என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • சுழல் வெப் தொடர் பல்வேறு தரப்பு ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றது.
    • ‘சுழல்’ இணையத்தொடரின் 2ம் பாகம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

    விக்ரம் வேதா படத்தின் இயக்குனர்கள் புஷ்கர் - காயத்ரியின் சொந்த பட தயாரிப்பு நிறுவனமான வால் வாட்சர் பிலிம்ஸ் எனும் நிறுவனத்தின் சார்பில் தயாரான முதல் வெப் தொடர் ' சுழல்- தி வோர்டெக்ஸ்'.

    இயக்குனர்கள் பிரம்மா மற்றும் எம்.அனுசரண் இயக்கத்தில் உருவான இந்த வெப் தொடரில் ஆர்.பார்த்திபன், கதிர், சந்தானபாரதி, பிரேம், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி, நிவேதா சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

    இந்த வெப் தொடருக்கு, சாம் சி எஸ் இசையமைத்திருந்தார். அமேசான் பிரைமில் 2022 ஆம் ஆண்டு ஜூன் 17-ந் தேதி வெளியான இந்த வெப் தொடர் பல்வேறு தரப்பில் வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில், இந்த வெப் தொடரின் இரண்டாம் பாகம் வரும் 28ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    இது தொடர்பாக புஷ்கர் - காயத்ரி தங்களது எக்ஸ் பக்கத்தில் போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளனர்.

    • பாலஸ்தீனியர்களுக்குத் காசாவுக்குள் திரும்பிச் செல்லும் உரிமை இல்லை
    • எதிர்காலத்திற்கான சிறந்த ரியல் எஸ்டேட் தளம் என்று காசாவை அவர் வர்ணித்தார்.

    இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் 15 மாதங்களுக்குப் பிறகு போர் நிறுத்த ஒப்பந்தம் மூலம் கடந்த ஜனவரி 19 இல் முடிவுக்கு வந்தது. இதில் இஸ்ரேல் தரப்பில் சுமார் 1,700 பேரும், பாலஸ்தீன தரப்பில் சுமார் 47,000 பேரும் கொல்லப்பட்டனர்.

    போர் நிறுத்த ஒப்பந்தப்படி ஹமாஸ் அமைப்பினர் தங்களிடம் உள்ள இஸ்ரேல் பிணைக் கைதிகளை விடுவித்து வருகின்றனர். அதற்கு ஈடாக பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்து வருகிறது.

    இந்நிலையில் இஸ்ரேலிய பிணைக்கைதிகளை வரும் சனிக்கிழமைக்குள் விடுவிக்கவில்லை என்றால் பின்விளைவுகள் பயங்கரமாக இருக்கும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார்.

    ஏற்க்கனவே காசாவை வாங்கி அமெரிக்காவுக்கு சொந்தமாக்குவேன் என்று டிரம்ப் கூறியிருந்தார். காசா அமெரிக்கா கட்டுப்பாட்டில் வந்த பிறகு அங்கிருக்கும் 20 லட்சத்துக்கும் அதிகமான பாலஸ்தீனியர்களுக்குத் காசாவுக்குள் திரும்பிச் செல்லும் உரிமை இல்லை என்றும் டிரம்ப் பரபரப்பை கிளப்பினார். எதிர்காலத்திற்கான சிறந்த ரியல் எஸ்டேட் தளம் என்று காசாவை அவர் வர்ணித்தார்.

    சனிகிழமைக்குள் அவர்கள் விடுவிக்கப்படவில்லை என்றால் போர்நிறுத்தத்தை ரத்து செய்ய நேரிடும் என்று தெரிவித்தார். இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிவிட்டது என்றும் அதனால் அடுத்த கட்ட பயண கைதிகள் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாகவும் ஹமாஸ் அறிவித்ததை அடுத்து டிரம்ப் இவ்வாறு கூறியுள்ளார்.

    டிரம்ப் பேசியதாவது, என்னைப் பொறுத்தவரை, சனிக்கிழமை மதியம் 12 மணிக்குள் அனைத்து பணயக்கைதிகளும் திருப்பி அனுப்பப்படாவிட்டால் போர் நிறுத்தத்தை ரத்து ரத்து செய்யச் சொல்வேன். சிறிது சிறிதாக அல்ல, இரண்டு, மூன்று என்று அல்ல, மொத்தமாக அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும். இல்லையெனில் எல்லாம் கைமீறி போகும். நான் என்ன சொல்கிறேன் என்பதை ஹமாஸ் பிறகு தெரிந்துகொள்ளும் என்று கூறினார்.

    அமெரிக்கா காசாவை கையகப்படுத்தும் திட்டத்தின் கீழ் பாலஸ்தீனியர்களை ஏற்றுக்கொள்ள மறுத்தால், நட்பு நாடுகளான ஜோர்டான் மற்றும் எகிப்துக்கு பில்லியன் கணக்கான டாலர் அமெரிக்க நிதியுதவியை நிறுத்துவதாகவும் டிரம்ப் அச்சறுத்தியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தற்போதைக்கு அ.தி.மு.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணியில் உள்ளது.
    • தேர்தலுக்கு முன்பு எது வேண்டுமானாலும் மாறலாம்.

    2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. வரவுள்ள தேர்தலை எதிர்நோக்கி பலரும் காத்து உள்ளனர். இதற்கு நடிகர் விஜய் கட்சி தொடங்கி இருப்பதே காரணம். விஜய் எந்த கட்சியுடன் கூட்டணி வைப்பர், அவருக்கு மக்களின் ஆதரவு எந்தளவிற்கு இருக்கும் என பல கேள்விகள் எழுந்துள்ளது. இதனிடையே தேர்தலுக்காக பல்வேறு வியூகங்களை விஜய் வகுத்து வருகிறார்.

    இந்த நிலையில், விஜய் தன்னை அரசியலில் நிரூபிக்க வேண்டும் என்று விஜயகாந்தின் மகனும், பாராளுமன்ற தேர்தலில் தேமுதிக சார்பில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டவருமான விஜய பிரபாகரன் கூறியுள்ளார்.

    இதுதொடர்பாக விஜய பிரபாகரன் மேலும் கூறியதாவது:- விஜயகாந்த் 2005-ல் கட்சி தொடங்கி தேர்தலில் 12 சதவீத வாக்குகள் பெற்று அரசியலில் தன்னை நிரூபித்தார். அதே போல் விஜய் தன்னை அரசியலில் நிரூபிக்க வேண்டும்.

    விஜய் அண்ணா தன்னை நிரூபித்த பின்னரே அவருடன் கூட்டணி வைப்பதா இல்லையா என தேமுதிக முடிவு செய்யும். தற்போதைக்கு அ.தி.மு.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணியில் உள்ளது. தேர்தலுக்கு முன்பு எது வேண்டுமானாலும் மாறலாம் என்றார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பெற்றோர் உடலுறவு கொள்வதைப் பார்ப்பீர்களா? என யூடியூபர் ரன்வீர் அல்லாபாடியா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
    • சர்ச்சை கருத்து தெரிவித்தற்காக யூடியூபர் ரன்வீர் அல்லாபாடியா மன்னிப்பு கேட்டுள்ளார்.

    பிரபல யூடியூபர் ரன்வீர் அல்லாபாடியா. பீர்பைசெப்ஸ் என்று அறியப்படும் இவர் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்த கருத்தால் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

    சமீபத்தில் India's Got Tatent நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரன்வீர் போட்டியாளர் ஒருவரிடம், "உங்கள் வாழ்நாள் முழுக்க பெற்றோர் ஒவ்வொரு நாளும் உடலுறவு கொள்வதைப் பார்ப்பீர்களா? அல்லது அதை பார்ப்பதை நிறுத்த ஒரு முறை அவர்களுடன் அதில் பங்கேற்பீர்களா?" இரண்டில் எதை தேர்ந்தெடுப்பீர்கள் என்று கேட்டார்.

    இதையடுத்து ரன்வீர் கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும், இவருக்கு எதிராக பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், ரன்வீர் அல்லாபாடியாவுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அசாம் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இதனிடையே சர்ச்சை கருத்து கூறியதற்காக யூடியூபர் ரன்வீர் அல்லாபாடியா மன்னிப்பு கேட்டுள்ளார்.

    இந்த விவகாரம் தொடர்பாக சிவசேனா (உத்தவ் தாக்கரே) எம்.பி. பிரியங்கா சதுர்வேதி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அவரது பதிவில், " நகைச்சுவை என்ற பெயரில் வரம்பு மீறி பேசுவதை ஏற்க முடியாது. உங்களுக்கு ஒரு பிளாட்பார்ம் கிடைக்கிறது என்பதற்காக நீங்கள் எதையும் பேசலாம் என்று அர்த்தமல்ல. பிரதமர் அவருக்கு விருது வழங்கியுள்ளார். தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் நிலைக்குழு உறுப்பினர் என்ற முறையில் நான் இந்த பிரச்சினையை எழுப்புகிறேன்" என்று பதிவிட்டிருந்தார்.

    இந்நிலையில், யூடியூபர் ரன்வீர் அல்லாபாடியாவின் சர்ச்சை கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்றத்திலும் பல எம்.பி.க்கள் புகார் கொடுத்தனர்.

    இதனையடுத்து, யூடியூபர் ரன்வீர் அல்லாபாடியாவிற்கு சம்மன் அனுப்பி விசாரிப்பதற்கு தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் நிலைக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் நிலைக்குழுவின் முன்பு நேரில் ஆஜராகி கேட்கப்படும் கேள்விகளுக்கு ரன்வீர் அல்லாபாடியா விளக்கம் அளிக்க வேண்டுமென அவருக்கு நோட்டீஸ் வழங்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
    • அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று மற்றும் நாளை பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.

    13-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • அனைவருக்கும் மகிழ்ச்சியான தைப்பூச வாழ்த்துகள்.
    • முருகனின் தெய்வீக அருள் நம்மை வலிமை, செழிப்பு மற்றும் ஞானத்துடன் வழிநடத்தட்டும்.

    புதுடெல்லி:

    தைப்பூச விழாவையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    அனைவருக்கும் மகிழ்ச்சியான தைப்பூச வாழ்த்துகள். முருகனின் தெய்வீக அருள் நம்மை வலிமை, செழிப்பு மற்றும் ஞானத்துடன் வழிநடத்தட்டும். இந்த புனிதமான நாளில், அனைவருக்கும் மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம்,வெற்றிக்காக நான் பிரார்த்திக்கிறேன்.

    இந்த நாள் நம் வாழ்வில் அமைதியையும் நேர்மறையையும் கொண்டு வரட்டும். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்று தெரிவித்துள்ளார்.



    • நடிகர் தர்ஷன் கனா திரைப்படத்தில் நடித்திருந்தார்.
    • டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது.

    நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் 2018-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'கனா'. அருண்ராஜா காமராஜ் இயக்கிய 'கனா' திரைப்படத்தில் ஐஷ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்தார். இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் நடிகர் தர்ஷன் நடித்த கதாப்பாத்திரம் மூலம் கவனிக்கப்படும் நடிகர் ஆனார்.

    கனா திரைப்படத்தை தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு வெளியான தும்பா திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். ஆனால் இப்படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை. அஜித் நடித்த துணிவு திரைப்படத்திலும் தர்ஷன் நடித்து இருந்தார். இந்த வரிசையில், நடிகர் தர்ஷன் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது.

    இயக்குநர் ராஜவேல் இயக்கியுள்ள இந்தப் படத்தை ப்ளேஸ்மித் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு ஹவுஸ் மேட்ஸ் என தலைப்பிடப்பட்டு உள்ளது. இந்தப் படத்தில் அர்ஷா பைஜு, காளி வெங்கட், வினோதினி மற்றும் தீனா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்திய ரூபாய் மதிப்பு 87.92 ரூபாயாக இருந்தது.
    • மதிப்பை உயர்த்துவதற்காக இந்திய ரிசர்வ் வங்கியும் நேற்று முயற்சித்தது.

    அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று (பிப்ரவரி 11) சற்றே உயர்வை கண்டுள்ளது.

    நேற்று (பிப்ரவரி 10) வாரத்தின் முதல் நாளில் 43 பைசா வீழ்ச்சி அடைந்து டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 87.92 ரூபாயாக இருந்தது.

    இந்திய ரூபாய் இதுவரை இவ்வளவு வீழ்ச்சியை சந்திதது கிடையாது. எனவே ரூபாயின் மதிப்பை உயர்த்துவதற்காக இந்திய ரிசர்வ் வங்கியும் நேற்று முயற்சித்தது.

    சந்தை திறப்பதற்கு முன்பு, இந்திய ரிசர்வ் வங்கி, அரசு நடத்தும் வங்கிகள் வழியாக டாலர்களை விற்றது. சந்தை திறந்த பிறகும் இது நீடித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர். சுமார் 2 முதல் 3 பில்லியன் டாலர்களை ரிசர்வ் வங்கி விற்பனை செய்தது.

    எனவே இன்று (பிப்ரவரி 11) டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு உயர்ந்துள்ளது. நேற்றைவிட விட 61 பைசாக்கள் குறைந்து இன்றைய ருபாய் மதிப்பு 86.63 ஆகி உயர்ந்துள்ளது. கடந்த 2 வருடத்தில் இல்லாத அளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளது. கடைசியாக நவம்பர் 2022  க்கு பிறகு ரூபாய் மதிப்பு 1 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது. 

    • பிற இயக்கங்களின் பிரச்சனைகளில் தலையிடுவது என்னுடைய பழக்கமல்ல.
    • முதலமைச்சர் இரண்டாவது முறையாக மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஏற்பார்.

    சென்னை:

    தைப்பூசத்தை முன்னிட்டு சென்னை, ஏழுகிணறு பகுதியில் அமைந்துள்ள அருட்பிரகாச வள்ளலார் வசித்த இல்லத்தில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அன்னதானம் வழங்கப்படுகிறது. இதனை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கொடியேற்றி தொடங்கி வைத்து, மக்களுடன் உணவருந்தினார்.

    பின்னர் அவர் அளித்த பேட்டி வருமாறு:-

    இந்த பகுதிக்கு வள்ளலார் நகர் என்று பெயர் சூட்டி, அருகில் இருக்கக்கூடிய பேருந்து நிலையத்திற்கு வள்ளலார் பேருந்து நிலையம் என்று பெயர் சூட்டியவர் கருணாநிதி. அவர் வழியில் ஆட்சி நடத்தி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வள்ளலாருக்கு முப்பெரும் விழா எடுத்து பெருமை சேர்த்துள்ளார்.

    வடலூர் அன்னதான மையத்தில் மரங்களை வெட்டியதற்கு எந்த பக்தர்களும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அரசுக்கு எதிராக இருக்கக்கூடிய சக்திகள் தான் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

    அதில் ஜோதி தரிசனத்தை காண வளர்ந்துவிட்ட கிளைகளைத் தான் ஒழுங்குப்படுத்தி இருந்தோம். மரங்களை வெட்டவில்லை என தெரிவித்துள்ளனர். ஆதாரம் இருந்தால் கொடுங்கள் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் ஆதங்கத்திற்கு எடப்பாடி பழனிசாமி பதிலளிக்காமல், அவரது குரலான ஜெயக்குமார்தான் பதில் அளித்துள்ளார்.

    பிற இயக்கங்களின் பிரச்சனைகளில் தலையிடுவது என்னுடைய பழக்கமல்ல. முதலமைச்சர் குறுக்கு வழியில் ஆட்சியை ஏற்பதை விரும்பாதவர். அந்தந்த இயக்கங்களின் பிரச்சனைகளை அவர்களே பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். அதில் தலையிடுவதை எங்கள் தலைவர் எப்போதும் விரும்பமாட்டார்" என்றார்.

    த.வெ.க. தலைவர் விஜய்யுடன் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சந்தித்தது பற்றி அமைச்சர் சேகர்பாபுவுடன் கருத்து கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்து அவர் கூறும் போது, மக்களின் அன்பை பெற்றவர்கள், மக்களோடு பயணிப்பவர்களுக்கு எதிராக வியூக மன்னர்களால் எந்த அளவுக்கு பலன் இருக்கும் என்று தெரியவில்லை.

    2026-ம் ஆண்டு தேர்தலிலும் முதலமைச்சர் கூறியதை போல 200-தொகுதிகளையும் தாண்டி உறுதி மிக்க வெற்றியை பெறுவோம். முதலமைச்சர் இரண்டாவது முறையாக மீண்டும்ஆட்சிப் பொறுப்பை ஏற்பார் என்றார்.

    • கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா 5-வது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது.
    • 2030-ம் ஆண்டுக்குள் ஆண்டுதோறும் 5 மில்லியன் மெட்ரிக் டன் பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்வதே எங்கள் இலக்கு.

    புதுடெல்லி:

    இந்திய எரிசக்தி வார தொடக்க விழாவில் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    21-ம் நூற்றாண்டு இந்தியாவிற்கு சொந்தமானது என்று உலகில் உள்ள ஒவ்வொரு நிபுணரும் கூறுகிறார்கள். இந்தியா அதன் சொந்த வளர்ச்சியை மட்டுமல்ல, உலகின் வளர்ச்சியையும் வழிநடத்துகிறது.

    இந்தியாவின் எரிசக்தி லட்சியங்கள் 5 தூண்களில் நிற்கின்றன. நம்மிடம் வளங்கள், புத்திசாலித்தனமான மனம், பொருளாதார வலிமை, அரசியல் ஸ்திரத்தன்மை, மூலோபாய புவியியல், உலகளாவிய நிலைத்தன்மைக்கான அர்ப்பணிப்பு ஆகியவை உள்ளன. வளர்ச்சி பாரதத்துக்கு அடுத்த 2 தசாப்தங்கள் மிகவும் முக்கியமானவை. அடுத்த 5 ஆண்டுகளில் நாம் பல மைல்கற்களை அடையப் போகிறோம்.

    கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா 5-வது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது. நமது சூரிய சக்தி உற்பத்தி திறனை இரட்டிப்பாக்கியுள்ளோம். இன்று இந்தியா 3-வது பெரிய சூரிய சக்தி உற்பத்தி செய்யும் நாடாக உள்ளது. நமது புதைபடிவ எரிபொருள் அல்லாத ஆற்றல் 3 மடங்காக அதிகரித்துள்ளது. பாரீஸ் ஜி-20 ஒப்பந்தங்களின் இலக்குகளை எட்டிய முதல் நாடு இந்தியா ஆகும். 2030-ம் ஆண்டுக்குள் ஆண்டுதோறும் 5 மில்லியன் மெட்ரிக் டன் பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்வதே எங்கள் இலக்கு.

    இவ்வாறு அவர் கூறினார்.



    • தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் கஞ்சா கருப்பு.
    • மருத்துவர்கள் இல்லாததால், நீண்ட நேரம் காக்க வைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு.

    தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் கஞ்சா கருப்பு. நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்ற கஞ்சா கருப்பு சமீப காலங்களில் அதிக படங்களில் நடிக்காமல் இருக்கிறார். இந்த நிலையில், சென்னையில் அரசு மருத்துவமனைக்கு சென்ற நடிகர் கஞ்சா கருப்பு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.

    இன்று காலை சென்னை போரூரில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சி நகர்புற சமுதாய நல மருத்துவமனைக்கு நடிகர் கஞ்சா கருப்பு சென்றுள்ளார். மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாமல் நீண்ட காலமாக காக்க வைத்ததாக நடிகர் கஞ்சா கருப்பு குற்றம்சாட்டினார்.

    காலை 7 மணியில் இருந்தே மருத்துவர்கள் இல்லாமல் காக்க வைக்கப்பட்டதாக கூறி நடிகர் கஞ்சா கருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். திடீர் போராட்டம் காரணமாக மருத்துவமனையில் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும். 


    • லஞ்சம் கொடுத்து 750 மில்லியன் டாலர்கள் நிதி திரட்டியதாக FCPA சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது.
    • பிரதமர் மோடி நாளை மறுநாள் அமெரிக்கா சென்று டிரம்ப்பை சந்திக்க உள்ளார்.

    அமெரிக்காவில்  ஊழல் வழக்கில் சிக்கித் தவிக்கும் இந்தியாவின் பிரபல தொழில் அதிபர் அதானிக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. 

    மத்திய அரசின் நிறுவனத்திடம் இருந்து சூரிய ஒளி மின்சாரத்தைத் தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தத்தை பெற தமிழ்நாடு உட்பட இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களின் மின் வாரிய அதிகாரிகளுக்கு ரூ.2100 கோடி லஞ்சம் கொடுத்து, அமெரிக்க முதலீட்டாளர்களை அதானி குழுமம் தவறாக வழிநடத்தி சுமார் 750 மில்லியன் டாலர்கள்  நிதி திரட்டியதாக அமெரிக்காவின் FCPA சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. இதில் அதானிக்கு பிடிவாரண்டும் பிறப்பிக்கப்பட்டது.

    FCPA என்பது வெளிநாட்டு ஊழல் நடைமுறைகள் சட்டம் எனப்படுகிறது. இந்த சட்டம் அமெரிக்க நிறுவனங்களுக்கே பாதகமாக இருப்பதாக கூறியுள்ள டிரம்ப், புதிய சட்டத்தை உருவாக்க அமெரிக்க அட்டர்னி ஜெனரலுக்கு உத்தரவிட்டுள்ளார்.

    தற்போது பிரான்சில் இருக்கும் பிரதமர் மோடி நாளை மறுநாள் அமெரிக்கா சென்று டிரம்ப்பை சந்திக்க உள்ள நிலையில் இந்த உத்தரவு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    மற்ற நாடுகளில் வணிகத்தைப் பெறுவதற்காக வெளிநாட்டு அரசாங்க அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக அமெரிக்க தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீதான பல வழக்குகளும் இந்த FCPA சட்டத்தின்கீழ் பதிவாகியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.  

    ×