என் மலர்
தலைப்புச்செய்திகள்
- தீ விபத்தில் ஏழு கூடாரங்கள், அதில் தங்கியிருத்த யாத்ரீகர்கள் இருந்த உடைமைகள் எரிந்து எரித்து நாசமாகின.
- யாத்ரீகர்கள் உடைமைகள் எரிந்து எரித்து நாசமாகின.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. கடந்த 14-ம் தேதி தொடங்கிய கும்பமேளா வருகிற 26-ம் தேதி வரை 45 நாட்கள் நடைபெற உள்ளது.
நாள்தோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். அவர்களுக்கான முகாம்கள், உதவி மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் மீண்டும் அப்பகுதியில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
செக்டார் 19 இல் அமைந்துள்ள லவ் குஷ் சேவா மண்டல் முகாமில் இன்று மாலை 6:15 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும், தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அதிகாரிகளின் கூற்றுப்படி, தீ விபத்தில் ஏழு கூடாரங்கள், அதில் தங்கியிருத்த யாத்ரீகர்களின் போர்வைகள் உள்ளிட்ட உடைமைகள் எரிந்து எரித்து நாசமாகின.
தீ விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும், தீ தற்போது கட்டுக்குள் இருப்பதாகவும் பிரயாக்ராஜ் கூடுதல் பொது மேலாளர் பானு பாஸ்கர் தெரிவித்தார்.
முன்னதாக,
ஜனவரி 19: செக்டார் 19 இல் உள்ள கீதா பத்திரிகையாளர் முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில் 180 கூடாரங்கள் எரிந்து நாசமானது.
ஜனவரி 30: செக்டார் 22-ல் ஏற்பட்ட தீ விபத்தில் 15 கூடாரங்கள் எரிந்து நாசமாயின.
பிப்ரவரி 7: செக்டார் 18 இல் உள்ள சங்கராச்சாரியார் மார்க்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 22 பந்தல்கள் எரிந்து சாம்பலாயின.
பிப்ரவரி 15: செக்டார் 18-19 இல் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டது.
- ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் என 32 ஆயிரம் பேருக்கு மாதத்திற்கு 76 கோடி சம்பளம் வழங்க வேண்டியுள்ளது.
- இருமொழி கொள்கையால் எந்த வகையில் குறைந்து போய்விட்டோம்.
புதிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழக பள்ளி கல்வித்துறைக்கு நிதி தர இயலாது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிராதான் தெரிவித்திருந்தார். இதற்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அன்பில் மகேஷ் கூறியதாவது:-
தமிழ் நாட்டு மக்களை மத்திய அரசு தொடர்ந்து வஞ்சித்து கொண்டிருக்கிறது என்பதை நாங்கள் படித்து படித்து, ஆட்சி மாற்றம் செய்யப்பட்டதற்கு பின்பும் சரி, முன்பும் சரி தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
நாங்கள் இப்படி சொல்லும்போது பாஜக-வினர் நாங்கள் பொய் சொல்கிறார்கள், வெட்கமில்லையா என்று ஆளுங்கட்சியில் உள்ளவர்கள் எங்களை பார்த்து வாய் கூசாமல் சொல்கிறார்கள்.
ஆனால் மந்திய அமைச்சர் திட்டவட்டமாக என்ன சொல்லியிருக்கிறார் என்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். நீங்கள் கல்வியில் அரசியல் செய்யாதீர்கள் என நாங்கள் அடிக்கடி சொல்கிறோம். 40 லட்சம் மாணவச் செல்வங்களின் முழு எதிர்காலம் அதில் இடங்கியிருக்கிறது.
ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் என பணியாற்றும் ஏறத்தாழ 32 ஆயிரம் பேருக்கு சம்பளம் வழங்க வேண்டியிருக்கிறது. ஒரு மாதத்திற்கு 76 கோடி ரூபாய் மதிப்பிலும், வருடத்திற்கு 921 கோடி ரூபாய் என்ற வகையில் சம்பளம் மட்டுமே வழங்க வேண்டியிருக்கிறது.
25 சதவீதம் தனியார் பள்ளி ஒதுக்கீட்டிற்கான கட்டணம் 400 கோடி ரூபாயை தாண்டும். இதையெல்லாம் சேர்த்துதான் மாநில அரசு, மத்திய அரசு 60:40 என்ற அடிப்படையில் செய்து கொண்டிருக்கிறது.
நாங்கள் இதை சொல்லும்போது மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொண்டால என்ன? என்ற பிடிவாதத்துடன் இருக்கிறார்கள். அது தேவையில்லை என்ற காரணத்தினால்தான் அண்ணா காலத்தில் இருந்து இருமொழி கொள்கையை பின்பற்றி கொண்டிருக்கிறோம். இருமொழிக்கொள்கையை வைத்து தமிழக மாணவ, மாணவிகள் உலகம் முழுவதும் சாதித்து வருகின்றனர்.
மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ள மாட்டீர்களா? என்பது இன்னொரு மொழிப்போரை தூண்டுவது போன்றுதான் அமைந்திருக்கிறது. அரசியல் செய்யாமல், சாக்குபோக்கு சொல்லாமல் 2152 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற வேண்டுகோளை இப்போதும் வைக்கின்றேன். இருமொழி கொள்கையால் எந்த வகையில் குறைந்து போய்விட்டோம். மாணவர்களை ப்ரூவன் பிராடெக்ட்-ஆக உருவாக்கி வருகிறோம். மும்மொழி கொள்கை ஏற்றுக் கொள்ளுங்கள் என்ற அழுத்தத்தை எப்படி தரலாம்.
இவ்வாறு அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
- மோடி AI குறித்து 'டெலிப்ராம்ப்டர்' பார்த்து உரையாற்றும் வேலையில் நமது போட்டியாளர்கள் புதிய தொழில்நுட்பங்களில் தேர்ச்சி பெறுகிறார்கள்.
- தனது எக்ஸ் பக்கத்தில் 9 நிமிட வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவில் திறமைக்குப் பஞ்சமில்லை, ஆனால் இளைஞர்களைப் பணியமர்த்தவும் தொழில்நுட்பத் துறையை முன்னேறவும் வலுவான உற்பத்தித் தளம் தேவை என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மேலும் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ட்ரோன் தொழில்நுட்பம் உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவது தொடர்பான அரசின் கொள்கைகள் குறித்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் 9 நிமிட வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ட்ரோன்கள் போர்க்களத்தில் புரட்சியை ஏற்படுத்தி உள்ளன. பேட்டரிகள், மோட்டார்கள் மற்றும் ஒளியியல் ஆகியவற்றை இணைத்து ட்ரோன்கள் போரில் புதிய உத்திகளை உருவாகியுள்ளன.
ட்ரோன்கள் வெறும் ஒரு தொழில்நுட்பம் மட்டுமல்ல. அவை ஒரு வலுவான தொழில்துறை அமைப்பால் உருவாக்கப்பட்ட கண்டுபிடிப்புகள்.
துரதிர்ஷ்டவசமாக, பிரதமர் மோடி இதைப் புரிந்துகொள்ளத் தவறிவிட்டார். அவர் செயற்கை நுண்ணறிவு (AI) குறித்து 'டெலிப்ராம்ப்டர்' பார்த்து உரையாற்றும் வேலையில், நமது போட்டியாளர்கள் புதிய தொழில்நுட்பங்களில் தேர்ச்சி பெற்று வருகின்றனர்.
இந்தியாவுக்கு வெற்று வார்த்தைகள் அல்ல, வலுவான உற்பத்தித் தளம் தேவை.
இந்தியாவுக்கு மகத்தான திறமை, வாய்ப்பு மற்றும் உந்துதல் உள்ளது. நமது இளைஞர்களுக்கு வேலைகளை வழங்கவும், இந்தியாவை எதிர்காலத்தில் வழிநடத்தவும் நமக்கு தெளிவான தொலைநோக்கு பார்வை இருக்க வேண்டும். அப்போதுதான் உண்மையான தொழில்துறை வலிமையை உருவாக்க வேண்டும் என்று அதில் பதிவு செய்துள்ளார்.
இதற்கிடையே இந்திய குடிமக்கள் தங்கள் கருத்துக்கள், பரிந்துரைகள் மற்றும் கவலைகளைப் பகிர்ந்து கொள்ள 'ஆவாஸ் பாரத் கி' என்ற முன்னெடுப்பை ராகுல் காந்தி தொடங்கியிருந்தார்.
இதில் தற்போது AI மற்றும் ட்ரோன்கள் துறையில் பணிபுரிந்தால் அல்லது இந்த தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்கு ஏதேனும் ஆலோசனை வழங்க விரும்பினால் அதையும் பகிர்ந்து கொள்ளுமாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
- சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக இந்தியா பாகிஸ்தான் செல்ல மறுப்பு.
- சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக இந்தியா பாகிஸ்தான் செல்ல மறுப்பு.
பாகிஸ்தானில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வருகிற 19-ந்தேதி தொடங்குகிறது. பாகிஸ்தான் பல்வேறு தடைகளை கடந்து இந்த தொடரை நடத்த இருக்கிறது.
முதலில் இந்திய அணி பாகிஸ்தானில் சென்று விளையாட மறுப்பு தெரிவித்தது. இதனால் பாகிஸ்தானில் இருந்து தொடர் மாற்றப்பட வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது. ஆனால், நாங்கள்தான் தொடரை நடத்துவோம் என பாகிஸ்தான் உறுதியாக இருந்தது. இதனால் இந்தியா விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டது.
அதன்பிறகு போட்டி நடைபெற இருக்கும் மைதானங்களை சீரமைக்கும் பணி குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் முடிவடைய வாய்ப்பில்லை எனக் கூறப்பட்டது. அந்த தடையையும் கடந்து வந்துள்ளது.
லாகூர் கராச்சி மைதானத்தில் நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா உடனான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரை நடத்தியது.
இந்த நிலையில் வருகிற 19-ந்தேதி பாகிஸ்தான் தொடக்க போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. இந்த போட்டியை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் இந்திய அணி பாகிஸ்தானில் வந்து விளையாடும். இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டியை பல வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் பார்வையிடலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்துள்ளதால், பாகிஸ்தான் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
அத்துடன் இந்திய அணிக்கெதிராக கோபமாக உள்ளனர். இந்த நிலையில் பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் அணிக்கு ஒரு கடுமையாக தகவலை தெரிவித்துள்ளார். சாம்பியன்ஸ் டிராபி தொடர் முடியும் வரை இந்திய அணி வீரர்கள் உடனான நட்பை புறந்தள்ளி வைக்கவும். மேலும், விராட் கோலி மற்றும் இந்திய அணி வீரர்களை கட்டி பிடிக்க வேண்டாம் எனத் தெரிவித்துள்ளார்.
- திருமணத்தின் போது, விலையுயர்ந்த கார், நகைகளை தந்தை வரதட்சணையாக கொடுத்துள்ளார்.
- தந்தை காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றும் அவர்கள் அலட்சியம் காட்டி உள்ளனர்.
வரதட்சணை கொண்டு வராத மருமகளுக்கு (30 வயது) மாமியார் (56வயது) எச்.ஐ.வி. வைரஸ் ஊசியை செலுத்திய கொடூரம் உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் ஹரித்வார் மாவட்டத்தின் பிரன் காலியர் காவல் நிலையத்தில் உள்ள ஜஸ்ஸா வாலா கிராமத்தில் வசிக்கும் அபிஷேக் என்பவருடன் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கடந்த பிப்ரவரி 15, 2023 அன்று திருமணம் நடந்துள்ளது.
திருமணத்தின் போது, விலையுயர்ந்த கார், மகள் தனது மாமியார் வீட்டில் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதற்காக, லட்சக்கணக்கான மதிப்புள்ள நகைகள் மற்றும் பணத்தை பெண்ணின் தந்தை வரதட்சணையாக கொடுத்திருந்தார். திருமணத்திற்கு சுமார் ரூ.45 லட்சம் செலவிடப்பட்டது.
இதற்குப் பிறகு, மீண்டும் ரூ.10 லட்சம் ரொக்கமும், மற்றொரு பெரிய எஸ்யூவி காரும் வரதட்சணையாக கேட்டு மருமகளை மாமியார் நச்சரித்து வந்துள்ளார். இந்த விஷயம் பஞ்சாயத்தில் பேசி தீர்க்கப்பட்டது. ஆனால் அதன்பின்னும் மாமியார் அந்த பெண்ணை விடுவதாக இல்லை. தொடர்ந்து மருமகளை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தி வந்துள்ளார்.
இதன் உச்சமாக மருமகளுக்கு எச்.ஐ.வி தொற்று சிரிஞ்சை பயன்படுத்தி ஊசி செலுத்தி நோய்பாதிப்பை ஏற்படுத்தி உள்ளார். இதன் காரணமாக அவரது உடல்நிலை வேகமாக மோசமடையத் தொடங்கியது.
பின்னர் மருத்துவ பரிசோதனையில் அந்தப் பெண்ணுக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதுதொடர்பாக பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றும் அவர்கள் அலட்சியம் காட்டி உள்ளனர்.
எனவே இதுதொடர்பாக பெண்ணும் அவரது தந்தையும் சஹாரன்பூர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். பெண்ணின் மனுவை விசாரித்த நீதிமன்றம், அவரின் மாமியார், கணவர் உள்ளிட்ட உறவினர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்ய உத்தரப் பிரதேச காவல்துறைக்கு உத்தரவிட்டது.
இதனையடுத்து காங்கோ காவல்நிலையத்தில் பெண்ணின் கணவர், 2 மைத்துனர்கள் மற்றும் மாமியார் ஆகியோர் மீது ஐபிசி பிரிவுகள் 307 (கொலை முயற்சி), 498A (கணவர் அல்லது அவரது உறவினர்களால் ஒரு பெண்ணை கொடுமைப்படுத்துதல்), 328 (விஷம் மூலம் காயப்படுத்துதல்) மற்றும் தொடர்புடைய வரதட்சணை பிரிவுகளின் கீழ் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
- AFC (தானியங்கி கட்டண வசூல்) வாயிலில் ஏறி குதிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
- டெல்லி மெட்ரோ நிர்வாகம்(DMRC) விளக்கம் அளித்துள்ளது.
டெல்லி மெட்ரோ நிலையத்தில் நூற்றுக்கணக்கானோர் கட்டணம் செலுத்தாமல் நிலையத்தின் வெளியேறும் AFC (தானியங்கி கட்டண வசூல்) வாயில் கதவில் ஏறி குதிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
மெட்ரோ நிலையத்தின் பாதுகாப்பு சீர்குலைந்துள்ளது குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் இதற்கு டெல்லி மெட்ரோ நிர்வாகம்(DMRC) விளக்கம் அளித்துள்ளது.
அதன் விளக்கத்தில், இந்த வீடியோ பிப்ரவரி 13 அன்று ஜமா மசூதி மெட்ரோ நிலையத்திலிருந்து எடுக்கப்பட்டது.
பிப்ரவரி 13 ஆம் தேதி மாலையில், ஜமா மசூதி மெட்ரோ நிலையத்தில் பயணிகளின் கூட்டம் திடீரென அதிகரித்ததால் சிலர் வெளியேறும் வாயிலில் குதித்து கடக்க முயன்றனர்.
இதனால் அங்கு பயணிகளிடையே தற்காலிகமான சலசலப்பு நிலவியது. அவர்களை சமாளிக்க பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் பிற ஊழியர்கள் போதுமான அளவு இருந்தனர்.
நிலைமை ஒருபோதும் கட்டுப்பாட்டை மீறவில்லை. வாயில்களில் திடீரென ஏற்பட்ட நெரிசல் காரணமாக சில பயணிகளின் தற்காலிக எதிர்வினையே இது. விரைவில் நிலைமை இயல்பு நிலைக்குத் திரும்பியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ரோகித் சுதரை ரூ. 7.95 லட்சத்திற்கு ஏலம் எடுத்துள்ளது.
- மோகித் ஹரிகரனை ரூ. 5.2 லட்சத்திற்கு ஏலம் எடுத்துள்ளது.
தமிழ்நாடு பிரீமியர் லீக் 2025 சீசனுக்கான வீரர்கள் ஏலம் இன்று நடைபெற்றது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 18 லட்சம் ரூபாய்க்கு இந்திய அணி வீரரான விஜய் சங்கரை ஏலம் எடுத்தது.
ஸ்வப்னில் கே. சிங்கை ரூ. 10.8 லட்சத்திற்கு எடுத்தது. தினேஷ் ராஜை ரூ. 50 ஆயிரத்திற்கும், மோகித் ஹரிகரனை ரூ. 5.2 லட்சத்திற்கும், கிருபாகரனை ரூ. 50 ஆயிரத்திற்கும், அக்ரம் கானை ரூ. 1.10 லட்சத்திற்கும், ரோகித் சுதரை ரூ. 7.95 லட்சத்திற்கும், ராஜலிங்கத்தை ரூ. 50 ஆயிரத்திற்கும், பிரேம் குமாரை ரூ. 60 ஆயிரத்திற்கும், ஆசிக் ஸ்ரீனிவாசை ரூ. 50 ஆயிரத்திற்கும் ஏலம் எடுத்துள்ளது.
திண்டுக்கல் டிராகன்ஸ் பெரியசாமியை ரூ. 9.8 லட்சத்திற்கும், மான் கே. பஃவ்னாவை ரூ. 5.7 லட்சத்திற்கும், ஆர்.கே. ஜெயந்த்தை ரூ. 1.15 லட்சத்திற்கும், விமல் குமாரை ரூ. 3.80 லட்சத்திற்கும், ராஜ்விந்தர் சிங்கை ரூ. 50 ஆயிரத்திற்கும், சந்திரசேகரை ரூ. 85 ஆயிரத்திற்கும், ஹன்னி சைனியை ரூ. 11.70 லட்சத்திற்கும், கார்த்திக் சரணை ரூ. 50 ஆயிரத்திற்கும், விஜு அருளை ரூ. 50 ஆயிரத்திற்கும் ஏலம் எடுத்துள்ளது.
- தொடருக்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தீவிரமாக தயாராகி வருகிறது
- இங்கிலாந்து சுற்றுப்பயணத்திலிருந்து கேப்டன் பொறுப்பை ஏற்பார் என்று கூறப்பட்டுள்ளது.
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் டாப் 8 அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
இந்த தொடருக்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தீவிரமாக தயாராகி வருகிறது. மேலும் இந்திய அணி துபாய் புறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ரோகித் சர்மா தொடர்பான ஒரு பெரிய தகவல் வெளிவந்துள்ளது. அதாவது, தற்போதைய இந்திய கேப்டன் ரோகித் சர்மா இனி டெஸ்ட் போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட வாய்ப்பில்லை என்று PTI அறிக்கை வெளியாகி உள்ளது.
மேலும் டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக இருக்கும் பும்ரா, இந்த ஆண்டு ஜூன்-ஜூலை மாதங்களில் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திலிருந்து கேப்டன் பொறுப்பை ஏற்பார் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ரோகித் சர்மா இல்லாதபோது பும்ரா இதற்கு முன்பு மூன்று டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்கு தலைமை தாங்கியது குறிப்பிடத்தக்கது.
- அனைத்து மாநிலங்களும் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்ட பின், தமிழ்நாடு மட்டும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனக் கூறுவது ஏன்?
- தமிழ்நாடு மட்டும் புதிய கல்விக் கொள்கையை ஏற்க மறுக்கிறது. அவர்கள் அதை வைத்து அரசியல் செய்கிறார்கள்.
தமிழக கல்வித்துறைக்கு மத்திய அரசு தரக்கூடிய நிதியை வழங்காமல் இழுத்தடிக்கிறது என தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மத்திய அரசை குற்றம்சாட்டியிருந்தார்.
இது தொடர்பாக காசி தமிழ்ச்சங்கம் நிகழ்ச்சியில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்து கொண்டார். அப்போது இது தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு புதிய கல்விக் கொள்கையை ஏற்கும்வரை தமிழக கல்வித் துறைக்கு நிதி தர இயலாது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தர்மேந்திர பிரதான் கூறியதாவது:-
இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்ட பின், தமிழ்நாடு மட்டும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனக் கூறுவது ஏன்?. புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் விதிகளின்படி நிதி ஒதுக்க முடியும். இல்லையென்றால் நிதி ஒதுக்க இயலாது.
தமிழ்நாடு மட்டும் புதிய கல்விக் கொள்கையை ஏற்க மறுக்கிறது. அவர்கள் அதை வைத்து அரசியல் செய்கிறார்கள். மற்ற மாநிலங்களில் தாய்மொழி, ஆங்கிலம் மற்றும் 3-வது மொழியை கற்கிறார்கள். ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால் தமிழ்நாடு மற்றும் 3-வது மொழியை ஏற்கமாட்டோம் என்றால் அது விதிகளின்படி தவறு. நிதி ஒதுக்க முடியாது.
இவ்வாறு தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
- அண்டை பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
- பொது நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளன.
ரஷியாவின் தெற்கு சைபீரியாவில் உள்ள அல்தாய் குடியரசில் இன்று (சனிக்கிழமை) காலை 6.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரஷிய நில அதிர்வு ஆய்வாளர்களின் கூற்றுப்படி, உள்ளூர் நேரப்படி காலை 8:48 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. அண்டை பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும் சில இடங்களில் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. எனவே பொது நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளன என்றும் சேதங்களை சரிசெய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்த பிராந்தியத்தின் தலைவர் ஆண்ட்ரி துர்ச்சக் தெரிவித்தார்.
- இந்த பீர் தயாரிக்கும் நிறுவனத்தின் பெயர் ரெவோர்ட்.
- இந்த விஷயத்தில் பிரதமர் மோடி தலையிட வேண்டும்.
ரஷிய பீர் பிராண்ட் ஒன்று தனது பீர் கேன்களில் மகாத்மா காந்தியின் படத்தை அச்சிட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்த பீர் தயாரிக்கும் நிறுவனத்தின் பெயர் ரெவோர்ட்[Rewort]. மகாத்மா காந்தி உருவம் பொறித்த இந்த பீர் கேன்களின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. மேலும் அந்த பீர் கேன்களில் அதில் மகாத்மா G என்றும் எழுதப்பட்டிருக்கிறது.
மது அருந்துவதற்கு எதிரான தேசத்தந்தை மகாத்மா காந்திக்கு இழைக்கப்பட்ட அவமானம் இதுவென்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த விஷயத்தில் பிரதமர் மோடி தலையிட்டு, இந்த பீர் கேன்களில் இருந்து மகாத்மா காந்தியின் படத்தை அகற்றுமாறு பலர் வலியுறுத்தி வருகின்றனர்.
- தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்களில் ஒருவராக ஹரிஷ் கல்யாண் உள்ளார்.
- படத்தின் முதல் பாடலான பீர் சாங் வெளியாகி மக்களிடையே பெறும் வரவேற்பை பெற்றது.
'பார்க்கிங்', 'லப்பர் பந்து' என தனது அடுத்தடுத்த ஹிட் படங்கள் மூலம் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்களில் ஒருவராக ஹரிஷ் கல்யாண் உள்ளார்.
அடுத்ததாக அவரது 'டீசல்' படத்தின் மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர். ஹரிஷ் கல்யாண் கரியரில் அதிக பட்ஜெட்டில் உருவான படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை சண்முகம் முத்துசாமி இயக்கியுள்ளார். சான் லோகேஷ் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
'டீசல்' படத்தில் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி, வினய், சாய் குமார், அனன்யா, கருணாஸ், விவேக் பிரசன்னா, சச்சின் கேதேகர், ஜாகீர் உசேன், தங்கதுரை, கேபிஒய் தீனா மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தின் முதல் பாடலான பீர் சாங் வெளியாகி மக்களிடையே பெறும் வரவேற்பை பெற்று இணையத்தில் வைரலானது.
இந்த நிலையில் படத்தின் இரண்டாம் பாடல் நாளை காலை 11.11 மணிக்கு வெளியாகவுள்ளது என படக்குழு ஒரு ப்ரோமோ வீடியோவை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவு






