என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    • கடந்தாண்டு 9 கோவில்களில் விழா நடைபெற்ற நிலையில் இந்தாண்டு 12 கோவில்களில் சிவராத்திரி விழா!
    • ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவில், திருநாகேஸ்வரம் கோவில் உள்ளிட்ட 12 கோவில்களில் நடைபெறும் விழா!

    சென்னை:

    அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்து சமய அறநிலையத் துறை தொன்மை வாய்ந்த கோவில்களுக்கு பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு நடத்துதல், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல் போன்ற பணிகளோடு, கோவில்கள் சார்பில் கமலமுனி சித்தர், பாம்பாட்டி சித்தர், சுந்தரானந்த சித்தர், சிவவாக்கிய சித்தர், பதஞ்சலி சித்தர் ஆகிய சித்தர் பெருமக்களுக்கும், அருட்பிரகாச வள்ளலார், தெய்வப்புலவர் சேக்கிழார், சமய குரவர்களில் ஒருவரான திருநாவுக்கரசர் (அப்பர் பெருமான்), நாலாயிர திவ்ய பிரபந்த தமிழ் மறைநூலினைத் தொகுத்தவரான ஸ்ரீமத்நாத முனிகள் மற்றும் அவரது பெயரன் ஆளவந்தார் ஆச் சாரியார், 63 நாயன்மார்களில் நந்தனார், காரைக்கால் அம்மையார் போன்ற அருளாளர்களுக்கும் விழா எடுத்தும் சிறப்பு செய்து வருகிறது.

    மேலும், கடந்த ஆண்டு 9 கோவில்கள் சார்பில் மகா சிவராத்திரி பெருவிழாவும், கடந்த 3 ஆண்டுகளாக சென்னை, மயிலாப்பூரில் நவராத்திரி பெருவிழாவும் பக்தர்கள் பங்கேற்புடன் விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது.

    ஆடல் வல்லான் சிவபெருமானின் அருளாற்றலையும், பெருமையையும் பறைசாற்றும் வகையிலும், சிவ வழிபாடு செய்ய வரும் பக்தர்களின் மனம் மகிழும் படி கடந்த ஆண்டு மயிலாப்பூர், கபாலீசுவரர் கோவில் சார்பில் கொண்டாடப்பட்ட மகாசிவராத்திரி பெருவிழா இறையன்பர்கள் மற்றும் பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பு பெற்றதைத் தொடர்ந்து, திருவண்ணாமலை, அருணாச்சலேசுவரர் கோவில், தஞ்சாவூர், பிரகதீஸ்வரர் கோவில், திருநெல்வேலி, நெல்லையப்பர் கோவில், பேரூர், பட்டீசுவரர் கோவில், மதுரை, மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் மற்றும் திருவானைக்காவல், ஜம்புகேஸ்வரர் கோவில், திருவாரூர், தியாகராஜசுவாமி கோவில், திருவாலங்காடு, வடாரண்யேஸ்வரசுவாமி கோவில் ஆகிய 9 கோவில்களின் சார்பில் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

    2025-2026-ம் ஆண்டு சட்டமன்ற அறிவிப்பின்படி, "9 கோவில்களின் சார்பாக மகாசிவராத்திரி விழா வெகு சிறப்பாக நடத்தப்பட்டு பக்தர்களின் அமோக வரவேற்பினை பெற்றதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டு கூடுதலாக, ராமேசுவரம், ராமநாத சுவாமி கோவில், கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம், விருத்தகிரீசுவரர் கோவில், தஞ்சாவூர் மாவட்டம், திருநாகேசுவரம் நாகநாத சுவாமி கோவில் ஆகிய 3 கோவில்கள் சார்பில் மகா சிவராத்திரி விழா நடத்தப்படும்" என அறிவிக்கப்பட்டது.

    இந்த அறிவிப்பினை செயல்படுத்திடும் வகையில் ராமேசுவரம், அருள்மிகு ராமநாதசுவாமி கோவில், விருத்தாச்சலம், விருத்தகிரீசுவரர் கோவில், திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோவில் ஆகிய 3 கோவில்களுடன் ஏற்கனவே மகாசிவராத்திரி விழா நடத்தப்பட்டு வரும் 9 கோவில்களையும் சேர்த்து மொத்தம் 12 கோவில்கள் சார்பில் வருகிற 15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணி முதல் 16-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 6 மணி வரை மகாசிவராத்திரி பெருவிழா ஆன்மிக சொற்பொழிவுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது.

    இவ்வாறு அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்து உள்ளார்.

    • குறைந்தபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் ஆக பதிவு.
    • கடும் குளிரால் வீட்டை விட்டு வெளியே செல்லவே மக்கள் தயக்கம்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தின் தலைநகரான ஊட்டி, பிப்ரவரி மாதத்தின் இரண்டாவது வாரத்திலும் தொடரும் கடும் உறைபனி தாக்கத்தால், 'குட்டி காஷ்மீர்' போல் காட்சியளிக்கிறது.

    ஊட்டியில் குறைந்தபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகியுள்ளது. அதே நேரத்தில், காந்தல், தலைகுந்தா, அவலாஞ்சி உள்ளிட்ட உயரமான மலைப்பகுதிகளில் வெப்பநிலை 0 டிகிரி செல்சியஸ் வரை சரிந்து, கடும் குளிர் நிலவுகிறது.

    அதிகாலை நேரங்களில் புல்வெளிகள், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் வீடுகளின் கூரைகள் முழுவதும் வெண்மையாக உறைந்த பனிப்படலத்தால் மூடப்பட்டு, சுற்றுப்புறம் முழுவதும் கண்கவர் காட்சியாக மாறியுள்ளது.

    தொடர்ந்து நிலவும் கடும் குளிர் காரணமாக, பொதுமக்கள் வெளியே செல்வதில் தயக்கம் காட்டி வருகின்றனர். குறிப்பாக முதியோர், குழந்தைகள் மற்றும் தினசரி வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கால்நடை வளர்ப்பாளர்கள் மற்றும் விவசாயிகளும் அதிகாலையில் ஏற்படும் உறைபனி காரணமாக பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

    இவ்வாறு, பிப்ரவரி மாதம் தொடங்கிய பின்னும் குறையாத உறைபனி தாக்கம் காரணமாக, ஊட்டியில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

    • தண்டவாள பகுதிகளில் அமர்ந்திருப்பதோ, தண்டவாளத்தை கடக்க முயற்சிப்பதோ வேண்டாம்.
    • வாகன ஓட்டிகள், ஆடு, மாடு மேய்ப்பவர்கள் எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் செயல்பட அறிவுரை.

    மேலசொக்கநாதபுரம்:

    மதுரையில் இருந்து தேனி மாவட்டம் போடிக்கு தினசரி காலை, மாலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. அதேபோல சென்னையில் இருந்து போடிக்கு மதுரை வழியாகவும், போடியில் இருந்து சென்னைக்கு மதுரை வழியாகவும் வாரத்தில் 3 நாட்கள் அதிவிரைவு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த சூழலில் இன்று தண்டவாளத்தின் அதிர்வு, அசைவு மற்றும் குறைபாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக அதிர்வு மற்றும் நகர்வு ஆய்வு ரெயில் இன்று மதுரையில் இருந்து போடிக்கு சுமார் 120 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்பட உள்ளதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இந்த வாகனத்தில் ரெயில் என்ஜின் மற்றும் தண்டவாள அதிர்வு அறியும் கருவி பெட்டி ஒன்று, அதிகாரிகள் பணியாளர்கள் ஆய்வு பெட்டி ஒன்று இணைக்கப்பட்டு வருகிறது.

    காலையில் மதுரையிலிருந்து தூத்துக்குடி வரை ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அதன் பின்னர் மதியம் 12 மணிக்கு மேல் மதுரையிலிருந்து போடிக்கு சுமார் 120 கிலோமீட்டர் வேகத்தில் ஓ.எம்.எஸ். ஆய்வு ரெயில் வரவுள்ளதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    வழக்கமாக 110 கிலோ மீட்டர் வேகம் அங்கீகரிக்கப்பட்ட நிலையில் மதுரையிலிருந்து போடி வரை உள்ள தண்டவாள இருப்புப் பாதைகளில் அதிர்வுகள் மற்றும் நகர்வுகள் எதுவும் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக இந்த சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது.

    வழக்கமாக 2 அல்லது 3 மாதங்களுக்கு ஒரு முறை நடைபெறும் ஆய்வு பரிசோதனை என்றாலும் 120 கிலோமீட்டர் வேகத்தில் வருவதால் பொதுமக்கள் விழிப்புணர்வு இல்லாமல் தண்டவாள பகுதிகளில் அமர்ந்திருப்பதோ, தண்டவாளத்தை கடக்க முயற்சிப்பதோ வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாகன ஓட்டிகள், ஆடு, மாடு மேய்ப்பவர்கள் அப்பகுதியில் தண்டவாளங்களை கடக்கும் பொழுது எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் செயல்பட வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் மற்றும் ரெயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 67 ஆயிரத்து 343 சதுர மீட்டர் பரப்பளவில் இரண்டு அரங்குகளாக காட்சிப்படுத்தும் பணிகள் தொடங்கின.
    • பண்டைய மக்களின் வாழ்வியல் முறைகள், பணிகள், அணிகலன்கள் உள்ளிட்டவைகளை நேரில் காணலாம்.

    மானாமதுரை:

    சிவகங்கை மாவட்டம் கீழடியில் மத்திய, மாநில தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு நடந்த இடங்கள் திறந்த வெளி அருங்காட்சியகமாக மாற்றப்படும் என தமிழக அரசு அறிவித்து, கடந்தாண்டு ஜனவரியில் ரூ.17 கோடியே 80 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது.

    சுமார் 67 ஆயிரத்து 343 சதுர மீட்டர் பரப்பளவில் இரண்டு அரங்குகளாக காட்சிப்படுத்தும் பணிகள் தொடங்கின. ஏழாம்கட்ட அகழாய்வு நடந்த இடம் ஒரு அரங்கமாகவும், இரண்டு, நான்கு, ஆறாம் கட்ட அகழாய்வு நடந்த இடம் இரண்டாம் அரங்கமாகவும் மாற்றும் பணி நடந்து வந்தது. இதில் முதலாம் அரங்கம் மட்டும் திறப்பு விழாவிற்கு தயாரான நிலையில், நாளை (13-ந்தேதி) முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்த வெளி அருங்காட்சியகத்தையும் திறந்து வைக்க உள்ளார்.

    இந்தியாவிலேயே முதன் முறையாக கீழடியில் ரூ. 22 கோடி ரூபாய் செலவில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைகிறது. பண்டைய கால மக்களின் வாழ்வியல் முறைகள், பணிகள், அணிகலன்கள் உள்ளிட்டவைகளை பொது மக்கள் நேரில் காண உள்ளனர்.

    திறந்த வெளி அருங்காட்சியக பணியின் போது ரூ. 17 கோடியே 80 லட்சம் என திட்டமிடப்பட்டது. செலவீனம் அதிகரித்ததால் தற்போது ரூ. 22 கோடியாக திட்டமதிப்பீடு அதிகரித்துள்ளது.

    • தி.மு.க. ஒரு மூடநம்பிக்கை; அது முஸ்லிம்களை காக்க தவறிவிட்டது.
    • அனைத்து கடற்கரை மக்களும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்களிக்க தயாராகிவிட்டனர்.

    பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேலப்பாளையத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் 3-ம் ஆண்டு தொடக்க விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் ஆகிய முப்பெரும் விழா பஜார் திடலில் நடைபெற்றது.

    இதில் தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    அவர் பேசியதாவது:-

    த.வெ.க. தலைவர் விஜய்யின் அரசியல் பயணம் மாநில அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு அதனால் அச்சம் உருவாகிவிட்டது. அண்ணா, எம்.ஜி.ஆர். எழுதிய அரசியல் வரலாற்றின் அடுத்த அத்தியாயத்தை விஜய் எழுதப்போகிறார்.

    தி.மு.க.வுக்கு மாற்றாக உருவான கட்சிகள் இன்று தி.மு.க.விடம் தங்களை இழந்துவிட்டது. தி.மு.க.-விற்கு மாற்றாக தொடங்கிய ம.தி.மு.க.வை, தி.மு.க.விடம் தொலைத்துவிட்டு மதுரை, திருச்சி என கட்சியின் தலைவர் வைகோ ம.தி.மு.க.வை தேடி வருகிறார்.

    தி.மு.க.வுக்கு மாற்றாக தொடங்கப்பட்ட தே.மு.தி.க.வை துண்டு துண்டாக வெட்டி விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விற்பனை செய்ய தயாராகிவிட்டார். மாற்று என டார்ச் விளக்குடன் வந்த கமல்ஹாசன் அறிவாலயத்தின் தாழ்வாரத்தில் ஓய்வு எடுக்கிறார். தி.மு.க. ஒரு மூடநம்பிக்கை. அது முஸ்லிம்களை காக்க தவறிவிட்டது.

    தமிழக வெற்றிக் கழகம் தி.மு.க., அ.தி.மு.க.விற்கு மாற்று அரசியல் கட்சி மட்டுமல்ல. ஆட்சி மாற்றத்திற்கான கட்சி.

    தமிழக வெற்றிக் கழகத்தின் பெயரை சொல்வதற்கே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தயங்குகிறார். தமிழக வெற்றிக் கழகத்தின் வளர்ச்சி தி.மு.க.வின் தூக்கத்தை கெடுத்துள்ளது. எங்களுக்கு எதிரி தி.மு.க. தான் என விஜய் அறிவித்த பின்னர் முதலமைச்சர் நிம்மதி இல்லாமல் தவிக்கிறார்.

    தமிழகத்தில் ஆணவ படுகொலை அதிகரித்துவிட்டது. அதனை கட்டுப்படுத்த முதலமைச்சர் தவறிவிட்டார். தமிழகம் போதையில் தள்ளாடுகிறது. அதனை காப்பாற்ற முதலமைச்சர் தவறிவிட்டார். ஆளும் கட்சி மெஷின் பவர், மணி பவர் ஆகியவற்றுடன் செயல்படுகிறது. இப்போது மசில் பவரை அதாவது தசை பலத்தை காட்டி தி.மு.க. குண்டர்களை வைத்து தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் தாக்கப்படுகிறார்கள். எங்கள் தலைவர் விஜய்க்கு மக்கள் பவர் அதிகரித்து வருகிறது.

    இஸ்லாமியர்களின் பாதுகாவலன் என சொல்லும் தி.மு.க. இஸ்லாமியர்களுக்காக கொண்டுவரப்பட்ட 3.5 சதவீதம் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    அனைத்து கடற்கரை மக்களும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்களிக்க தயாராகிவிட்டனர். அனைத்து சாலைகளும் பனையூரை நோக்கி செல்லத் தொடங்கிவிட்டது. போகிற போக்கை பார்த்தால் எல்லையில் நாட்டை பாதுக்கும் ராணுவ கேப்டன் கூட விசில் அடிக்கக்கூடாது என முதலமைச்சர் உத்தரவிடுவார் என தோன்றுகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மத்திய பாஜக அரசை கண்டித்து 9 இடங்களில் சாலை மறியல் போராட்டம்.
    • போராட்டத்தை ஒட்டி தனியார் பேருந்து, ஆட்டோ, டெம்போ உள்ளிட்ட சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

    தொழிலாளர் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மத்திய அரசை கண்டித்து புதுச்சேரியில் பொது வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

    மத்திய பாஜக அரசுக்கு எதிரான போராட்டங்களுக்கு மத்திய தொழிற்சங்கத்தினர், போக்குவரத்து, வங்கி ஊழியர் சங்கங்கள் ஆதரவு அளித்துள்ளது.

    புதுவையில் பேருந்து, ஆட்டோ இயக்கப்படாத நிலையில் மத்திய பாஜக அரசை கண்டித்து 9 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது.

    புதுச்சேரியில் பொது வேலைநிறுத்த போராட்டத்தை ஒட்டி தனியார் பேருந்து, ஆட்டோ, டெம்போ உள்ளிட்ட சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

    • நேற்று ஒரே நாளில் தங்கம் கிராமுக்கு ரூ.210-ம், சவரனுக்கு ரூ.1,680-ம் உயர்ந்தது.
    • வெள்ளி விலையில் இன்றும் மாற்றம் இல்லை.

    தங்கம் விலையில் ஏற்ற-இறக்கம் நீடிக்கிறது. கிடுகிடுவென உயர்ந்து வந்த நிலையில், மளமளவென இடையில் சரிந்திருந்தது. இதன் தொடர்ச்சியாக தற்போது ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான சூழலில் தங்கம் விலை பயணிக்கிறது.

    அந்த வகையில் நேற்று முன்தினம் விலை குறைந்து காணப்பட்ட நிலையில், நேற்று விலை விறுவிறுவென ஏறுமுகத்தில் எகிறியது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 580-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 16 ஆயிரத்து 640-க்கும் விற்பனை ஆனது.

    நேற்று தங்கம் விலையில் 2 முறை மாற்றம் இருந்தது. காலை தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.1,16,800-க்கும், கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.14,600-க்கும் விற்பனையானது. மாலை தங்கம் விலை 2 முறையாக உயர்ந்தது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,520 உயர்ந்து ரூ. 1,18,320-க்கும், கிராமுக்கு ரூ.190 உயர்ந்து ரூ.14,790-க்கும் விற்பனையானது. நேற்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.210-ம், சவரனுக்கு ரூ.1,680-ம் உயர்ந்தது.

    இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,520 குறைந்து ரூ.1,16,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.190 குறைந்து ரூ.14,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலையில் இன்று 3-வது நாளாக மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி 300 ரூபாய்க்கும் பார் வெள்ளி ரூ.3 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

     

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    11-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,18,320

    10-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,640

    09-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,17,200

    08-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,15,360

    07-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,15,360

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    11-02-2026- ஒரு கிராம் ரூ.300

    10-02-2026- ஒரு கிராம் ரூ.300

    09-02-2026- ஒரு கிராம் ரூ.300

    08-02-2026- ஒரு கிராம் ரூ.285

    07-02-2026- ஒரு கிராம் ரூ.285

    • 55 ஆண்டு காலம் அரசியல் அனுபவம் உள்ளவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
    • தமிழகத்தில் பா.ஜ.க.வால் காலூன்ற முடியாது.

    மதுரை:

    மதுரை மாவட்டம் மேலூர், ஆனையூரில் தி.மு.க. சார்பில் 'தமிழ்நாடு தலை குனியாது' என்ற தலைப்பில் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றது. இதில் அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.விற்கும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இடையே தான் போட்டி. தேர்தல் கூட்டணி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்த்து கொள்வார். அதைப்பற்றி யோசிக்க வேண்டாம். காங்கிரஸ் கட்சி வந்தால் வரட்டும். ஆனால் அந்த கட்சி வேண்டாமென்று சொல்லவில்லை.

    விஜயகாந்த் இருந்தபோது தே.மு.தி.க. எதிர்க்கட்சியாக இருந்தது. மக்களிடமும் செல்வாக்கு இருந்தது. ஆனால் இன்று தே.மு.தி.க. இரு கட்சியினருடமும் கூட்டணி குறித்து பேசுகிறார்கள். இங்கேயும் அங்கேயும் பேசுவது சரியாக இருக்காது. விஸ்வாசமாக இருந்து தே.மு.தி.மு.க. ஒரு பக்கம் வரவேண்டும்.

    த.வெ.க. பெரிய கட்சியாக இருக்கும் என்று நினைத்தேன். அதில் இருப்பவர்கள் எல்லாம் 15 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கிறார்கள். எம்.ஜி.ஆர். தி.மு.க.வில் இருந்து அரசியல் செய்தார். 55 ஆண்டு காலம் அரசியல் அனுபவம் உள்ளவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    தி.மு.க. இயக்கம் தொடர்ந்து இயங்க வேண்டும். 2-வது முறையாக மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆவார். எடப்பாடி வியாபாரம் செய்து வந்தவர். தற்போது பா.ஜ.க.விடம் சிக்கிக் கொண்டுள்ளார். தமிழகத்தில் பா.ஜ.க.வால் காலூன்ற முடியாது.

    தென் மாவட்டத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தன்னை பெரிய ஆளாக நினைத்து கொள்கிறார். அவர் பெரிய ஆளாகவே இருக்கட்டும். ஆனால் ஒருவரை அழித்து வரக்கூடாது. தான் வாழ பிறரை கெடுக்க கூடாது. மேலூர் தொகுதியில் தி.மு.க. அரசு சார்பில் பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்துள்ளோம். இம்முறை மேலூரில் தி.மு.க. தான் போட்டியிடும். தலைமை முடிவு செய்யும் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து அவரிடம் நிருபர்கள் தே.மு.தி.க., தி.மு.க. கூட்டணிக்கு வருமா? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு ராஜகண்ணப்பன் தே.மு.தி.க. எல்லாம் ஒரு கட்சியா, பெரிய கட்சிகளை பற்றி கேளுங்கள் சொல்கிறேன் என்றார்.

    அண்மையில் மதுரை மாவட்ட செயலாளர் தளபதி எம்.எல்.ஏ. தி.மு.க. இல்லையென்றால் இண்டியா கூட்டணியே இல்லை. காங்கிரஸ் கட்சியில் பூத் கமிட்டி போட கூட ஆள் இல்லை என்று பேசினார். இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையில் தி.மு.க.வுடன் கூட்டணி குறித்து தே.மு.தி.க. கூட்டணி வைக்க முயற்சிக்கும் நிலையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் தே.மு.தி.க. குறித்து சர்ச்சக கருத்து கூறியிருப்பது கூட்டணிக்கு முட்டுக் கட்டையை ஏற்படுத்தி உள்ளது.

    • தற்போது பால், அரிசி, பருப்பு, மின் கட்டணம் என்று அனைத்து விலையும் உயர்ந்துவிட்டது.
    • இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.9 கோடி போதைப்பொருள் பிடிபட்டுள்ளது.

    வாடிப்பட்டி:

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் அ.தி.மு.க சார்பில் திண்ணை பிரசாரம் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலந்து கொண்டு பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உண்மை பேசி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை கொண்டு வந்து 5 ஆயிரம் மருத்துவ மாணவர்களின் கனவை நினைவாக்கினார் எடப்பாடியார். 2011-ல் 52 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு ஜெயலலிதா மடிக்கணினி வழங்கினார். ஆனால் தற்போது தேர்தலுக்காக தி.மு.க மடிக்கணினி வழங்குவதாக கூறியுள்ளது. 525 வாக்குறுதிகள் கொடுத்தும், தி.மு.க. அரசு எதையும் நிறைவேற்ற வில்லை.

    ஆனால் தற்போது பால், அரிசி, பருப்பு, மின் கட்டணம் என்று அனைத்து விலையும் உயர்ந்துவிட்டது. சொத்து வரி வீட்டு வரியை கூட அரசாணை வெளியிடாமல் உயர்த்தி விட்டார்கள். தற்போது தி.மு.க. கூட்டணியில் குழப்பமும், நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஜெயலலிதா ஆட்சியில் ஸ்காட்லாந்துக்கு நிகராக இருந்த தமிழக காவல்துறை இன்று கைகட்டி நிற்கிறது.

    இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.9 கோடி போதைப்பொருள் பிடிபட்டுள்ளது. இன்று பள்ளி, கல்லூரி அருகில் போதைப் பொருட்கள் விற்கிறார்கள். அரசு அதை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். பாலியல் வன்கொடுமை தலை விரித்து ஆடுகிறது. விலைவாசியை கட்டுப்படுத்த முடியவில்லை. தி.மு.க. அரசு சொன்னது எதுவும் செய்யவில்லை. அவர்களுக்கு மக்களை பற்றியும் கவலை இல்லை. ஆனால் அ.தி.மு.க வாக்காளர்களை தெய்வமாக மதிக்கும் இயக்கம், மக்கள் நலனில் அக்கறை கொண்ட இயக்கம். அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் குடும்ப அட்டை வைத்துள்ள அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.2 ஆயிரம் அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். அனைவருக்கும் வீடு அம்மா இல்ல திட்டம் மூலம் கட்டிக் கொடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • த.வெ.க. மாவட்ட செயலாளர் உதயகுமார் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கத்தியை காட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
    • போலீசார் அவர்களை தடுத்தும், விழா கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட த.வெ.க.செயலாளராக பணிபுரிந்து வருபவர் உதயகுமார். வந்தவாசியில் நடந்த விழாவில் ஐந்து கண் பாலம் அருகே இருந்து த.வெ.க. நிர்வாகிகள் திடீரென கிரேன் மூலம் மாவட்ட செயலாளருக்கு மாலை அணிவித்தும் இருசக்கர வாகனத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஆரன் அடித்துக் கொண்டும் அலப்பறையில் ஈடுபட்டனர்.

    மேலும் த.வெ.க. மாவட்ட செயலாளர் உதயகுமார் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கத்தியை காட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. அப்போது போலீசாருக்கும் த.வெ.க. நிர்வாகிகளுக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசார் அவர்களை தடுத்தும், விழா கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் அனுமதியின்றி ஊர்வலம் சென்ற த.வெ.க. மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், மாவட்டச் செயலாளருக்கு மாலை அணிவிக்க பயன்படுத்தப்பட்ட கிரேனை பறிமுதல் செய்தனர்.

    • தமிழக அரசியல், பொது நிகழ்வுகள்...
    • சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...

    • பகலில் வெப்பம், இரவு நேரங்களில் பனிப்பொழிவு, குளிர் காணப்படும்.
    • இம்மாத இறுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் கணித்து இருக்கின்றனர்.

    தமிழ்நாட்டில் பனிப்பொழிவின் தாக்கம் சற்று அதிகமாகவே இருக்கிறது. பகலில் வெப்பம், இரவில் குளிர், அதிகாலையில் பனிப்பொழிவு என்ற சூழலே இருந்து வருகிறது.

    இதன் தாக்கம் வருகிற 20-ந்தேதி வரை நீடிக்கும் என்றே சொல்லப்படுகிறது. அதுவரை வறண்ட வானிலையே நிலவும். பகலில் வெப்பம், இரவு நேரங்களில் பனிப்பொழிவு, குளிர் காணப்படும். மூடு பனிப்பொழிவுக்கும் அதிக வாய்ப்பு இருக்கிறது. அதனைத் தொடர்ந்து 20-ந்தேதிக்கு பிறகு பனிப்பொழிவு குறைந்து, வெப்பம் அதிகரிக்கும்.

    கடல் சார்ந்த அலைவுகள் தற்போது சாதகமாக இருப்பதால், இம்மாத இறுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் கணித்து இருக்கின்றனர்.

    இந்த புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி மழையை கொடுக்குமா? என்பது குறித்து தனியார் வானிலை ஆய் வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

    பொதுவாக பிப்ரவரி மாதங்களில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் மழை பெய்து இருக்கிறதா? என்று பார்த்தால், தமிழ்நாட்டில் 2002-ம் ஆண்டு அதிகனமழை வரையிலும், 2021-ல் கடலோர மாவட்டங்களில் கனமழை வரையிலும் பதிவாகியுள்ளது. மேலும் 1947, 1956, 1961, 1999, 2011-ம் ஆண்டுகளில் பிப்ரவரி மாதத்தில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், தமிழகத்துக்கு மழைக்கான சூழல் இல்லாமல் போனது. இதற்கு முன்பு 1944-ம் ஆண்டில் புயல் ஒன்று உருவாகியது. அது சென்னைக்கு தெற்கே மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது.

    அந்த வகையில் புதிதாக உருவாகும் காற்றழுத்த தாழ் வுப் பகுதி. வலுப்பெறுமா? மழையை கொடுக்குமா? என்பது குறித்து வரும் நாட்களில்தான் தெரிய வரும் என்று கூறினார்.

    ×