என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    திருவிடந்தையில் தி.மு.க. மாநாடு: சென்னை-புதுச்சேரி சாலையில் போக்குவரத்து மாற்றம்
    X

    திருவிடந்தையில் தி.மு.க. மாநாடு: சென்னை-புதுச்சேரி சாலையில் போக்குவரத்து மாற்றம்

    • திருப்போரூர் வழியாக ஒ.எம்.ஆர். சாலையில் சென்று பூஞ்சேரி சந்திப்பில் இ.சி.ஆர். சாலையை அடையலாம்.
    • திருப்போரூர், கேளம்பாக்கம், சோழிங்கநல்லூர், அக்கறை சந்திப்பு வழியாக சென்னைக்குள் வரலாம்.

    செங்கல்பட்டு:

    மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில் தி.மு.க. பூத் கமிட்டி மாநாடு இன்று மாலை நடைபெறுகிறது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். இதையொட்டி சென்னை-புதுச்சேரி சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட போலீசார் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் பொதுக்கூட்டம் திருவிடந்தை இ.சி.ஆர். நெடுஞ்சாலையில் நடைபெறுகிறது. இதனால் வாகனங்கள் காலை 10 மணி முதல் இரவு வரை இ.சி.ஆர். சாலையில் சென்னை-புதுச்சேரி மார்க்கமாகவும் மற்றும் புதுச்சேரி- சென்னை மார்க்கமாகவும் கீழ்க்கண்ட வழிகளில் போக்குவரத்து மாற்று பாதையில் செல்ல அறிவுறுத்தப்படுகிறது.

    சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி செல்லும் வாகனங்கள் காலை 10 மணி முதல் இரவு வரை கோவளம் சந்திப்பு, கேளம்பாக்கம், திருப்போரூர் வழியாக ஒ.எம்.ஆர். சாலையில் சென்று பூஞ்சேரி சந்திப்பில் இ.சி.ஆர். சாலையை அடையலாம்.

    அல்லது சென்னை-புதுச்சேரி மார்க்கமாக செல்லும் வாகனங்கள் அக்கரை சந்திப்பு, சோழிங்கநல்லூர், கேளம்பாக்கம், திருப்போரூர் வழியாக ஒ.எம்.ஆர். சாலையில் சென்று பூஞ்சேரி சந்திப்பில் இ.சி.ஆர். சாலையை அடையலாம்.

    புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வரும் வாகனங்கள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை பூஞ்சேரி சந்திப்பு, திருப்போரூர், கேளம்பாக்கம், கோவளம் சந்திப்பு வழியாக சென்னைக்குள் வரலாம் அல்லது புதுச்சேரியில் இருந்து சென்னை மார்க்கமாக வர வேண்டிய வாகனங்கள் பூஞ்சேரி சந்திப்பு, திருப்போரூர், கேளம்பாக்கம், சோழிங்கநல்லூர், அக்கறை சந்திப்பு வழியாக சென்னைக்குள் வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×