நல்லகண்ணு உடல்நலம் குறித்து டாக்டரிடம் கேட்டறிந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்

நல்லகண்ணு உடல்நலம் குறித்து டாக்டரிடம் கேட்டறிந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்

நேற்று இரவு நல்லகண்ணுவுக்கு மீண்டும் சுவாச பிரச்சினை ஏற்பட்டது.நல்லகண்ணுவுக்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Published on

சென்னை:

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உடல்நலக்குறைவால் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மருத்துவ குழு பரிந்துரையின் படி அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. 48 மணி நேரத்தில் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டதால் செயற்கை சுவாசம் அகற்றப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு நல்லகண்ணுவுக்கு மீண்டும் சுவாச பிரச்சினை ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர் தீவிர கண்காணிப்பில் உள்ளார். அவரது உடல்நிலை சீராக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.

தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆஸ்பத்திரிக்கு சென்று நல்லகண்ணு உடல்நலம் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும் போது, நல்லகண்ணுவுக்கு 2 நாட்கள் உடல் நிலை சீராக இருந்தது. நேற்று இரவு மீண்டும் வெண்டிலேட்டர் ( செயற்கை சுவாசம்) உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது என தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com