என் மலர்
நீங்கள் தேடியது "வெதர் மேன்"
- பகலில் வெப்பம், இரவு நேரங்களில் பனிப்பொழிவு, குளிர் காணப்படும்.
- இம்மாத இறுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் கணித்து இருக்கின்றனர்.
தமிழ்நாட்டில் பனிப்பொழிவின் தாக்கம் சற்று அதிகமாகவே இருக்கிறது. பகலில் வெப்பம், இரவில் குளிர், அதிகாலையில் பனிப்பொழிவு என்ற சூழலே இருந்து வருகிறது.
இதன் தாக்கம் வருகிற 20-ந்தேதி வரை நீடிக்கும் என்றே சொல்லப்படுகிறது. அதுவரை வறண்ட வானிலையே நிலவும். பகலில் வெப்பம், இரவு நேரங்களில் பனிப்பொழிவு, குளிர் காணப்படும். மூடு பனிப்பொழிவுக்கும் அதிக வாய்ப்பு இருக்கிறது. அதனைத் தொடர்ந்து 20-ந்தேதிக்கு பிறகு பனிப்பொழிவு குறைந்து, வெப்பம் அதிகரிக்கும்.
கடல் சார்ந்த அலைவுகள் தற்போது சாதகமாக இருப்பதால், இம்மாத இறுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் கணித்து இருக்கின்றனர்.
இந்த புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி மழையை கொடுக்குமா? என்பது குறித்து தனியார் வானிலை ஆய் வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-
பொதுவாக பிப்ரவரி மாதங்களில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் மழை பெய்து இருக்கிறதா? என்று பார்த்தால், தமிழ்நாட்டில் 2002-ம் ஆண்டு அதிகனமழை வரையிலும், 2021-ல் கடலோர மாவட்டங்களில் கனமழை வரையிலும் பதிவாகியுள்ளது. மேலும் 1947, 1956, 1961, 1999, 2011-ம் ஆண்டுகளில் பிப்ரவரி மாதத்தில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், தமிழகத்துக்கு மழைக்கான சூழல் இல்லாமல் போனது. இதற்கு முன்பு 1944-ம் ஆண்டில் புயல் ஒன்று உருவாகியது. அது சென்னைக்கு தெற்கே மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது.
அந்த வகையில் புதிதாக உருவாகும் காற்றழுத்த தாழ் வுப் பகுதி. வலுப்பெறுமா? மழையை கொடுக்குமா? என்பது குறித்து வரும் நாட்களில்தான் தெரிய வரும் என்று கூறினார்.
- தமிழகத்தில் வானிலை குறித்து துல்லியமாக கணிப்புகளை கூறுபவராக அறியப்படுபவர் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்.
- நாளை முதல் டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும் என வெதர் மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் வானிலை குறித்து துல்லியமாக கணிப்புகளை கூறுபவராக அறியப்படுபவர் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான். இவர் தமிழகத்தின் வெதர் மேன் என்றே மக்கள் மத்தியில் அழைக்கப்படுகிறார். முந்தய காலங்களில் மழை, வெள்ளம் குறித்த இவரின் கணிப்புகள் அப்படியே நடந்துள்ளது. வானிலை தொடர்பான தகவல்களுக்கு வானிலை மையத்தின் அறிக்கைக்கு அடுத்தபடியாக இவரின் அறிக்கையையும் கருத்தில் கொள்ளும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அதன்படி நாளை முதல் டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும் என வெதர் மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், சென்னையில் மழை பெய்யும், நாளை (மே 16) வியாழக்கிழமை ரெயின் கோட் எடுத்துட்டு போக மறந்துராதீங்க என்று தெரிவித்துள்ளார்.
சென்னை வானிலை மைய அறிக்கைபடி நாளை (மே 16) தமிழகத்தில் அநேக இடங்களில் மற்றும் மணிக்கு 40 கிலோமீட்டர் முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர் , சிவகங்கை, தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இன்று நெல்லை மாவட்டம் வள்ளியூரில் கொட்டித்தீர்த்த கனமழையால் வீடுகள் மற்றும் வாகனங்கள் நீரில் மூழ்கியதால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.






