என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • "ASMR: சட்டவிரோத ஏலியன்கள் நாடுகடத்தல் விமானம்" என்ற தலைப்பில் வெள்ளை மாளிகை வீடியோ வெளியிட்டுள்ளது.
    • எலான் மஸ்க் இந்த வீடியோவை பகிர்ந்து "ஹாஹா வாவ்" என்று பதிவிட்டுள்ளார்.

    டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, அந்நாட்டில் ஆவணமின்றி சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் வெளிநாட்டவரை நாடு கடத்தி வருகிறது. கொலம்பியா, பிரேசில், மெக்சிகோ ஆகிய லத்தீன் அமெரிக்க மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள் தொடர்ந்து நாடுகடத்தப்பட்டு வருகின்றனர்.

    இந்தியாவை சேர்ந்த நூற்றுக்கணக்கானோரும் மூன்று கட்டங்களாக ராணுவ விமானம் மூலம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். அவர்களின் கைகளை விலங்கிட்டு, கால்களை சங்கிலியால் பிணைத்து அத்தியாவசிய தேவைகளுக்கு சிரமமப்படும்படி அமெரிக்கா கீழ்த்தரமாக நடத்தி நாடுகடத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    தங்கள் நாட்டவரை அவமதித்தாக பிரேசில் அமேரிக்காவுக்கு கண்டனம் தெரிவித்தது. ஆனால் இந்தியா கண்டனம் தெரிவிக்காமல் மாறாக அமெரிக்காவோடு மேலும் நட்பு பாராட்டுவதைக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

    இந்நிலையில் அண்மையில் நாடு கடத்தப்பட்டவர்கள் எவ்வாறு சங்கிலி மற்றும் விலங்குகளால் பிணைக்கப்பட்டு விமானத்தில் ஏற்றப்படுகின்றனர் என்பதை விளக்கும் விதமாக அமெரிக்க வெள்ளை மாளிகை ASMR வீடியோ ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளது.

    "ASMR: சட்டவிரோத ஏலியன்கள் நாடுகடத்தல் விமானம்" என்ற தலைப்பில் 40 வினாடி வீடியோவை வெள்ளை மாளிகை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அறிக்கைப்படி சியாட்டில் நகரில் இருந்து புறப்படும் அந்த விமானத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர்.

    வீடியோவில், அதிகாரிகள், நாடுகடத்தப்படுபவர்களை சங்கிலியால் பிணைப்பது, அவர்கள் (கைதிகள்) காலில் பிணைந்த சங்கிலிகளுடன் விமானத்தில் ஏறுவது உள்ளிட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

    அமெரிக்கா பிறநாட்டவரை கீழ்தரமாக நடத்தும் இந்த வீடியோ சர்வதேச அளவில் கண்டனங்களை குவித்து வருகிறது. இதற்கிடையே உலக பணக்காரரும், அதிபர் டிரம்பின் நெருங்கிய கூட்டாளியுமான எலான் மஸ்க், தனக்கு சொந்தமான எக்ஸ் தளத்தில், தனது எக்ஸ் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்து "ஹாஹா வாவ்" என்று பதிவிட்டுள்ளார்.

    • குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.
    • இந்தப் படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது.

    ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள திரைப்படம் 'குட் பேட் அக்லி'. இந்தப் படத்தில் அஜித் மூன்று கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் பின்னணி இசையை மேற்கொள்கிறார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டன.

    'குட் பேட் அக்லி' திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தில் சிம்ரன் நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி குட் பேட் அக்லி திரைப்படத்தில் சிம்ரன் சிறப்பு தோற்றத்தில் வருவார் என்று கூறப்படுகிறது.


     


    முன்னதாக நடிகர் அஜித் குமார் மற்றும் சிம்ரன் இணைந்து வாலி திரைப்படத்தில் நடித்து இருந்தனர். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு இருவரும் நடித்து இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மறுமாா்க்கமாக கூடூரில் இருந்து மாலை 4.15-க்கு புறப்பட்டு விஜயவாடா சென்றடையும்.
    • அரக்கோணம், பெரம்பூா் வழி செல்வதற்குப் பதிலாக கூடூா், ரேணிகுண்டா, திருத்தணி, மேல்பாக்கம் வழியாக இயக்கப்படும்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    விஜயவாடாவில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் பினாகினி விரைவு ரெயில் பிப்ரவரி 24, 27, மாா்ச் 1 ஆகிய தேதிகளில் கூடூா் வரை மட்டுமே இயக்கப்படும். மறுமாா்க்கமாக கூடூரில் இருந்து மாலை 4.15-க்கு புறப்பட்டு விஜயவாடா சென்றடையும்.

    டாடா நகா் - எா்ணாகுளம் விரைவு ரெயில் வருகிற 23, 26, 28 ஆகிய தேதிகளிலும், அகா்தலா - பெங்களூரு ஹம்சாபா் விரைவு ரெயில் வருகிற 22, 25 ஆகிய தேதிகளிலும், திப்ரூகா் - மைசூா் பாகமதி விரைவு ரெயில் வருகிற 25-ந் தேதியும், பாட்னா - பெங்களூரு ஹம்சாபா் விரைவு ரெயில் வருகிற 27-ந் தேதியும் அரக்கோணம், பெரம்பூா் வழி செல்வதற்குப் பதிலாக கூடூா், ரேணிகுண்டா, திருத்தணி, மேல்பாக்கம் வழியாக இயக்கப்படும்.

    ஜசிதிஹ் - பெங்களூரு விரைவு ரெயில் மற்றும் புருலியா - திருநெல்வேலி விரைவு ரெயில் பிப். 28-ஆம் தேதி அரக்கோணம், பெரம்பூா் வழி செல்வதற்குப் பதிலாக கூடூா், ரேணிகுண்டா, திருத்தணி, மேல்பாக்கம் வழியாக இயக்கப்படும். மேலும், செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரெயில் வருகிற 26-ந் தேதி சென்னை எழும்பூா் வழி செல்வதற்குப் பதிலாக கூடூா், ரேணிகுண்டா, மேல்பாக்கம், செங்கல்பட்டு வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மராட்டியப் பேரரசை ஆட்சி செய்த மன்னர்களில் தலைச்சிறந்து விளங்கியவர் சத்ரபதி சிவாஜி.
    • சத்ரபதி சிவாஜியின் தைரியம் மற்றும் நீதியின் மதிப்புகள் தலைமுறைகளை ஊக்கப்படுத்தியது.

    முகலாயர்களுக்கும், ஆங்கிலேயர்களுக்கும் சவாலாக திகழ்ந்த மராட்டிய மாமன்னன் சத்ரபதி சிவாஜியின் ஆட்சிகாலம் தென்னிந்திய வரலாற்றின் பொற்காலம் என கருதப்படுகிறது.

    இவரது ஆட்சிக் காலத்தில், சுமார் பத்துக்கும் மேற்பட்ட கோட்டைகளைக் கட்டினார். அரசியல் நடவடிக்கையில் மட்டுமல்லாமல், சிறப்பான நிர்வாகக் கட்டமைப்பினையும், வலுவான படை அமைப்பினையும் கொண்டு இவர் சிறந்த ஆட்சியாளராகவும் விளங்கினார்.

    மராட்டியப் பேரரசை ஆட்சி செய்த மன்னர்களில் தலைச்சிறந்து விளங்கியவர் சத்ரபதி சிவாஜி. இத்தகைய சிறப்புகளை பெற்ற மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. சத்ரபதி சிவாஜியின் பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

    பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    சத்ரபதி சிவாஜி மகாராஜின் ஜெயந்தியை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.

    அவரது வீரம் மற்றும் தொலைநோக்கு தலைமை சுயராஜ்ஜியத்திற்கு அடித்தளம் அமைத்தது, தைரியம் மற்றும் நீதியின் மதிப்புகள் தலைமுறைகளை ஊக்கப்படுத்தியது.

    வலுவான, தன்னம்பிக்கை மற்றும் வளமான இந்தியாவை உருவாக்க அவர் நம்மை ஊக்குவிக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

    • குழந்தை வடிவில் உள்ள ராமரின் சிலையைத் தேர்ந்தெடுப்பதற்கான நடுவர் குழுவில் ஞானேஷ் குமார் உறுப்பினராக இருந்தார்.
    • அமித் ஷாவின் கீழ் இயங்கும் உள்துறை அமைச்சம், கூட்டுறவு அமைச்சகம் ஆகிய இரண்டிலும் ஞானேஷ் குமார் பணியாற்றினார்.

    கடந்த திங்கள்கிழமை இரவோடு இரவாக அடுத்த தலைமை தேர்தல் ஆணையராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் ஞானேஷ் குமார். எதிர்க்கட்சி விமர்சனங்களுக்கு மத்தியில் இன்று(பிப்ரவரி 19) காலை 26 ஆவது தலைமை தேர்தல் ஆணையராக அவர் பதவியேற்றுள்ளார்.

    யார் இந்த ஞானேஷ் குமார்:

    ஜனவரி 27, 1964 அன்று உத்தரப் பிரதேசம் ஆக்ராவில் பிறந்த ஞானேஷ் குமார் மிகவும் படித்த வசதியான குடும்ப பின்னணியைக் கொண்டவர். அவரது தந்தை டாக்டர் சுபோத் குப்தா மாவட்ட சுகாதர அதிகாரி CMO பதவி வகித்தவர்.

    ஞானேஷ் குமார் கான்பூரில் உள்ள ஐஐடியில் சிவில் இன்ஜினியரிங்கில் பி.டெக். பட்டம் பெற்றார். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

    1988 ஆம் ஆண்டு சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று கேரளப் கேட்ரே ஐஏஎஸ் அதிகாரியானார். திருவனந்தபுரத்தில் மாவட்ட நிர்வாக அதிகாரியாக முதல் பணி நியமனம் கிடைத்தது. UPA அரசின்போது 2007 முதல் 2012 வரை பாதுகாப்பு அமைச்சகத்தில் இணைச் செயலாளராக இருந்தார்.

     

    2014 ஆம் ஆண்டு,டெல்லியில் கேரள அரசின் குடியுரிமை(citizenship)ஆணையராகப் பணியாற்றினார். 2024 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற பிறகு மார்ச் 15 ஆம் தேதி தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். முன்னதாக அமித் ஷாவின் கீழ் இயங்கும் உள்துறை அமைச்சம், கூட்டுறவு அமைச்சகம் ஆகிய இரண்டிலும் பணியாற்றிய ஞானேஷ் குமார் அவருக்கு நெருக்கமானவராக இருந்தார்.

    காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம்:

    2019 இல் ஜம்மு-காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பின் பிரிவு 370 மற்றும் பிரிவு 35A இன் விதிகள் ரத்து செய்யப்பட்டன. இதன் மூலம், ஜம்மு-காஷ்மீர் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, ஜம்மு-காஷ்மீருடன் சேர்ந்து, லடாக் ஒரு யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது.

    அப்போது ஞானேஷ் குமார் உள்துறை அமைச்சகத்தில் கூடுதல் செயலாளராக இருந்தார். ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் -2019 ஐ உருவாக்குவதிலும் அதை செயல்படுத்துவதிலும் ஞானேஷ் குமார் முக்கிய பங்கு வகித்தார்.  

    அயோத்தி ராமர் கோவில்:

    2019 ஆம் ஆண்டு அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்ட உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அயோத்தி வழக்கு தொடர்பான அனைத்து விஷயங்களுக்கும் ஞானேஷ் குமாருக்கு பொறுப்பு வழங்கப்பட்டது. அதன்பின் ராமர் கோவில் உருவாக்கத்தில் ஞானேஷ் குமாருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டது.

    ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை உருவாக்கப்பட்டு அதன் பிரதிநிதியாக ஞானேஷ் குமார் நியமிக்கப்பட்டார். குழந்தை வடிவில் உள்ள ஸ்ரீ ராமரின் சிலையைத் தேர்ந்தெடுப்பதற்கான நடுவர் குழுவில் ஞானேஷ் குமார் உறுப்பினராக இருந்தார்.

     

    இந்நிலையில் தற்போது தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள ஞானேஷ் குமாரின் பதவிக்காலம் ஜனவரி 26, 2029 வரை நீடிக்கும். அவரது தலைமையில் எதிர்வரும் பீகார், அசாம், கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ளன.

    • போட்டியில் விளையாடும் 8 நாடுகளின் தேசிய கொடிகள் ஸ்டேடியங்களில் ஏற்றப்பட வேண்டும்.
    • பாகிஸ்தான் ஸ்டேடியத்தில் இந்திய தேசிய கொடி மட்டும் ஏற்றப்படவில்லை.

    கராச்சி:

    சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்காக இந்திய அணி பாதுகாப்பு கருதி பாகிஸ்தான் செல்ல மறுத்து விட்டது. இதனால் இந்தியா மோதும் ஆட்டங்கள் ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாயில் நடக்கிறது.

    பாகிஸ்தானில் உள்ள கராச்சி, லாகூர், ராவல் பிண்டி ஆகிய 3 நகரங்களில் போட்டி நடக்கிறது. போட்டியில் விளையாடும் 8 நாடுகளின் தேசிய கொடிகள் ஸ்டேடியங்களில் ஏற்றப்பட வேண்டும். ஆனால் பாகிஸ்தான் ஸ்டேடியத்தில் இந்திய தேசிய கொடி மட்டும் ஏற்றப்படவில்லை.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு வீடியோ வெளியானது. அதில் லாகூர் ஸ்டேடியத்தில் இந்திய கொடி மட்டும் இல்லை. மற்ற நாட்டு கொடிகள் ஏற்றப்பட்டு இருந்தது. இது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. பாகிஸ்தான் வேண்டுமென்றே இந்தியாவின் கொடியை ஏற்றவில்லை என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்தனர். பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் பழி வாங்கும் நடவடிக்கையாக இந்த புறக்கணிப்பு நடைபெற்றதாக கூறப்பட்டது.

    இந்த நிலையில் சர்ச்சையை தொடர்ந்து இந்தியாவின் கொடி பாகிஸ்தான் ஸ்டேடியங்களில் ஏற்றப்பட்டது.

    சாம்பியன்ஸ் டிராபி இன்று தொடங்க உள்ள நிலையில் கராச்சி ஸ்டேடியத்தில் இந்திய கொடி காணப்பட்டது.

    • வாக்களிக்க தவறியவர்களுக்காக ஆட்சி செய்து கொண்டிருக்கிறோம்.
    • தேர்தல் நேரத்தில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளில் 90 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளன.

    சென்னை:

    சென்னை புள்ளியந்தோப்பில் உள்ள டான்போஸ்கோ பள்ளி வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    * வடசென்னையை வளர்ச்சி சென்னையாக மாற்ற தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    * வடசென்னை பகுதியை தென்சென்னைக்கு இணையாக மேம்படுத்த வேண்டும் என பல திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.

    * வடசென்னை வளர்ச்சிக்காக ரூ.6,400 கோடியில் வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

    * வடசென்னை எந்த அளவுக்கு ஒதுக்கி வைக்கப்பட்டிருந்ததோ அதையெல்லாம் மாற்றி வளர்ச்சி அடைந்து வருகிறது.

    * வடசென்னையில் இருக்கக்கூடிய ஏழை எளிய மக்கள் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

    * சொன்னதை மட்டுமல்ல சொல்லாததையும் செய்யும் ஆட்சி தி.மு.க. ஆட்சி.

    * வாக்களிக்க தவறியவர்களுக்காக ஆட்சி செய்து கொண்டிருக்கிறோம்.

    * தேர்தல் நேரத்தில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளில் 90 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளன.

    * வாக்குறுதியில் இல்லாத பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறோம்.

    * புதுமைப் பெண் திட்டம் தேர்தலின் போது வாக்குறுதி அளிக்கப்படாத திட்டம்.

    * தமிழ் புதல்வன் திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது.

    * காலை உணவு திட்டமும் தேர்தல் வாக்குறுதிகளில் இல்லை என்றார்.

    அரசு நிகழ்ச்சியில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளில் 712 பேருக்கு ஒதுக்கீடு ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    • இன்றைய நாளின் தொடக்கத்தில் சரிவுடன் காணப்பட்டது.
    • தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 38.60 புள்ளிகள் அதிகரித்தது.

    பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று (புதன் கிழமை) காலை சரிவுடன் தொடங்கியது. எனினும், புளூ சிப் பேங்க் பங்குகள் மற்றும் சர்வதேச நிதி வரத்து காரணமாக உயர்ந்து காணப்பட்டன.

    மும்பை பங்குச் சந்தை குறியீடான பி.எஸ்.இ. சென்செக்ஸ் இன்று காலை 386.01 புள்ளிகள் சரிந்து 75,581.38 புள்ளிகளாக வர்த்தகம் ஆனது. தேசிய குறியீடான நிஃப்டி 130.45 புள்ளிகள் சரிவடைந்து 22,814.85 ஆக இருந்தது.

    இன்றைய நாளின் தொடக்கத்தில் சரிவுடன் காணப்பட்ட போதிலும், பி.எஸ்.இ. சென்செக்ஸ் 134.16 புள்ளிகள் அதிகரித்து 76,120.85 ஆகவும், தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 38.60 புள்ளிகள் அதிகரித்து 22,983.90 ஆகவும் உள்ளன.

    சென்செக்ஸ்-இல் ஜொமாட்டோ, டாடா ஸ்டீல், என்.டி.பி.சி., இண்டஸ்இண்ட் வங்கி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, கோட்டக் மஹிந்திரா பேங்க், டைட்டன், ஆக்சிஸ் வங்கி, டாடா மோட்டார்ஸ் மற்றும் பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகியவை அதிக லாபம் ஈட்டின.

    சன் ஃபார்மா, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், இன்ஃபோசிஸ், டெக் மஹிந்திரா, ஹெச்.சி.எல். டெக், நெஸ்ட்லே மற்றும் இந்துஸ்தான் யூனிலீவர் உள்ளிட்டவை சரிவுடன் காணப்பட்டன.

    • பல்கலைக்கழக பதிவாளரின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் தான்.
    • பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் பதவி கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக கிடக்கிறது.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் காலியாக இருக்கும் பதிவாளர் பணிக்கு மார்ச் ஒன்றாம் தேதி நேர்காணல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு, அதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருக்கும் நிலையில், அவரது நீட்டிக்கப்பட்ட பதவிக்காலம் முடிவடைவதற்கு சில வாரங்கள் முன்பாக பதிவாளர் பணிக்கு நேர்காணல் நடத்துவது சட்ட விரோதமானது.

    தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் 2027-ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு அனுப்பிய சுற்றறிக்கையில், துணைவேந்தர்கள் அவர்களின் பதவிக்காலத்தின் கடைசி 3 மாதங்களில் எந்த நியமனங்களையும் மேற்கொள்ளக் கூடாது; எந்தக் கொள்கை முடிவையும் எடுக்கக் கூடாது என்று தெளிவாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜெகநாதன் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஓய்வு பெற்று விட்டார். புதிய துணைவேந்தரை நியமிக்க முடியாத சூழல் நிலவுவதால் அவரது பதவிக்காலம் வரும் மே 19-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்தப் பதவிக்காலம் முடிவடைவதற்கு 2 மாதங்கள் 18 நாட்களுக்கு முன்பாக பதிவாளர் பணிக்கு நேர்காணல் நடத்துவது அரசின் விதிகளை மீறியது ஆகும்.

    பல்கலைக்கழக நிர்வாகத்தில் துணைவேந்தருக்கு அடுத்தபடியாக அதிக பொறுப்பும், முக்கியத்துவமும் நிறைந்த பதவி பதிவாளர் பதவி ஆகும். பல்கலைக்கழகங்களில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரிக்க ஆணையிடவும், அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கவும் பதிவாளருக்குத் தான் அதிகாரங்கள் உள்ளன. தற்போதைய துணைவேந்தர் மீது இப்போது ஏராளமான குற்றச்சாட்டுகள் உள்ளன. அவற்றில் சில குற்றச்சாட்டுகள் குறித்து தமிழக காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் மீதமுள்ள புகார்கள் மீது தமது செல்வாக்கைப் பயன்படுத்தி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் துணைவேந்தர் தடுத்து வருகிறார்.

    துணைவேந்தர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு பதிவாளர் பதவியில் நேர்மையான அதிகாரி நியமிக்கப்பட்டால், அவர் தம் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த ஆணையிடக்கூடும் என்பதால், தமது பதவிக் காலத்திலேயே தமக்கு விசுவாசமான ஒருவரை பதிவாளராக நியமிக்க துணைவேந்தர் நினைப்பதாகவும், அதனால் தான் அவசர, அவசரமாக நேர்காணலை ஏற்பாடு செய்திருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. துணைவேந்தரின் கடந்த கால வரலாற்றை வைத்துப் பார்க்கும் போது அந்தக் குற்றச்சாட்டை புறக்கணிக்க முடியாது.

    பல்கலைக்கழக பதிவாளரின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் தான். ஆனால், பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் பதவி கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக கிடக்கிறது. தமது மூன்றரை ஆண்டு பதவிக்காலத்தில் பதிவாளர் பணியிடத்தை நிரப்ப எந்த நடவடிக்கையும் எடுக்காத துணைவேந்தர், ஓய்வு பெறப்போகும் போது பதிவாளரை நியமிக்க துடிப்பது ஏன்?

    பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீதான பல முறைகேடு புகார்களுக்கு ஆதாரம் இருப்பதாக கூறிய தமிழக அரசு. அதன் அறிவுறுத்தலை மீறி பதிவாளரை நியமிக்க துணைவேந்தர் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், அதைத் தடுக்காமல் வேடிக்கைப் பார்ப்பது ஏன்? பெரியார் பல்கலைக்கழகத்தில் முறைகேடுகள் தொடர்வதை தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது. எனவே, பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் பதவிக்கு வரும் மார்ச் 1-ஆம் தேதி நடைபெறவிருக்கும் நேர்முகத்தேர்வுக்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். 

    • தமிழக அரசும், காவல்துறையும் இந்தக் கொடுமைகளை கைகட்டி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன.
    • தமிழக அரசு இனியும் இல்லாத சட்டம் - ஒழுங்கை இருப்பதாக வீண் பெருமை பேசாமல் தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க வேண்டும்.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    திருப்பூரில் சொந்த ஊருக்கு திரும்புவதற்காக காத்திருந்த இளம்பெண் ஒருவர், அவரது கணவர் மற்றும் குழந்தை கண் எதிரில், மூன்று பேர் கொண்ட கும்பலால் கத்திமுனையில் கொடூரமான முறையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கின்றன.

    கோவையில் 17 வயது சிறுமியை கல்லூரி மாணவர்கள் 7 பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததால் ஏற்பட்ட அதிர்ச்சியும், பதற்றமும் விலகுவதற்கு முன்பாகவே திருப்பூரில் இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்து விட்டது என்பதையே காட்டுகிறது.

    தமிழ்நாட்டில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகாத நாட்களே இல்லை என்று கூறும் அளவுக்கு ஒவ்வொரு நாளும், தமிழ்நாட்டின் ஏதாவது ஒரு பகுதியில் ஏதாவது ஒரு பெண் மனித மிருகங்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு வருகிறார்கள். இதைத் தடுத்து நிறுத்த வேண்டிய தமிழக அரசும், காவல்துறையும் இந்தக் கொடுமைகளை கைகட்டி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன.

    பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவது குறித்து குற்றச்சாட்டுகள் எழும் போதெல்லாம் குற்றவாளிகளை கைது செய்து விட்டதாகக் கூறி அரசும், காவல்துறையும் மார்தட்டிக் கொள்கின்றன. பெண்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் நடமாடுவதை உறுதி செய்ய வேண்டியது தான் அரசு மற்றும் காவல்துறையின் பணி என்பதையும், குற்றம் செய்தவர்களை கைது செய்வது என்பது இழைக்கப்பட்ட கொடுமைக்கு தேடப்படும் பரிகாரம் தானே தவிர அதில் பெருமைப்பட்டுக் கொள்வதற்கு எதுவும் இல்லை என்பதையும் திராவிட மாடல் ஆட்சியாளர்கள் எப்போது உணர்வார்கள்? என்பது தான் தெரியவில்லை.

    திருப்பூரில் இளம்பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் பீகாரைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. வெளி மாநிலத்தவர் அதிகம் பணி செய்யும் திருப்பூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் குற்றச்செயல்கள் அதிகம் நடைபெறும் நிலையில், வெளி மாநிலத்தவரை கண்காணிக்கவும், சுற்றுக்காவலை வலுப்படுத்தவும் காவல்துறையும், அரசும் நடவடிக்கை எடுத்திருந்தால் இந்தக் கொடுமை நடந்திருக்காது.

    தமிழக அரசு இனியும் இல்லாத சட்டம் - ஒழுங்கை இருப்பதாக வீண் பெருமை பேசாமல் தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கவும், பெண்கள் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் நடமாடுவதை உறுதி செய்யவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பல நகைச்சுவைகளின் வசனங்கள் இன்றும் பேசப்பட்டு வருகிறது.
    • இவர்கள் மீண்டும் இணைந்து நகைச்சுவையில் கலக்குவார்களா? என எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

    1990-களில் நகைச்சுவை கூட்டணி என்று சொன்னால் அது கவுண்டமணி- செந்தில் கூட்டணி தான். தமிழ்ப் படங்களில் காமெடியன்கள், அவர்களுக்கென தனி டிராக் என்பது மாறி காமெடியன்கள் ஹீரோக்களுடன் கைகோர்த்து காமெடியில் கலக்கத் தொடங்கினர். அந்த வகையில் பார்த்திபன்- வடிவேலு கூட்டணியை எவராலும் மறக்க முடியாது.

    நடிகர் பார்த்திபனும், வைகைப் புயல் வடிவேலும் இணைந்து நடித்த படங்களில் நகைச்சுவை காட்சிகள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. குண்டக்க மண்டக்க, இங்கு மீன்கள் விற்கப்படும், துபாய் குறுக்கு சந்து உள்ளிட்ட பல நகைச்சுவைகளின் வசனங்கள் இன்றும் பேசப்பட்டு வருகிறது. இவர்கள் மீண்டும் இணைந்து நகைச்சுவையில் கலக்குவார்களா? என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.



    இந்த நிலையில், இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு ரசிர்கர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது, பார்த்திபன்- வடிவேலு இணைந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, 'வெற்றிக்கான தேர்தல் கூட்டணி எதுன்னு தெரியாது, ஆனா...!' என்று ட்விஸ்ட் வைத்துள்ளார்.

    இதனை ரசிகர்கள் இவர்கள் இருவரும் மீண்டும் இணைய உள்ளதாக கூறி வைரலாக்கி வருகின்றனர்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கார்ட்டூன் வெளியிட்டதற்காக இணையதளத்தை முடக்குகிறார்கள் என்றால் அது அவர்களது சர்வாதிகாரத்தை வெளிகாட்டுகிறது.
    • எங்கள் தலைமை ஏற்றுக்கொண்டு யார் வருகிறார்களோ அவர்களோடு நல்ல முறையில் வலுவான கூட்டணி அமையும்.

    சிங்காரப்பேட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் அ.தி.மு.க. சார்பில் பூத்கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அப்போது கே.பி.முனுசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    அமெரிக்காவில் இருக்கின்ற சட்டவிரோதமாக குடியேறியதாக இந்திய மக்களை வெளியேற்றுகின்றபோது, கை, கால்கள் கட்டப்பட்டு அனுப்பப்பட்டதாக செய்தி வந்ததும் உடனடியாக இந்திய அரசு பதில் சொல்லி இருக்க வேண்டும்.

    குறிப்பாக வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் சொல்லி இருக்க வேண்டும், மத்திய அரசின் வெளியுறவு துறை அமைச்சர் கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும். அமெரிக்க விஷயத்தில் பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும். கார்ட்டூன் வெளியிட்டதற்காக இணையதளத்தை முடக்குகிறார்கள் என்றால் அது அவர்களது சர்வாதிகாரத்தை வெளிகாட்டுகிறது.

    தமிழகம் தேசிய கல்வி கொள்கையை முழுமையாக ஏற்று கொண்டால்தான் தமிழகத்திற்கு முழுமையான நிதி மத்திய அரசிடம் இருந்து கிடைக்கும் என மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் கூறியதற்கு இந்தி பேசாத மாநிலங்களை முழுவதையும் மிரட்டுகின்ற வகையில் கூறியிருக்கிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது என கூறினார்.

    அ.தி.மு.க. கொள்கை வேறு, மற்ற கட்சிகள் கொள்கை வேறு, அ.தி.மு.க. மதச்சார்பற்ற கொள்கை உடையது.

    அனைத்து மதங்களையும் ஒரு முகமாக பார்க்கின்ற கட்சி, எங்கள் தலைமை ஏற்றுக்கொண்டு யார் வருகிறார்களோ அவர்களோடு நல்ல முறையில் வலுவான கூட்டணி அமையும் என்றார்.

    ×