என் மலர்
நீங்கள் தேடியது "கருத்துகணிப்பு"
- தமிழ்நாட்டின் வெற்றி பயணத்தை 2.0 ஆட்சியிலும் தொடர்வோம்.
- சட்டமன்ற தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக கூட்டணி வெல்லும்.
சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெறும் தமிழ்நாடு ரவுண்ட் டேபிள் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
சட்டமன்ற தேர்தலில் 12 சதவீதம் வாக்கு வித்தியாசத்தில் திமுக வெல்லும் என கருத்துக்கணிப்பு வந்துள்ளது.
கருத்துக்கணிப்பில் எங்களுக்கும் எதிர்க்கட்சிகளுக்குமான வாக்கு வித்தியாசம் 12 சதவீதம் தான். தமிழக மக்கள் மனதில் என்ன இருக்கிறது என்று எடுத்து கணக்கெடுப்பில் திமுக கூட்டணி வெல்லும் என தெரியவந்துள்ளது.
திமுக அரசின் சாதனை திட்டங்களால் 65-க்கும் மேற்பட்ட விருதுகள் தமிழ்நாட்டை தேடி வந்துள்ளது.
தமிழ்நாட்டிற்கும் திமுக அரசிற்கும் குடைச்சல் கொடுப்பதில் மத்திய பாஜக அரசு முனைப்பு காட்டி வருகிறது.
திமுக வெல்லும் என கருத்துக்கணிப்பு வந்தாலும் நாங்கள் மெத்தனமாக இருக்க மாட்டோம். தொடர்ந்து உழைப்போம்.
இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை கூட திமுக ஆட்சியில் அடைந்தோம்.
தலைசிறந்த 100 கல்லூரிகளின் பட்டியலில் தமிழ்நாட்டின் 33 கல்லூரிகள் இருக்கின்றன.
தமிழ்நாட்டின் வெற்றி பயணத்தை 2.0 ஆட்சியிலும் தொடர்வோம்.
தமிழ்நாட்டில் ஆட்சியில் பங்கு என்பது ஒத்துவராது. திமுக-காங்கிரஸ் இணைந்து போட்டியிடும். அரசியலையும் தாண்டி என்னுடைய சகோதரரைப் போன்றவர் ராகுல்காந்தி.
சட்டமன்ற தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக கூட்டணி வெல்லும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பேசிவரும் நிலையில் முதல்வர் விளக்கம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானில் ஐபிஎஸ்ஓஎஸ் ஆய்வு நிறுவனம் நடத்தய நுகர்வோர் நம்பிக்கை குறியீட்டின் நான்காவது காலாண்டு அறிக்கை வெளியிட்டது.
அதில் பாகிஸ்தானில் தற்போதைய பொருளாதார நிலை குறித்து கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. இதில் கிட்டத்தட்ட 1,100 பேர் பங்கேற்றுள்ளனர்.
இந்த கருத்துகணிப்பில் பதிலளித்தவர்களில் 46 சதவீதம் பேர் பாகிஸ்தானின் பொருளாதார நிலை பலவீனமாக இருப்பதாகவும், 43 சதவீதம் பேர் பணவீக்கம் தான் நாட்டின் மிகப் பெரிய பிரச்சினையாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.
தொடர்ந்து, 14 சதவீதம் பேர் பாகிஸ்தானில் வேலையின்மை முதன்மையான பிரச்சினையாக உள்ளதாகவும், 12 சதவீதம் பேர் வறுமை பெரும் பிரச்சினையாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானின் தற்போதைய பொருளாதார நிலை குறித்த கேள்விக்கு பதிலளித்த 49 சதவீதம் பேர் பொருளாதார நிலை அப்படியேதான் இருக்கிறது என்று கூறியுள்ளனர். ஆனால் 46 சதவீதம் பேர் பொருளாதாரம் பலவீனமாக இருப்பதாகவும், வெறும் 5 சதவீதம் பேர் மட்டுமே நாட்டின் பொருளாதார நிலை வலுவாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அடுத்த 6 மாதங்களில் பொருளாதார நிலைமையில் முன்னேற்றம் குறித்து கேட்டபோது, 64 சதவீதம் பேர் பொருளாதாரத்தில் முன்னேற்றம் இருக்காது என்றும், 12 சதவீதம் பேர் பொருளாதார மேம்பாட்டில் நம்பிக்கை இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். மேலும், 24 சதவீதம் பேர் இதில் நம்பிக்கையோ அல்லது ஏமாற்றமோ இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
அவர்களின் தனிப்பட்ட நிதி நிலைமை குறித்து கேட்டபோது, 47 சதவீதம் பேர் பலவீனம் மற்றும் நிலையற்று இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். 5 சதவீதம் பேர் வலுவாக உள்ளதாக பதிலளித்துள்ளனர். இருப்பினும், 48 சதவீதம் பேர் தங்கள் தனிப்பட்ட நிதி நிலை பலவீனமாகவும் இல்லை அல்லது வலுவாகவும் இல்லை என்று கூறியுள்ளனர்.






