிலுள்ள மற்ற வரிகள் எல்லாம் எவ்வாறு ஒன்றிய அரசு ஐஐடிகளுக்கு இட ஒதுக்கீடு பற்றி வலியுறுத்தி இருக்கிறது, அதை ஐஐடி நிறுவனங்கள் எவ்வாறு அமலாக்குகின்றன என்பதை பற்றிய வெற்று விளக்கங்களாகவே உள்ளன. நான் கேள்வியில் எழுப்பி உள்ளது போல, இட ஒதுக்கீட்டின் வாயிலாக மாணவர்கள் பெற்ற அனுமதி விவரங்களை, பிரிவு வாரியாக துறைவாரியாக நிறுவனவாரியாக அமைச்சர் தரவில்லை. இது தற்செயலானதாக கருதப்படவில்லை. முழு விவரங்களை தருவது இட ஒதுக்கீட்டு அமலாக்கத்தில் உள்ள இடைவெளிகளை அம்பலப்படுத்தும் என்பதால் நோக்கத்துடன் மறைக்கப்பட்டு இருக்கிறது என்றே நினைக்கிறேன். ஆனால் அமைச்சர் தந்துள்ள அரைகுறை விவரங்களைக் கொண்டே இட ஒதுக்கீடு முறையாக கடைப்பிடிக்கப்படாததை அம்பலத்திற்கு கொண்டு வர வந்துள்ளது.

    6210 மொத்த மாணவர் அனுமதிகளில் 2484 இட ஒதுக்கீட்டு பிரிவினர் என்றால் 40% மட்டுமே வருகிறது. ஓ.பி.சி 27 %, எஸ்.சி 15%, எஸ் டி 7.5% என்றால் மொத்தம் 49.5 % இடங்கள் இட ஒதுக்கீட்டின் கீழ் வந்திருக்க வேண்டும். இதன்படியே 590 இடங்களை எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி மாணவர்கள் பறி கொடுத்துள்ளனர் என்பது தெளிவாகிறது.

    பொதுப் பட்டியல் இடங்களில் எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி மாணவர்கள் இடம்பெற்றுள்ளார்களா? அல்லது அந்த இடங்கள் இட ஒதுக்கீட்டு இடங்களில் சரிக் கட்டப்பட்டுள்ளனவா என்பதும் ஆய்வு செய்யப்பட வேண்டும். இட ஒதுக்கீட்டு பிரிவினர் விவரங்களை தனித்தனியாக தந்தால் எந்தெந்த ஐஐடிகள் இட ஒதுக்கீட்டு நெறிமுறைகளை மீறி இருக்கின்றன என்பதும் பொது வெளிக்கு தெரிய வரும்.

    பாராளுமன்றத்தில் முழுமையான பதில் தரப்படவில்லை என்பதை தெரிவித்தும், முழு விவரங்களை வெளியிடுமாறும் கேட்டு ஒன்றிய கல்வி இணை அமைச்சர் டாக்டர் சுகந்தா மஜும்தார் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன் என்று கூறியுள்ளார்.



    • உருது கவிஞரும் காங்கிரஸ் எம்.பி.யுமான இம்ரான் பிரதாப்கர் மீது குஜராத் காவல்துறை வழக்குப் பதிவு செய்தது.
    • படைப்பாற்றல் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தனர்.

    சமீபத்தில் சமூக ஊடகங்களில் ஒரு கவிதையைப் பதிவிட்டதற்காக உருது கவிஞரும் காங்கிரஸ் எம்.பி.யுமான இம்ரான் பிரதாப்கர் மீது குஜராத் காவல்துறை வழக்குப் பதிவு செய்தது.

    இம்ரான் பதிவிட்ட கவிதை வெறுப்பு மற்றும் வன்முறை செய்தியைப் பரப்புவதாகக் கூறி, போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தனர். வழக்கை ரத்து செய்ய கோரி இம்ரான் பிரதாப்கர் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். ஆனால் குஜராத் உயர்நீதிமன்றம் எஃப்ஐஆரை ரத்து செய்ய மறுத்துவிட்டது. இதைத்தொடர்ந்து அவர் உச்ச நீதிமன்றம் சென்றார்.

    இதன் மீதான விசாரணை தற்போது நீதிபதிகள் அபய் எஸ் ஓகா மற்றும் உஜ்ஜல் பூயான் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இம்ரானுக்கு ஆதரவாக மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் ஆஜரானார். எதிர் தரப்பில் குஜராத் அரசு வழக்கறிஞர் ஆஜரானார்.

    விசாரணையின்போது பேசிய நீதிபதிகள், குஜராத் காவல்துறையும் உயர் நீதிமன்றமும் இந்த உருது கவிதையின் உண்மையான அர்த்தத்தைப் புரிந்து கொள்ளத் தவறிவிட்டது. தயவுசெய்து உங்கள் புத்தியை பயன்படுத்துங்கள். இது ஒரு கவிதை மட்டுமே. எந்த சமூகத்திற்கும் எதிரானது அல்ல. "யாராவது வன்முறையில் ஈடுபட்டாலும் கூட, நாம் அதில் ஈடுபடுவதில்லை" என்பதே இந்தக் கவிதையின் செய்தி. படைப்பாற்றல் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து வழக்கு மூன்று வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. எஃப்ஐஆரில் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் முன்பு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

    • சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு ஒப்பந்தம் போட்டுள்ளார்.
    • தி.மு.க.வுக்கு எதிரான மனநிலையில் உள்ள கட்சிகளுடன் ரகசிய ஆலோசனை

    சென்னை:

    தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

    அந்த வகையில் நடிகர் விஜய்தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார்.

    2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு விஜய் பல்வேறு வியூகங்களை வகுத்துள்ளார்.

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்ற தனது முதல் அரசியல் மாநாட்டில் பேசிய விஜய் வருகிற சட்ட மன்றத் தேர்தலில் ஆட்சியை பிடிப்போம் என்றும் நம்மோடு கூட்டணி சேரும் கட்சிகளுக்கும் ஆட்சி அதிகாரத்தில் பங்களிப்போம் என்றும் பரபரப்பான கருத்துக்களை தெரிவித்தார்.

    இந்த நிலையில் பிரபல தேர்தல் வெற்றி வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோருடன் நடிகர் விஜய் சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு ஒப்பந்தம் போட்டுள்ளார்.

    இது தொடர்பாக கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள தமிழக வெற்றி கழகத்தின் அலுவலகத்தில் நேற்று பிற்பகலில் பிரசாந்த் கிஷோர்- விஜய் சந்திப்பு நடைபெற்றது.

    இந்த சந்திப்பின் போது இருவரும் மூன்று மணி நேரம் ஆலோசனை நடத்தி உள்ளனர். விஜய் கட்சியின் முன்னணி நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ஆரோக்கியசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

    இந்த சந்திப்பின் போது விஜய் கட்சியின் சார்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன என்பது பற்றிய தகவல்களை பிரசாந்த் கிஷோர் கேட்டு தெரிந்து கொண்டார்.

    தமிழகத்தில் வெற்றி பெறுவதற்கு தேவையான வியூகங்கள் என்னென்ன என்பது பற்றி அப்போது கலந்த ஆலோசிக்கப்பட்டது.

    இந்த ஆலோசனையின் போது தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கூட்டணி அமைத்து போட்டியிட்டால் தமிழகத்தில் எந்த மாதிரியான தாக்கம் ஏற்படும் என்பது பற்றியும் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க.வுடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி அமைக்கும் என்கிற கருத்து பரவலாகவே பேசப்பட்டு வரும் நிலையில் அது பற்றி நேற்று நடைபெற்ற சந்திப்பின் போது எந்தவித ஆலோசனையும் நடைபெற வில்லை என்கிற தகவலும் வெளியாகி உள்ளது.

    விஜய்யை முன்னிறுத்தி தேர்தலை சந்தித்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்பது அவரது தொண்டர்கள் மற்றும் ரசிகர்களின் கருத்தாக உள்ளது. இதனை மையப் படுத்தியே நேற்றைய ஆலோசனையில் பல்வேறு கருத்துக்கள் விவாதிக்கப்பட்டுள்ளன.

    எனவே தி.மு.க. ஆட்சியை அகற்றுவதற்காக களத்தில் உள்ள கட்சிகளோடு கைகோர்த்து தேர்தலை சந்திக்க விஜய் திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதற்காக ஆதவ் அர்ஜுனா மூலமாக காய் நகர்த்தி புதிய கூட்டணி அழைப்பதற்கு விஜய் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

    இதற்காக தி.மு.க.வுக்கு எதிரான மனநிலையில் உள்ள கட்சிகளுடன் ரகசிய ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

    இதன்மூலம் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் விஜய் அதிரடியாக களமிறங்க திட்ட மிட்டு இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    இதனால் இன்னும் போகப்போக விஜய்யின் அரசியல் வேகம் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அரசியல் களத்தில் புதிய எதிர்பார்ப்பையும் உருவாக்கி உள்ளது.

    • பரிதாபங்கள் கோபி - சுதாகர் நடிக்கும்படத்திற்கு Oh God Beautiful என்று பெயரிட்டுள்ளனர்.
    • இந்தப் படத்தை விஷ்ணு விஜய் இயக்குகிறார்.

    யூடியூப் தளத்தில் நகைச்சுவை வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர்கள் கோபி - சுதாகர். யூடியூப்-ஐ தாண்டி வெள்ளித்திரையில் திரைப்படம் எடுக்கும் முயற்சியில் இருவரும் ஈடுபட்டு வந்தனர். அதன்படி பொது மக்களிடம் பணம் வசூலித்து திரைப்படம் எடுக்க திட்டமிட்டனர். இருவரின் முயற்சிக்கு அதிக தொகை கிடைத்த போதிலும், அந்தப் படம் குறித்து அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகவில்லை.

    இந்த நிலையில், கோபி சுதாகரின் பரிதாபங்கள் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இரண்டாவது திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்படத்திற்கு ஓ காட் பியூட்டிபுல் ( Oh God Beautiful ) என்று பெயரிட்டுள்ளனர். இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை விஷ்ணு விஜய் இயக்குகிறார்.

    முன்னதாக இந்தப் படம் துவங்கியதாக தகவல்கள் வெளியாகின. தற்போது இந்தப் படத்தின் பெயர் வெளியாகி உள்ள நிலையில், அடுத்தடுத்த தகவவல்கள் ஒவ்வொன்றாக அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • செங்கோட்டையனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.
    • செங்கோட்டையன் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்டவர்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தலைவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் தொடர் கதையாகிவிட்டன.

    கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோரை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் ஒரு சாராரிடம் ஏற்பட்டுள்ளது.

    இதில் முதன்மையாக இருப்பவர் செங்கோட்டையன். அவருடன் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, நத்தம் விசுவநாதன், சி.வி.சண்முகம் உள்பட 6 மூத்த தலைவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களையும் ஒன்றிணைக்க வேண்டும். அப்படியானால்தான் கட்சி பலமாக இருக்கும்.

    தேர்தலில் வெற்றிபெற முடியும் என்று எடப்பாடி பழனிசாமியிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நேரில் வற்புறுத்தினார்கள். அவர்களது கருத்தை எடப்பாடி பழனிசாமி நிராகரித்து விட்டார். ஆனால் அதன் பிறகு கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    கட்சி நிழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும் அவர்களுடைய செயல்பாடுகளையும் எடப்பாடி பழனிசாமி கண்காணித்து வருகிறார்.

    செங்கோட்டையனை ஓரம் கட்டுவதில் தீவிரமாக இருப்பதாக கூறப்படுகிறது. சென்னையில் நடந்த எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவில் செங்கோட்டையனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.

    அதன் பிறகு எடப்பாடி பழனிசாமிக்கும் செங்கோட்டையனுக்கும் இடையேயான விரிசல் அதிகரிக்கத் தொடங்கியது. எந்த நிகழ்ச்சிக்கும் அவரை அழைப்பதும் இல்லை.

    இந்த நிலையில்தான் நேற்று முன்தினம் கோவை அருகே எடப்பாடி பழனிசாமிக்கு நடந்த பாராட்டு விழாவை செங்கோட்டையன் புறக்கணித்தார்.

    ஆனால் அந்த நிகழ்ச்சியை தான் புறக்கணிக்க வில்லை என்றும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்கள் இடம் பொறாததால் கலந்து கொள்ளவில்லை என்று பூசி மொழுகினார்.

    ஆனால் அது கட்சி சார்பற்று நடத்தப்பட்ட நிகழ்ச்சி என்று டி.ஜெயக்குமார் விளக்கம் அளித்தார். இதன்மூலம் செங்கோட்டையன் புறக்கணித்தது உறுதியானது.

    அது மட்டுமல்ல நேற்று சென்னை தலைமை கழகத்தில் காணொலி மூலம் டெல்லி அலுவலகம் திறக்கப்பட்ட நிகழ்ச்சியிலும் செங்கோட்டையன் கலந்து கொள்ளவில்லை.

    இதுபற்றி அவரது ஆதரவாளர்களிடம் கேட்டபோது அழைப்பிதழ் வழங்கப்பட வில்லை என்றார்கள். இருவரும் சமரசம் ஆவார்களா? என்ற எதிர்பார்ப்பு கட்சியினரிடம் ஏற்பட்டு உள்ளது.

    இதுபற்றி செங்கோட்டையனின் தீவிர ஆதரவாளர்கள் கூறியதாவது:-

    செங்கோட்டையன் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்டவர். மூத்த நிர்வாகி. அவருக்கு உரிய மரியாதையை கட்சி மேலிடம் வழங்கவில்லை. அதற்கு மாறாக அவரை மட்டம் தட்டும் வேலைகளையே செய்கிறார்கள்.

    செங்கோட்டையனின் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 4 பேருக்கு மாநில செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதுபற்றி அவரிடம் கலந்து பேசவில்லை.

    அது மட்டுமல்ல. அவர்களில் 2 பேர் கட்சிக்கு எதிராகவே செயல்பட்டவர்கள்.

    கட்சி நல்லா இருக்க வேண்டும் என்பதுதான் அவரது எண்ணம். அவர் எந்த முடிவெடுத்தாலும் கட்சி நலன் சார்ந்ததாகவே இருக்கும் என்றார்கள்.

    தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய நேரத்தில் இப்படி கட்சிக்குள் தலைவர்களிடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகள் தொண்டர்களை கவலையில் ஆழ்த்தி இருக்கிறது.

    இந்த கருத்து வேறுபாடுகளை களைந்து இருவரும் சமரசம் ஆகி கட்சியை பலப்படுத்தவும், கட்சியை வழி நடத்தவும் முன்வர வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

    ஆனால் இதுபற்றி அரசியல் பார்வையாளர்கள் சிலர் கூறும்போது, 2026 சட்டசபை தேர்தலை சந்திக்க எல்லா கட்சிகளும் தயாராகி கொண்டிருக்கின்றன. இந்த தருணத்தில் கட்சிகளுக்குள் ஏற்படும் குழப்பங்களுக்கு திரை மறைவு காரணங்கள் பல இருக்கும் என்றார்கள்.

    • சச்சின் படத்தின் காமெடி காட்சிகள் இன்றும் சமூக வலைத்தளத்தில் வலம் வந்துக் கொண்டுதான் உள்ளது.
    • தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட்டானது.

    கடந்த 2005 ஆம் ஆண்டு ஜான் மகேந்திரன் இயக்கத்தில் விஜய் மற்றும் ஜெனிலியா நடிப்பில் நடித்து வெளியான சச்சின் திரைப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி திரைப்படமாக அமைந்தது.

    இன்றும் இப்படத்தின் காமெடி காட்சிகள் இன்றும் சமூக வலைத்தளத்தில் வலம் வந்துக் கொண்டுதான் உள்ளது. விஜய் மற்றும் ஜெனிலியா இருவருக்கும் இடையே மிக அழகான கெமிஸ்டிரி இப்படத்தில் இருக்கும். இதனால் இந்த ஜோடி ரசிகர்கள் மத்தியில் பெருமளவு ரசிக்கப்பட்டனர்.

    இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்தார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட்டானது.

    இந்நிலையில் இந்தாண்டு ஏப்ரல் மாதம் சச்சின் திரைப்படம் வெளியாகி 20 வருடங்கள் நிறைவடையும் நிலையில் கோடையில் இப்படத்தை மீண்டும் ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தனது எக்ஸ் பக்கத்தில் போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • படிவங்களை 10.3.2025 அன்று முதல் பதிவேற்றம் செய்யலாம்.
    • பதிவேற்றம் செய்ய இறுதி நாள் 03.04.2025 அன்று மாலை 4 மணிவரை ஆகும்.

    தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் 625 வழித்தடங்களில் 3,436 அரசுப்பேருந்துகள், மாநகர போக்குவரத்துக்கழகம் மூலம் இயக்கப்பட்டு வருகிறது. பணிக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என தினந்தோறும் சுமார் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அரசு பேருந்துகளில் பயணம் செய்கின்றனர்.

    மேலும் மகளிருக்கான கட்டணம் இல்லா சேவை, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பஸ் பாஸ், முதியவர்களுக்கான சிறப்புச் சலுகை மற்றும் என மக்களுக்கு பயன் தரக்கூடிய பல திட்டங்களையும் மாநகரப் போக்குவரத்துக் கழகம் செயல்படுத்தி வருகிறது.

    சென்னையில் அரசுப்பேருந்துகள் மட்டுமே இயங்கி வந்த நிலையில், தனியார் பேருந்துகளையும் இயக்க மாநகர் போக்குவரத்துக்கழகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.

    இந்த நிலையில், மாநகர போக்குவரத்து கழகம் தனியார்மயமாக்குவதற்கான நடவடிக்கையில் அரசு இறங்கி உள்ளது.

    சென்னையில் GCC முறையில் 600 மின்சார பேருந்துகளை தனியார் இயக்க ஒப்பந்த புள்ளியை மாநகர போக்குவரத்து கழகம் கோரியுள்ளது. அதன்படி, மின்சார பேருந்துகளுக்கான நடத்துநர் நியமனம் போக்குவரத்து கழகம் சார்பிலும், பேருந்து பராமரிப்பு, ஓட்டுநர் நியமனம் உள்ளிட்டவை Gross Cost Contract அடிப்படையில் தனியார் மூலமாகவும் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

    ஒப்பந்தப்புள்ளி படிவங்களை https://tntenders.gov.in/. heetps://mtcbus.tin.gov.in/, https://tnidb.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பார்வையிட்டு கொள்ளலாம். ஒப்பந்ததாரர்கள் தங்களது ஒப்பந்தப்புள்ளி படிவங்களை அரசு இணையதள முகவரி https://tntenders.gov.in/nicgep/app-யில் பதிவேற்றம் செய்யலாம்.

    ஒப்பந்தப்புள்ளி படிவங்களை இன்று முதல் பதவிறக்கம் செய்து கொள்ளலாம். படிவங்களை 10.3.2025 அன்று முதல் பதிவேற்றம் செய்யலாம். பதிவேற்றம் செய்ய இறுதி நாள் 03.04.2025 அன்று மாலை 4 மணிவரை ஆகும். 

    • முதல் போட்டியில் அயர்லாந்து அணி ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது.
    • ஜிம்பாப்வே அணியை 63 ரன்களில் வீழ்த்தியுள்ளது.

    ஜிம்பாப்வே நாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து கிரிக்கெட் அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற முதலாவது மற்றும் ஒற்றை டெஸ்ட் போட்டியில் அயர்லாந்து அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.

    அயர்லாந்து அணி தனது முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை கடந்த 2018-இல் விளையாடியது. இதன் பிறகு 2023-ம் ஆண்டு வரை அயர்லாந்து அணி தொடர்ந்து விளையாடிய ஏழு டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வியை தழுவியது. இதைத் தொடர்ந்து அந்த அணி தற்போது ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் ஹாட்ரிக் வெற்றி பெற்றது.

    மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக ஹாட்ரிக் வெற்றி பெற்ற அணி என்ற பெருமையை அயர்லாந்து பெற்றுள்ளது. அபு தாபியில் நடைபெற்ற முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்திய அயர்லாந்து அணி, இரண்டாவது போட்டியில் ஜிம்பாப்வே அணியை 4 விக்கெட்டுகளிலும், மூன்றாவது போட்டியில் ஜிம்பாப்வே அணியை 63 ரன்களில் வீழ்த்தியுள்ளது.

    வெறும் பத்து டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடிய அயர்லாந்து அணி ஹாட் ட்ரிக் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. முன்னதாக தென் ஆப்பிரிக்கா அணி 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஹாட் ட்ரிக் வெற்றி பெற்றதே அதிவேக ஹாட் ட்ரிக் சாதனையாக இருந்து வந்தது. 

    • சுதந்திரா சேனானி எக்ஸ்பிரஸில் ஏற முண்டியடித்தனர்.
    • இதனால் பயணிகள் அச்சமும் கோபமும் அடைந்தனர்.

    உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா மிகவும் கோலாகலமாக நடந்து வருகிறது. கடந்த மாதம் 13-ந் தேதி தொடங்கிய இந்த நிகழ்வில் இதுவரை 40 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடி உள்ளனர்.

    மகா சிவராத்திரி நாளான பிப்ரவரி 26 ஆம் தேதி வரை இந்த நிகழ்வு நடைபெற இருக்கிறது. எனவே பல்வேறு இடங்களில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் பிரயாக்ராஜுக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். இதற்காக பிரயாக்ராஜுக்கு சிறப்பு ரெயில்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    இந்நிலையில் ரெயிலில் இடம் கிடைக்காமல் மக்கள் ஏசி பெட்டிகளை கபளீகரம் செய்த வீடியோ வைரலாகி வருகிறது.

    பீகாரில் உள்ள மதுபனி ரெயில் நிலையத்தில் நேற்று, மகா கும்பமேளா புறப்பட்ட பக்தர்கள் சுதந்திரா சேனானி எக்ஸ்பிரஸில் ஏற முண்டியடித்தனர்.

    ஆனால் ரெயிலில் ஏசி பெட்டிகள் உட்பட கூட்டத்தால் நிரம்பி வழிந்த நிலையில் பலருக்கு நிற்கக்கூட இடம்கிடைக்கவில்லை . பெட்டிகளின் கதவுகளையும் திறக்கமுடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பக்தர்கள், ஏசி பெட்டிகள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

    கல் வீச்சு காரணமாக ஏசி பெட்டிகளின் கண்ணாடிகள் உடைந்து உள்ளே அமர்ந்திருந்தவர்கள் மீது விழுந்தன. இதனால் பயணிகள் அச்சமும் கோபமும் அடைந்தனர்.

    தொடர்ந்து ரெயிலில் அமர்ந்திருந்தவர்களுக்கும் பிளாட்பாரத்தில் நின்றவர்களுக்கும் இடையே வாக்குவாதம் தொடங்கியது. இதனால் அங்கு பதட்டமான சூழல் நிலவியது. நிலைமையை பாதுகாப்பு அதிகாரிகள் பெரும் போராட்டத்துக்கு பின் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

    • விளையாட்டு பயிற்சி அளிக்கும் போது, மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.
    • பள்ளிக்கு விரைந்து சென்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள கிளிக்குடி பெருமாள் பட்டி பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது.

    இந்த பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு பெருமாள்பட்டியைச் சேர்ந்த கே. அடைக்கலம் (வயது44) என்பவர் பகுதி நேர உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

    இவர் விளையாட்டு பயிற்சி அளிக்கும் போது, மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. அதைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வசந்த குமார், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சண்முகம், மாவட்ட கல்வி அலுவலர் ஜெயந்தி உள்ளிட்ட அதிகாரிகள் அந்தப் பள்ளிக்கு விரைந்து சென்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    இதில் அடைக்கலம் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. அதைத் தொடர்ந்து அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் இலுப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அடைக்கலம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். இது தொடர்பாக விசாரணை அதிகாரி ஒருவர் கூறும் போது,

    கைதான அடைக்கலம் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக இந்த பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். விளையாட்டு பயிற்சியின்போது, பந்துகளை எடுத்துக் கொடுக்கும் சாக்கில் தங்களின் உடலை தொடுவதாகவும், மேலும் முகம் பார்த்து பேசாமல் உடலின் அங்கங்களை பார்த்து பேசுவதாகவும் 16-க்கும் மேற்பட்ட மாணவிகள் தெரிவித்தனர். இது குறித்து விரிவான விசாரணை நடந்து வருகிறது என்றார்.

    மணப்பாறையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் பள்ளி தாளாளரின் கணவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்.

    இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் நிலையில் அன்னவாசல் அருகே அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட விவகாரம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    • மிஷன் இம்பாஸிபிள் 8ம் பாகம் இந்தாண்டு மே 23-ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.
    • முந்தைய பாகத்தை இயக்கிய கிறிஸ்டோபர் மெக்யூரி இந்தப் பாகத்தையும் இயக்கியுள்ளார்.

    சீக்ரட் ஏஜண்டாக டாம் குரூஸ் நடித்து 1996 ஆம் ஆண்டு முதன் முதலில் மிஷன் இம்பாஸிபிள் படம் வெளியானது. முதல்பாகம் பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்தடுத்து 7-பாகங்கள் வெளியானது. இவை அனைத்துமே நல்ல வரவேற்பை பெற்றன.

    கடந்த ஆண்டு ஜூலை இந்த சீரிஸின் 7 பாகம் வெளியானது. அதில் 'ஏஐ தொழில்நுட்பம்' மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டது.

    இந்நிலையில், மிஷன் இம்பாஸிபிள் 8ம் பாகத்திற்கான புதிய டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. முந்தைய பாகத்தை இயக்கிய கிறிஸ்டோபர் மெக்யூரி இந்தப் பாகத்தையும் இயக்கியுள்ளார்.

    இப்படம் ஆண்டு மே 23-ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. முந்தைய பாகத்தில் ஒரு கீயை தேடி அவர் பயணம் செய்வார். இந்த பாகமும் அதை தேடியே கதைக்களம் அமைந்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தைப்பூச திருநாளையொட்டி மக்களுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
    • தைப்பூசம் திருநாளை அரசுப் பொது விடுமுறையாக நமது அதிமுக அரசு அறிவித்தமையைப் பெருமிதத்துடன் நினைவு கூர்கிறேன்.

    சென்னை:

    தைப்பூச திருநாளையொட்டி மக்களுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    வேல் ஏந்தி நம்மை காத்தருளும் தமிழ்க் கடவுளாம் முருகப் பெருமானின் தைப்பூச நன்னாளில், உலகத் தமிழர்கள் வாழ்வெல்லாம் மலர, தொட்டது யாவும் துலங்க, வெற்றி மேல் வெற்றி சேர முருகப் பெருமானின் பூரண அருளை வேண்டி வழிபடுவதுடன்,

    தைப்பூசம் திருநாளை அரசுப் பொது விடுமுறையாக நமது அதிமுக அரசு அறிவித்தமையைப் பெருமிதத்துடன் நினைவு கூர்கிறேன்.

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என கூறியுள்ளார். 



    ×