த.வெ.க. மாவட்ட செயலாளர் உள்ளிட்ட 50 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு

த.வெ.க. மாவட்ட செயலாளர் உதயகுமார் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கத்தியை காட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவர்களை தடுத்தும், விழா கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
த.வெ.க. மாவட்ட செயலாளர் உள்ளிட்ட 50 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு
Published on

திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட த.வெ.க.செயலாளராக பணிபுரிந்து வருபவர் உதயகுமார். வந்தவாசியில் நடந்த விழாவில் ஐந்து கண் பாலம் அருகே இருந்து த.வெ.க. நிர்வாகிகள் திடீரென கிரேன் மூலம் மாவட்ட செயலாளருக்கு மாலை அணிவித்தும் இருசக்கர வாகனத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஆரன் அடித்துக் கொண்டும் அலப்பறையில் ஈடுபட்டனர்.

மேலும் த.வெ.க. மாவட்ட செயலாளர் உதயகுமார் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கத்தியை காட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. அப்போது போலீசாருக்கும் த.வெ.க. நிர்வாகிகளுக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசார் அவர்களை தடுத்தும், விழா கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் அனுமதியின்றி ஊர்வலம் சென்ற த.வெ.க. மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், மாவட்டச் செயலாளருக்கு மாலை அணிவிக்க பயன்படுத்தப்பட்ட கிரேனை பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com