என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அஜிங்க்யா ரகானே"

    • ஒரு புதிய தலைவரை வளர்த்தெடுக்க இதுவே சரியான நேரம் என்று நான் நம்புகிறேன்.
    • இதனால் கேப்டன் பொறுப்பில் தொடர வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன்.

    இந்திய கிரிக்கெட்டின் சீனியர் வீரரும், மும்பை கிரிக்கெட் அணியின் கேப்டனுமான அஜிங்க்யா ரஹானே, உள்நாட்டு சீசன் தொடங்குவதற்கு முன்னதாக, மும்பை ரஞ்சி அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஒரு வீரராக மட்டுமே விளையாட முடிவு செய்து இருக்கிறார்.

    புதிய தலைமுறைத் தலைவர்களை உருவாக்கும் நோக்கில் இந்த முடிவை எடுத்துள்ளதாக ரகானேதெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    மும்பை அணிக்கு கேப்டனாக இருந்து சாம்பியன் பட்டங்களை வென்றது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய மரியாதை. புதிய உள்நாட்டு சீசன் தொடங்க உள்ள நிலையில், ஒரு புதிய தலைவரை வளர்த்தெடுக்க இதுவே சரியான நேரம் என்று நான் நம்புகிறேன். எனவே, கேப்டன் பொறுப்பில் தொடர வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன்.

    ஒரு வீரராக எனது சிறந்த பங்களிப்பை அளிப்பதற்கு நான் முழு அர்ப்பணிப்புடன் இருப்பேன். மும்பை கிரிக்கெட் சங்கத்துடன் எனது பயணத்தைத் தொடர்ந்து, மேலும் பல கோப்பைகளை வெல்ல உதவுவேன். வரவிருக்கும் சீசனை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்.

    என்று ரகானே குறிப்பிட்டுள்ளார். 

    • முதலில் ஆடிய பரோடா அணி 158 ரன்கள் எடுத்தது.
    • மும்பை தரப்பில் ரகானே 11 பவுண்டரி, 5 சிக்சர் உள்பட 98 ரன்கள் குவித்தார்.

    பெங்களூரு:

    17-வது சையத் முஷ்டாக் அலி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற முதலாவது அரைஇறுதியில் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான மும்பை அணி, குருணல் பாண்ட்யா தலைமையிலான பரோடா அணிகள் மோதின.

    இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய பரோடா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஷிவாலிக் சர்மா 36 ரன்கள் எடுத்தார். மும்பை அணி தரப்பில் சூர்யன்ஷ் ஷெட்ஜ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதனையடுத்து மும்பை அணியின் தொடக்க வீரர்களாக ரகானே- ப்ரித்வி ஷா களமிறங்கினர். ப்ரித்வி ஷா 8 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் ரகானேவுடன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    அதிரடியாக விளையாடிய ரகானே அரைசதம் விளாசினார். அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷ்ரேயாஸ் 46 ரன்னில் வெளியேறினார். தொடர்ந்து விளையாடிய ரகானே 2 ரன்னில் சதத்தை தவறவிட்டார். அவர் 11 பவுண்டரி, 5 சிக்சர் என 98 ரன்கள் விளாசினார்.

    இறுதியில் மும்பை அணி 17.2 ஓவரில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 164 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் மும்பை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதே மைதானத்தில் 2-வது அரைஇறுதியில் டெல்லி- மத்தியபிரதேசம் அணிகள் சந்திக்கின்றன.

    • கொல்கத்தா அணியின் துணை கேப்டனாக வெங்கடேஷ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • ஐபிஎல் தொடரின் தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா - பெங்களூரு அணிகள் மோதுகின்றனர்.

    ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. 10 அணிகள் கலந்து கொள்ளும் இந்த தொடர் அடுத்த மாதம் 22-ம் தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்கொள்கிறது.

    இந்த தொடரில் கலந்து கொள்ளும் 10 அணிகளில் டெல்லி மற்றும் கொல்கத்தாவை தவிர மற்ற அணி நிர்வாகங்கள் தங்களது கேப்டன்களை அறிவித்துவிட்டன.

    இந்நிலையில் கொல்கத்தா அணியின் கேப்டன் மற்றும் துணை கேப்டன் யார் என்பது குறித்து அந்த அணியின் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி கொல்கத்தா அணியின் கேப்டனாக ரகானே நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக இளம் வீரர் வெங்கடேஷ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    36-வது வயதான ரகானே கடந்த வருடம் சிஎஸ்கே அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கொல்கத்தா அணியின் கேப்டனாக ரகானே நியமிக்கப்பட்டுள்ளார்.
    • தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதவுள்ளது.

    இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) 2025 கிரிக்கெட் தொடர் ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்று முடிந்த ஐ.பி.எல். மெகா ஏலத்தைத் தொடர்ந்து ஒவ்வொரு அணியிலும் ஏராளமான மாற்றங்கள் அரங்கேறியுள்ளன.

    மார்ச் 22-ம் தேதி தொடங்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதவுள்ளது. இப்போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்தான் மைதானத்தில் நடைபெறுகிறது.

    இந்த தொடரில் பங்கேற்கும் 10 அணிகளில் டெல்லி, கொல்கத்தா அணிகளை தவிர மற்ற அணிகள் தங்களின் கேப்டன்களை அறிவித்து விட்டனர். அந்த வகையில் கொல்கத்தா அணியின் கேப்டன் மற்றும் துணை கேப்டன்களை அந்த அணியின் நிர்வாகம் இன்று அறிவித்தது. கேப்டனாக ரகானேவை அதிகாரப்பூர்வமாக நியமித்துள்ளது.

    இந்நிலையில் கொல்கத்தா அணியை வழிநடத்துவதை நினைத்தால் பெருமையாகவும், ஆர்வமாகவும் உள்ளதாக கொல்கத்தா அணியின் புதிய கேப்டன் ரகானே தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    2025 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியை வழிநடத்துவதை நினைத்தால் பெருமையாகவும், ஆர்வமாகவும் உள்ளது. வரும் சவால்களை எதிர்கொள்ள தயாராக உள்ளோம். போராடி வெற்றி பெறுவோம்.

    இவ்வாறு ரகானே கூறினார்.

    இங்கிலாந்தில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில், 16 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவின் கோலி மற்றும் ரகானே ஜோடி 150 ரன்களுக்கு மேல் சேர்த்துள்ளது. #ENGvIND #INDvENG
    நாட்டிங்காம்:

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் இன்று தொடங்கியது.

    டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து, இந்தியா அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. உணவு இடைவேளைக்குள் இந்தியாவின் முன்னணி ஆட்டக்காரர்கள் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். முதல் நாள் உணவு இடைவேளை வரையில் இந்திய அணி 26.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 82 ரன்கள் எடுத்தது. விராட் கோலி 4 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

    உணவு இடைவேளைக்கு பிறகு களமிறங்கிய ரகானே விராட் கோலிக்கு சிறப்பான ஒத்துழைப்பு கொடுத்து விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டார். இருவரும் நிதானமாக விளையாடினர். எளிதான பந்துகளை பவுண்டரிக்கு விரட்டவும் தவறவில்லை.

    விராட் கோலி தனது 18-வது அரை சதத்தை கடந்தார். அவருடன் ஆடிய ரகானேவும்  13-வது அரை சதத்தை கடந்தார். அணியின் எண்ணிக்கை 241 ஆக இருக்கும்போது, ரகானே 81 ரன்களில் வெளியேறினார். கோலியும் ரகானேவும் இணைந்து 159 ரன்கள் சேர்த்தனர்.
     
    இங்கிலாந்தில் 16 ஆண்டுகளுக்கு பிறகு விராட் கோலி - அஜிங்க்யா ரகானே ஜோடி 150 ரன்கள் சேர்த்துள்ளது.

    இதற்கு முன்னதாக, கடந்த 2002-ல் லீட்சில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் சஞ்சய் பங்கர் - டிராவிட்ஜோடி 170 ரன்களை எடுத்துள்ளது. அதேபோல், டிராவிட் - டெண்டுல்கர் ஜோடி150 ரன்களையும், டெண்டுல்கர் - கங்குலி ஜோடி 249 ரன்களையும் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #ENGvIND #INDvENG
    ×