என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gopi Sudhakar"

    • பரிதாபங்கள் சேனலில் வெளியான 'சொசைட்டி பாவங்கள்' வீடியோ இணையத்தில் வைரலானது.
    • 'பரிதாபங்கள்' யூடியூப் சேனல் மீது வழக்கறிஞர் தனுஷ்கோடி புகார் கொடுத்துள்ளார்.

    யூடியூப் தளத்தில் நகைச்சுவை வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர்கள் கோபி - சுதாகர். இவர்களின் பரிதாபங்கள் சேனலுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

    அண்மையில் பரிதாபங்கள் சேனலில் வெளியான 'சொசைட்டி பாவங்கள்' வீடியோ இணையத்தில் வைரலானது. நெல்லை கவின் ஆணவக் கொலை தொடர்பாக இந்த வீடியோவை அவர்கள் வெளியிட்டிருந்தனர். இந்த வீடியோவில் சாதிவெறிக்கு எதிராக நகைச்சுவையுடன் சமூக கருத்துக்களை பேசியிருந்தது அனைவரையும் ஈர்த்தது.

    இந்நிலையில், 'பரிதாபங்கள்' யூடியூப் சேனல் மீது கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் தனுஷ்கோடி இந்த புகாரை கொடுத்துள்ளார்.

    அந்த புகார் மனுவில், பரிதாபங்கள் யூடியூப் சேனலில் இரு சமூகத்தினர் இடையே பிரச்சினையை உருவாக்கும் வகையில் பல்வேறு கருத்துக்கள் இருப்பதாகவும் குறிப்பிட்ட சமூகத்தின் அடையாளங்களை குறிப்பிட்டு அந்த சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசியிருக்கிறார்கள். அந்த வீடியோவை யூடியூப் தளத்தில் இருந்து நீக்க வேண்டும். பரிதாபங்கள் சேனலை தடை செய்யவேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கோபி, சுதாகர் மீது வழக்கு போடுவதெல்லாம் சமூக தீண்டாமையை காட்டுகிறது என்று சீமான் காட்டமாக தெரிவித்தார்.

    சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான், "கோபி, சுதாகர் மீது வழக்கு போடுவதெல்லாம் சமூக தீண்டாமையை காட்டுகிறது. சமூகத்தின் சாதிய கொடுமையை காட்டுகிறது. பெருமை எதில் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் சாதி, மதத்தில் இருக்கக்கூடாது. தமிழர்களுக்கு மொழி, இனம், தன்னுடைய வரலாறு, பண்பாட்டில் தான் பெருமை இருக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

    • ஓ காட் பியூட்டிபுல் திரைப்படத்தை விஷ்ணு விஜய் இயக்குகிறார்.
    • விடிவி கணேஷ், ரமேஷ் கண்ணா, சுரேஷ் சக்ரவர்த்தி, விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருக்கின்றனர்.

    கோபி சுதாகரின் பரிதாபங்கள் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் ஓ காட் பியூட்டிபுல் (Oh God Beautiful) என்ற திரைப்படத்தை விஷ்ணு விஜய் இயக்குகிறார்.

    விடிவி கணேஷ், ரமேஷ் கண்ணா, சுரேஷ் சக்ரவர்த்தி, விஜி சந்திரசேகர், சுபத்ரா ராபர்ட், முருகானந்தம் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருக்கின்றனர்.

    இந்நிலையில் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் லிரிக்கல் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. வேனும் மச்சா அமைதி என்ற தலைப்பில் வெளியாகியுள்ள இந்த சிங்கிள் பாடலை சிவகார்த்திகேயன் பாடியுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

    • பரிதாபங்கள் சேனலில் வெளியான 'சொசைட்டி பாவங்கள்' வீடியோ இணையத்தில் வைரலானது.
    • 'பரிதாபங்கள்' யூடியூப் சேனல் மீது வழக்கறிஞர் தனுஷ்கோடி புகார் கொடுத்துள்ளார்.

    யூடியூப் தளத்தில் நகைச்சுவை வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர்கள் கோபி - சுதாகர். இவர்களின் பரிதாபங்கள் சேனலுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

    அண்மையில் பரிதாபங்கள் சேனலில் வெளியான 'சொசைட்டி பாவங்கள்' வீடியோ இணையத்தில் வைரலானது. நெல்லை கவின் ஆணவக் கொலை தொடர்பாக இந்த வீடியோவை அவர்கள் வெளியிட்டிருந்தனர். இந்த வீடியோவில் சாதிவெறிக்கு எதிராக நகைச்சுவையுடன் சமூக கருத்துக்களை பேசியிருந்தது அனைவரையும் ஈர்த்தது.

    அதே சமயம் இந்த் வீடியோ டெலிட் ஆவதற்குள் பார்த்துவிடுங்கள் என்று நெட்டிசன்கள் இந்த வீடியோவை இணையத்தில் வைரலாக்கினர். ஏற்கனவே திருப்பதி லட்டு தொடர்பான வீடியோ மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றநிலையில், சில மணிநேரங்களிலேயே அந்த வீடியோ நீக்கப்பட்டது. பாஜக கொடுத்த அழுத்தத்தின் விளைவாக அந்த வீடியோ நீக்கப்பட்டது என்று கூறப்பட்டது.

    இந்நிலையில், 'பரிதாபங்கள்' யூடியூப் சேனல் மீது கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் தனுஷ்கோடி இந்த புகாரை கொடுத்துள்ளார்.

    அந்த புகார் மனுவில், பரிதாபங்கள் யூடியூப் சேனலில் இரு சமூகத்தினர் இடையே பிரச்சினையை உருவாக்கும் வகையில் பல்வேறு கருத்துக்கள் இருப்பதாகவும் குறிப்பிட்ட சமூகத்தின் அடையாளங்களை குறிப்பிட்டு அந்த சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசியிருக்கிறார்கள். அந்த வீடியோவை யூடியூப் தளத்தில் இருந்து நீக்க வேண்டும். பரிதாபங்கள் சேனலை தடை செய்யவேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பரிதாபங்கள் கோபி - சுதாகருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று திராவிடர் விடுதலை கழகத்தினர் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

    இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய திராவிடர் விடுதலை கழகத்தினர், " சவுத்ரி தேவர் என்பவர் கோபி சுதாகருக்கு மிரட்டல் எடுக்கும் வகையில் பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதி வெறி கும்பல்கள் கோபி, சுதாகரை மிரட்டி வருவதால் அவர்களுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்" என்று தெரிவித்தனர்.

    மேலும், பெரியார் ,அண்ணா விருது போல் சமூக நலன் கொண்டு செயல்படும் கோபி - சுகாதருக்கு தமிழக அரசு எம்.ஆர்.ராதா விருது வழங்கி கெளரவிக்க வேண்டும் என திராவிடர் விடுதலை கழகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பரிதாபங்கள் சேனலில் வெளியான 'சொசைட்டி பாவங்கள்' வீடியோ இணையத்தில் வைரலானது.
    • நெல்லை கவின் ஆணவக் கொலை தொடர்பாக இந்த வீடியோவை அவர்கள் வெளியிட்டிருந்தனர்.

    யூடியூப் தளத்தில் நகைச்சுவை வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர்கள் கோபி - சுதாகர். இவர்களின் பரிதாபங்கள் சேனலுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

    அண்மையில் பரிதாபங்கள் சேனலில் வெளியான 'சொசைட்டி பாவங்கள்' வீடியோ இணையத்தில் வைரலானது. நெல்லை கவின் ஆணவக் கொலை தொடர்பாக இந்த வீடியோவை அவர்கள் வெளியிட்டிருந்தனர். இந்த வீடியோவில் சாதிவெறிக்கு எதிராக நகைச்சுவையுடன் சமூக கருத்துக்களை பேசியிருந்தது அனைவரையும் ஈர்த்தது.

    அதே சமயம் இந்த் வீடியோ டெலிட் ஆவதற்குள் பார்த்துவிடுங்கள் என்று நெட்டிசன்கள் இந்த வீடியோவை இணையத்தில் வைரலாக்கினர். ஏற்கனவே திருப்பதி லட்டு தொடர்பான வீடியோ மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றநிலையில், சில மணிநேரங்களிலேயே அந்த வீடியோ நீக்கப்பட்டது. பாஜக கொடுத்த அழுத்தத்தின் விளைவாக அந்த வீடியோ நீக்கப்பட்டது என்று கூறப்பட்டது.

    இந்நிலையில், 'பரிதாபங்கள்' யூடியூப் சேனல் மீது கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் தனுஷ்கோடி இந்த புகாரை கொடுத்துள்ளார்.

    அந்த புகார் மனுவில், பரிதாபங்கள் யூடியூப் சேனலில் இரு சமூகத்தினர் இடையே பிரச்சினையை உருவாக்கும் வகையில் பல்வேறு கருத்துக்கள் இருப்பதாகவும் குறிப்பிட்ட சமூகத்தின் அடையாளங்களை குறிப்பிட்டு அந்த சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசியிருக்கிறார்கள். அந்த வீடியோவை யூடியூப் தளத்தில் இருந்து நீக்க வேண்டும். பரிதாபங்கள் சேனலை தடை செய்யவேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஓ காட் பியூட்டிபுல் படத்தை விஷ்ணு விஜய் இயக்குகிறார்.
    • விடிவி கணேஷ், ரமேஷ் கண்ணா, சுரேஷ் சக்ரவர்த்தி, விஜி சந்திரசேகர், சுபத்ரா ராபர்ட், முருகானந்தம் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருக்கின்றனர்.

    யூடியூப் தளத்தில் நகைச்சுவை வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர்கள் கோபி - சுதாகர். யூடியூப்-ஐ தாண்டி வெள்ளித்திரையில் திரைப்படம் எடுக்கும் முயற்சியில் இருவரும் ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில், கோபி சுதாகரின் பரிதாபங்கள் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் ஓ காட் பியூட்டிபுல் ( Oh God Beautiful ) என்ற இரண்டாவது திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியானது. இந்தப் படத்தை விஷ்ணு விஜய் இயக்குகிறார்.

    விடிவி கணேஷ், ரமேஷ் கண்ணா, சுரேஷ் சக்ரவர்த்தி, விஜி சந்திரசேகர், சுபத்ரா ராபர்ட், முருகானந்தம் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் புரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

    இந்நிலையில் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. வேனும் மச்சா அமைதி என்ற தலைப்பில் இந்த புரோமோ வெளியாக உள்ளது. 

    • பரிதாபங்கள் கோபி சுதாகர் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
    • யூடியூப் சேனலில் இந்த சீரிஸ் ஒளிபரப்பாக உள்ளது.

    டி.ஒ. கிரியேடிவ் லேப்ஸ், பரிதாபங்கள் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஸ்கேலர் நிறுவனங்கள் இணைந்து வழங்கும் புதிய இணைய தொடரை இயக்குநர் ஷாகித் ஆனந்த் இயக்குகிறார். இதில் பரிதாபங்கள் கோபி சுதாகர் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    ஸ்டார்ட் அப் துறையின் பின்னணியில் உருவாகியிருக்கும் காமெடி டிராமா சீரிஸ் 'கோடியில் இருவர்'. வரும் பிப்ரவரி 25 முதல் பரிதாபங்கள் யூடியூப் சேனலில் இந்த சீரிஸ் ஒளிபரப்பாகவுள்ளது. கோடியில் இருவர் சீரிசின் டிரையிலர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இணையம் முழுக்க வைரலாக பரவி வரும் இந்த டிரைலர் யூடியூப் தளத்தில், டிரெண்டாகி வருகிறது.

    ஐடி ஊழியர்கள், ஸ்டார்ட் அப் துவங்க ஆசைப்படும் இளைஞர்கள் என இன்றைய தலைமுறையினர் தங்கள் வாழ்வோடு எளிதில் தொடர்பு படுத்திக்கொள்ளும் வகையிலான திரைக்கதையுடன், நகைச்சுவை கலந்து, அனைவருக்கும் பிடிக்கும் வண்ணம், கலக்கலான சீரிசாக இந்த சீரிஸ் உருவாகியுள்ளது.

    இந்த சீரிசில் கோபி, சுதாகர் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க அஜய் ரத்தினம், டிராவிட் செல்வம், செல்லா, விவேக், நித்யஸ்ரீ, ராம்குமார் அண்ணாச்சி, ஆல்பர்ட் அஜய், அஸ்வத் போபோ, அர்ஜுன் மனோகர் (ஓர்ஜுன்), வெட்டி பையன் வெங்கட் மற்றும் நிறைமதி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். 

    • பரிதாபங்கள் கோபி - சுதாகர் நடிக்கும்படத்திற்கு Oh God Beautiful என்று பெயரிட்டுள்ளனர்.
    • இந்தப் படத்தை விஷ்ணு விஜய் இயக்குகிறார்.

    யூடியூப் தளத்தில் நகைச்சுவை வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர்கள் கோபி - சுதாகர். யூடியூப்-ஐ தாண்டி வெள்ளித்திரையில் திரைப்படம் எடுக்கும் முயற்சியில் இருவரும் ஈடுபட்டு வந்தனர். அதன்படி பொது மக்களிடம் பணம் வசூலித்து திரைப்படம் எடுக்க திட்டமிட்டனர். இருவரின் முயற்சிக்கு அதிக தொகை கிடைத்த போதிலும், அந்தப் படம் குறித்து அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகவில்லை.

    இந்த நிலையில், கோபி சுதாகரின் பரிதாபங்கள் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இரண்டாவது திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்படத்திற்கு ஓ காட் பியூட்டிபுல் ( Oh God Beautiful ) என்று பெயரிட்டுள்ளனர். இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை விஷ்ணு விஜய் இயக்குகிறார்.

    முன்னதாக இந்தப் படம் துவங்கியதாக தகவல்கள் வெளியாகின. தற்போது இந்தப் படத்தின் பெயர் வெளியாகி உள்ள நிலையில், அடுத்தடுத்த தகவவல்கள் ஒவ்வொன்றாக அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×