என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர் ஆதரவு அளித்து வருகின்றனர்.
    • டிரோன்களை இஸ்ரேல் வான் பாதுகாப்பு அமைப்பு நடு வானில் சுட்டு வீழ்த்தின.

    இஸ்ரேல் , ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டுக்குமேல் நடைபெற்று வருகிறது. இந்த போரில் 64 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    இதனிடையே, இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர் ஆதரவு அளித்து வருகின்றனர்.

    இந்நிலையில், ஏமனில் செயல்படும் ஹவுதி பயங்கரவாதிகள் குறிவைத்து டிரோன்கள் வீசி தாக்குதல் நடத்தியதில் இஸ்ரேல் விமான நிலையம் சேதம் அடைந்துள்ளது.

    இந்த டிரோன்களை இஸ்ரேல் வான் பாதுகாப்பு அமைப்பு நடு வானில் சுட்டு வீழ்த்தின. இருப்பினும், ஒரு டிரோன் விமான நிலையம் மீது விழுந்து வெடித்தது.

    இந்த சம்பவத்தில் 63 வயதான நபர் காயமடைந்தார். இதையடுத்து, விமான நிலையம் உடனடியாக மூடப்பட்டது. இதனால், விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

    • தென்கொரியா அணியை 4-க்கு 1 என்ற கோல் கணக்கில் இந்தியா வீழ்த்தியது.
    • நான்காவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது.

    பீகாரில் நடந்த ஆக்கி ஆடவர் ஆசியக்கோப்பை தொடரில் இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றது.

    இறுதிப்போட்டியில் தென்கொரியா அணியை 4-க்கு 1 என்ற கோல் கணக்கில் இந்தியா வீழ்த்தியது.

    இதன்மூலம், ஆசிய கோப்பை தொடரில் நான்காவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது.

    ஆசியகோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் 2026-ல் நடைபெறும் ஆக்கி உலகக்கோப்பை தொடருக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது.

    • லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
    • இடி,மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

    இந்நிலையில், 13 மாவட்டங்களில் இரவு 10 மணிவரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக செனை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, விருதுநகர், நீலகிரி, அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், கரூர், நாமக்கல், திருச்சி ஆகிய 13 மாவட்டங்களில் இரவு 10 மணிவரை இடி,மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கூட்டணி குறித்து தேமுதிக மாநாட்டில் அறிவிப்போம் என்று விஜயபிரபாகரன் கூறியிருந்தார்.
    • 2006ல் எப்படி கேப்டன் ஆண் சிங்கமாக சட்டசபைக்குள் போனார்.

    2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி வைப்பது குறித்து ஜனவரி 9ம் தேதி கடலூரில் நடைபெறும் தேமுதிக மாநாட்டில் அறிவிப்போம் என்று விஜயபிரபாகரன் கூறியிருந்தார்.

    இந்நிலையில், தேமுதிக மாநில இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர்," 2006ல் எப்படி கேப்டன் ஆண் சிங்கமாக சட்டசபைக்குள் போனாரோ, அதேபோல் 2026-ல் என் அம்மா பிரேமலதா விஜயகாந்த் பெண் சிங்கமாக சட்டசபைக்குள் செல்வார்." என்றார்.

    இதற்கிடையே, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறுகையில்," 234 தொகுதிகளுக்கு நேரடியாக சென்று வருகிறோம். 2026 தேமுதிகவிற்கான காலம் நீங்கள் விரும்பும் கூட்டணியை அமைப்போம். தேமுதிக இல்லாமல் எந்த கட்சியும் இருக்காது" என்றார்.

    • அஜித் கார் ரேஸ் போட்டியில் கவனம் செலுத்தி வருகிறார்.
    • அஜித்தின் அடுத்த திரைப்படமான AK65 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.

    நடிகர் அஜித் கடைசியாக குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்து இருந்தார். திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றிப்பெற்றது. இதற்கிடையே, அஜித் கார் ரேஸ் போட்டியில் கவனம் செலுத்தி வருகிறார். அஜித்தின் அடுத்த திரைப்படமான AK65 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.

    சமீபத்தில் ஜெர்மனியில் நடக்கும் கார் ரேஸில் அஜித் பங்கேற்றார். அங்குள்ள ரசிகர்கள் அஜித் சந்தித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    அப்போது அவர்களிடம் பேசிய அஜித்,‛‛கார் ரேஸை பிரபலப்படுத்துங்க, எனக்காக அல்ல. இங்கு கார் பந்தயத்தில் ஈடுபடும் இந்திய வீரர்களை முன்னிலைப்படுத்துங்கள். நிச்சயம் ஒருநாள் இந்திய வீரர்களும் பார்முலா ஒன் கார் ரேஸ் மட்டுமல்ல அனைத்து விதமான ரேஸ் போட்டிகளிலும் இந்திய வீரர்கள் சாம்பியன் ஆவார்கள்" என்ற கருத்தை முன் வைத்தார்.

    இந்நிலையில் தனது ரேஸ் கார் மற்றும் ரேஸ் உடைகளில் Indian Film Industry என்ற லோகோவை அச்சிடவுள்ளதாக அஜித்குமார் அறிவித்துள்ளார்.

    இந்திய சினிமாவை பிரதிபலிக்கும் விதமாக தனது ரேஸ் கார் மற்றும் ரேஸ் உடைகளில் இந்தியன் ஃபிலிம் இண்டஸ்ட்ரி என்ற அச்சிடவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    • கட்சி நிர்வாகிகள் வற்புறுத்தலை அடுத்து பிரதமர் பதவியில் இருந்து ஷிகேரு இஷிபா விலகினார் .
    • புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

    ஜப்பான் பிரதமர் ஷிகேரு இஷிபா பதவியில் இருந்து விலகியுள்ளார். ஜப்பான் நாட்டின் பிரதமராக இருப்பவர் ஷிகெரு இஷிபா. இவர் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் சார்பில் பதவி வகிக்கிறார்.

    கடந்த ஜூலை மாதத்தில் நடைபெற்ற அந்நாட்டு நாடாளுமன்ற தேர்தலில் லிபரல் டெமாக்ரடிக் கட்சி தோல்வி அடைந்தது. ஆளும் கட்சியான இது பெரும்பாண்மையை இழந்தது.

    இதனால், நாடாளுமன்ற தேர்தலில் ஆளுங்கட்சி தோல்விக்கு ஜப்பான் நாட்டுப் பிரதமர் இஷிபா பொறுப்பேற்க நிர்வாகிகள் வற்புறுத்தியுள்ளனர்.

    கட்சி நிர்வாகிகள் வற்புறுத்தலை அடுத்து பிரதமர் பதவியில் இருந்து ஷிகேரு இஷிபா விலகினார். அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

    • இட்லி படத்தின் கதாப்பாத்திர அறிமுக போஸ்டர்களை நேற்று முதல் வெளியிடப்பட்டு வருகிறது.
    • இட்லி கடை வரும் அக்டோபர் 1-ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

    தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக 'இட்லி கடை' உருவாகியுள்ளது. இது தனுஷ் நடிக்கும் 52-வது திரைப்படமாகும். தனுஷ் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அருண் விஜய் இப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் அக்டோபர் 1-ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

    படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவரே எழுதிப் பாடியுள்ள 'எஞ்சாமி தந்தானே' பாடலின் லிரிக் வீடியோ வெளியானது.

    படத்தின் கதாப்பாத்திர அறிமுக போஸ்டர்களை நேற்று மாலை 6 மணி முதல் வெளியிடப்பட்டு வருகிறது.

    அதன்படி, இப்படத்தில் அருண் விஜய் அஷ்வின் என்கிற கதாபாத்திரத்தில் நடிப்பதாக இட்லி கடை படக்குழு நேற்று போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது.

    இந்நிலையில், இட்லி கடை படத்தில் நடிகர் சத்யராஜ் விஷ்ணு வர்தன் என்கிற கதாபாத்திரத்தில் நடிப்பதாக இன்று போஸ்டர் வெளியிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

    • மத்திய அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார்.
    • தேசியமும், தெய்வீகமும் இரு கண்கள் என வாழ்ந்து காட்டியவர் தேவர் பெருமகனார்.

    பசும்பொன் முத்துராமலிக்க தேவருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார்.

    மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் எடப்பாடி பழனிசமி திண்டுக்கல்லில் உள்ள சின்னாளப்பட்டியில் பிரச்சார பயணம் மேற்கொண்டு வருகிறார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில்," மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிக்க தேவரின் பெயரை வைக்கவும் இபிஎஸ் வலியுறுத்துவோம்.

    தேசியமும், தெய்வீகமும் இரு கண்கள் என வாழ்ந்து காட்டியவர் தேவர் பெருமகனார்" என்றார்.

    • 2022-ம் ஆண்டுக்கு பிறகு மிக நீண்ட நேரம் நிகழும் முழு சந்திர கிரகணம் இதுவாகும்.
    • டெலஸ்கோப் மற்றும் அல்லது பைனாகுலர்கள் ஆகியவற்றாலும் பார்த்து ரசிக்கலாம்.

    சூரியனுக்கும் சந்திரனுக் கும் இடையில் பூமி வரும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. அப்போது பூமியின் நிழல் சந்திரனின் மேற்பரப்பில் விழுகிறது. இதனால் சந்திரன் மறைக்கப்படுகிறது.

    இந்தியாவில் இன்று இரவு சந்திர கிரகணம் நிகழ்கிறது. இரவு 8.58 மணிக்கு சந்திர கிரகணம் தொடங்குகிறது. இந்த சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்க முடியும். டெலஸ்கோப் மற்றும் அல்லது பைனாகுலர்கள் ஆகியவற்றாலும் பார்த்து ரசிக்கலாம்.

    பகுதி கிரகணம் இன்று இரவு 9.57 மணிக்கு ஆரம்பிக்கும். முழு கிரகணம் இரவு 11.01 மணிக்கு தொடங் கும் என்று வானியல் நிபு ணர்கள் தெரிவித்து உள்ள னர். இன்று கிரகணத்தின் போது இரவு 11.01 மணி முதல் நள்ளிரவு 12.23 மணி வரை மொத்தம் 82 நிமிடங்கள், அதாவது 1.22 மணி நேரம் நிலா முழுமையாக மறைக்கப்படும்.

    பகுதி கிரகணம் இரவு 1.26 மணிக்கு முடிவடையும். சந்திர கிரகணம் இரவு 2.25 மணிக்கு நிறைவடையும். இன்று சந்திர கிரகணத்தின் போது நிலா ரத்த சிவப்பு நிறத்தில் காணப்படும்.

    2022-ம் ஆண்டுக்கு பிறகு மிக நீண்ட நேரம் நிகழும் முழு சந்திர கிரகணம் இதுவாகும்.

    இந்நிலையில், இன்று இரவு நீண்ட நேரம் நடைபெறும் சந்திரகிரகணத்தை பொதுமக்கள் பார்க்க, சென்னை வானியல் குழுமம் சார்பில், 10 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை திருவான்மியூர் கடற்கரை, எண்ணூர் கடற்கரை, விருகம்பாக்கம். கோவூர், நாவலூர் உள்ளிட்ட 11 க்கும் மேற்பட்ட இடங்களில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    • எடப்பாடி பழனிசமி திண்டுக்கல்லில் உள்ள சின்னாளப்பட்டியில் பிரச்சார பயணம் மேற்கொண்டு வருகிறார்.
    • அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

    திமுக அரசு ஏதாவது ஒரு நல்ல திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்திருக்கிறதா ? என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

    மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் எடப்பாடி பழனிசமி திண்டுக்கல்லில் உள்ள சின்னாளப்பட்டியில் பிரச்சார பயணம் மேற்கொண்டு வருகிறார்.

    அப்போது பேசிய அவர், " ஆத்தூர் தொகுதிக்கு ஏதாவது ஒரு நலத்திட்டத்தை அமைச்சர் செய்திருக்கிறாரா?" என்றார்.

    • திருக்குறளை குழந்தைகள் முதல் அனைத்து வயதினரும் உள்வாங்கிடும் வகையில் குறளிசைக்காவியம்.
    • குறளிசைக்காவியம் எல்லோர் உள்ளங்களில் நிலைபெற்றிட வேண்டும்.

    திருக்குறளை இசை வடிவில் மாற்றம் செய்து குறளிசைக் காவியம் என்ற பெயரில் உருவாக்கியுள்ள இசைக்கலைஞர்கள் லிடியன் நாதஸ்வரம் மற்றும் அமிர்தவர்ஷினி ஆகியோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பபதாவது:-

    குறளிசைக்காவியம் படைத்துள்ள லிடியன் நாதஸ்வரம், அமிர்தவர்ஷினிக்கு வாழ்த்துகள்;

    திருக்குறளை குழந்தைகள் முதல் அனைத்து வயதினரும் உள்வாங்கிடும் வகையில் குறளிசைக்காவியம்"

    இசையில் தோய்ந்து, பல திறமைமிக்க குரல்களில் ஒலித்திடும் குறளமுதத்தை அனைவரும் கேட்க வேண்டும்; குறளிசைக்காவியம் எல்லோர் உள்ளங்களில் நிலைபெற்றிட வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    நடிகர் விஜய் குறித்து த்ரிஷா பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    நடிகர் விஜய் குறித்து த்ரிஷா பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் விஜய் தனது திரை வாழ்வில் கடைசி திரைப்படமான ஜனநாயகனில் நடித்து முடித்துள்ளார். திரைப்படம் வரும் ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகிறது.

    நடிகை த்ரிஷா விஜய்யுடன் கில்லி, ஆதி, திருப்பாச்சி, குருவி, லியோ படங்களில் நடித்துள்ளார்.கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான கோட் படத்தில் மட்ட எனும் பாடலுக்கு த்ரிஷா நடனமாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், சைமா விருது நிகழ்ச்சியில் த்ரிஷாவிடம் விஜய்யின் புகைப்படம் காட்டப்பட்டது. அதற்கு ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.

    அப்புகைப்படத்தை பார்த்த பின்னர் த்ரிஷா பேசியதாவது:விஜய்யின் புதிய பயணத்திற்கு வாழ்த்துகள். அவரது கனவுகள் எதுவாக இருந்தாலும் அனைத்துமே நிறைவேறட்டும். ஏனெனில், அவர் அதற்குத் தகுதியானவர் எனக் கூறியுள்ளார்.

    இந்த வீடியோவை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகிறார்கள்.தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் இரண்டு மாநில மாநாட்டை முடித்துள்ள விஜய்க்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்து வருகிறது.இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கமல், சிவகார்த்திகேயன் இதைப் பார்த்து புன்னகைத்த காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.

    ×