என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ஆசிய கோப்பை தொடரில் 3 பேர் கேம் சேஞ்சர்களாக இருப்பார்கள்: சேவாக்..!
- சுப்மன் கில் துணைக் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டதால் பிசிசிஐ கடும் விமர்சனத்தை எதிர்கொண்டது.
- சஞ்சு சாம்சன் இடம் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது விமர்சகர்கள் கருத்து.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. இந்தியா "ஏ" பிரிவில் இடம் பிடித்துள்ளது. இதே பிரிவில் ஐக்கிய அரபு அமீரகம், பாகிஸ்தான், ஓமன் அணிகள் இடம் பிடித்துள்ளன. இந்தியா முதல் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகம் அணியை செப்டம்பர் 10ஆம் தேதி எதிர்கொள்கிறது.
இந்திய அணி கடந்த 19ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் சுப்மன் கில் துணைக் கேப்டனாக அறிவிக்கப்பட்டதற்கு கிரிக்கெட் விமர்சகர்கள், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் அதிருப்தியை தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரரான சேவாக், மூன்று வீரர்கள் இந்திய அணிக்கு கேம் சேஞ்சர்களாக இருப்பார்கள் எனத் தெரிவித்துள்ளார். அதில் சுப்மன் கில் பெயர் இடம் பெறவில்லை.
இது தொடர்பாக சேவாக் கூறியதாவது:-
அபிஷேக் சர்மா கேம் கேஞ்சராக இருக்க முடியும் என நினைக்கிறேன். பும்ரா எப்போதும் கேம் சேஞ்சர்தான். பந்து வீச்சாளரான வருண் சக்ரவர்த்தி, அவருடைய மந்திர (mystery) பந்து வீச்சால் சாம்பியன்ஸ் டிராபி மற்றும் டி20 வடிவில் மிகவும் பயனுள்ளவராக இருந்தார். ஆகவே, இவர்கள் தொடரை வெல்ல முக்கிய கேம் சேஞ்சர்களாக இருப்பார்.
பந்து வீச்சாளர்கள் என வரும்போது பணிச்சுமை என்பது முக்கியமானது என நினைக்கிறேன். பேட்ஸ்மேன்களை பொருத்தவரையில் பணிச்சுமை (Workload) என்பது பிரச்சினை இல்லை. ஏனென்றால் அவர்களால் விளையாட முடியும், அதிகப்படியான போட்டிகளில் விளையாட வேண்டியதில்லை. எனவே, இது முக்கியமாக பந்து வீச்சாளர்களுக்கு, குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்களுக்கு முக்கியமானது என்று நான் நினைக்கிறேன்.
இவ்வாறு சேவாக் தெரிவித்துள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஐபிஎல் தொடரில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷ்ரேயாஸ் அய்யருக்கும் அணியில் இடம் கிடைக்கவில்லை. சுப்மன் கில் துணைக் கேப்டனாக இடம் பிடித்துள்ளதால், சஞ்சு சாம்சனின் தொடக்க வீரர் இடம் பறிபோக வாய்ப்புள்ளதாக விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.






