search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Government Law college"

    சென்னை தவிர தமிழகத்தில் பிற பகுதிகளில் அரசு சட்டக்கல்லூரி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. #GajaCyclone #Gajastorm #GovernmentLawCollege
    சென்னை:

    கஜா புயல் முழுமையாக கரையைக் கடக்க இன்னும் ஒரு மணிநேரம் ஆகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    கஜா புயல் தாக்கம் காரணமாக இன்றும் நாளையும் நடக்கவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.



    ஒத்திவைக்கப்பட்ட தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

    சென்னையில் உள்ள சீர்மிகு சட்டக்கல்லூரியில் திட்டமிட்டபடி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. #GajaCyclone #Gajastorm #GovernmentLawCollege

    திருவள்ளூர் அருகே ரூ.60 கோடியில் கட்டப்பட்ட அரசு சட்டக் கல்லூரிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். #EdappadiPalaniswami

    சென்னை:

    விழுப்புரம் மாவட்டம் வேடம்பட்டில் 9 கோடியே 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாவட்ட சிறைச் சாலையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். விழுப்புரம் மாவட்ட சிறைச் சாலை 5.26 ஏக்கர் பரப்பளவில், 200 கைதிகளை அடைக்கும் வசதியுடன் கட்டப்பட்டுள்ளது.

    மேலும், சிறைத்துறை சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டையில் 10 குடியிருப்புகள் மற்றும் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் 30 குடியிருப்புகள் என மொத்தம் 4 கோடியே 72 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 40 சிறைத்துறை குடியிருப்புகளையும் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.

    திருவள்ளூர் மாவட்டம், பட்டறைப் பெரும்புதூர் கிராமத்தில், 20 ஹெக்டேர் நிலப்பரப்பில், 60 கோடியே 37லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் நிர்வாகக் கட்டடம், வகுப்பறைகள், நூலகம், மாணவ, மாணவியர் விடுதிகள், மாதிரிநீதிமன்றம் மற்றும் கலையரங்கம் ஆகியவை மூன்றாண்டுசட்டப் படிப்பு மற்றும் சட்ட மேற்படிப்பு பயிலும் 1123 மாணாக்கர்கள் பயன் பெறும் வகையிலும் கட்டப்பட்டுள்ள அரசு சட்டக் கல்லூரிகளை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இப்புதிய அரசு சட்டக் கல்லூரிகள் 2018-2019-ம் கல்வியாண்டு முதல் செயல்படத் தொடங்கும்.

    தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சந்தாதாரர்களுக்கு எச்.டி. செட்டாப் பாக்ஸ்கள் வழங்கும் திட்டத்தை துவக்கி வைக்கும் அடையாளமாக, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 5 சந்தாதாரர்களுக்கு எச்.டி. செட்டாப் பாக்ஸ்களை வழங்கி தொடங்கி வைத்ததுடன், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் எச்.டி. ஒளிபரப்பு சேவையையும் தொடங்கி வைத்தார்.


    தற்பொழுது எச்.டி. செட்டாப் பாக்ஸ்கள் விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. எச்.டி. ஒளிபரப்பு சேவை உயர் சந்தை தேவையை பூர்த்தி செய்வதால், இச்சேவையை விரும்பும் அனைத்து சந்தாதாரர்களுக்கும் எச்.டி. செட்டாப் பாக்ஸ்கள் குறைந்த விலையான ரூ.500-க்கு உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் வாயிலாக வழங்கப்படும். மேலும், தற்பொழுது துவங்கப்படும் எச்.டி. ஒளிபரப்பு சேவையில், மூன்றாவது தொகுப்பாக 380 எஸ்.டி. சேனல்களுடன், 45 எச்.டி. சேனல்களும் சேர்த்து மொத்தம் 425 சேனல்கள் ரூ.225 மற்றும் ஜி.எஸ்.டி. என்ற மாத கட்டணத்தில் வழங்கப்படும்.

    பொதுமக்கள் தமது ஸ்மார்ட் போன்களில் இச்செயலியினைப் பதிவிறக்கம் செய்து, அதன் மூலம் விண்ணப்பித்து இச்சான்றிதழ்களைப் பெற முடியும். இச்செயலியின் மூலம் தமிழ்நாட்டு மக்கள் 24X7 நேரமும் அரசின் சேவைகளைப் பெற்றிட முடியும்.

     

    சேலம், பெரியார் பல்கலைக்கழகத்தில் 30 கோடியே 74 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அறிவியல் பிரிவுக் கட்டடம், பொதுக் கணினிமையம், உபகரணமையம், மகளிர் விடுதி, உணவுக் கூடம், உள் விளையாட்டு அரங்கம் மற்றும் வங்கி கட்டடங்கள் ஆகியவற்றை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

    மேலும், திருநெல்வேலி மாவட்டம், அபிசேகபட்டியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பேராசிரியர் குடியிருப்புகள், திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் 69 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்கள், மதுரை மாவட்டம், மேலூரில் உள்ள அரசு பல வகை தொழில் நுட்ப கல்லூரியில் 2 கோடியே 12 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடங்கள்; ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு 7 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நிர்வாக மற்றும் கல்வியியல் கட்டடம்; திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவெறும்பூர், அரசு கலைக் கல்லூரியில் 69 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்கள்; புதுக்கோட்டை அரசுகலைக் கல்லூரியில் 69 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்கள் மற்றும் கரூர் அரசு கலைக் கல்லூரியில் 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப் பட்டுள்ள நூலகக் கட்டடம் என மொத்தம் 45 கோடியே 28 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயர்கல்வித் துறை கட்டடங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

    ×