என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • சந்திரன் படிப்படியாக சிவப்பு நிறமாக மாறுவதைக் மக்கள் கண்டு ரசித்தனர்.
    • இன்றைய முழு சந்திர கிரகண நிகழ்விற்கு பிறகு அடுத்து 2028 ம் ஆண்டுதான் அடுத்த முழு சந்திர கிரகணம் நிகழும்.

    இந்திய நேரப்படி, நேற்று (செப்டம்பர் 7) இரவு 9:58 மணிக்கு சந்திர கிரகணம் தொடங்கியது. முழு கிரகணம் இரவு 11.01 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 12.23 மணி வரை மொத்தம் 82 நிமிடங்கள் நீடித்தது.

    இதைத்தொடர்ந்து பகுதி கிரகணம் இரவு 1.26 மணிக்கு முடிவடைந்த நிலையில், 2.25 மணிக்கு பின்னர் புறநிழல் பகுதியில் இருந்து நிலா வெளியேறி சந்திர கிரகணம் முழுமையாக முடிவடைந்தது. 

    இது 2022 க்குப் பிறகு மிக நீண்ட கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.

    உலகின் முழுவதும் பல்வேறு பகுதிகளில் சந்திரகிரகணத்தை மக்கள் கண்டு வியந்தனர். இந்தியாவில் சில பகுதிகளில் மழையின் காரணமாக கிரகணம் புலப்படவில்லை. தமிழ்நாட்டில் சந்திர கிரகணத்தை தெளிவாக காண முடிந்தது. 

    இரவு 11:01 மணிக்கு, பூமியின் நிழல் சந்திரனை முழுவதுமாக மறைத்தது, இதன் காரணமாக சந்திரனின் நிறம் சிவப்பு நிறமாக மாறியது. சந்திரன் படிப்படியாக சிவப்பு நிறமாக மாறுவதைக் மக்கள் கண்டு ரசித்தனர். இந்த நிலவை 'Blood Moon' என்று அழைக்கின்றனர். 

    கிரகணம் படிப்படியாக முடிவடைந்து நிலவு அதன் உண்மை நிறத்திற்கு மாறத் தொடங்கியது. 

    இந்த அரிய வானியல் நிகழ்வை கண்டுகளிப்பதற்கு பிர்லா கோளரங்கம் உள்ளிட்ட பல்வேறு மையங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

    இன்றைய முழு சந்திர கிரகண நிகழ்விற்கு பிறகு அடுத்து 2028 ம் ஆண்டுதான் அடுத்த முழு சந்திர கிரகணம் நிகழும்.   

    • ஏர்போர்ட் மூர்த்தி விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை சமூக ஊடகங்களில் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
    • ஏர்போர்ட் மூர்த்தி பாக்கெட் கத்தியால் தங்கள் கட்சியினரை தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டது.

    புரட்சி தமிழகம் கட்சித் தலைவரான ஏர்போர்ட் மூர்த்தி விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை சமூக ஊடகங்களில் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

    இந்நிலையில் அண்மையில், சென்னை கடற்கரை சாலையில் உள்ள டி.ஜி.பி. அலுவலகம் அருகில் வைத்து ஏர்போர்ட் மூர்த்தி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இடையே திடீர் மோதல் வெடித்தது.

    விசிகவினர் சேர்ந்தவர்கள் சரமாரியாக ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதலில் ஈடுபட்டனர். பதிலுக்கு ஏர்போர்ட் மூர்த்தியும் தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே ஏர்போர்ட் மூர்த்தி பாக்கெட் கத்தியால் தங்கள் கட்சியினரை தாக்கியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

    தாக்குதலில் விசிகவினர் 2 பேர் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகின்றனர் என்றும் ஏர்போர்ட் மூர்த்தி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் அந்த புகாரில் கூறப்பட்டிருந்தது.

    இந்நிலையில் டிஜிபி அலுவலக வாசலில் விசிக நிர்வாகிகளை கத்தியை வைத்து தாக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஏர்போர்ட் மூர்த்தியை மெரினா போலீசார் கைது செய்துள்ளனர்.  

    • அமெரிக்க பருத்தி இறக்குமதிக்கு 11 சதவீத கலால் வரியை தள்ளுபடி செய்யும் மோடி அரசின் முடிவை கெஜ்ரிவால் விமர்சித்தார்.
    • கடனில் மூழ்கிய விவசாயி தற்கொலையின் விளிம்பில் இருக்கிறார்.

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியப் பொருட்களுக்கு விதித்த 50 சதவீத வரிக்கு இந்தியா வலுவான பதிலடி கொடுக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

    இதுகுறித்து ஊடகங்களிடம் பேசிய கெஜ்ரிவால், "பிரதமர் கொஞ்சம் தைரியம் காட்ட வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். முழு நாடும் உங்களுக்கு ஆதரவாக நிற்கிறது.

    இந்திய ஏற்றுமதிகளுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்துள்ளது. அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு நீங்கள் 75 சதவீத வரி விதிக்கவேண்டும். வரியை மட்டும் விதித்து பாருங்கள். பின்னர் டிரம்ப் இறங்கி வருகிறாரா என்று பார்ப்போம்" என்று தெரிவித்தார்.

    மேலும், டிசம்பர் 31, 2025 வரை அமெரிக்க பருத்தி இறக்குமதிக்கு 11 சதவீத கலால் வரியை தள்ளுபடி செய்யும் மோடி அரசின் முடிவை கெஜ்ரிவால் விமர்சித்தார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்ட பதவில், இறக்குமதி மீதான 11% வரியை அரசாங்கம் நீக்கியுள்ளதால் ஜவுளி நிறுவனங்கள் ஏற்கனவே அமெரிக்காவிலிருந்து மலிவான பருத்தியை இறக்குமதி செய்துள்ளன.

    நமது நாட்டு விவசாயிகள் இப்போது எங்கு செல்ல வேண்டும்? அவர்களின் பருத்தி சந்தையில் விற்கப்படாது. கடனில் மூழ்கிய விவசாயி தற்கொலையின் விளிம்பில் இருக்கிறார்" என்று தெரிவித்துள்ளார். 

    • பெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 36 பேரை மீட்டனர்.
    • 4 வயது சிறுவனின் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது.

    மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் தஹிசர் பகுதியில் உள்ள 23 மாடி கட்டிடத்தில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். 19 பேர் காயமடைந்தனர்.

    பிற்பகல் 3 மணியளவில் குடியிருபின் ஏழாவது மாடியில் தீவிபத்து ஏற்பட்டதை அடுத்து தீயணைப்பு துறையினர் தகவலறிந்து அங்கு விரைந்தனர்.

    கிட்டத்தட்ட 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு, மாலை 6:10 மணிக்கு தீ முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

    மீட்புக் குழுவினர் பெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 36 பேரை மீட்டனர். இவர்களில் 19 பேர் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 4 வயது சிறுவனின் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. 

    • இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட தெற்காசியாவின் பல நாடுகளில் இணைய சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக ஏற்பட்டுள்ளதாக அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.
    • இந்தப் பகுதிகளில் உள்ள கேபிள்கள், டாடா கம்யூனிகேஷன்ஸ் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கூட்டமைப்பால் இயக்கப்படுகிறது.

    சவுதி அரேபியாவின் ஜெட்டா அருகே செங்கடலுக்கு அடியில் அமைக்கப்பட்ட கேபிள்கள் துண்டிக்கப்பட்டதால் இணைய சேவைகள் பாதிக்கப்பட்டதாக உலகளாவிய இணைய கண்காணிப்பு அமைப்பான நெட்பிளாக்ஸ் தெரிவித்துள்ளது.

    மத்திய கிழக்கு நாடுகளிலும், இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட தெற்காசியாவின் பல நாடுகளில் இணைய சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

    கேபிள்கள் சேதம் காரணமாக மத்திய கிழக்கு வழியாக நெட்வொர்க் போக்குவரத்து மெதுவாக இருக்கலாம், ஆனால் இது மாற்று வழிகள் மூலம் சரிசெய்யப்படும் என்று மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    கப்பல் நங்கூரமிட்டதாலோ அல்லது திட்டமிட்ட தாக்குதல் காரணமாகவோ கடலுக்கு அடியில் இணைய கேபிள்கள் துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இது ஹவுதி கிளர்ச்சியாளர்களின் செயலாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

    இந்தப் பகுதிகளில் உள்ள கேபிள்கள், டாடா கம்யூனிகேஷன்ஸ் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கூட்டமைப்பால் இயக்கப்படுகிறது.

    இருப்பினும், டாடா கம்யூனிகேஷன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த இடையூறு குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.

    • 4வது செட் கணக்கின் முடிவில், இந்தியாவிற்கு 59 புள்ளிகளும், பிரான்ஸ் அணிக்கு 57 புள்ளிகளும் கிடைத்தது.
    • கலப்பு இரட்டையர் பிரிவிலும் இந்திய அணி வெள்ளி பதக்கத்தை கைப்பற்றியது.

    உலக சாம்பியன்ஷிப் ஆடவர் இரட்டையர் பிரிவு வில்வித்தை போட்டியில் தங்கப்பதக்கம் வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது.

    தென் கொரியாவில், உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது. இதில், ஆண்கள் அணிகளுக்கான காம்பவுண்டு பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதின.

    இந்த போட்டியில், மூன்று செட்களின் முடிவில் 179-179 என சமநிலையில் இருந்தது.

    4வது செட் கணக்கின் முடிவில், இந்தியாவிற்கு 59 புள்ளிகளும், பிரான்ஸ் அணிக்கு 57 புள்ளிகளும் கிடைத்தது.

    இதன்மூலம், ரிஷப், பிரதமேஷ், அமன் மூவரும் பிரெஞ்சு ஜோடியை 235-233 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

    மேலும், கலப்பு இரட்டையர் பிரிவிலும் இந்திய அணி வெள்ளி பதக்கத்தை கைப்பற்றியது.

    • ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர் ஆதரவு அளித்து வருகின்றனர்.
    • டிரோன்களை இஸ்ரேல் வான் பாதுகாப்பு அமைப்பு நடு வானில் சுட்டு வீழ்த்தின.

    இஸ்ரேல் , ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டுக்குமேல் நடைபெற்று வருகிறது. இந்த போரில் 64 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    இதனிடையே, இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர் ஆதரவு அளித்து வருகின்றனர்.

    இந்நிலையில், ஏமனில் செயல்படும் ஹவுதி பயங்கரவாதிகள் குறிவைத்து டிரோன்கள் வீசி தாக்குதல் நடத்தியதில் இஸ்ரேல் விமான நிலையம் சேதம் அடைந்துள்ளது.

    இந்த டிரோன்களை இஸ்ரேல் வான் பாதுகாப்பு அமைப்பு நடு வானில் சுட்டு வீழ்த்தின. இருப்பினும், ஒரு டிரோன் விமான நிலையம் மீது விழுந்து வெடித்தது.

    இந்த சம்பவத்தில் 63 வயதான நபர் காயமடைந்தார். இதையடுத்து, விமான நிலையம் உடனடியாக மூடப்பட்டது. இதனால், விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

    • தென்கொரியா அணியை 4-க்கு 1 என்ற கோல் கணக்கில் இந்தியா வீழ்த்தியது.
    • நான்காவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது.

    பீகாரில் நடந்த ஆக்கி ஆடவர் ஆசியக்கோப்பை தொடரில் இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றது.

    இறுதிப்போட்டியில் தென்கொரியா அணியை 4-க்கு 1 என்ற கோல் கணக்கில் இந்தியா வீழ்த்தியது.

    இதன்மூலம், ஆசிய கோப்பை தொடரில் நான்காவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது.

    ஆசியகோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் 2026-ல் நடைபெறும் ஆக்கி உலகக்கோப்பை தொடருக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது.

    • லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
    • இடி,மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

    இந்நிலையில், 13 மாவட்டங்களில் இரவு 10 மணிவரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக செனை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, விருதுநகர், நீலகிரி, அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், கரூர், நாமக்கல், திருச்சி ஆகிய 13 மாவட்டங்களில் இரவு 10 மணிவரை இடி,மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கூட்டணி குறித்து தேமுதிக மாநாட்டில் அறிவிப்போம் என்று விஜயபிரபாகரன் கூறியிருந்தார்.
    • 2006ல் எப்படி கேப்டன் ஆண் சிங்கமாக சட்டசபைக்குள் போனார்.

    2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி வைப்பது குறித்து ஜனவரி 9ம் தேதி கடலூரில் நடைபெறும் தேமுதிக மாநாட்டில் அறிவிப்போம் என்று விஜயபிரபாகரன் கூறியிருந்தார்.

    இந்நிலையில், தேமுதிக மாநில இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர்," 2006ல் எப்படி கேப்டன் ஆண் சிங்கமாக சட்டசபைக்குள் போனாரோ, அதேபோல் 2026-ல் என் அம்மா பிரேமலதா விஜயகாந்த் பெண் சிங்கமாக சட்டசபைக்குள் செல்வார்." என்றார்.

    இதற்கிடையே, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறுகையில்," 234 தொகுதிகளுக்கு நேரடியாக சென்று வருகிறோம். 2026 தேமுதிகவிற்கான காலம் நீங்கள் விரும்பும் கூட்டணியை அமைப்போம். தேமுதிக இல்லாமல் எந்த கட்சியும் இருக்காது" என்றார்.

    • அஜித் கார் ரேஸ் போட்டியில் கவனம் செலுத்தி வருகிறார்.
    • அஜித்தின் அடுத்த திரைப்படமான AK65 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.

    நடிகர் அஜித் கடைசியாக குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்து இருந்தார். திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றிப்பெற்றது. இதற்கிடையே, அஜித் கார் ரேஸ் போட்டியில் கவனம் செலுத்தி வருகிறார். அஜித்தின் அடுத்த திரைப்படமான AK65 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.

    சமீபத்தில் ஜெர்மனியில் நடக்கும் கார் ரேஸில் அஜித் பங்கேற்றார். அங்குள்ள ரசிகர்கள் அஜித் சந்தித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    அப்போது அவர்களிடம் பேசிய அஜித்,‛‛கார் ரேஸை பிரபலப்படுத்துங்க, எனக்காக அல்ல. இங்கு கார் பந்தயத்தில் ஈடுபடும் இந்திய வீரர்களை முன்னிலைப்படுத்துங்கள். நிச்சயம் ஒருநாள் இந்திய வீரர்களும் பார்முலா ஒன் கார் ரேஸ் மட்டுமல்ல அனைத்து விதமான ரேஸ் போட்டிகளிலும் இந்திய வீரர்கள் சாம்பியன் ஆவார்கள்" என்ற கருத்தை முன் வைத்தார்.

    இந்நிலையில் தனது ரேஸ் கார் மற்றும் ரேஸ் உடைகளில் Indian Film Industry என்ற லோகோவை அச்சிடவுள்ளதாக அஜித்குமார் அறிவித்துள்ளார்.

    இந்திய சினிமாவை பிரதிபலிக்கும் விதமாக தனது ரேஸ் கார் மற்றும் ரேஸ் உடைகளில் இந்தியன் ஃபிலிம் இண்டஸ்ட்ரி என்ற அச்சிடவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    • கட்சி நிர்வாகிகள் வற்புறுத்தலை அடுத்து பிரதமர் பதவியில் இருந்து ஷிகேரு இஷிபா விலகினார் .
    • புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

    ஜப்பான் பிரதமர் ஷிகேரு இஷிபா பதவியில் இருந்து விலகியுள்ளார். ஜப்பான் நாட்டின் பிரதமராக இருப்பவர் ஷிகெரு இஷிபா. இவர் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் சார்பில் பதவி வகிக்கிறார்.

    கடந்த ஜூலை மாதத்தில் நடைபெற்ற அந்நாட்டு நாடாளுமன்ற தேர்தலில் லிபரல் டெமாக்ரடிக் கட்சி தோல்வி அடைந்தது. ஆளும் கட்சியான இது பெரும்பாண்மையை இழந்தது.

    இதனால், நாடாளுமன்ற தேர்தலில் ஆளுங்கட்சி தோல்விக்கு ஜப்பான் நாட்டுப் பிரதமர் இஷிபா பொறுப்பேற்க நிர்வாகிகள் வற்புறுத்தியுள்ளனர்.

    கட்சி நிர்வாகிகள் வற்புறுத்தலை அடுத்து பிரதமர் பதவியில் இருந்து ஷிகேரு இஷிபா விலகினார். அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

    ×