என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hiv infection"

    • திருமணத்தின் போது, ​​விலையுயர்ந்த கார், நகைகளை தந்தை வரதட்சணையாக கொடுத்துள்ளார்.
    • தந்தை காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றும் அவர்கள் அலட்சியம் காட்டி உள்ளனர்.

    வரதட்சணை கொண்டு வராத மருமகளுக்கு (30 வயது) மாமியார் (56வயது)  எச்.ஐ.வி. வைரஸ் ஊசியை செலுத்திய கொடூரம் உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.

    உத்தரப் பிரதேச மாநிலம் ஹரித்வார் மாவட்டத்தின் பிரன் காலியர் காவல் நிலையத்தில் உள்ள ஜஸ்ஸா வாலா கிராமத்தில் வசிக்கும் அபிஷேக் என்பவருடன் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கடந்த பிப்ரவரி 15, 2023 அன்று திருமணம் நடந்துள்ளது.

    திருமணத்தின் போது, விலையுயர்ந்த கார், மகள் தனது மாமியார் வீட்டில் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதற்காக, லட்சக்கணக்கான மதிப்புள்ள நகைகள் மற்றும் பணத்தை பெண்ணின் தந்தை வரதட்சணையாக கொடுத்திருந்தார். திருமணத்திற்கு சுமார் ரூ.45 லட்சம் செலவிடப்பட்டது.

    இதற்குப் பிறகு, மீண்டும் ரூ.10 லட்சம் ரொக்கமும், மற்றொரு பெரிய எஸ்யூவி காரும் வரதட்சணையாக கேட்டு மருமகளை மாமியார் நச்சரித்து வந்துள்ளார். இந்த விஷயம் பஞ்சாயத்தில் பேசி தீர்க்கப்பட்டது. ஆனால் அதன்பின்னும் மாமியார் அந்த பெண்ணை விடுவதாக இல்லை. தொடர்ந்து மருமகளை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தி வந்துள்ளார்.

    இதன் உச்சமாக மருமகளுக்கு எச்.ஐ.வி தொற்று சிரிஞ்சை பயன்படுத்தி ஊசி செலுத்தி நோய்பாதிப்பை ஏற்படுத்தி உள்ளார். இதன் காரணமாக அவரது உடல்நிலை வேகமாக மோசமடையத் தொடங்கியது.

    பின்னர் மருத்துவ பரிசோதனையில் அந்தப் பெண்ணுக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதுதொடர்பாக பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றும் அவர்கள் அலட்சியம் காட்டி உள்ளனர்.

    எனவே இதுதொடர்பாக பெண்ணும் அவரது தந்தையும் சஹாரன்பூர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். பெண்ணின் மனுவை விசாரித்த நீதிமன்றம், அவரின் மாமியார், கணவர் உள்ளிட்ட உறவினர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்ய உத்தரப் பிரதேச காவல்துறைக்கு உத்தரவிட்டது.

    இதனையடுத்து காங்கோ காவல்நிலையத்தில் பெண்ணின் கணவர், 2 மைத்துனர்கள் மற்றும் மாமியார் ஆகியோர் மீது ஐபிசி பிரிவுகள் 307 (கொலை முயற்சி), 498A (கணவர் அல்லது அவரது உறவினர்களால் ஒரு பெண்ணை கொடுமைப்படுத்துதல்), 328 (விஷம் மூலம் காயப்படுத்துதல்) மற்றும் தொடர்புடைய வரதட்சணை பிரிவுகளின் கீழ் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    சாத்தூர் கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்டுள்ளது குறித்து ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது. #HIVBlood #PregnantWoman #tngovt #chennaihighcourt

    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில் கிறிஸ்துமஸ் விடுமுறை கால நீதிமன்றம் இன்று செயல்படுகிறது. அவசர வழக்குகளை நீதிபதிகள் எஸ்.வைத்திய நாதன், பி.டி.ஆஷா ஆகியோர் விசாரிக்க தொடங்கினார்கள். அப்போது, வக்கீல்கள் ஆர்.ஒய்.ஜார்ஜ் வில்லியம்ஸ், ஆர்.கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் ஆஜராகி, அரசு டாக்டர்கள், ஊழியர்களின் அலட்சியமான பணியினால், இளம் கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட நபரின் ரத்தம் ஏற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து அவசர வழக்கை விசாரிக்கவேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தனர்.

    அப்போது நீதிபதிகள், ‘இருவரும் முறையிடுகிறீர்கள், யார் வழக்கு மனுவை தயாரித்து தயாராக உள்ளீர்கள்?’ என்று கேள்வி எழுப்பினார்கள்.

    அதற்கு வக்கீல் ஜார்ஜ் வில்லியம்ஸ், ‘இந்த விவகாரத்தை ஐகோர்ட்டின் கவனத்திற்கு கொண்டு வந்து விட்டோம். இது குறித்து தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து, விசாரிக்க வேண்டும். அலட்சியமாக செயல்பட்ட டாக்டர், செவிலியர் உள்ளிட்ட அரசு ஆஸ்பத்திரி ஊழியர்கள் மீது குற்ற வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்யவேண்டும்’ என்று கூறினார்.

    இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ‘இந்த விவகாரம் குறித்து தாமாக முன்வந்து வழக்கை பதிவு செய்கிறோம். இந்த வழக்கிற்கு விரிவான பதில் மனுவை வருகிற ஜனவரி 3-ந்தேதி தமிழக அரசு தாக்கல் செய்யவேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

    அப்போது கோர்ட்டில் இருந்த கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன், இந்த சம்பவம் குறித்த நிலை அறிக்கையை தாக்கல் செய்கிறோம்’ என்று கூறினார்.

    முன்னதாக மதுரையை சேர்ந்த வக்கீல் நீலமேகம் இன்று மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார், அதில், 8 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்டுள்ளது.

    இந்த தவறுக்கு காரணம் அரசு ரத்த வங்கிகளிலும், இதர ரத்த வங்கிகளிலும் தற்காலிக பணியாளர்கள் பணியில் இருப்பதே ஆகும். எனவே இந்த மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

    இந்த மனு நீதிபதிகள் நிர்மல்குமார், சரவணன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனு மீது விசாரணை மேற்கொண்ட நீதிபதிகள் இந்த விவகாரத்தில் தமிழக அரசு போதிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    எனவே இதனை அவசர வழக்காக எடுத்து நடத்த வேண்டிய அவசியம் இல்லை. எனவே மனுதாரர் வழக்கமான முறையில் நீதிமன்றத்தை அணுகலாம் என்று உத்தரவிட்டனர். #HIVBlood #PregnantWoman #tngovt #chennaihighcourt

    எச்.ஐ.வி. தொற்று பரவுவதை தடுப்பதில் தமிழகம் உலக அளவில் 3-வது இடத்தில் இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். #HIV #TamilNadu
    சென்னை:

    சிறை மற்றும் சமூக நலத்துறை மையங்களில் எய்ட்ஸ் தடுப்பு மற்றும் காசநோய் தடுப்பு சேவை பணிகளை விரிவுபடுத்தும் திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சுகாதார அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் முன்னிலையில் நேற்று கையெழுத்தானது. இதற்கான விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்தது.

    எய்ட்ஸ் தடுப்பு மற்றும் காசநோய் தடுப்பு சேவை செயல் திட்டத்துக்கான நெறிமுறைகள் அடங்கிய கையேட்டினை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார்.

    விழாவில் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் பேசியதாவது:-

    2001-2002-ம் ஆண்டில் 1.13 சதவீதமாக இருந்த எய்ட்ஸ் நோயின் தாக்கம் தற்போது 0.25 சதவீதமாக குறைந்துள்ளது. இது தேசிய அளவை விட (0.29 சதவீதம்) குறைவானது. தாயிடம் இருந்து சேய்க்கு எச்.ஐ.வி. தொற்று பரவுவதை தடுப்பதில் உலக அளவில் கியூபா மற்றும் தாய்லாந்துக்கு அடுத்தபடியாக தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது.


    எச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊட்டச்சத்து, கல்வி உதவித்தொகை, மருத்துவ சிகிச்சை வழங்குதல், கட்டணம் இல்லா பஸ் பயண அட்டை, விவசாயிகளுக்கு முதல்-அமைச்சரின் விவசாயி பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஆயிரம் ரூபாய் மாத ஓய்வூதியம் மற்றும் பசுமை வீடு கட்டும் திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படுகின்றன.

    மத்திய அரசின் அறிக்கையின்படி காசநோயாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.500 உதவித்தொகை அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தும் திட்டம் இந்தியாவிலேயே முதலாவதாக தமிழகத்தில் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இதுவரை 21,516 பேர் பயன் அடைந்துள்ளனர்.

    கிராமங்களில் உள்ள நோயாளிகளை இல்லம் தேடிச்சென்று தீவிர காசநோயை கண்டுபிடிப்பதற்கான நவீன டிஜிட்டல் எக்ஸ்-ரே உடன் கூடிய நடமாடும் மருத்துவ வாகனம் திட்டம் நாட்டிலேயே முன்னோடி திட்டமாக உள்ளது.

    சமூக நலத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் பெண்களுக்கான ஸ்வர்தார் மற்றும் உஜ்வாலா மையங்களுக்கும் எய்ட்ஸ் மற்றும் காசநோய் தடுப்பு திட்டமும் விரிவுபடுத்தப்பட உள்ளது. சிறைச்சாலையில் இருப்பவர்களிடம் 1,000-ல் 2 பேருக்கு எச்.ஐ.வி. தொற்று உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. சிறைச்சாலைகளில் ஏதேனும் தொற்று நோய்களை பெற்றிருந்தால் அந்த நோய் சமூகத்தில் பரவுவதற்கும், புதிதாக சிறைக்கு செல்பவர்கள் வெளியில் பெற்ற தொற்று நோய்களை சிறைக்குள் கொண்டு செல்லும் அபாயமும் உள்ளது.

    நோய் பரவுதலை தடுப்பதற்கும், தொற்று பெற்றவர்களுக்கு முறையான சிகிச்சை மற்றும் பராமரிப்பு சேவைகளை மேற்கொள்வதற்கும் தமிழகத்தில் உள்ள அனைத்து வகையான சிறைச்சாலைகள் மற்றும் சமூக நல மையங்களில் எய்ட்ஸ் மற்றும் காசநோய் தடுப்பு திட்டத்தினை விரிவுபடுத்துவதற்கு தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் முடிவு செய்துள்ளது. இதன்மூலம் எய்ட்ஸ் மற்றும் காசநோய் இல்லாத மாநிலமாக மாறும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், கூடுதல் காவல்துறை இயக்குனர் (சிறைச்சாலை) அசுதோஷ் சுக்லா, சமூக நல பாதுகாப்பு துறை ஆணையர் லால்பேனா, சமூக நலத்துறை இயக்குனர் அமுதவள்ளி உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். #HIV #TamilNadu #Vijayabaskar
    ×