என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது.
- போராட்டம் நடத்தியவர்களை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து பேசினார்.
சென்னை:
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க அனைத்து பணியாளர்கள் நலச்சங்கம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே இன்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் ஊரக மற்றும் நகர்ப்புற மகளிர் திட்ட பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும், மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தில் மாவட்ட நிர்வாகத்தால் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு செய்யப்பட்ட பணியாளர்களை மகளிர் மேம்பாட்டு நிறுவன பணியாளர்களாக அங்கீகரித்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் பணியாளர்களை காலமுறை ஊதியம் வழங்கி நிரந்தரப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.
இதில் மாநில ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். போராட்டம் நடத்தியவர்களை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து பேசினார். அப்போது ஊரக உள்ளாட்சி பணியாளர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர்.
அவர்களுடன் என்னையும் கைது செய்யுங்கள் என்றவாறு சீமானும் வேனில் ஏறினார். அவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் சீமான் விடுவிக்கப்பட்டார். சீமான் கைது செய்யப்பட்டால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
- அறிவாலயத்தின் தாழ்வாரத்தில் படுத்துக்கிடக்கிறார் உலக நாயகன்.
- இந்த தேர்தல் முடிவதற்குள் சீமான் கட்சியை கல்லறைக்கு அனுப்ப வேண்டும்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் திருச்செந்தூரில் நடந்தது.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் பிரேம் பாண்டியன் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட செயலாளர் பிரைட்டர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசியதாவது:-
ஆட்டம் போட்ட சூரனை முருகன் எப்படி சம்ஹாரம் செய்தாரோ? அதேபோல் ஆட்டம் போட்டவர்களை தலைவர் விஜயின் தம்பிகள் சம்ஹாரம் செய்யப் போகிறார்கள். இனி வரும் காலம் நம் காலம். அடுத்த முதலமைச்சர் விஜய் தான். அந்த வார்த்தைக்கு வடிவம் தாருங்கள். 2 பெரிய பகையை எதிர்த்து எங்கள் தலைவர் களத்தில் நிற்கிறார்.
கடந்த காலங்களில் தே.மு.தி.க. கட்சியை விஜயகாந்த் உருவாக்கினார். ஆனால் இன்றைய தினம் விருப்பமனு வாங்குவதற்கு கூட கட்சியில் ஆள் இல்லை என தகவல்கள் வெளியாகி உள்ளது. மக்களுக்காக தொடங்கப்பட்ட கட்சி தே.மு.தி.க. அந்த கட்சி தற்போது கரைந்து கொண்டிருக்கிறது.
அதற்கு ஒரு மாற்றாகத்தான் அரசியல் மாற்றத்தையும், ஆட்சி மாற்றத்தையும் உலகநாயகன் கமலஹாசன் வந்தார். தி.மு.க. மீது கூர்மையை தீட்டினார். ஆனால் தற்போது அறிவாலயத்தின் தாழ்வாரத்தில் படுத்துக்கிடக்கிறார் உலக நாயகன். இந்த தேர்தல் முடிவதற்குள் சீமான் கட்சியை கல்லறைக்கு அனுப்ப வேண்டும்.
இந்திய துணைக் கண்டத்தில் 1 கோடி இளைஞர்களை வைத்திருக்கிற தலைவனை இன்று தான் அரசியல் பார்க்கிறது.
தி.மு.க.விற்கு உழைத்தது உனது மகனா?, தி.மு.க.விற்கு வேர்வை பாய்ச்சியது உனது குடும்பம் மட்டும் தானா? தி.மு.க.விற்காக கண்ணீரும் செந்நீரும் சிந்தியது உங்கள் குடும்பம் மட்டும் தானா? உதயநிதிக்கு ஒரு திருக்குறளை ஒழுங்கா சொல்ல தெரியுமா? மாநில சுய ஆட்சி பற்றி அவர் ஒரு மணி நேரம் பேசினால் நான் நிறுத்திவிடுகிறேன்.
ஜனநாயகன் வராது என்று கருதினீர்களா? நதி நடக்க மறுத்தாலும் வெள்ளம் நிற்காது. ஜனநாயகன் வரும் போது உங்கள் நாற்காலியில் இருந்து நீங்கள் நகர வேண்டியது வரும்.
நீங்கள் எப்போது வெள்ளி நாற்காலியில் அமர்ந்தீர்களோ, அப்போதே உங்களது முதலமைச்சர் நாற்காலி நகரத் தொடங்கி விட்டது. ரேம்வாக்கிற்கு எங்கள் தளபதி போடும் பேண்ட் கலரில் முதலமைச்சர் பேண்ட் போடுகிறார். வேறு கலர் கிடைக்கவில்லையா. கலரும் களவு தானா? எங்கள் தளபதி போல் அவரும் ரேம்வாக் போகிறார். இந்த ரேம்வாக்கை தமிழகத்திற்கு கொண்டு வந்ததே எங்கள் தளபதி விக்கிரவாண்டியில். எங்கள் தளபதி ராம் வாக் செல்ல அவருக்கு தகுதி இருக்கிறது. உனக்கு அப்படி என்ன தகுதி இருக்கிறது?.
சேப்பாக்கம் மைதானத்தில் விசில் ஊத கூடாது என்று தடை விதித்துள்ளார்கள். யாராவது தி.மு.க.வினரை பார்த்தால் விசில் எடுத்து ஊதுங்கள். விசில் ஊதும் போது அவரது செவில் கிழியும் அளவிற்கு ஊத வேண்டும். யானை பிளிரும் ஓசையை விட விசிலின் ஓசை அதிகமானது
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாநிலத் துணைச் செயலாளர் சுபத்ரா முருகன், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், உடன்குடி ஒன்றிய செயலாளர் விஜய ராஜ், பத்ரி பிரசாத், நகர செயலாளர் முருகானந்தம், இளைஞர் அணி ஒன்றிய பொருளாளர் மதன், யாசர் அரபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜோதி குமரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- 3 பெண் குழந்தைகளுடன் மும்பையில் தங்கி அங்குள்ள ஓட்டலில் பணிபுரிந்து வந்தனர்.
- சக பயணிகள் மற்றும் அந்த பகுதி மக்கள் களம்பூர் ரெயில்வே போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
ஆரணி:
கள்ளக்குறிச்சி மாவட்டம், அய்யனார் பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சிவகண்டன் (வயது37). இவரது மனைவி கலையரசி. இவர்கள் 3 பெண் குழந்தைகளுடன் மும்பையில் தங்கி அங்குள்ள ஓட்டலில் பணிபுரிந்து வந்தனர்.
இந்த நிலையில் அய்யனார் பாளையம் கிராமத்தில் நடந்த உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மும்பையில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு மும்பையிலிருந்து திருநெல்வேலிக்கு செல்லும் தாதர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் புறப்பட்டனர்.
இன்று அதிகாலை ஆரணி அடுத்த வடமாதிமங்கலம் பகுதியில் ரெயில் சென்றபோது சிவகண்டன் கதவை திறந்து கதவு முன்பு நின்று வேடிக்கை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.
அப்போது ஓடும் ரெயிலில் இருந்து சிவகண்டன் கால் தவறி கீழே விழுந்தார். இதனை பார்த்த அவரது மனைவி கலையரசி கணவனை காப்பாற்ற முயன்றார்.
அப்போது 2 பேரும் ரெயிலில் இருந்து தவறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.
இதைபார்த்த சக பயணிகள் மற்றும் அந்த பகுதி மக்கள் களம்பூர் ரெயில்வே போலீசுக்கு தகவல் கொடுத்தனர். மேலும் தகவலறிந்து வந்த காட்பாடி ரெயில்வே போலீசார் சிவகண்டன், கலையரசி ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கேரளாவில் ஓணம் பண்டிகை உள்ளிட்ட முக்கிய பண்டிகை நாட்களில் ரூ.5 கோடி வரை வர்த்தகம் நடைபெறும்.
- தற்போது ஸ்டிரைக் காரணமாக வியாபாரிகள் முன்கூட்டியே தங்களுக்கு காய்கறிகள் அனுப்ப வேண்டாம் என தெரிவித்துள்ளனர்.
ஒட்டன்சத்திரம்:
தென் தமிழகத்தின் மிகப்பெரிய காய்கறி சந்தையாக ஒட்டன்சத்திரம் மார்க்கெட் திகழ்ந்து வருகிறது. சுற்றுவட்டார கிராமங்களான அத்திக்கோம்பை, கள்ளி மந்தயம், அம்பிளிக்கை, தங்கச்சியம்மாபட்டி, புதுச்சத்திரம், விருப்பாச்சி, லக்கையன்கோட்டை பகுதிகளில் விளையும் காய்கறிகளை விவசாயிகள் மார்க்கெட்டுக்கு கொண்டு வருகின்றனர். இங்கிருந்து தமிழகத்தில் பிற மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் காய்கறிகள் அனுப்பி வைக்கப்படுகிறது. குறிப்பாக கேரளாவின் 65 சதவீத காய்கறி தேவையை ஒட்டன்சத்திரம் மார்க்கெட் பூர்த்தி செய்கிறது.
இந்த நிலையில் நாளை மத்திய அரசின் புதிய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் ஸ்டிரைக் நடைபெற உள்ளது. இதனால் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு வாகனங்கள் ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே வியாபாரிகள் தங்களுக்கு காய்கறிகளை அனுப்ப வேண்டாம் என தெரிவித்துள்ளனர். தினசரி 100க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. சுமார் ரூ.2 கோடி அளவில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. கேரளாவில் ஓணம் பண்டிகை உள்ளிட்ட முக்கிய பண்டிகை நாட்களில் ரூ.5 கோடி வரை வர்த்தகம் நடைபெறும்.
தற்போது ஸ்டிரைக் காரணமாக வியாபாரிகள் முன்கூட்டியே தங்களுக்கு காய்கறிகள் அனுப்ப வேண்டாம் என தெரிவித்துள்ளனர். இதனால் வியாபாரிகளும் மார்க்கெட்டுக்கு வரவில்லை. இதன் காரணமாக எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஒட்டன்சத்திரம் மார்க்கெட் வெறிச்சோடியது. இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், கேரளாவில் நாளை வேலை நிறுத்த போராட்டத்தால் காய்கறிகள் அனுப்ப வேண்டாம் என அம்மாநில வியாபாரிகள் கூறி உள்ளனர். ஒட்டன்சத்திரத்தில் இருந்து அதிக அளவில் கேரளாவுக்கு காய்கறிகள் அனுப்பப்பட்டு வருகிறது.
இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் மார்க்கெட்டில் சுமார் ரூ.2 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது என்றனர்.
- எங்கள் கூட்டணியில் பிரச்சனை என்கிறார்கள், ஆனால் தி.மு.க. கூட்டணியில் தான் பிரச்சனை உள்ளது.
- தமிழ்நாட்டில் இதுவரை தி.மு.க. தொடர்ந்து ஆட்சிக்கு வந்தது கிடையாது.
நெல்லையில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* எங்கள் கூட்டணியில் பிரச்சனை என்கிறார்கள், ஆனால் தி.மு.க. கூட்டணியில் தான் பிரச்சனை உள்ளது.
* தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்குமா? அல்லது விஜய் கட்சிக்கு செல்லுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
* உதயநிதி ஸ்டாலின் நாளைக்கு முதலமைச்சராக வேண்டும் என நினைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார்.
* எதையாவது சொல்ல வேண்டும் என நினைத்து தான் ஆட்சியில் பங்கு ஒத்துவராது என முதல்வர் கூறி உள்ளார்.
* தமிழ்நாட்டில் இதுவரை தி.மு.க. தொடர்ந்து ஆட்சிக்கு வந்தது கிடையாது.
* தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான்.
* தேசிய ஜனநாயக கூட்டணியில் யார் பெரும்பான்மையாக இருக்கிறார்களோ அவர்களே முதலமைச்சர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வரும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் முடிவு செய்வார்கள் என காங்கிரஸ் எம்.பி.மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
- தமிழ்நாட்டிற்கு கூட்டணி ஆட்சி ஒத்துவராது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
கூட்டணி ஆட்சியா? அல்லது ஒரு கட்சி ஆட்சியா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் என காங்கிரஸ் எம்.பி.மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டிற்கு கூட்டணி ஆட்சி ஒத்துவராது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறிய நிலையில் மாணிக்கம் தாகூர் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
மக்கள் முடிவு செய்வார்கள் .
கூட்டணி ஆட்சியா்?
அல்லது
ஒரு கட்சி ஆட்சியா என்பதை .
2006யில் மக்கள் தீர்பை செயல்படுத்தாதது நம்
தமிழ்நாடு காங்கிரஸ்-ன் தவறு.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- திருப்போரூர் வழியாக ஒ.எம்.ஆர். சாலையில் சென்று பூஞ்சேரி சந்திப்பில் இ.சி.ஆர். சாலையை அடையலாம்.
- திருப்போரூர், கேளம்பாக்கம், சோழிங்கநல்லூர், அக்கறை சந்திப்பு வழியாக சென்னைக்குள் வரலாம்.
செங்கல்பட்டு:
மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில் தி.மு.க. பூத் கமிட்டி மாநாடு இன்று மாலை நடைபெறுகிறது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். இதையொட்டி சென்னை-புதுச்சேரி சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட போலீசார் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் பொதுக்கூட்டம் திருவிடந்தை இ.சி.ஆர். நெடுஞ்சாலையில் நடைபெறுகிறது. இதனால் வாகனங்கள் காலை 10 மணி முதல் இரவு வரை இ.சி.ஆர். சாலையில் சென்னை-புதுச்சேரி மார்க்கமாகவும் மற்றும் புதுச்சேரி- சென்னை மார்க்கமாகவும் கீழ்க்கண்ட வழிகளில் போக்குவரத்து மாற்று பாதையில் செல்ல அறிவுறுத்தப்படுகிறது.
சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி செல்லும் வாகனங்கள் காலை 10 மணி முதல் இரவு வரை கோவளம் சந்திப்பு, கேளம்பாக்கம், திருப்போரூர் வழியாக ஒ.எம்.ஆர். சாலையில் சென்று பூஞ்சேரி சந்திப்பில் இ.சி.ஆர். சாலையை அடையலாம்.
அல்லது சென்னை-புதுச்சேரி மார்க்கமாக செல்லும் வாகனங்கள் அக்கரை சந்திப்பு, சோழிங்கநல்லூர், கேளம்பாக்கம், திருப்போரூர் வழியாக ஒ.எம்.ஆர். சாலையில் சென்று பூஞ்சேரி சந்திப்பில் இ.சி.ஆர். சாலையை அடையலாம்.
புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வரும் வாகனங்கள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை பூஞ்சேரி சந்திப்பு, திருப்போரூர், கேளம்பாக்கம், கோவளம் சந்திப்பு வழியாக சென்னைக்குள் வரலாம் அல்லது புதுச்சேரியில் இருந்து சென்னை மார்க்கமாக வர வேண்டிய வாகனங்கள் பூஞ்சேரி சந்திப்பு, திருப்போரூர், கேளம்பாக்கம், சோழிங்கநல்லூர், அக்கறை சந்திப்பு வழியாக சென்னைக்குள் வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சாலிகிராமம் அடுத்த தசரதபுரம் பஸ் நிலையம் அருகே கட்சி நிர்வாகிகளுடன் பேசிக்கொண்டு இருந்தார்.
- தாக்குதலில் ஈடுபட்ட த.வெ.க நிர்வாகிகள் 4 பேர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விருகம்பாக்கம் போலீசில் அவர் புகார் அளித்து உள்ளார்.
போரூர்:
சென்னை விருகம்பாக்கம், வெங்கடேசா நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேந்திரன். பைனான்ஸ் தொழில் செய்து வரும் இவர் த.வெ.க வட்ட செயலாளராக உள்ளார்.
இவர் இரவு சாலிகிராமம் அடுத்த தசரதபுரம் பஸ் நிலையம் அருகே கட்சி நிர்வாகிகளுடன் பேசிக்கொண்டு இருந்தார்.
அப்போது திடீரென அவர்களுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் மற்றொரு வட்ட செயலாளர் உட்பட 4 பேர் சேர்ந்து சுரேந்திரனை சரமாரியாக தாக்கினர்.
இதில் காயம் அடைந்த சுரேந்திரன் கே.கே. நகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
மேலும் தாக்குதலில் ஈடுபட்ட த.வெ.க நிர்வாகிகள் 4 பேர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விருகம்பாக்கம் போலீசில் அவர் புகார் அளித்து உள்ளார். ஜனநாயகன் திரைப்படம் ரிலீசுக்காக கோயம்பேட்டில் உள்ள சினிமா தியேட்டரில் சுரேந்திரன் வைத்த கட் அவுட் மற்றும் பேனரில் ஒரு சில நிர்வாகிகள் பெயரை போடவில்லை என்று தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மற்றொரு தரப்பினர் சுரேந்திரனை தாக்கியது போலீசார் விசாரணையில் தெரியவந்து உள்ளது.
- தமிழ்நாட்டின் வெற்றி பயணத்தை 2.0 ஆட்சியிலும் தொடர்வோம்.
- சட்டமன்ற தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக கூட்டணி வெல்லும்.
சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெறும் தமிழ்நாடு ரவுண்ட் டேபிள் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
சட்டமன்ற தேர்தலில் 12 சதவீதம் வாக்கு வித்தியாசத்தில் திமுக வெல்லும் என கருத்துக்கணிப்பு வந்துள்ளது.
கருத்துக்கணிப்பில் எங்களுக்கும் எதிர்க்கட்சிகளுக்குமான வாக்கு வித்தியாசம் 12 சதவீதம் தான். தமிழக மக்கள் மனதில் என்ன இருக்கிறது என்று எடுத்து கணக்கெடுப்பில் திமுக கூட்டணி வெல்லும் என தெரியவந்துள்ளது.
திமுக அரசின் சாதனை திட்டங்களால் 65-க்கும் மேற்பட்ட விருதுகள் தமிழ்நாட்டை தேடி வந்துள்ளது.
தமிழ்நாட்டிற்கும் திமுக அரசிற்கும் குடைச்சல் கொடுப்பதில் மத்திய பாஜக அரசு முனைப்பு காட்டி வருகிறது.
திமுக வெல்லும் என கருத்துக்கணிப்பு வந்தாலும் நாங்கள் மெத்தனமாக இருக்க மாட்டோம். தொடர்ந்து உழைப்போம்.
இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை கூட திமுக ஆட்சியில் அடைந்தோம்.
தலைசிறந்த 100 கல்லூரிகளின் பட்டியலில் தமிழ்நாட்டின் 33 கல்லூரிகள் இருக்கின்றன.
தமிழ்நாட்டின் வெற்றி பயணத்தை 2.0 ஆட்சியிலும் தொடர்வோம்.
தமிழ்நாட்டில் ஆட்சியில் பங்கு என்பது ஒத்துவராது. திமுக-காங்கிரஸ் இணைந்து போட்டியிடும். அரசியலையும் தாண்டி என்னுடைய சகோதரரைப் போன்றவர் ராகுல்காந்தி.
சட்டமன்ற தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக கூட்டணி வெல்லும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பேசிவரும் நிலையில் முதல்வர் விளக்கம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- வரும் 25-ம் தேதிக்குள் 10 முதல்வர் படைப்பகங்கள் முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட உள்ளது.
- எடப்பாடி பழனிசாமி அரிச்சந்திரனுக்கு அடுத்த வீட்டில் குடியிருந்தவர்.
போரூர்:
சென்னை அசோக் நகரில் மேம்படுத்தப்பட்டு வரும் முதல்வர் படைப்பகத்தை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னை மாநகராட்சி சார்பில் 10 இடங்களிலும், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் 25 இடங்களிலும் முதல்வர் படைப்பகம் அமைக்கப்பட்டு வருகிறது. வரும் 25-ம் தேதிக்குள் 10 முதல்வர் படைப்பகங்கள் முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட உள்ளது. சென்னை அசோக் நகரில் ரூ.15 கோடி அளவில் முதல்வர் படைப்பகம் உருவாக்கப்பட்டு வருகிறது. வருகிற 25-ந்தேதிக்குள் இது மாணவர்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும்.
கேள்வி:- இடைக்கால பட்ஜெட்டில் இந்து சமய அறநிலையத்துறை தொடர்பாக பெரிய அறிவிப்புகளை எதிர்பார்க்கலாமா?
பதில்:- எதிர்க்கட்சிகள் அரண்டு போகும் அளவிற்கு நிறைய அறிவிப்புகள் இடம்பெறும்.
கேள்வி:- அ.தி.மு.க. கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என்றும், தி.மு.க. கூட்டணி வலுவான கூட்டணி இல்லை என்றும் டாக்டர் அன்புமணி கூறியுள்ளாரே?
பதில்:- உடைந்த கட்சியின் ஒரு பாகமாக இருக்கின்ற அன்புமணி பேசுவதற்கெல்லாம் பதில் சொன்னால் சரியாக இருக்காது.
கேள்வி:- 7.5 சதவீதம் என்பது நாங்கள் கொண்டு வந்தது என்று எடப்பாடி பழனிசாமி பேசி இருக்கிறாரே?
பதில்:- எடப்பாடி பழனிசாமி அரிச்சந்திரனுக்கு அடுத்த வீட்டில் குடியிருந்தவர். அவர் வாயில் இருந்து உண்மையை தவிர வேறு எதுவுமே வராது. பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமான் எடப்பாடி பழனிசாமி. அவருடைய கட்சியில் இருந்து இப்போது வெளியேறி இருக்கின்ற செங்கோட்டையன், கு.ப.கிருஷ்ணன் போன்றவர்களிடம் கேட்டால் அவரது வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறும்.
கேள்வி:- த.வெ.க. சார்பில் கருத்து கேட்க சென்றவர்கள் தாக்கப்பட்டு உள்ளார்களே?
பதில்:- அங்கு த.வெ.க.வினருக்கும், பொதுமக்களுக்கும் தான் சண்டை. பொதுமக்கள் தாக்கப்பட்டு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உண்மை நிலையை களத்துக்கு சென்று விசாரியுங்கள். இது பனையூரில் நடப்பது போன்ற ஒரு மோதல் தான். உண்மை நிலையை விசாரித்து மக்களுக்கு சொல்லுங்கள். இதுபோன்ற செயல்களை வைத்து தங்கள் இயக்கத்துக்கு கலர் மெருகேற்ற துடிக்கின்றார்கள். அதற்கு நாமும் சேர்ந்து விளம்பரம் கொடுக்க தயாராக இல்லை.
கேள்வி:- சட்டசபை தேர்தலில் சென்னையில் தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?
பதில்:- சென்னையில் தி.மு.க.வின் இரு வண்ண கொடிதான் பட்டொளி வீசி பறக்கும். சூரியன் உதிக்கின்ற இடம் கிழக்கு. உதயசூரியனை சின்னமாக கொண்டிருக்கின்ற இந்த இயக்கம்தான் சுடரொளி வீசி பறக்கும். செயின்ட் ஜார்ஜ் கோட்டை எந்நாளும் எங்கள் முதல்வர் வசம் இருக்கும். அதை எந்த சக்தியாலும் தடுக்க முடி யாது.
கேள்வி:- சென்னையில் அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. தான் வெற்றி பெறுமா?
பதில்:- 22 தொகுதிகளிலும் முதலமைச்சரின் வெற்றிக்கொடிதான் பறக்கும்.
கேள்வி:- பா.ம.க.வின் பிரிவினைக்கு காரணம் தி.மு.க. தான் என்று கூறுகிறார்களே?
பதில்:- அன்புமணியால் தனது அப்பாவையே சரியாக கவனித்துக் கொள்ள முடியவில்லை. அவர் ஒரு கட்சி வேறு நடத்திக்கொண்டிருக்கிறார். டாக்டர் ராமதாஸ் கதறிக்கொண்டு இருக்கிறார். டாக்டர் ராமதாசை பார்ப்பதற்கே பாவமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- பள்ளி நிர்வாகி கமலா காந்தி தலைமையில் ஜாபரின் பிறந்தநாள் கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
- உங்களுடைய தயவால் தான் எங்களது மகனையும் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைந்துள்ளார் என உருக்கமாக பேசினார்.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை நகரில் மன வளர்ச்சி குன்றிய, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான 'விஸ்வாஸ்' சிறப்பு பள்ளி மற்றும் பகல் நேர காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த விஸ்வாஸ் பள்ளியை அமைச்சர் ஆர்.காந்தியின் மனைவி கமலா காந்தி நிர்வகித்து வருகிறார்.
இப்பள்ளியில் ராணிப்பேட்டையை சேர்ந்த நூர்ஜகான் என்பவரின் மகன் ஜாபர் (30) என்ற வாலிபர் சிறுவயதில் இருந்து 25 ஆண்டுகளுக்கு மேலாகவே பராமரிக்கப்பட்டு வருகிறார்.
தற்போது அந்த வாலிபரின் மருத்துவ பரிசோதனையில் உடலில் உள்ள செல்கள் படிப்படியாக குறைந்து வருவது தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று அந்த வாலிபரின் பிறந்த நாள் என்பதால் அதை சிறப்பாக கொண்டாட முடிவு செய்தனர்.
இதை தொடர்ந்து பள்ளி நிர்வாகி கமலா காந்தி தலைமையில் ஜாபரின் பிறந்தநாள் கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
விழாவில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார். ஜாபருக்கு பிறந்த நாள் பரிசுகள் வழங்கி, கேக் வெட்டி, மனவளர்ச்சி குன்றிய ஜாபருக்கு கேக் ஊட்டி மகிழ்ந்தார்.
அப்போது ஜாப்பரின் தாய் அமைச்சர் ஆர். காந்தியிடம் கூறியதாவது,
எங்களது குடும்பம் வறுமையில் இருந்ததால் எனது மகனை 2 வயதில் உங்களது பள்ளியில் சேர்த்தேன். உங்களது சிகிச்சையால் எனது மகன் மூளை பாதிப்பில் இருந்து தற்போது நடப்பது, பேசுவது உள்ளிட்ட முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
உங்களுடைய தயவால் தான் எங்களது மகனையும் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைந்துள்ளார் என உருக்கமாக பேசினார். இதனை கேட்டுக் கொண்டு இருந்த அமைச்சர் ஆர்.காந்தி உணர்ச்சி மிகுதியால் கதறி அழுது கைகூப்பி கும்பிட்டார். மேலும் ஜாபரின் கன்னத்தை தடவி,தலையை கோதிவிட்டார்.
கணவர் அழுவதை கண்ட அவரது மனைவி கமலா காந்தியும் கண்ணீர் சிந்தினார். இந்த உருக்கமான சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து பள்ளியில் படிக்கும் 30-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு பிரியாணி, கேக், பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. மேலும் ஜாபரின் குடும்பத்திற்கு ரூ.50 ஆயிரம் உதவித்தொகை வழங்கினார். ஜாபரின் தாய் நூர்ஜகானுக்கு அதே பள்ளியில் வேலையும் வழங்கினர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
- மன வேதனையில் இருந்த சகாயம் செபஸ்டின் கேக்கில் விஷம் கலந்து குடும்பத்தினருக்கு கொடுத்தார்.
- தாய் மற்றும் மகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை பெரம்பூரில் விஷம் கலந்த கேக்கை சாப்பிட்டு 2 பேர் உயிரிழந்தனர். 2 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சகாயம் செபஸ்டின் என்பவரின் மனைவி பியூலா புற்றுநோயால் பாதிப்பட்டார். இதன் காரணமாக மன வேதனையில் இருந்த சகாயம் செபஸ்டின் கேக்கில் விஷம் கலந்து குடும்பத்தினருக்கு கொடுத்தார்.
கேக்கை சாப்பிட்டு 2 பேர் உயிரிழந்தனர். தாய் மற்றும் மகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உயிரிழந்த இருவரின் உடலை கைப்பற்றி பெரம்பூர் செம்பியம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.






