என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி.
    • இஸ்லாமியப் பெருமக்களோடு கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.

    ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பங்கேற்க உள்ளார்.

    இதுகுறித்து தவெகவின் தலைமை நிலையச் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    ஈகைப் பண்பையும் நல்லிணக்கத்தையும் போற்றும் புனித ரமலான் நோன்பு இஸ்லாமியப் பெருமக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி.

    வரும் 7ஆம் தேதி (07.03.2025) மாலை, சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. அரங்கில் நடைபெற உள்ளது.

    இதில் கழகத் தலைவர் அவர்கள், இஸ்லாமியப் பெருமக்களோடு கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.

    இடம்: ஒய்.எம்.சி.ஏ.அரங்கம். ராயப்பேட்டை, சென்னை

    தேதி: 07.03,2025 வெள்ளிக்கிழமை

    நோன்பு திறக்கும் நேரம்: மாலை, சரியாக மணி 6.24

    மக்ஃரிப் பாங்கு: மாலை, மணி 6.28

    மக்ஃரிப் தொழுகை: மாலை, மணி 6.35 (ஒய்.எம்.சி.ஏ. அரங்கிற்குள்)

    மக்ஃரிப் தொழுகை முடிந்ததும் கழகத்தின் சார்பில் இஃப்தார் விருந்து நடைபெறும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • கமிஷன் அடித்தே 5 லட்சம் கோடிக்கு தமிழகத்தை கடனாளி மாநிலமாக ஆக்கியுள்ளார்கள் என்றீர்கள்.
    • கல்வி, நூறு நாள் வேலைத் திட்டம் உள்ளிட்டவற்றிற்கான நிதியைப் பெற்றுத் தாருங்கள்.

    தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில், " இந்த மாதம் 14ஆம் தேதி, வரும் நிதி ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்யவுள்ளது.

    இந்த ஆண்டு நிறைவு பெறும் போது, தமிழக அரசு, மக்கள் மீது சுமத்தியுள்ள மொத்த கடன் 9.5 லட்சம் கோடி ரூபாயை நெருங்கியிருக்கும். கடந்த 2021ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது, அன்றைய எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசிய காணொளி ஒன்றை இன்று பார்க்கும் வாய்ப்பு கிட்டியது.

    கமிஷன் அடித்தே 5 லட்சம் கோடிக்கு தமிழகத்தை கடனாளி மாநிலமாக ஆக்கியுள்ளார்கள் என்றீர்கள் அன்று. இன்று மொத்தக் கடன் 9.5 லட்சம் கோடி ரூபாய். நீங்கள் அடித்த கமிஷன் எவ்வளவு, திரு மு.க.ஸ்டாலின்?" என்று குறிப்பிட்டிருந்தார்.

    இதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி அளித்துள்ளார்.

    இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    2014ஆம் ஆண்டு 55.87 லட்சம் கோடியாக இருந்த இந்தியாவின் கடன் சுமை தற்போது 2025ஆம் ஆண்டு 181.74 லட்சம் கோடியாக மாறியிருக்கிறதே, அப்படியென்றால் நீங்கள் எல்லாம் கூடி அடித்த கமிஷன் எவ்வளவு என்று திருப்பிக் கேட்கலாமா ?

    தமிழ்நாட்டின் மீது உண்மையில் உங்களுக்கு அக்கறை இருந்தால், உங்கள் கட்சியின் அமைச்சர்களிடம் கேட்டு தமிழ்நாட்டிற்கு நிலுவையில் இருக்கும் கல்வி, நூறு நாள் வேலைத் திட்டம் உள்ளிட்டவற்றிற்கான நிதியைப் பெற்றுத் தாருங்கள்.

    கடந்த மூன்றாண்டுகளில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அடைந்திருக்கும் வளர்ச்சியை ஒன்றிய அரசின் பொருளாதார அறிக்கை 2025 பாராட்டியிருக்கும் நிலையில், சமூக வலைத்தளங்களில் அவதூறை மட்டுமே பரப்புவது உங்களது அரசியல் முதிர்ச்சிக்கான போதாமையையே காட்டுகிறதே தவிர வேறல்ல.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பொருளாதார தோல்வி, வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம் மற்றும் பொய்கள் மட்டுமே மொத்த உற்பத்தி.
    • அநீதியான வரிவிதிப்பை நீக்குங்கள், ஏகபோகத்தை ஒழிக்கவும், வங்கிகளுக்கான கதவுகளைத் திறக்கவும், திறமையாளர்களுக்கு உரிமைகளை வழங்கவும்.

    காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி இன்று சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள செய்திaல் கூறியிருப்பதாவது:-

    மோடி அரசின் கீழ் மொத்தமாக ஏதாவது உற்பத்தி செய்யப்பட்டிருந்தால் அது பொருளாதார தோல்வி, வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம் மற்றும் பொய்கள் மட்டுமே.

    அநீதியான வரிவிதிப்பை நீக்குங்கள், ஏகபோகத்தை ஒழிக்கவும், வங்கிகளுக்கான கதவுகளைத் திறக்கவும், திறமையாளர்களுக்கு உரிமைகளை வழங்கவும்... அப்போதுதான் வலுவான இந்தியா, பொருளாதாரம், வேலைவாய்ப்பை கட்டமுடியும்.

    இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    • கேங்கர்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் சுந்தர் சி மற்றும் வடிவேலு மீண்டும் இணைந்துள்ளனர்.
    • சுந்தர் சி இயக்கத்தில் வெளியான மத கஜ ராஜா மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

    நீண்ட இடைவேளைக்குப் பிறகு இயக்குனர் சுந்தர் சி மற்றும் காமெடி நடிகர் வடிவேலு கேங்கர்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் இணைந்துள்ளனர்.

    சுந்தர் சி மற்றும் வடிவேலு கூட்டணி மிகப்பெரிய சக்சஸ் கூட்டணி என்று கோலிவுட் திரையுலகில் கூறப்பட்ட நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக பல ஆண்டுகளாக இருவரும் திரைப்படத்தில் இணையாமல் இருந்தனர்.

    15 வருடங்களுக்குப் பிறகு இணையும் சுந்தர் சி மற்றும் வடிவேலு காமெடி கூட்டணி ரசிகர்கள் ரசிக்கும் வகையில் இருக்கும் என்றும் கைப்புள்ள, வீரபாகு மாதிரி சிங்காரம் என்ற கேரக்டரில் கேங்கர்ஸ் படத்தில் வடிவேலு நடித்து இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

    இந்நிலையில் கேங்கர்ஸ் திரைப்படம் ஏப்ரல் 24ம் தேதி திரைக்கு வருகிறது என்று படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

    சமீபத்தில் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான மத கஜ ராஜா திரைப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றிப்பெற்றது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இன்று அதிகபட்சமாக 73,649.72 புள்ளிகள் வரை உயர்ந்து வர்த்தகம் ஆனது.
    • குறைந்தபட்சமாக 72,784.54 புள்ளிகளில் வர்த்தகமானது.

    மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் 1,414.33 புள்ளிகள் சரிந்து 73,198.10 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    பங்குச் சந்தைகளுக்கு சனி மற்றும் ஞாயிறு விடுமுறை. இன்று காலை 9.15 மணிக்கு வர்த்தகம் தொடங்கியது. வெள்ளிக்கிழமை வர்த்தக நிறைவு பெற்றதைவிட சென்செக்ஸ் புள்ளிகள் சுமார் 129 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகம் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 73,427.65 புள்ளிகளுடன் இன்று காலை வர்த்தகம் தொடங்கியது.

    இன்று அதிகபட்சமாக 73,649.72 புள்ளிகள் வரை உயர்ந்து வர்த்தகம் ஆனது. பின்னர் சரிவதும், ஏறுவதுமாக இருந்தது. குறைந்தபட்சமாக 72,784.54 புள்ளிகளில் வர்த்தகமாகி இறுதியில் 112.16 புள்ளிகள் சரிவடைந்து 73,085 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    மும்பை பங்குச் சந்தையின் முக்கிய 30 பங்குகளில் டெக் மஹிந்திரா, டாடா ஸ்டீல், சொமேட்டோ, டாடா மோட்டார்ஸ், பவர் கிரிட் கார்ப், டைடன், அல்ட்ரா டெக் சிமெண்ட், என்.டி.பி.சி., மஹிந்திரா அண்டு மஹிந்திரா, கோடக் மஹிந்திரா, எல் அண்டு டி, எஸ்பிஐ, இன்போசிஸ், பாரதி ஏர்டெல், டிசிஎஸ் நிறுவன பங்குகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தன.

    ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரிஸ், ஹெச்.டி.டிஃப்.சி. பேங்க், இந்துஸ்தான் யுனிலிவர், ஹெச்.சி.எல். டெக்னாலாஜிஸ், மாருதி சுசுகி, ஆக்சிஸ் பேங்க், பாஜாஜி பின்செர்வ், அதானி போர்ட்ஸ், நெஸ்லே இந்தியா, ஆசியன் பெயின்ட்ஸ், இந்துஸ்இந்த் பேங்க் நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன.

    மும்பை பங்குச் சந்தை குறியீட்டு சென்செக்ஸ் போன்று இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி இன்று 5.40 புள்ளிகள் சரிவை சந்தித்தது.

    கடந்த வெள்ளிக்கிழமை நிஃப்டி 420.35 புள்ளிகள் சரிந்து 22,124.70 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை 22,194.55 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. அதிகபட்சமாக 22,261.55 புள்ளிகளிலும், குறைந்தபட்சமாக 22,004.70 புள்ளிகளிலும் வர்த்தமானது. இறுதியாக 5.40 புள்ளிகள் சரிந்து 22,119.30 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    • குட் பேட் அக்லி திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 10-ம் தேதி வெளியாகவுள்ளது.
    • குட் பேட் அக்லி படத்தின் டீசர் வெளியாகி 24 மணி நேரத்தில் 32 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது.

    குட் பேட் அக்லி படத்தில் அஜித் அணிந்திருந்த சட்டையின் விலை இவ்ளோ லட்சமா?

    ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள திரைப்படம் 'குட் பேட் அக்லி'. இந்தப் படத்தில் அஜித் மூன்று கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    'குட் பேட் அக்லி' திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 10-ம் தேதி வெளியாகவுள்ளது. குட் பேட் அக்லி படத்தின் டீசர் வெளியாகி 24 மணி நேரத்தில் 32 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது. இதுவரை கோலிவுட் திரைப்படங்களில் அதிகபடியான பார்வைகளை பெற்ற டீசராக இப்படத்தின் டீசர் அமைந்துள்ளது.

    குட் பேட் அக்லி திரைப்படத்தின் டீசரில் நடிகர் அஜித் விதவிதமான கலரிங் அணிந்திருந்த சட்டை இணையத்தில் வைரலானது. இந்நிலையில், அந்த சட்டையின் விலை ரூ.1.8 லட்சம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சரஸ்வதி-சிந்து நாகரிகம் என்பது முழு பாரதத்தையும் தழுவிய வேத நாகரிகம்.
    • சரஸ்வதி-சிந்து நாகரிகத்தின் வரலாற்று ரீதியிலான சரியான தகவல்களை பங்கேற்பாளர்கள் பரப்ப வேண்டும்.

    சென்னை டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரியில் சிந்து நாகரிகம் குறித்த மாநாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    வேதங்களின் மூலம் சிந்து நாகரிகம் பெற்ற ஞானம், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பாரதம் மற்றும் அதன் கலாசாரத்தின் சிந்தனை மற்றும் அடையாளத்தை எவ்வாறு வடிவமைத்தது என்பதையும், படைப்பின் ஒற்றுமை மற்றும் உலகளாவிய சகோதரத்துவம் தொடர்ந்து நம்மை ஈர்த்து, நமது தோற்றத்தை தனிப்பட்ட அளவிலும் உலகளவிலும் எவ்வாறு வரையறுத்து வருகின்றன.

    ஆரிய படையெடுப்பு மற்றும் ஆரிய இனம் பற்றிய கோட்பாடுகளை பொய்யாகப் பரப்பிய மார்க்சிஸ்ட் மற்றும் திராவிட சித்தாந்தங்களைத் தழுவியவர்கள் உள்பட ஐரோப்பிய காலனியவாதிகள், நீண்ட கால அறிவுசார் மற்றும் அரசியல் வன்முறை துணையுடன் மேற்கொள்ளும் வரலாற்றுத்திரிபுகள் மற்றும் தவறான உள்அர்த்தம் கற்பிக்கும் செயல்பாடுகளில் இருந்து இந்த நாகரிகத்தை பங்கேற்பாளர்கள் மீட்க வேண்டும்.

    செயற்கைக்கோள் படங்கள் மற்றும் அணு இயற்பியல் உள்ளிட்ட நவீன அறிவியல், சரஸ்வதி-சிந்து நாகரிகம் என்பது முழு பாரதத்தையும் தழுவிய வேத நாகரிகம் என்ற வரலாற்று உண்மையை அறிவியல்பூர்வமாக நிறுவியுள்ளது.

    நமது விரிவான தேசிய மறுமலர்ச்சி காலத்தில், சரஸ்வதி-சிந்து நாகரிகத்தின் வரலாற்று ரீதியிலான சரியான தகவல்களை பங்கேற்பாளர்கள் பரப்ப வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • குட் பேட் அக்லி திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 10-ம் தேதி வெளியாகவுள்ளது.
    • குட் பேட் அக்லி படத்தின் டீசர் வெளியாகி 24 மணி நேரத்தில் 32 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது.

    ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள திரைப்படம் 'குட் பேட் அக்லி'. இந்தப் படத்தில் அஜித் மூன்று கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    'குட் பேட் அக்லி' திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 10-ம் தேதி வெளியாகவுள்ளது. குட் பேட் அக்லி படத்தின் டீசர் வெளியாகி 24 மணி நேரத்தில் 32 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது. இதுவரை கோலிவுட் திரைப்படங்களில் அதிகபடியான பார்வைகளை பெற்ற டீசராக இப்படத்தின் டீசர் அமைந்துள்ளது.

    குட் பேட் அக்லி வெளியான அதே நாளில் தான் தனுஷ் இயக்கி நடித்துள்ள இட்லி கடை படமும் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதிநேரத்தில் இந்த ரேஸில் இருந்து இட்லி கடை வெளியேறலாம் என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில், நடிகர் தனுஷ் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தயாரிக்கிறது என்றும் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கொல்கத்தா அணியின் துணை கேப்டனாக வெங்கடேஷ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • ஐபிஎல் தொடரின் தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா - பெங்களூரு அணிகள் மோதுகின்றனர்.

    ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. 10 அணிகள் கலந்து கொள்ளும் இந்த தொடர் அடுத்த மாதம் 22-ம் தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்கொள்கிறது.

    இந்த தொடரில் கலந்து கொள்ளும் 10 அணிகளில் டெல்லி மற்றும் கொல்கத்தாவை தவிர மற்ற அணி நிர்வாகங்கள் தங்களது கேப்டன்களை அறிவித்துவிட்டன.

    இந்நிலையில் கொல்கத்தா அணியின் கேப்டன் மற்றும் துணை கேப்டன் யார் என்பது குறித்து அந்த அணியின் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி கொல்கத்தா அணியின் கேப்டனாக ரகானே நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக இளம் வீரர் வெங்கடேஷ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    36-வது வயதான ரகானே கடந்த வருடம் சிஎஸ்கே அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • விண்ணப்பங்கள் இணையவழி வாயிலாக பெறப்பட்டு வருகிறது.
    • விண்ணப்பங்கள் பெறுவதற்கான கடைசி தேதி 03.03.2025 லிருந்து 18.03.2025 வரை நீட்டிக்கப்படுகிறது.

    அரசு சட்டக் கல்லூரிகளில் இணை, உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வரும் 18ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்தாவது:-

    ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அரசு சட்டக் கல்லூரி இணைப் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர் (சட்ட முன்படிப்பு) பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு அறிவிக்கை எண். 01 / 2025, நாள். 24.01.2025 வெளியிடப்பட்டு, விண்ணப்பங்கள் இணையவழி வாயிலாக பெறப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், விண்ணப்பதாரர்களிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கைகளின் அடிப்படையில் இணைப் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர் (சட்ட முன்படிப்பு) பணியிடங்களுக்கு இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள் பெறுவதற்கான கடைசி தேதி 03.03.2025 லிருந்து 18.03.2025 மாலை 5.00 மணி வரை நீட்டிக்கப்படுகிறது என அறிவிக்கப்படுகிறது.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • நியூயார்க்கில் அணுஆயுத தடை ஒப்பந்த மாநாடு நடைபெற்று வருகிறது.
    • பார்வையாளராக கலந்து கொண்டு ஜப்பானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

    அமெரிக்காவின் அணுசக்தி தடுப்பு எங்கள் நாட்டின் பாதுகாப்பிற்கு மிகமிக முக்கியமானது. இதனால் ஐ.நா. அணுஆயுத தடை ஒப்பந்த மாநாட்டில் பார்வையாளராக கலந்து கொள்ள மாட்டோம் என ஜப்பான் தெரிவித்துள்ளது.

    மேலும், இந்த மாநாட்டில் கலந்து கொண்டால் அது ஜப்பானின் அணுசக்தி தடுப்பு கொள்கை தொடர்பாக அமெரிக்காவுக்கு தவறான தகவலை அனுப்புவதாகிவிடும் எனத் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக ஜப்பான் அமைச்சரவையின் தலைமை செயலாளர் யோஷிமசா ஹயாஷி கூறுகையில் "ஜப்பானின் தேசிய பாதுகாப்புதான் இந்த முடிவு எடுக்க முக்கிய காரணம்" எனத் தெரிவித்துள்ளார்.

    "கடுமையான பாதுகாப்பு சூழலின் கீழ் மக்களின் உயிர்களையும் சொத்துக்களையும் பாதுகாக்கவும், ஜப்பானின் இறையாண்மை மற்றும் அமைதியைப் பாதுகாக்கவும் அணுசக்தித் தடுப்பு இன்றியமையாதது" எனவும் தெரிவித்துள்ளார்.

    இந்த மாநாடு அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் இன்று தொடங்கியது.

    ஐ.நா.வின் 2017-ம் ஆண்டு அணுஆயுத தடை ஒப்பந்தத்திற்கு கடந்த 2017-ம் ஆண்டு ஒப்புதல் கிடைத்தது. இது 2021-ம் ஆண்டு நடைமுறைக்கு கொணடு வரப்பட்டது. இரண்டாம் உலகப்போரில் ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்கள் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசியது. இதேபோன்று மீண்டும் நடைபெற்று விடக்கூடாது என்பதற்காக ஐ.நா. இந்த நடவடிக்கையை கொண்டு வந்தது.

    அணுகுண்டு தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஜப்பான் மட்டும் இன்னும் ஐ.நா.வின் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. அணு ஆயுதங்கள் வைத்துள்ள நாடுகளின் பங்களிப்பு இல்லாமல் இது சாத்தியமில்லை எனக் கூறி ஜப்பான் கையெழுத்திட மறுத்துவிட்டது.

    • மேத்யூ ஷார்ட் காயம் காரணமாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து விலகி உள்ளார்.
    • ஷார்ட்க்கு பதிலாக கூப்பர் கோனாலி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    துபாய்:

    8 நாடுகள் பங்கேற்ற ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி கடந்த 19-ந் தேதி தொடங்கியது. பாகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்ற இந்த போட்டி தொடரின் லீக் ஆட்டங்கள் நேற்றுடன் முடிவடைந்தது.

    இன்று ஓய்வு நாளாகும். முதல் அரை இறுதி ஆட்டம் துபாயில் நாளை (4-ந் தேதி) நடக்கிறது. இதில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. 2-வது அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றனர். இந்த போட்டி வருகிற 5-ந் தேதி நடக்கிறது. இறுதிப்போட்டி 4 நாட்கள் ஓய்வுக்கு பிறகு 9-ந் தேதி நடக்கிறது.

     

    இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க அதிரடி ஆட்டக்காரர் மேத்யூ ஷார்ட் காயம் காரணமாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து விலகி உள்ளார். இவருக்கு பதிலாக கூப்பர் கோனாலி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    ×