என் மலர்
கிரிக்கெட் (Cricket)

துலீப் டிராபி 2025: டி.வி. ஒளிப்பரப்பு இல்லாததால் பிசிசிஐ-யை சாடிய ரசிகர்கள்..!
- துலீப் டிராபி காலிறுதி ஆட்டங்கள் இன்று தொடங்கின.
- பிசிசிஐ இப்போட்டிகளை டெலிகாஸ்ட் செய்யாததால் ரசிகர்கள் ஆதங்கம்.
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் முதல்-தர போட்டியான ரஞ்சி டிராபிக்குப் பிறகு மிகப்பெரிய போட்டியாக தூலீப் டிராபி பார்க்கப்படுகிறது. இதில் இந்திய அணியில் விளையாடும் முன்னணி வீரர்கள் கலந்து கொள்வார்கள்.
வடக்கு மண்டலம், கிழக்கு மண்டலம், மத்திய மண்டலம், வடகிழக்கு மண்டலம், தெற்கு மண்டலம், வடக்கு மண்டலம் என 6 அணிகளாக இதில் பங்கேற்றுள்ளன.
வடக்கு மற்றும் தெற்கு மண்டலம் அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு தகுதி பெற்ற நிலையில், வடக்கு மண்டலம்- கிழக்கு மண்டலம், மத்திய மண்டலம்- வடகிழக்கு மண்டலம் இடையிலான காலிறுதி ஆட்டங்கள் இன்று தொடங்கியது.
4 நாட்கள் கொண்ட இந்த போட்டிகளை ரசிகர்கள் பார்க்க விரும்பின. ஆனால் பிசிசிஐ போட்டிகளை லைவ்-ஸ்ட்ரீம் செய்யவில்லை. மேலும் ஒளிப்பரப்பும் செய்யவில்லை.
பணக்கார கிரிக்கெட் வாரியமாக விளங்கும் பிசிசிஐ-யால், உள்நாட்டின் முக்கிய போட்டிகளை ஒளிபரப்ப முடியவில்லையா? என ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
ஒரு ரசிகர், துலீப் டிராபி காலிறுதி போடடிகள் டெலிகாஸ்ட் செய்யப்படவில்லை. பிசிசிஐ-யிடம் இருந்து மீண்டும் ஒருமுறை அவமானகரமான செயல் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு ரசிகர், உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியமாக திகழும் பிசிசிஐ-யால் முக்கியமான உள்ளூர் தொடர்களை டெலிகாஸ்ட் கூட செய்ய முடியவில்லை என கடிந்துள்ளார்.
தற்போதைய காலக்கட்டத்தில் சிறிய வகையிலான டென்னிஸ் பால் தொடர் கூட லைவ் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது. இந்தியாவின் உள்நாட்டு முதன்மையான முதல் தரப் போட்டியான துலீப் டிராபியை பிசிசிஐ ஒளிபரப்பாதது மூர்க்கத்தனமானது. உண்மையிலேயே மோசமானது என இன்னொரு ரசிகர் விமர்சித்துள்ளார்.






