என் மலர்
தலைப்புச்செய்திகள்
- திருக்குறளை குழந்தைகள் முதல் அனைத்து வயதினரும் உள்வாங்கிடும் வகையில் குறளிசைக்காவியம்.
- குறளிசைக்காவியம் எல்லோர் உள்ளங்களில் நிலைபெற்றிட வேண்டும்.
திருக்குறளை இசை வடிவில் மாற்றம் செய்து குறளிசைக் காவியம் என்ற பெயரில் உருவாக்கியுள்ள இசைக்கலைஞர்கள் லிடியன் நாதஸ்வரம் மற்றும் அமிர்தவர்ஷினி ஆகியோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பபதாவது:-
குறளிசைக்காவியம் படைத்துள்ள லிடியன் நாதஸ்வரம், அமிர்தவர்ஷினிக்கு வாழ்த்துகள்;
திருக்குறளை குழந்தைகள் முதல் அனைத்து வயதினரும் உள்வாங்கிடும் வகையில் குறளிசைக்காவியம்"
இசையில் தோய்ந்து, பல திறமைமிக்க குரல்களில் ஒலித்திடும் குறளமுதத்தை அனைவரும் கேட்க வேண்டும்; குறளிசைக்காவியம் எல்லோர் உள்ளங்களில் நிலைபெற்றிட வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் விஜய் குறித்து த்ரிஷா பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் விஜய் தனது திரை வாழ்வில் கடைசி திரைப்படமான ஜனநாயகனில் நடித்து முடித்துள்ளார். திரைப்படம் வரும் ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகிறது.
நடிகை த்ரிஷா விஜய்யுடன் கில்லி, ஆதி, திருப்பாச்சி, குருவி, லியோ படங்களில் நடித்துள்ளார்.கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான கோட் படத்தில் மட்ட எனும் பாடலுக்கு த்ரிஷா நடனமாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சைமா விருது நிகழ்ச்சியில் த்ரிஷாவிடம் விஜய்யின் புகைப்படம் காட்டப்பட்டது. அதற்கு ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.
அப்புகைப்படத்தை பார்த்த பின்னர் த்ரிஷா பேசியதாவது:விஜய்யின் புதிய பயணத்திற்கு வாழ்த்துகள். அவரது கனவுகள் எதுவாக இருந்தாலும் அனைத்துமே நிறைவேறட்டும். ஏனெனில், அவர் அதற்குத் தகுதியானவர் எனக் கூறியுள்ளார்.
இந்த வீடியோவை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகிறார்கள்.தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் இரண்டு மாநில மாநாட்டை முடித்துள்ள விஜய்க்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்து வருகிறது.இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கமல், சிவகார்த்திகேயன் இதைப் பார்த்து புன்னகைத்த காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.
- சீனா, ரஷியாவுடன் வர்த்தகத்தை அதிகரிக்க இந்தியா முடிவு செய்தது.
- அமெரிக்க அதிபர் டிரம்ப் தென் கொரியாவுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா, சீனா உள்பட பல்வேறு நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதித்தார். வரி விதிப்பு விவகாரத்தில் இந்தியா, சீனாவுடன் அமெரிக்கா மோதல் போக்கை கடை பிடித்தது.
இதற்கிடையே சீனாவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங், ரஷிய அதிபர் புதின் ஆகியோர் சந்தித்து பேசினர்.
மேலும் சீனா, ரஷியாவுடன் வர்த்தகத்தை அதிகரிக்க இந்தியா முடிவு செய்தது. இதையடுத்து மோடி எப்போதும் எனக்கு நண்பர் தான். இந்தியா- அமெரிக்கா உறவு சிறப்பாக உள்ளது என்று டிரம்ப் தெரிவித்தார்.
இதற்கிடையே சீனாவுடன் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் சீன அதிபர் ஜின் பிங்குடன் டிரம்ப் அடுத்த மாதம் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாடு தென் கொரியாவின் ஜியாங்சு நகரில், அக்டோபர் இறுதியில் தொடங்கி, நவம்பர் தொடக் கம் வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க அதிபர் டிரம்ப் தென் கொரியாவுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளார். அவருடன் உயர்மட்ட ஆலோசகர்களும் செல்ல உள்ளனர்.
மாநாட்டின்போது சீன அதிபர் ஜின்பிங்கை டிரம்ப் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று டிரம்ப் நிர்வாக அதிகாரிகள் கூறியதாக அமெரிக்க ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டு உள்ளது.
அதில் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் டிரம்ப், ஜின்பிங் இடையே இருதரப்பு சந்திப்பு குறித்து தீவிர விவாதங்கள் நடந்துள்ளது. ஆனால் இன்னும் உறுதியான திட்டங்கள் எதுவும் முடிவு செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறும்போது, "டிரம்பின் தென்கொரிய பயணத்தில் பொருளாதார ஒத்துழைப்பில் கவனம் செலுத்தப்படும். வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு அணு ஆயுத ஒத்துழைப்பு உள்ளிட்ட விவகாரங்களிலும் கவனம் செலுத்தப்படும்" என்றார்.
புதுமுக இயக்குநர் சலீம் ஆர். பாட்ஷா இயக்கத்தில் உருவாகியுள்ள மனோவியல் டிராமா படம் "ஈரப்பதம் காற்று மழை" (Eerapadham Kaatru Mazhai) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது.
வெற்றி இப்படத்தில் சுதர்ஷன் என்ற பாத்திரத்தில், மற்றவர்களின் கழுத்தைப் பார்த்தவுடன் செயின் அறுக்க வேண்டும் என்ற உந்துதலில் வாழக்கூடியவர்.
கிஷன் தாஸ் – கனி என்ற பாத்திரத்தில், நெடுஞ்சாலைகளில் கொள்ளை அடித்து வாழும் இளைஞர்.
தீப்தி ஓரின்டேலு – மேதினி என்ற பாத்திரத்தில் வாழ்க்கைக்கு மதிப்பில்லை என்ற எண்ணத்தில் உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் வாழக்கூடியவள். இவர்களும் மூவரும் ஒருப்புள்ளியில் இணையும் போது என்ன நடக்கும் என்பதே படத்தின் கதையாக உருவாகியுள்ளது.
தொழில்நுட்பக் குழு:
அறிமுக இயக்குநரான சலீம் ஆர். பாட்ஷா இப்படத்தை இயக்கியுள்ளார்.
ஒளிப்பதிவு: அமல் டோமி
எடிட்டிங்: ஆஷிஷ் ஜோசப்
தயாரிப்பு: ஐ.பி. கார்த்திகேயன் – பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் நிறுவனம்
படம் இன்னும் வெளியீட்டு தேதியை அறிவிக்கவில்லை. விரைவில் டீசர் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
- சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை சென்னை திரும்புகிறார்.
- 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 17,613 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்க உள்ளன.
ஜெர்மனி, லண்டன் பயணத்தை முடித்து விட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை சென்னை திரும்புகிறார் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டிருந்தார்.
கடந்த மாதம் 30-ந்தேதி புறப்பட்டு சென்றிருந்த அவர் ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளில் முன்னணி தொழில் அதிபர்களை சந்தித்தார்.
அப்போது ரூ.15,516 கோடிக்கு தொழில் முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் போடப்பட்டன.
லண்டன் சென்றிருந்தபோது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் தந்தை பெரியார் உருவ படத்தை திறந்து வைத்து பெருமை சேர்த்தார்.
ஜெர்மனி, இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின்போது அங்குள்ள தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதைத் தொடர்ந்து தனது வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று லண்டனில் இருந்து சென்னை புறப்பட்டார்.
அவரது விமானம் நாளை காலை 7.30 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடைகிறது. அவருக்கு காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்க அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஏற்பாடு செய்துள்ளார்.
மாவட்டம் முழுவதும் உள்ள தி.மு.க. நிர்வாகிகள் விமான நிலைய வாசலில் இருந்து கத்திப்பாரா மேம்பாலம் வரை பிரமாண்ட வரவேற்பு கொடுக்க உள்ளனர்.
- சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்க முடியும்.
- 2022-ம் ஆண்டுக்கு பிறகு மிக நீண்ட நேரம் நிகழும் முழு சந்திர கிரக ணம் இதுவாகும்.
சூரியனுக்கும் சந்திரனுக் கும் இடையில் பூமி வரும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. அப்போது பூமியின் நிழல் சந்திரனின் மேற்பரப்பில் விழுகிறது. இதனால் சந்திரன் மறைக் கப்படுகிறது.
இந்தியாவில் இன்று இரவு சந்திர கிரகணம் நிகழ்கிறது. இரவு 8.58 மணிக்கு சந்திர கிரகணம் தொடங்குகிறது. இந்த சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்க முடியும். டெலஸ்கோப் மற்றும் அல்லது பைனாகுலர்கள் ஆகியவற்றாலும் பார்த்து ரசிக்கலாம்.
பகுதி கிரகணம் இன்று இரவு 9.57 மணிக்கு ஆரம்பிக்கும். முழு கிரகணம் இரவு 11.01 மணிக்கு தொடங் கும் என்று வானியல் நிபு ணர்கள் தெரிவித்து உள்ள னர். இன்று கிரகணத்தின் போது இரவு 11.01 மணி முதல் நள்ளிரவு 12.23 மணி வரை மொத்தம் 82 நிமிடங் கள், அதாவது 1.22 மணி நேரம் நிலா முழுமையாக மறைக்கப்படும்.
பகுதி கிரகணம் இரவு 1.26 மணிக்கு முடிவடையும். சந்திர கிரகணம் இரவு 2.25 மணிக்கு நிறைவடையும். இன்று சந்திர கிரகணத்தின் போது நிலா ரத்த சிவப்பு நிறத்தில் காணப்படும்.
2022-ம் ஆண்டுக்கு பிறகு மிக நீண்ட நேரம் நிகழும் முழு சந்திர கிரக ணம் இதுவாகும். இந்நிலையில், சந்திர கிரகணத்தை ஒட்டி தஞ்சாவூர் பெரிய கோவில் நடை மாலை 4 மணியளவில் சாத்தப்பட்டது.
- கிரிக்கெட் வாரியத்தின் வருடாந்திர பொதுக் குழுவில் சமர்பிக்கப்பட்ட கணக்கு அறிக்கையில் தகவல்.
- 2019-ல் பி.சி.சி.ஐ.யின் பணம் கையிருப்பு மற்றும் வங்கி இருப்பு ரூ.6,059 கோடியாக இருந்தது.
உலகின் மிகப்பெரிய பணக்கார விளையாட்டு அமைப்பு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) ஆகும்.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு கடந்த 5 ஆண்டுகளில் ரூ.14,627 கோடி வருவாய் அதிகரித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் கடந்த நிதியாண்டில் மட்டும் ரூ.4,193 கோடி கிடைத்து உள்ளது.
மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு அனைத்து நிலுவை தொகையும் வழங்கப்பட்ட பிறகு உள்ள வருவாய் உயர்வு இதுவாகும். கிரிக்கெட் வாரியத்தின் வருடாந்திர பொதுக் குழுவில் சமர்பிக்கப்பட்ட கணக்கு அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
2019-ல் பி.சி.சி.யின் வருவாய் ரூ.3,906 கோடி ஆக இருந்தது. 2024-ல் அது 2 மடங்கு ரூ.7,988 கோடியாக உயர்ந்தது. அதாவது ரூ.4082 கோடியாக அதிகரித்தது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் தற்போது ரொக்கம் மற்றும் வங்கி இருப்பு ரூ.20,686 கோடியாக உயர்ந்து இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
2019-ல் பி.சி.சி.ஐ.யின் பணம் கையிருப்பு மற்றும் வங்கி இருப்பு ரூ.6,059 கோடியாக இருந்தது. இது மாநில சங்கங்களுக்கு வழங்கப்படும் முன்பு ரூ.20,686 கோடி உயர்ந்து உள்ளதாக உறுப்பினர்களிடம் அதன் செயலாளர் தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல்., ஐ.சி.சி.யின் (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) வருவாய் பகிர்வு மற்றும் விளம்பரங்கள் மூலம் கிரிக்கெட் வாரியத்தின் வருவாய் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
வருமானவரி மற்றும் கோர்ட்டு நடவடிக்கைகளுக்காக கிரிக்கெட் வாரியம் 2023-24 நிதியாண்டில் ரூ.3.150 கோடியை ஒதுக்கி உள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான திரைப்படம் கூலி. இப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.
திரைப்படம் இன்றுடன் 25-வது நாள் வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. வரும் செப்டம்பர் 11 ஆம் தேதி கூலி திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோ ஓடிடியில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- சாம்பியன் பட்டம் வெல்லும் அணி அடுத்த ஆண்டு நடைபெறும் உலக கோப்பை போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும்.
- இரு அணிகளும் மோதிய சூப்பர்-4 சுற்று ஆட்டம் 2-2 என்ற கணக்கில் சம நிலையில் முடிந்தது.
12-வது ஆசிய கோப்பை ஆக்கி போட்டி பீகார் மாநிலம் ராஜ்கிர் நகரில் நடைபெற்று வருகிறது.
8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் முடிவில் இந்தியா, நடப்பு சாம்பியன் தென்கொரியா, மலேசியா, சீனா ஆகியவை சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின. நேற்றுடன் சூப்பர் 4 சுற்று முடிவடைந்தது.
சூப்பர் 4 சுற்று முடிவில் இந்தியா 2 வெற்றி, 1 டிராவு டன் 7 புள்ளியுடன் முதல் இடத்தையும், தென் கொரியா 4 புள்ளியுடன் 2-வது இடத்தையும் பிடித்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. மலேசியா, சீனா தலா 3 புள்ளிகள் பெற்றன.
இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா- தென்கொரியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணி அடுத்த ஆண்டு நடைபெறும் உலக கோப்பை போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும்.
இந்திய அணி தென் கொரியாவை வீழ்த்தி 4-வது முறையாக ஆசிய கோப்பையை வெல்லுமா? என்று ஆவலடன் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு 2003, 2007, 2017 ஆகிய ஆண்டுகளில் கோப்பையை கைப்பற்றி இருந்தது. இந்த தொடரிலும் இரு அணிகளும் மோதிய சூப்பர்-4 சுற்று ஆட்டம் 2-2 என்ற கணக்கில் சம நிலையில் முடிந்தது. இதனால் இறுதிப் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும்.
முன்னதாக மாலை 5 மணிக்கு நடைபெறும் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் மலேசியா-சீனா அணிகள் மோதுகின்றன.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவுடன் பகிர்ந்துள்ளார்.
- குடும்பத்தினரும்- செயிண்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தைச் சார்ந்தவர்களும் நன்றி தெரிவித்தனர்.
இங்கிலாந்தில் பென்னி குயிக் குடும்பத்தினர் சந்தித்த புகைப்படத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவுடன் பகிர்ந்துள்ளார்.
முன்னதாக, பென்னி குயிக் சிலையை அவரது சொந்த ஊரான கேம்பர்ளியில் நிறுவியதற்காக அவரது குடும்பத்தினர் நன்றி தெரிவித்ததாக அவர் கூறினார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:-
முல்லை பெரியாறு அணையைத் தந்து நம் மக்களின் மனங்களில் நிறைந்து வாழும் கர்னல் ஜான் பென்னிகுயிக் அவர்களது சிலையை, அவரது சொந்த ஊரான கேம்பர்ளி நகரில் நிறுவியதற்காக, அவரது குடும்பத்தினரும்- செயிண்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தைச் சார்ந்தவர்களும் நன்றி தெரிவித்தனர்.
நேரில் அவர்கள் வைத்த கோரிக்கைகளையும் பரிசீலித்து நிறைவேற்றுவோம்.
வாழ்க ஜான் பென்னி குயிக் அவர்களது புகழ்!
இவ்வாறு அவர் கூறினார்.
பிரேமலு நடிகர் நஸ்லேன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் லோகா.
இவர்களுடன் சாண்டி, சந்து சலிம் குமார், அருண் குரியன் மற்றும் சாந்தி பாலசந்திரன் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தை டொமினிக் அருண் இயக்கியுள்ளார்.
திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்கள் பலரும் படத்தை பாராட்டி இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். கல்யாணியின் நடிப்பு பலரால் பாராட்டப்படுகிறது.
தமிழ் மற்றும் தெலுங்கு மக்கள் மத்தியிலும் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதால் படத்தை இந்தி மொழியிலும் படக்குழு வெளியிட்டுள்ளது. வெளியான அனைத்து மொழிகளிலும் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இத்திரைப்படம் உலகளவில் 150 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
- தி.மு.க. ஆட்சி வரக்கூடாது என்ற ஒருமித்த கருத்து உள்ளவர்கள் ஒன்றாக சேர்ந்தால் அவர்களுடைய லட்சியங்கள் நிறைவேறும்.
- நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் கோவை, தஞ்சாவூர், சென்னை, மதுரை ஆகிய இடங்களில் பிரமாண்டமாக மாநாடு நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
மதுரை:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் அரசியல் வட்டாரத்தில் கடந்த ஆண்டு முதலே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டது. 7-வது முறையாக ஆட்சியை பிடிக்க வேண்டும், தற்போதைய ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என்ற முனைப்பில் தி.மு.க. தனது தேர்தல் பணிகளை கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே தொடங்கி விட்டது.
தி.மு.க. தொண்டர்களை ஊக்குவிக்கும் வகையில் அவ்வப்போது கடிதங்கள் வாயிலாகவும், அறிக்கைகள் மூலமாகவும் உற்சாகப்படுத்தி வரும் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தினமும் பொதுமக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்த்து வைப்பதன் மூலம் அவர்களின் வாக்குகளை பெற முயற்சி செய்யுங்கள் என்று கூறியுள்ளார்.
மேலும் தங்கள் கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சி தலைவர்களிடமும் ஆலோசனை நடத்தி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிக வாக்குகளை பெற்றுத் தரும் நிர்வாகிகளுக்கு சிறந்த எதிர்காலத்துடன் பரிசுகளும் காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
அதேபோல் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துள்ள அ.தி.மு.க.வும் வரிந்து கட்டிக்கொண்டு தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது. அதன் ஒரு பகுதியாக மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற எழுச்சி பயணத்தை கடந்த ஜூலை 7-ந்தேதி தொடங்கிய கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தற்போது 4-ம் கட்ட பயணத்தில் ஈடுபட்டுள்ளார்.
பா.ஜ.க.வின் கூட்டணி ஆட்சி தொடர்பான கருத்துக்கள் சிறுசிறு சலசலப்பை ஏற்படுத்திய போதிலும் அதனை தவிர்த்துவிட்டு தனது எழுச்சி பயணத்தில் தொண்டர்களை ஊக்கப்படுத்தியும், தி.மு.க.வின் ஆட்சி, அவலங்கள் குறித்து பொதுமக்களிடமும் பேசி வரும் எடப்பாடி பழனிசாமி, கூட்டணி கட்சியினருடன் சேர்ந்து 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிக்கனியை பறித்திட தயாராகுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நெல்லையில் நடைபெற்ற பா.ஜ.க. பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்ற மத்திய மந்திரி அமித்ஷா, தி.மு.க.வின் கனவுகள் தவிடு பொடியாக் கப்படும். பிரதமராகும் ராகுல்காந்தியின் கனவும், தமிழ்நாட்டில் உதயநிதியை அடுத்த முதலமைச்சராக நினைக்கும் மு.க.ஸ்டாலின் கனவும் பலிக்காது என்றார். அத்துடன் தி.மு.க.வின் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்ட அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணி வெற்றிக்கு தொண்டர்கள் அயராது பாடுபடவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையே அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணியில் இருந்து ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன் வெளியேறியது, பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்ற வேண்டுகோளுடன், அதற்காக எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்த அ.தி.மு.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையனின் கட்சி பதவிகள் பறிப்பு என்று ஒருபுறம் அந்த கூட்ட ணியில் பரபரப்பு காட்சிகள் தொடர்ந்தாலும் அதைப் பற்றி கவலைப்படாமல் கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியில் இரு கட்சிகளின் நிர்வாகிகளும் அதிரடி காட்டி வருகிறார்கள்.
இந்தநிலையில் மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சாலை விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்றுவரும் முன்னாள் எம்.எல்.ஏ. சோழன் பழனிசாமியை நயினார் நாகேந்திரன் சந்தித்து உடம் நலம் விசாரித்தார். பின்னர் வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறுகையில், எங்கள் கூட்டணியில் இருந்து பிரிந்து சென்ற ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன் ஆகியோரிடம் சமரசம் பேச நான் தயாராக இருக்கிறேன் என்றார்.
மேலும், காலம் இருக்கிறது, நம்முடைய நோக்கமும், டி.டி.வி.தினகரனின் நோக்கமும் தி.மு.க. ஆட்சி வரக்கூடாது என்பதுதான். தி.மு.க. ஆட்சி வரக்கூடாது என்ற ஒருமித்த கருத்து உள்ளவர்கள் ஒன்றாக சேர்ந்தால் அவர்களுடைய லட்சியங்கள் நிறைவேறும். இதே தவிர்த்து விட்டு சூழ்நிலை காரணமாக வெளியேறிவிட்டால் அதற்கு நான் பொறுப்பாக மாட்டேன். நான் இப்பொழுதுதான் மாநில தலைவராக இருந்து கட்சியை பலப்படுத்துகிற வேலையை செய்கிறேன் என்று தெரிவித்தார்.
இதற்கிடையே தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் பரப்புரை பயணம், மாநாடு, சுற்றுப் பயண நிகழ்ச்சிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணி உருவாகி உள்ள நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணத்தை ஒவ்வொரு மாவட்டத்திலும் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணிக்கு வலுசேர்க்கும் வகையில் தமிழகத்தின் நான்கு மூலைகளிலும் பிரம்மாண்ட மாநாடுகளை நடத்த தமிழக பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது. தமிழகத்தை ஆட்சி செய்த அரசியல் கட்சிகள் ஒவ்வொரு சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக தொண்டர்களை உற்சாகப்படுத்தவும், கூட்டணியின் பலத்தை எதிர்க்கட்சிகளுக்கு தெரியப்படுத்தும் வகையிலும் பிரமாண்ட மாநில மாநாடுகளை நடத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளது.
அந்த வரிசையில் பா.ஜ.க.வும் இணைந்துள்ளது. அதன்படி வருகிற நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் கோவை, தஞ்சாவூர், சென்னை, மதுரை ஆகிய இடங்களில் பிரமாண்டமாக மாநாடு நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்த மாநாடுகளில் பிரதமர் மோடியை பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும், அந்த மாநாடுகளில் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் கலந்துகொள்ள இருப்பதாகவும், அதற்கான நடவடிக்கைகளில் தற்போது முதலே தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் ஈடுபட்டு வருவதாகவும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் சட்டமன்ற தேர்தலையொட்டி பா.ஜ.க. நடத்தும் மாநாட்டில் பிரதமரை பங்கேற்க செய்வதற்கான முயற்சிகள் தொடங்கியிருப்பது கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.






