என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • துலீப் டிராபி காலிறுதி ஆட்டங்கள் இன்று தொடங்கின.
    • பிசிசிஐ இப்போட்டிகளை டெலிகாஸ்ட் செய்யாததால் ரசிகர்கள் ஆதங்கம்.

    இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் முதல்-தர போட்டியான ரஞ்சி டிராபிக்குப் பிறகு மிகப்பெரிய போட்டியாக தூலீப் டிராபி பார்க்கப்படுகிறது. இதில் இந்திய அணியில் விளையாடும் முன்னணி வீரர்கள் கலந்து கொள்வார்கள்.

    வடக்கு மண்டலம், கிழக்கு மண்டலம், மத்திய மண்டலம், வடகிழக்கு மண்டலம், தெற்கு மண்டலம், வடக்கு மண்டலம் என 6 அணிகளாக இதில் பங்கேற்றுள்ளன.

    வடக்கு மற்றும் தெற்கு மண்டலம் அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு தகுதி பெற்ற நிலையில், வடக்கு மண்டலம்- கிழக்கு மண்டலம், மத்திய மண்டலம்- வடகிழக்கு மண்டலம் இடையிலான காலிறுதி ஆட்டங்கள் இன்று தொடங்கியது.

    4 நாட்கள் கொண்ட இந்த போட்டிகளை ரசிகர்கள் பார்க்க விரும்பின. ஆனால் பிசிசிஐ போட்டிகளை லைவ்-ஸ்ட்ரீம் செய்யவில்லை. மேலும் ஒளிப்பரப்பும் செய்யவில்லை.

    பணக்கார கிரிக்கெட் வாரியமாக விளங்கும் பிசிசிஐ-யால், உள்நாட்டின் முக்கிய போட்டிகளை ஒளிபரப்ப முடியவில்லையா? என ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

    ஒரு ரசிகர், துலீப் டிராபி காலிறுதி போடடிகள் டெலிகாஸ்ட் செய்யப்படவில்லை. பிசிசிஐ-யிடம் இருந்து மீண்டும் ஒருமுறை அவமானகரமான செயல் எனக் குறிப்பிட்டுள்ளார்.

    மற்றொரு ரசிகர், உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியமாக திகழும் பிசிசிஐ-யால் முக்கியமான உள்ளூர் தொடர்களை டெலிகாஸ்ட் கூட செய்ய முடியவில்லை என கடிந்துள்ளார்.

    தற்போதைய காலக்கட்டத்தில் சிறிய வகையிலான டென்னிஸ் பால் தொடர் கூட லைவ் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது. இந்தியாவின் உள்நாட்டு முதன்மையான முதல் தரப் போட்டியான துலீப் டிராபியை பிசிசிஐ ஒளிபரப்பாதது மூர்க்கத்தனமானது. உண்மையிலேயே மோசமானது என இன்னொரு ரசிகர் விமர்சித்துள்ளார்.

    • பிரபாஸ் தி ராஜாசாப் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படம் ஒரு ஹாரர் திரில்லர் கதையமசத்தில் உருவாகியுள்ளது.

    பிரபாஸ் கடைசியாக நடித்த கல்கி 2898 ஏடி திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இப்படம் 1100 கோடி ரூபாய் வசூலளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அனைவரும் இப்படத்தின் பாகம் இரண்டிற்காக காத்துக் கொண்டு இருக்கின்றனர்.

    அடுத்ததாக மாருதி இயக்கத்தில் பிரபாஸ் தி ராஜாசாப் திரைப்படத்தில் நடித்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் கிளிம்ப்ஸ் மற்றும் டீசர் வீடியோவை சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    திரைப்படம் அடுத்தாண்டு சங்கிராந்தியை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இப்படம் ஒரு ஹாரர் திரில்லர் கதையமசத்தில் உருவாகியுள்ளது. மிகவும் பிரம்மாண்டமாக ஹாரர் காட்சிகள் படத்தில் இடம் பெற்றுள்ளது.

    இப்படம் ரிலீசாகும் அதே நாளில் விஜய்யின் கடைசி திரைப்படம் என கூறப்படும் ஜன நாயகன் திரைப்படமும் வெளியாகிறது. இதனால் இரண்டு பெரிய ஹீரோக்களின் திரைப்படங்களும் வெளியாக இருப்பதால் ரசிகர்கள் மிகப் பெரிய எதிர்ப்பார்ப்புடன் இருக்கின்றனர்.

    தி ராஜா சாப் படத்தில் பிரபாஸுடன் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், மற்றும் ரிதி குமார் முன்னணி பெண் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தில் சஞ்சய் தத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை டிஜி விஷ்வா பிரசாத் தயாரிக்கவுள்ளார். படத்திற்கு எஸ் தமன் இசையமைத்துள்ளார்.

    • ரம்ஜான் மாதத்தின்போது நடைபெற்ற போட்டியின்போது, எனர்ஜிக்காக பானம் அருந்தியதை ரசிகர்கள் விமர்சித்தினர்.
    • சமூக வலைத்தளங்களில் வெறுப்பு கருத்துகளை பதிவிட்டதுடன், ட்ரோல் செய்து வந்தனர்.

    இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்பவர் முகமது ஷமி. இவர் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்குப்பின், சுமார் 18 வருடங்களுக்குப் பிறகு இந்த வருடம் தொடக்கத்தில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஐபிஎல் தொடரில் விளையாடினார்.

    சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய போட்டிகள் அனைத்தும் துபாயில் நடத்தப்பட்டது. அப்போது ரம்ஜான் மாதம் என்பதால் இஸ்லாமிய பெருமக்கள் நோன்பு கடைபிடிப்பார்கள்.

    ஆனால், முகமது ஷமி போட்டியின்போது எனர்ஜிக் பானம் அருந்தினார். இஸ்லாம் மதத்தைச் சார்ந்த முகமது ஷமி, நோன்பு நேரத்தின்போது எப்படி பானம் அருந்தலாம் என இணைய தளத்தில் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தினர். அவருக்கு எதிராக வெறுப்பு கருத்து பதிவிட்டு, ட்ரோல் செய்தனர்.

    இதை தான் எப்படி எதிர்கொண்டேன் என்பது முகமது ஷமி விவரித்துள்ளார். இது தொடர்பாக முகமது ஷமி கூறியதாவது:-

    நாங்கள் 42 அல்லது 45 டிகிரி வெயில் வெப்பத்தில் விளையாடி கொண்டிருக்கிறோம். நாங்கள் எங்களை தியாகம் செய்கிறோம். நாட்டிற்காக ஏதாவது செய்தல் அல்லது பயணம் போன்றவைகளுக்கு, எங்களுடைய சட்டத்தில் (இஸ்லாம்) விதிவிலக்கு உள்ளது. இந்த விசயங்களை ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ரசிகர்கள் மற்றும் மக்கள் மற்றவர்களை முன்மாதிரிகளாகப் பார்க்கிறார்கள் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் அந்த நபர் என்ன செய்கிறார், யாருக்காக செய்கிறார் என்பதையும் அவர்கள் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

    நமது சட்டம் கூட சில விதிவிலக்குகளை அனுமதிக்கிறது. அதற்காக நாம் அபராதம் செலுத்தலாம் அல்லது பின்னர் அதற்கு ஈடுசெய்யலாம். அதை நான் செய்தேன்.

    சிலர் தங்களை வெளிக்காட்டிக் கொள்ள, இதுபோன்ற விசயங்களை சுட்டிக்காட்ட விரும்புகிறார்கள். நான் சமூக ஊடகங்களில் கருத்துகளைப் படிப்பதில்லை. என்னுடைய குழு எனது கணக்குகளை நிர்வகிக்கிறது.

    இவ்வாறு முகமது ஷமி தெரிவித்துள்ளார்.

    • த.வெ.க. தலைவர் விஜய், மத்திய, மாநில அரசுகளை கடுமையாக விமர்சனம் செய்தார்.
    • விஜயின் பேச்சுக்கு தி.மு.க. மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.

    மதுரையில் கடந்த 21-ந்தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு பல்வேறு விமர்சனங்களை கிளப்பி உள்ளது. மாநாட்டில் பேசிய த.வெ.க. தலைவர் விஜய், மத்திய, மாநில அரசுகளை கடுமையாக விமர்சனம் செய்தார்.

    மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அங்கிள் என்று கூறியதுடன், தமிழ்நாட்டில் பெண்கள் யாருக்கும் பாதுகாப்பில்லை, சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

    அத்துடன் அங்கு திரண்டிருந்த தொண்டர்களிடம் சரிதானே என்று கேள்வி எழுப்பிய விஜய், அந்த சத்தம் கேட்கிறதா? என்றும் அதிர வைத்தார். அவரது பேச்சுக்கு தி.மு.க. மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.

    இதுகுறித்து இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

    அப்போது அவர் கூறுகையில்," நான் முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு நிறைய முறை சென்று இருக்கிறேன். நானே வணக்கம் அங்கிள்.. வணக்கம் ஆண்ட்டி.. எப்படி இருக்கீங்க என்று தான் சொல்வேன்.

    அங்கிள் என்பது தவறான வார்த்தை கிடையாது. விஜய் பேசியது எனக்கு தவறாக படவில்லை" என்றார்.

    • மம்மூட்டி சமீபத்தில் உடல்நிலை சரியாகி கம்பேக் கொடுத்துள்ளார்.
    • ஜித்தின் கே ஜோஷ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

    மம்மூட்டி நடிப்பில் சில மாதங்களுக்கு முன் வெளியான டொமினிக் அண்ட் தி லேடிஸ் பர்ஸ் மற்றும் பசூக்கா திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து மம்மூட்டி சில உடல்நிலை காரணங்களால் 7 மாத காலம் சிகிச்சையில் இருந்து சமீபத்தில் உடல்நிலை சரியாகி கம்பேக் கொடுத்துள்ளார்.

    மம்மூட்டியின் அடுத்த திரைப்படமான களம்காவல் படத்தை குரூப், ஓஷானா படங்களுக்குக் கதை எழுதிய ஜித்தின் கே ஜோஷ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் விநாயகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    இதுவரை பார்த்திராத கதாப்பாத்திரத்தில் மம்மூட்டி நடித்துள்ளார். படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஒரு வில்லத்தனமான சிரிப்பு காட்சி இடம்பெற்றுள்ளது. படத்தின் டீசர் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. படத்தின் இசையை முஜீப் மஜீத் மேற்கொண்டுள்ளார்.

    • முதல் சுற்றில் பிரான்ஸ் வீரரிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
    • ராக்கெட்டை சேரில் அடித்து உடைத்தார்.

    2025ஆம் ஆண்டுக்கான கடைசி கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான அமெரிக்க ஓபன் டென்னிஸ் கடந்த 24ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    முதல் சுற்றில் 13ஆம் நிலை வீரரான டேனில் மெட்வெதேவ், தரநிலை பெறாத பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெஞ்சமின் போன்சியை எதிர்கொண்டார். இதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பெஞ்சமின் போன்சி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் மெட்வெதேவ் ஐந்து செட் வரை மல்லுக்கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது.

    மல்லுக்கட்டியும் பயனில்லை. 3-6, 5-7, 7(7)-6(5), 6-0, 4-6 என தோல்வியடைந்தார்.

    3ஆவது செட் டைபிரேக்கர் வரை சென்றது. டை பிரேக்கரில் மேட்ச் பாயின்ட் 5-4 என இருந்தபோது மைதானத்திற்குள் (Court) போட்டோகிராபர் வந்தார். இதனால் மெட்வெதேவ் கடும் கோபம் அடைந்து ஒழுங்கீனமாக நடந்து கொண்டார்.

    தோல்வியடைந்த பின்னர் ராக்கெட்டை சேரில் அடித்து உடைத்தார். மெட்வெதேவின் செயல் போட்டியை நேரில் பார்த்தவர்களை அதிர்ச்சியடையச் செய்தது. போட்டி முடிந்த பின்னர், கடுமையான அபராதத்தை எதிர்கொள்ள தயாராகி வருகிறேன் என மெட்வெதேவ் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் அமெரிக்க டென்னிஸ் சங்கம் மெட்வெதேவுக்கு 42,500 டாலர் அபராதமாக விதித்துள்ளது. இது இந்திய பண மதிப்பில் 37.24 லட்சம் ரூபாய் ஆகும். ஒழுங்கீனமாக நடந்ததற்காக 30 ஆயிரம் டாலரும், சேரில் அடித்து ராக்கெட்டை உடைத்ததற்காக 12,500 டாலரும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை அவர் முதல் சுற்றுக்காக வாங்கிய சம்பளத்தின் 40 சதவீதம் ஆகும்.

    • யுஎஸ்பி சார்ஜிங், ஓடிஏ (OTA) அப்டேட்கள் மற்றும் ஸ்மார்ட்போன் பயன்பாடு ஆகிய வசதிகள் வழங்கப்படுகின்றன.
    • டிவிஎஸ் ஆர்பிட்டர் ஸ்கூட்டருக்கான முன்பதிவுகள் ஆன்லைனில் தொடங்கப்பட்டுள்ளன.

    டிவிஎஸ் தனது மூன்றாவது மின்சார ஸ்கூட்டர், ஆர்பிட்டரை அறிமுகப்படுத்தியதன் மூலம் இந்தியாவில் அதன் மின்சார ஸ்கூட்டர் வரிசையை விரிவுபடுத்தியுள்ளது. இந்த இ-ஸ்கூட்டரின் விலை ரூ.99,900 ஆகும்.

    புதிய டிவிஎஸ் ஆர்பிட்டர் ஒட்டுமொத்த ஸ்டைலிங் மிகவும் அழகாக இருக்கிறது. மேலும் பெரிய LED விளக்குகள், விண்ட்ஸ்கிரீன் மற்றும் அளவில் பெரிய, சற்றே வளைந்த பாடி பேனல்கள் வழங்கப்பட்டுள்ளன.

    செயல்திறனைப் பொறுத்தவரை, ஒரு முறை சார்ஜ் செய்தால் இந்த ஸ்கூட்டர் 158 கிலோமீட்டர் வரை செல்லும் ரேஞ்ச் வழங்குகிறது. இது பலவித பேட்டரி ஆப்ஷன்களைக் கொண்ட ஐகியூப் (iQube) போல் இல்லாமல் 3.1 kWh பேட்டரி ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கிறது. இந்த ஸ்கூட்டரில் ப்ளூடூத் கனெக்டிவிட்டி கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளது.

    டிவிஎஸ் நிறுவனம் இந்த ஸ்கூட்டரில் குரூயிஸ் கண்ட்ரோல், ஹில் ஹோல்ட் அசிஸ்ட் மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் அசிஸ்ட் போன்ற சில அம்சங்களுடன் வருகிறது. யுஎஸ்பி சார்ஜிங், ஓடிஏ (OTA) அப்டேட்கள் மற்றும் ஸ்மார்ட்போன் பயன்பாடு ஆகிய வசதிகள் வழங்கப்படுகின்றன.

    டிவிஎஸ் ஆர்பிட்டர் ஸ்கூட்டருக்கான முன்பதிவுகள் ஆன்லைனில் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் நியான் சன்பர்ஸ்ட், ஸ்ட்ராடோஸ் ப்ளூ, லூனார் கிரே, ஸ்டெல்லர் சில்வர், காஸ்மிக் டைட்டானியம் மற்றும் மார்ஷியன் காப்பர் ஆகிய ஆறு வண்ணங்களில் விற்பனை செய்யப்படும். இது ஏத்தர் ரிஸ்டா ஸ்கூட்டருக்கு போட்டியாக அமைந்துள்ளது.

    • சுப்மன் கில் துணைக் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டதால் பிசிசிஐ கடும் விமர்சனத்தை எதிர்கொண்டது.
    • சஞ்சு சாம்சன் இடம் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது விமர்சகர்கள் கருத்து.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. இந்தியா "ஏ" பிரிவில் இடம் பிடித்துள்ளது. இதே பிரிவில் ஐக்கிய அரபு அமீரகம், பாகிஸ்தான், ஓமன் அணிகள் இடம் பிடித்துள்ளன. இந்தியா முதல் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகம் அணியை செப்டம்பர் 10ஆம் தேதி எதிர்கொள்கிறது.

    இந்திய அணி கடந்த 19ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் சுப்மன் கில் துணைக் கேப்டனாக அறிவிக்கப்பட்டதற்கு கிரிக்கெட் விமர்சகர்கள், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் அதிருப்தியை தெரிவித்திருந்தனர்.

    இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரரான சேவாக், மூன்று வீரர்கள் இந்திய அணிக்கு கேம் சேஞ்சர்களாக இருப்பார்கள் எனத் தெரிவித்துள்ளார். அதில் சுப்மன் கில் பெயர் இடம் பெறவில்லை.

    இது தொடர்பாக சேவாக் கூறியதாவது:-

    அபிஷேக் சர்மா கேம் கேஞ்சராக இருக்க முடியும் என நினைக்கிறேன். பும்ரா எப்போதும் கேம் சேஞ்சர்தான். பந்து வீச்சாளரான வருண் சக்ரவர்த்தி, அவருடைய மந்திர (mystery) பந்து வீச்சால் சாம்பியன்ஸ் டிராபி மற்றும் டி20 வடிவில் மிகவும் பயனுள்ளவராக இருந்தார். ஆகவே, இவர்கள் தொடரை வெல்ல முக்கிய கேம் சேஞ்சர்களாக இருப்பார்.

    பந்து வீச்சாளர்கள் என வரும்போது பணிச்சுமை என்பது முக்கியமானது என நினைக்கிறேன். பேட்ஸ்மேன்களை பொருத்தவரையில் பணிச்சுமை (Workload) என்பது பிரச்சினை இல்லை. ஏனென்றால் அவர்களால் விளையாட முடியும், அதிகப்படியான போட்டிகளில் விளையாட வேண்டியதில்லை. எனவே, இது முக்கியமாக பந்து வீச்சாளர்களுக்கு, குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்களுக்கு முக்கியமானது என்று நான் நினைக்கிறேன்.

    இவ்வாறு சேவாக் தெரிவித்துள்ளார்.

    சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஐபிஎல் தொடரில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷ்ரேயாஸ் அய்யருக்கும் அணியில் இடம் கிடைக்கவில்லை. சுப்மன் கில் துணைக் கேப்டனாக இடம் பிடித்துள்ளதால், சஞ்சு சாம்சனின் தொடக்க வீரர் இடம் பறிபோக வாய்ப்புள்ளதாக விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

    • 2011 ஆம் ஆண்டு சாம்பி ரெட்டி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகினார் தேஜா சஜ்ஜா
    • பீபில் மீடியா ஃபேக்டரி நிறுவனம் மிராய் படத்தை தயாரிக்கவுள்ளனர்.

    2011 ஆம் ஆண்டு சாம்பி ரெட்டி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகினார் தேஜா சஜ்ஜா . தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் இவர் . இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ஹனுமேன் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

    இதைத்தொடர்ந்து தேஜா சஜ்ஜாவின் அடுத்த படமாக மிராய் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனரான கார்த்திக் கட்டாமானேனி இயக்கியுள்ளார். பீபில் மீடியா ஃபேக்டரி நிறுவனம் மிராய் படத்தை தயாரிக்கவுள்ளனர்.

    படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்ரையும் பட முன்னோட்டத்தையும் படக்குழுவினர் கடந்தாண்டு வெளியிட்டனர். இப்படம் பேரரசரான அசோகன் மற்றும் அவரது 9 ரகசியங்களை பற்றிய கதையாகும். தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் 2டி மற்றும் 3டியில் வெளியாகவுள்ளது. திரைப்படம் வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி வெளியாகும் நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. டிரெய்லர் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. படத்தில் இடம் பெற்ற ஆக்ஷன் மற்றும் கிராபிக்ஸ் காட்சிகள் மிக நன்றாக உருவாக்கியுள்ளனர். படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்து வருகிறது.

    இப்படத்தில் மனோஜ் மஞ்சு வில்லனாகவும், ரித்திகா நாயக், தேஜா சஜ்ஜாவுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளனர். 

    • அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று மருத்துவமனைக்கு சென்று நல்லகண்ணு உடல்நலம் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.
    • நல்லகண்ணுக்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உடல்நலக்குறைவால் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    மருத்துவ குழு பரிந்துரையின் படி அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. 48 மணி நேரத்தில் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டதால் செயற்கை சுவாசம் அகற்றப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று இரவு நல்லகண்ணுவுக்கு மீண்டும் சுவாச பிரச்சினை ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர் தீவிர கண்காணிப்பில் உள்ளார். அவரது உடல்நிலை சீராக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.

    தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று மருத்துவமனைக்கு சென்று நல்லகண்ணு உடல்நலம் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.

    இந்நிலையில், நல்லகண்ணு விரைவில் நலம்பெற விழைகிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    உடல்நலிவுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தகைசால் தமிழர் தோழர் நல்லகண்ணு அய்யா அவர்களது உடல்நலன் குறித்து தோழர் முத்தரசன் அவர்களிடமும் - மாண்புமிகு அமைச்சர் சுப்பிரமணியன் அவர்களிடமும் தொடர்ந்து நலன் விசாரித்து வருகிறேன். நல்லகண்ணு அய்யா அவர்கள் விரைந்து நலம்பெற விழைகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அம்பேத்கர் நமக்கு வழங்கிய அரசியலமைப்பு ஒரு புனித நூல்.
    • வரும் காலத்தில் பாராளுமன்றம், அரியானா மற்றும் பிற மாநிலங்களிலும் வாக்கு திருட்டுக்கான ஆதாரத்தை வழங்குவோம்.

    பாட்னா:

    பீகாரில் வாக்காளர்களின் ஓட்டுரிமையை உறுதி செய்யும் வகையில், 'வாக்காளர் உரிமை' என்ற பெயரில் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடந்த 17- ந் தேதி சாசாராம் பகுதியில் யாத்திரை தொடங்கினார்.

    சீதாமர்ஹி பகுதியில் இன்று நடைபெற்ற வாக்குரிமை பேரணியில் ராகுல் காந்தி பேசியதாவது:-

    வாக்காளர் உரிமைக்கான இந்தப் பயணத்தில் நீங்கள் உங்கள் முழு பலத்தையும் செலுத்தியுள்ளீர்கள். சிறு குழந்தைகள் வருகிறார்கள், அவர்கள் என் காதில் நரேந்திர மோடி வாக்குகளை திருடுகிறார் என்று சொல்கிறார்கள்.

    பீகாரில் தேர்தலை திருட முயற்சிக்கிறார்கள் என்பது எங்களுக்கு தெரியும். இங்குள்ள மக்கள் புத்திசாலிகள், எச்சரிக்கையானவர்கள். பீகாரில் ஒரு வாக்கு கூட திருட விட மாட்டார்கள் என்பதை பா.ஜ.க.வும், தேர்தல் ஆணையமும் அறிந்து கொள்ள, வாக்காளர் உரிமை யாத்திரையை இங்கு தொடங்கியுள்ளோம்.

    உங்கள் குரலை அடக்க விரும்புவதால் ஏழைகளின் வாக்குகளை திருடுகிறார்கள், இந்த மேடையில் இருந்து நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன், அவர்களால் உங்கள் குரலை ஒருபோதும் அடக்க முடியாது. நாங்கள் உங்களுடன் நிற்கிறோம்.

    அம்பேத்கர் நமக்கு வழங்கிய அரசியலமைப்பு ஒரு புனித நூல். அது நமது நாட்டின் சிந்தனை மற்றும் சித்தாந்தத்தை கொண்டது.

    அரசியலமைப்பு தலித்துகள் கண்ணியத்துடனும், சுய மரியாதையுடனும் வாழும் உரிமையை வழங்கியுள்ளது. ஆனால் பா.ஜ.க. இந்த உரிமையை உங்களிடம் இருந்து பறிக்க விரும்புகிறது.

    பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்குகளில் தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், ஏழை மக்களின் பெயர்கள் அடங்கும். பணக்காரர்கள் பெயர்கள் அல்ல.

    கர்நாடகாவில், பா.ஜ.க. 'வாக்கு திருட்டு' செய்திருப்பதை நாங்கள் ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளோம். அதற்கு முன்பு பா.ஜ.க.வும், தேர்தல் ஆணையமும் வாக்குகளைத் திருடுவதாக நான் ஒருபோதும் சொல்லவில்லை. பா.ஜ.க.வினர் கவனமாகக் கேட்க வேண்டும். நாங்கள் ஒரு சட்டசபைக்கான ஆதாரத்தை மட்டுமே வழங்கியுள்ளோம்.

    வரும் காலத்தில் பாராளுமன்றம், அரியானா மற்றும் பிற மாநிலங்களிலும் 'வாக்கு திருட்டு'க்கான ஆதாரத்தை வழங்குவோம். வாக்குகளை திருடுவதன் மூலம் மட்டுமே பா.ஜ.க. -ஆர்.எஸ்.எஸ். தேர்தல்களில் வெற்றி பெறுகின்றன என்பதை நாங்கள் நிரூபிப்போம்.

    இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.

    • நேற்று இரவு நல்லகண்ணுவுக்கு மீண்டும் சுவாச பிரச்சினை ஏற்பட்டது.
    • நல்லகண்ணுவுக்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    சென்னை:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உடல்நலக்குறைவால் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    மருத்துவ குழு பரிந்துரையின் படி அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. 48 மணி நேரத்தில் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டதால் செயற்கை சுவாசம் அகற்றப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு நல்லகண்ணுவுக்கு மீண்டும் சுவாச பிரச்சினை ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர் தீவிர கண்காணிப்பில் உள்ளார். அவரது உடல்நிலை சீராக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.

    தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆஸ்பத்திரிக்கு சென்று நல்லகண்ணு உடல்நலம் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும் போது, நல்லகண்ணுவுக்கு 2 நாட்கள் உடல் நிலை சீராக இருந்தது. நேற்று இரவு மீண்டும் வெண்டிலேட்டர் ( செயற்கை சுவாசம்) உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது என தெரிவித்தார்.

    ×